< எரேமியா 37 >
1 பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் யோசியாவின் மகன் சிதேக்கியாவை யூதாவுக்கு அரசனாக்கினான். அவன் யோயாக்கீமுடைய மகன் கோனியாவின் இடத்தில் அரசாண்டான்.
Sê-đê-kia, con Giô-si-a, thế vị Giê-cô-nia, con Giê-hô-gia-kim, làm vua Giu-đa. Người được Vua Nê-bu-cát-nết-sa, nước Ba-by-lôn, chỉ định lên ngôi vua.
2 ஆயினும் அவனோ, அவனுடைய வேலையாட்களோ, அந்த நாட்டு மக்களோ, இறைவாக்கினன் எரேமியாவின் மூலம் யெகோவா பேசிய வார்த்தைகளுக்கு எவ்வித கவனமும் செலுத்தவில்லை.
Nhưng cả Vua Sê-đê-kia, các triều thần cho đến cả dân còn sót trong xứ đều không chịu nghe những gì Chúa Hằng Hữu phán qua Giê-rê-mi.
3 அப்படியிருந்தும் சிதேக்கியா அரசன், செலேமியாவின் மகன் யூகாலை, மாசெயாவின் மகனும் ஆசாரியனுமாகிய செப்பனியாவுடன் இறைவாக்கினன் எரேமியாவிடம் அனுப்பி, “தயவுசெய்து நம் இறைவனாகிய யெகோவாவிடம் எங்களுக்காக மன்றாடும்” என்று செய்தி அனுப்பினான்.
Tuy nhiên, Vua Sê-đê-kia sai Giê-hu-canh, con Sê-lê-mia, và Thầy Tế lễ Sê-pha-nia, con Ma-a-xê-gia, đến cầu xin Giê-rê-mi: “Xin ông vì chúng tôi cầu khẩn Chúa Hằng Hữu, Đức Chúa Trời chúng ta.”
4 இப்பொழுது எரேமியாவுக்கு மக்கள் மத்தியில் போய் வரக்கூடிய சுதந்தரம் இருந்தது. ஏனெனில், அவன் இன்னும் சிறையில் அடைக்கப்படவில்லை.
Bấy giờ, Giê-rê-mi chưa bị giam nên còn đi lại tự do.
5 இதற்கிடையில் பார்வோனின் இராணுவம் எகிப்தைவிட்டுப் புறப்பட்டது. எருசலேமை முற்றுகையிட்டிருந்த பாபிலோனியர், எகிப்தியரைப் பற்றிய செய்தியைக் கேட்டபோது எருசலேமைவிட்டு போனார்கள்.
Lúc ấy, đội quân của Pha-ra-ôn từ Ai Cập tiến vào lãnh thổ phía nam Giu-đa. Quân Canh-đê hay tin ấy liền rút khỏi Giê-ru-sa-lem.
6 அப்பொழுது இறைவாக்கினன் எரேமியாவுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது:
Chúa Hằng Hữu ban sứ điệp này cho Giê-rê-mi:
7 “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே, என்னிடம் விசாரிக்கும்படி உன்னை அனுப்பிய யூதா அரசனிடம் நீ கூறவேண்டியதாவது: ‘உனக்கு உதவிசெய்ய புறப்பட்ட பார்வோனின் இராணுவம், தன் சொந்த நாடாகிய எகிப்திற்குத் திரும்பிப் போய்விடும்.
“Đây là điều Chúa Hằng Hữu, Đức Chúa Trời của Ít-ra-ên, phán: Vua Giu-đa sẽ sai con đến cầu hỏi Ta về các việc sẽ xảy ra. Hãy trả lời rằng: ‘Quân của Pha-ra-ôn đến giúp ngươi nhưng sẽ bị thất trận và bỏ chạy về Ai Cập.
