< ஏசாயா 4 >

1 அந்த நாளிலே ஏழு பெண்கள் ஒரே புருஷனைப் பிடித்து இப்படிச் சொல்வார்கள்: “நாங்கள் எங்கள் சொந்த உணவைச் சாப்பிட்டு, எங்கள் சொந்த உடைகளையும் உடுத்திக்கொள்வோம்; உமது பெயரை மாத்திரம் எங்களுக்கு வழங்கி, எங்கள் அவமானத்தை நீக்கிவிடும்!”
그 날에 일곱 여자가 한 남자를 붙잡고 말하기를 우리가 우리 떡을 먹으며 우리 옷을 입으리니 오직 당신의 이름으로 우리를 칭하게 하여 우리로 수치를 면케 하라 하리라
2 அந்த நாளிலே யெகோவாவின் கிளை, அழகுடனும் மகிமையுடனும் விளங்கும்; இஸ்ரயேல் நாட்டில் தப்பிப் பிழைத்தவர்களுக்கு அந்த நாட்டின் கனி பெருமையும், மகிமையுமாகும்.
그 날에 여호와의 싹이 아름답고 영화로울 것이요 그 땅의 소산은 이스라엘의 피난한 자를 위하여 영화롭고 아름다울 것이며
3 அப்பொழுது சீயோனில் விடப்பட்டவர்களாய், எருசலேம் நகரில் மீந்திருப்பவர்கள், பரிசுத்தர்கள் என அழைக்கப்படுவார்கள்; வாழ்வதற்கென்று எருசலேமில் பேரெழுதப்பட்ட எல்லோரும் அப்படியே அழைக்கப்படுவார்கள்.
시온에 남아 있는 자, 예루살렘에 머물러 있는 자 곧 예루살렘에 있어 생존한 자 중 녹명된 모든 사람은 거룩하다 칭함을 얻으리니
4 யெகோவா சீயோனின் பெண்களுடைய அசுத்தத்தைக் கழுவி, அவர் எருசலேமிலிருந்து அதன் இரத்தக் கறைகளை நியாயத்தின் ஆவியாலும், நெருப்புத் தணலையொத்த ஆவியாலும் சுத்திகரிப்பார்.
이는 주께서 그 심판하는 영과 소멸하는 영으로 시온의 딸들의 더러움을 씻으시며 예루살렘의 피를 그 중에서 청결케 하실 때가 됨이라
5 அதன்பின் சீயோன் மலை முழுவதற்கு மேலாகவும், அங்கு சபை கூடுகிறவர்களுக்கு மேலாகவும் பகலிலே புகை மேகத்தையும், இரவிலே நெருப்புச் சுவாலையின் பிரகாசத்தையும் யெகோவா உண்டாக்குவார்; இந்த எல்லா மகிமைக்கு மேலாகவும் ஒரு விதான மண்டபம் உண்டாயிருக்கும்.
여호와께서 그 거하시는 온 시온산과 모든 집회 위에 낮이면 구름과 연기, 밤이면 화염의 빛을 만드시고 그 모든 영광 위에 천막을 덮으실 것이며
6 அது பகலின் வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் கூடாரமாகவும், நிழலாகவும் இருக்கும். அது புயலிலிருந்தும், மழையிலிருந்தும் மக்களைப் பாதுகாக்கும் புகலிடமாயும், மறைவிடமாயும் இருக்கும்.
또 천막이 있어서 낮에는 더위를 피하는 그늘을 지으며 또 풍우를 피하여 숨는 곳이 되리라

< ஏசாயா 4 >