< ஏசாயா 56 >

1 யெகோவா சொல்வது இதுவே: “நியாயத்தைக் கைக்கொண்டு நீதியைச் செய்யுங்கள். ஏனெனில், எனது இரட்சிப்பு சமீபமாய் இருக்கிறது; எனது நீதி விரைவில் வெளிப்படுத்தப்படும்.
כֹּ֚ה אָמַ֣ר יְהוָ֔ה שִׁמְר֥וּ מִשְׁפָּ֖ט וַעֲשׂ֣וּ צְדָקָ֑ה כִּֽי־קְרֹובָ֤ה יְשֽׁוּעָתִי֙ לָבֹ֔וא וְצִדְקָתִ֖י לְהִגָּלֹֽות׃
2 இதை செய்கிறவர்களும், இவற்றை உறுதியாய் பற்றிக்கொண்டு கைக்கொண்டு, ஓய்வுநாளை தூய்மைக்கேடாக்காமல் கடைபிடித்து, தீமைசெய்யாதபடி தன் கையை விலக்கிக் காத்துக்கொள்கிற மனிதர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.”
אַשְׁרֵ֤י אֱנֹושׁ֙ יַעֲשֶׂה־זֹּ֔את וּבֶן־אָדָ֖ם יַחֲזִ֣יק בָּ֑הּ שֹׁמֵ֤ר שַׁבָּת֙ מֵֽחַלְּלֹ֔ו וְשֹׁמֵ֥ר יָדֹ֖ו מֵעֲשֹׂ֥ות כָּל־רָֽע׃ ס
3 யெகோவாவோடு தன்னை இணைத்துக்கொண்டிருக்கும் அந்நியர், “யெகோவா என்னைத் தமது மக்களிடமிருந்து நிச்சயமாகப் பிரித்துவிடுவார்” என்று சொல்லாமல் இருக்கட்டும். அவ்வாறே அண்ணகன் எவனும், “நான் பட்டுப்போன மரந்தானே” என்று முறைப்பாடு சொல்லாமலும் இருக்கட்டும்.
וְאַל־יֹאמַ֣ר בֶּן־הַנֵּכָ֗ר הַנִּלְוָ֤ה אֶל־יְהוָה֙ לֵאמֹ֔ר הַבְדֵּ֧ל יַבְדִּילַ֛נִי יְהוָ֖ה מֵעַ֣ל עַמֹּ֑ו וְאַל־יֹאמַר֙ הַסָּרִ֔יס הֵ֥ן אֲנִ֖י עֵ֥ץ יָבֵֽשׁ׃ ס
4 யெகோவா சொல்வது இதுவே: “எனது ஓய்வுநாளை கடைப்பிடித்து, எனக்கு விருப்பமானவற்றைத் தெரிந்துகொண்டு என் உடன்படிக்கையை உறுதியாய்க் கைக்கொள்கிறவர்களான அண்ணகர்களுக்கு,
כִּי־כֹ֣ה ׀ אָמַ֣ר יְהוָ֗ה לַסָּֽרִיסִים֙ אֲשֶׁ֤ר יִשְׁמְרוּ֙ אֶת־שַׁבְּתֹותַ֔י וּבָֽחֲר֖וּ בַּאֲשֶׁ֣ר חָפָ֑צְתִּי וּמַחֲזִיקִ֖ים בִּבְרִיתִֽי׃
5 என் ஆலயத்திற்குள்ளும், அதின் சுவர்களிலும் ஒரு நினைவுச் சின்னத்தையும், மகன்கள் மற்றும் மகள்களுக்குமுரிய பெயர்களைவிடச் சிறந்த ஒரு பெயரையும் கொடுப்பேன். ஒருபோதும் அழிந்துபோகாதிருக்கிற நித்திய பெயரையும் அவர்களுக்குக் கொடுப்பேன்.
וְנָתַתִּ֨י לָהֶ֜ם בְּבֵיתִ֤י וּבְחֹֽומֹתַי֙ יָ֣ד וָשֵׁ֔ם טֹ֖וב מִבָּנִ֣ים וּמִבָּנֹ֑ות שֵׁ֤ם עֹולָם֙ אֶתֶּן־לֹ֔ו אֲשֶׁ֖ר לֹ֥א יִכָּרֵֽת׃ ס
6 யெகோவாவை அண்டியிருந்து, அவருக்கு ஊழியம் செய்து, யெகோவாவினுடைய பெயரை நேசித்து அவரை வழிபடும் பிறதேசத்தார் அனைவருக்கும், ஓய்வுநாட்களை தூய்மைக்கேடாக்காமல் அதைக் கைக்கொண்டு எனது உடன்படிக்கையை உறுதியாய் பற்றிக்கொள்ளும் அனைவருக்கும் சொல்வதாவது:
וּבְנֵ֣י הַנֵּכָ֗ר הַנִּלְוִ֤ים עַל־יְהוָה֙ לְשָׁ֣רְתֹ֔ו וּֽלְאַהֲבָה֙ אֶת־שֵׁ֣ם יְהוָ֔ה לִהְיֹ֥ות לֹ֖ו לַעֲבָדִ֑ים כָּל־שֹׁמֵ֤ר שַׁבָּת֙ מֵֽחַלְּלֹ֔ו וּמַחֲזִיקִ֖ים בִּבְרִיתִֽי׃
7 நான் அவர்களை என் பரிசுத்த மலைக்குக் கொண்டுவந்து, என் ஜெபவீட்டில் அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பேன். அவர்களின் தகனபலிகளும், மற்ற பலிகளும் எனது பலிபீடத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். ஏனெனில், எனது வீடு எல்லா நாடுகளுக்கும் ஜெபவீடு என்று அழைக்கப்படும்.