8 அப்பொழுது பாபிலோனியர் திரும்பிவந்து இப்பட்டணத்தைத் தாக்குவார்கள். அவர்கள் அதைக் கைப்பற்றி எரித்துப் போடுவார்கள்.’
Người Canh-đê sẽ quay lại, chiếm đóng, và thiêu đốt thành này!’”
9 “யெகோவா கூறுவது இதுவே: ‘பாபிலோனியர் நிச்சயமாக எம்மைவிட்டுப் போய்விடுவார்கள்’ என எண்ணி உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அவர்கள் அப்படிச் செய்யமாட்டார்கள்.
“Đây là điều Chúa Hằng Hữu phán: Đừng tự nghĩ rằng quân Ba-by-lôn đã rút khỏi. Chúng không bỏ đi đâu!
10 உங்களை தாக்குகிற பாபிலோனிய இராணுவத்தை நீங்கள் முற்றிலும் தோற்கடித்து, அவர்களில் காயப்பட்டவர்கள் மாத்திரம் கூடாரங்களில் மீந்திருந்தாலுங்கூட, அவர்கள் வெளியே வந்து இந்தப் பட்டணத்தை எரித்துவிடுவார்கள்” என்று சொல்லுங்கள் என்றார்.
Dù cho các ngươi có đánh tan quân Ba-by-lôn đến nỗi chỉ còn lại những thương binh, thì chúng cũng vùng dậy, bỏ trại kéo ra, đốt tan thành này.”
11 பார்வோனின் இராணுவத்தினிமித்தம் பாபிலோனியப் படையினர் எருசலேமைவிட்டுப் போனபின்பு,
Khi quân Ba-by-lôn rút khỏi Giê-ru-sa-lem vì quân Pha-ra-ôn đang tiến đánh,
12 எரேமியா பென்யமீன் நாட்டு மக்களிடையே உள்ள தன் சொத்தின் பங்கைப் பெற்றுக்கொள்வதற்கு, எருசலேமைவிட்டு அங்கே போகப் புறப்பட்டான்.
Giê-rê-mi cũng vừa rời khỏi thành lên đường đến xứ Bên-gia-min để nhận miếng đất đã mua.
13 ஆனால் எரேமியா பென்யமீன் வாசலை அடைந்தபோது அனனியாவின் பேரனும், செலேமியாவின் மகனுமான யெரியா என்ற காவலாளர்களின் தலைவன் இறைவாக்கினனான எரேமியாவை கைது செய்தான். அவன், “நீ எங்களைவிட்டு பாபிலோனியரிடம் சேரப்போகிறாய்” என்று குற்றஞ்சாட்டினான்.
Nhưng mới vừa đi qua Cổng Bên-gia-min, thì ông bị một tên lính canh bắt và buộc tội: “Ông là người bỏ chạy theo quân Ba-by-lôn!” Người lính canh bắt giữ ông là Di-rê-gia, con Sê-lê-mia, cháu Ha-na-nia.
14 அதற்கு எரேமியா, “அது பொய்; நான் பாபிலோனியரைச் சேரப்போகவில்லை” என்றான். ஆனால் யெரியா அதை ஏற்றுக்கொள்ளாமல் எரேமியாவைக் கைதுசெய்து அதிகாரிகளிடத்தில் கொண்டுபோனான்.
Giê-rê-mi đáp: “Ngươi nói bậy! Ta không hề có ý như vậy.” Nhưng Di-rê-gia không nghe, cứ bắt Giê-rê-mi giải lên cho các quan.
15 அப்பொழுது அந்த அதிகாரிகள் எரேமியாவின்மீது கோபங்கொண்டு, அவனை அடித்து, செயலாளராகிய யோனத்தான் வீட்டில் காவலில் அடைத்தார்கள். அவர்கள் அதைக் காவற்கூடமாக மாற்றியிருந்தார்கள்.
Họ tức giận với Giê-rê-mi nên tra tấn rồi giam vào nhà của Thư ký Giô-na-than. Nhà của Giô-na-than trở thành nhà giam.
