< எரேமியா 28 >
1 யூதாவின் அரசன் சிதேக்கியாவின் ஆட்சியின் ஆரம்ப காலத்தில், நான்காம் வருடம் ஐந்தாம் மாதத்தில் இறைவாக்கினன் அனனியா சொன்னது இதுவே, கிபியோன் ஊரானாகிய அசூரின் மகனான இவன், யெகோவாவின் ஆலயத்தில் ஆசாரியருக்கும், மற்ற எல்லா மக்களுக்கும் முன்பாக என்னிடம் சொன்னதாவது:
And that same yeere in the beginning of the reigne of Zedekiah King of Iudah in the fourth yeere, and in the fifth moneth Hananiah the sonne of Azur the prophet, which was of Gibeon, spake to mee in the House of the Lord in the presence of the Priestes, and of all the people, and said,
2 “இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: ‘பாபிலோன் அரசனின் நுகத்தை முறிப்பேன்.
Thus speaketh the Lord of hostes, the God of Israel, saying, I haue broken the yoke of the King of Babel.
3 பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார், இவ்விடத்திலிருந்து பாபிலோனுக்கு கொண்டுபோன யெகோவாவின் ஆலயத்திற்குரிய பொருட்கள் எல்லாவற்றையும் இரண்டு வருடங்களுக்குள் மீண்டும் இந்த இடத்திற்கு நான் கொண்டுவருவேன்.
Within two yeeres space I will bring into this place all the vessels of the Lords House, that Nebuchad-nezzar King of Babel tooke away from this place, and caried them into Babel.
4 பாபிலோனுக்குச் சென்ற யூதாவின் அரசன் யோயாக்கீமின் மகன் எகொனியாவையும், யூதாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட எல்லோரையும் நான் இந்த இடத்திற்கு மீண்டும் கொண்டுவருவேன்.’ ஏனெனில் நான் ‘பாபிலோன் அரசனின் நுகத்தை உடைப்பேன் என்று யெகோவா அறிவிக்கிறார்’ என்றான்.”
And I will bring againe to this place Ieconiah the sonne of Iehoiakim King of Iudah, with all them that were caried away captiue of Iudah, and went into Babel, saith the Lord: for I will breake the yoke of the King of Babel.
5 அப்பொழுது எரேமியா, ஆசாரியருக்கும் யெகோவாவின் ஆலயத்தில் நின்றுகொண்டிருந்த எல்லா மக்களுக்கும் முன்பாக, இறைவாக்கினன் அனனியாவுக்குப் பதிலளித்தான்.
Then the Prophet Ieremiah saide vnto the Prophet Hananiah in the presence of ye Priests, and in the presence of all the people that stoode in the House of the Lord.
6 “ஆமென், யெகோவா அவ்வாறே செய்வாராக; பாபிலோனிலிருந்து யெகோவாவின் ஆலய பொருட்களையும், நாடுகடத்தப்பட்டோர் அனைவரையும், திரும்பவும் இந்த இடத்திற்குக் கொண்டுவருவதன் மூலம் நீ கூறிய வார்த்தைகளை யெகோவா நிறைவேற்றுவாராக.
Euen the Prophet Ieremiah sayde, So bee it: the Lord so doe, the Lord confirme thy words which thou hast prophecied to restore the vessels of the Lordes House, and al that is caried captiue, from Babel, into this place.
7 ஆயினும், நீயும் எல்லா மக்களும் கேட்கத்தக்கதாக நான் இப்பொழுது கூறப்போவதற்குச் செவிகொடு.
But heare thou now this worde that I will speake in thine eares and in the eares of all the people.
8 உனக்கும் எனக்கும் முன்வாழ்ந்த இறைவாக்கு உரைப்போர், முற்காலம் தொடங்கியே அநேக நாடுகளுக்கும், பெரும் அரசுகளுக்கும் விரோதமாக யுத்தத்தையும், பேராபத்தையும், கொள்ளைநோயையும் பற்றி இறைவாக்கு கூறினார்கள்.
The Prophets that haue beene before mee and before thee in time past, prophecied against many countreyes, and against great kingdomes, of warre, and of plagues, and of pestilence.