וַהֲבִיאֹותִ֞ים אֶל־הַ֣ר קָדְשִׁ֗י וְשִׂמַּחְתִּים֙ בְּבֵ֣ית תְּפִלָּתִ֔י עֹולֹתֵיהֶ֧ם וְזִבְחֵיהֶ֛ם לְרָצֹ֖ון עַֽל־מִזְבְּחִ֑י כִּ֣י בֵיתִ֔י בֵּית־תְּפִלָּ֥ה יִקָּרֵ֖א לְכָל־הָעַמִּֽים׃
8 நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேலரைச் சேர்க்கும் ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்: ஏற்கெனவே சேர்க்கப்பட்டவர்களோடுகூட இன்னும் மற்றவர்களையும் நான் கூட்டிச்சேர்ப்பேன்.”
נְאֻם֙ אֲדֹנָ֣י יְהוִ֔ה מְקַבֵּ֖ץ נִדְחֵ֣י יִשְׂרָאֵ֑ל עֹ֛וד אֲקַבֵּ֥ץ עָלָ֖יו לְנִקְבָּצָֽיו׃
9 வயலின் மிருகங்களே, எல்லோரும் வாருங்கள். காட்டு மிருகங்களே, எல்லோரும் வந்து இரையை விழுங்குங்கள்.
כֹּ֖ל חַיְתֹ֣ו שָׂדָ֑י אֵתָ֕יוּ לֶאֱכֹ֥ל כָּל־חַיְתֹ֖ו בַּיָּֽעַר׃ ס
10 இஸ்ரயேலின் காவலாளிகள் அனைவரும் அறிவில்லாத குருடர்; அவர்கள் எல்லோரும் குரைக்கமாட்டாத ஊமையான நாய்கள்; அவர்கள் படுத்துக் கிடந்து கனவு காண்கிறார்கள், நித்திரை செய்யவே விரும்புகிறவர்கள்.
צָפוּ (צֹפָ֞יו) עִוְרִ֤ים כֻּלָּם֙ לֹ֣א יָדָ֔עוּ כֻּלָּם֙ כְּלָבִ֣ים אִלְּמִ֔ים לֹ֥א יוּכְל֖וּ לִנְבֹּ֑חַ הֹזִים֙ שֹֽׁכְבִ֔ים אֹהֲבֵ֖י לָנֽוּם׃
11 அவர்கள் பெரும் பசிகொண்ட நாய்கள்; அவர்கள் ஒருபோதும் திருப்தியடைவதில்லை. பகுத்தறிவு இல்லாத மேய்ப்பர்கள், அவர்கள் எல்லாரும் தங்கள் சொந்த வழிக்குத் திரும்பி, ஒவ்வொருவனும் தன் சுய இலாபத்தையே தேடுகிறார்கள்.
וְהַכְּלָבִ֣ים עַזֵּי־נֶ֗פֶשׁ לֹ֤א יָֽדְעוּ֙ שָׂבְעָ֔ה וְהֵ֣מָּה רֹעִ֔ים לֹ֥א יָדְע֖וּ הָבִ֑ין כֻּלָּם֙ לְדַרְכָּ֣ם פָּנ֔וּ אִ֥ישׁ לְבִצְעֹ֖ו מִקָּצֵֽהוּ׃
12 ஒவ்வொருவரும் சத்தமிட்டு, “வாருங்கள்; நாம் போய் திராட்சைமது கொண்டுவருவோம்; நாம் மதுவை நிறையக் குடிப்போம், நாளைய தினமும் இன்றுபோல் இருக்கும், அல்லது இதைவிடச் சிறப்பாகவும் இருக்கும்” என்கிறார்கள்.
אֵתָ֥יוּ אֶקְחָה־יַ֖יִן וְנִסְבְּאָ֣ה שֵׁכָ֑ר וְהָיָ֤ה כָזֶה֙ יֹ֣ום מָחָ֔ר גָּדֹ֖ול יֶ֥תֶר מְאֹֽד׃

< ஏசாயா 56 >