16 எரேமியா இருட்டான ஒரு காவற்கிடங்கில் போடப்பட்டு, அநேக காலம் அங்கேயிருந்தான்.
Giê-rê-mi bị giam trong buồng tối dưới hầm và ở đó lâu ngày.
17 அதன்பின் சிதேக்கியா அரசன் ஆளனுப்பி அவனை அரண்மனைக்கு அழைப்பித்து அவனிடம் “யெகோவாவிடமிருந்து ஏதேனும் வார்த்தை உண்டோ?” என்று தனிப்பட்ட முறையில் கேட்டான். அதற்கு எரேமியா, “ஆம்; நீ பாபிலோன் அரசனுடைய கையில் ஒப்புக்கொடுக்கப்படுவாய்” என்று பதிலளித்தான்.
Sau đó, Vua Sê-đê-kia bí mật ra lệnh giải Giê-rê-mi vào cung, vua hỏi ông: “Có phải ông nhận sứ điệp từ Chúa Hằng Hữu không?” Giê-rê-mi đáp: “Thưa vua, có! Vua sẽ bị nộp vào tay vua Ba-by-lôn.”
18 பின்பு எரேமியா சிதேக்கியா அரசனிடம், “நீர் என்னைச் சிறையில் அடைத்திருப்பதற்கு உமக்கோ, உமது அதிகாரிகளுக்கோ, இந்த மக்களுக்கோ விரோதமாக நான் செய்த குற்றம் என்ன?
Rồi Giê-rê-mi hỏi vua Sê-đê-kia: “Tôi đã phạm tội gì? Tôi có làm gì chống lại vua, các cận thần của vua, hay dân chúng để phải bị bỏ tù như thế?
19 ‘பாபிலோன் அரசன் உம்மையோ, இந்த நாட்டையோ தாக்கமாட்டான்’ என்று இறைவாக்கு சொல்லிய உம்முடைய இறைவாக்கு உரைப்போர் எங்கே?
Còn những tiên tri đã quả quyết với vua rằng vua Ba-by-lôn chẳng bao giờ tiến đánh vua hay xâm lăng đất nước này, bây giờ họ ở đâu?
20 என் தலைவனான அரசே! தயவுசெய்து கேளும். என் விண்ணப்பத்தை உமக்கு முன்பாகச் சமர்ப்பிக்க அனுமதியும். என்னை விண்ணப்பிக்கவிடும். என்னை செயலாளராகிய யோனத்தானுடைய வீட்டுக்குத் திரும்பவும் அனுப்பவேண்டாம். அனுப்பினால், நான் அங்கேயே இறந்துவிடுவேன்” என்றான்.
Xin hãy nghe, muôn tâu chúa tôi, tôi thỉnh cầu vua. Xin đừng trả tôi về nhà Thư ký Giô-na-than, vì tôi sẽ chết tại đó.”
21 அப்பொழுது சிதேக்கியா அரசன் எரேமியாவைக் காவற்கூட முற்றத்தில் சிறை வைக்கும்படி கட்டளையிட்டான். மேலும் பட்டணத்தில் அப்பம் முடியும்வரை அப்பம் சுடுவோரின் தெருவிலிருந்து தினமும் அவனுக்கு அப்பம் கொடுக்கும்படியும் கட்டளையிட்டான்; எனவே எரேமியா காவற்கூட முற்றத்தில் இருந்தான்.
Vậy Vua Sê-đê-kia ra lệnh không để Giê-rê-mi trở lại hầm tối. Thay vào đó, vua giam Giê-rê-mi trong sân thị vệ của hoàng cung. Vua còn ra lệnh cấp cho Giê-rê-mi mỗi ngày một ổ bánh, cho đến ngày trong thành hết bánh. Vậy, Giê-rê-mi bị giam trong ngục hoàng cung.