9 ஆனால் சமாதானத்தை இறைவாக்காகக் கூறுகிற இறைவாக்கினனின் முன்னறிவிப்பு நிறைவேறினால் மட்டுமே, அவன் உண்மையாக யெகோவாவினால் அனுப்பப்பட்டவன் என்று ஏற்றுக்கொள்ளப்படுவான்” என்றான்.
And the Prophet which prophecieth of peace, when the word of the Prophet shall come to passe, then shall the Prophet be knowen that the Lord hath truely sent him.
10 அப்பொழுது இறைவாக்கினன் அனனியா, இறைவாக்கினன் எரேமியாவின் கழுத்திலிருந்த நுகத்தை எடுத்து அதை உடைத்துப்போட்டான்.
Then Hananiah the Prophet tooke the yoke from the Prophet Ieremiahs necke, and brake it.
11 அதன்பின் அனனியா எல்லா மக்களுக்கு முன்பாகவும், “யெகோவா கூறுவது இதுவே: இதைப்போலவே நான் எல்லா தேசத்தாரின் கழுத்திலிருந்தும், பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரின் நுகத்தை இரண்டு வருடங்களுக்குள் உடைத்துப்போடுவேன் என்கிறார்” என்றான். இதைக் கேட்ட இறைவாக்கினன் எரேமியா தன் வழியே போனான்.
And Hananiah spake in the presence of all the people, saying, Thus saith the Lord, Euen so will I breake the yoke of Nebuchad-nezzar King of Babel, from the necke of al nations within the space of two yeres: and the Prophet Ieremiah went his way.
12 இறைவாக்கினன் எரேமியாவின் கழுத்திலிருந்த நுகத்தை இறைவாக்கினன் அனனியா முறித்துப்போட்ட சற்று நேரத்திற்குப்பின் எரேமியாவுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது:
Then the word of the Lord came vnto Ieremiah the Prophet, (after that Hananiah the Prophet had broken the yoke from the necke of the Prophet Ieremiah) saying,
13 அவர் அவனிடம், நீ போய் அனனியாவிடம், “யெகோவா சொல்வது இதுவே: நீ மரத்தினாலான நுகத்தை உடைத்து விட்டாய்; ஆனால், அதற்குப் பதிலாக இரும்பினாலான நுகம் உனக்குக் கிடைக்கும்.
Go, and tell Hananiah, saying, Thus sayth the Lord, Thou hast broken the yokes of wood, but thou shalt make for them yokes of yron.
14 இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: இந்த எல்லா நாடுகளும் பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாருக்குப் பணிசெய்யும்படி அவர்களுடைய கழுத்தின்மேல் இரும்பு நுகத்தை வைப்பேன். அவர்கள் அவனுக்குப் பணிசெய்வார்கள். காட்டு மிருகங்களின்மேலும் அவனுக்கு அதிகாரத்தைக் கொடுப்பேன் என்று சொல்” என்றார்.
For thus saith the Lord of hostes the God of Israel, I haue put a yoke of yron vpon the necke of all these nations, that they may serue Nebuchad-nezzar King of Babel: for they shall serue him, and I haue giuen him the beasts of the fielde also.
15 அப்பொழுது இறைவாக்கினன் எரேமியா, இறைவாக்கினன் அனனியாவிடம், “அனனியாவே! கேள், யெகோவா உன்னை அனுப்பவில்லை; ஆயினும் இந்த மக்கள் பொய்யை நம்பும்படி நீ அவர்களை தூண்டிவிட்டிருக்கிறாய்.
Then sayd the Prophet Ieremiah vnto the Prophet Hananiah, Heare nowe Hananiah, the Lord hath not sent thee, but thou makest this people to trust in a lye.
16 ஆகையால் யெகோவா சொல்வது இதுவே: நான் உன்னைப் பூமியிலிருந்து நீக்கிவிடப் போகிறேன். நீ யெகோவாவுக்கு விரோதமாகக் கலகத்தைப் பிரசங்கித்திருக்கிறபடியால், இந்த வருடத்திலேயே நீ சாகப்போகிறாய்” என்றான்.
Therefore thus saith the Lord, Beholde, I will cast thee from of the earth: this yeere thou shalt die, because thou hast spoken rebelliously against the Lord.
17 அப்படியே இறைவாக்கினன் அனனியா அதே வருடம் ஏழாம் மாதத்தில் இறந்தான்.
So Hananiah the Prophet died the same yeere in the seuenth moneth.