< ஓசியா 6 >

1 வாருங்கள், நாம் யெகோவாவிடம் திரும்புவோம். அவர் நம்மைக் காயப்படுத்தினார், ஆயினும், அவரே நம்மை சுகப்படுத்துவார். அவர் நம்மை நொறுக்கினார், ஆயினும், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்.
「來,我們回到上主那裏去,因為衪撕碎了我們,也必要治愈;衪打傷了我們,也必要包紮。
2 நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருக்கும்படி இரண்டு நாட்களுக்குப்பின்பு அவர் நமக்குப் புத்துயிரூட்டுவார்; மூன்றாம் நாளிலோ நம்மை எழுப்புவார்.
兩天後衪必使田復生,第三天衪必使我們興起,生活在衪的慈顏下。
3 நாம் யெகோவாவை அறிந்துகொள்வோமாக; நாம் தொடர்ந்து அவரைப்பற்றி அறிய முயற்சிப்போமாக. சூரியன் உதிப்பது நிச்சயம்போல, அவர் தோன்றுவார் என்பதும் நிச்சயம். அவர் மழையைப்போலவும், பூமியை நனைக்கும் வசந்தகால மழையைப்போல் வருவார்.
讓我們認識上主,讓我們努力認識上主! 衪定要像曙光一樣出現,衪要來到我們中間,有如秋雨,有如滋潤田地的春雨。」
4 எப்பிராயீமே, நான் உன்னை என்ன செய்வேன்? யூதாவே, நான் உன்னை என்ன செய்வேன்? உங்களது அன்பு காலையில் தோன்றும் மேகம்போலவும், விடியும்போது மறைந்துபோகும் பனிபோலவும் இருக்கிறது.
厄弗辣因,我可對你們作什麼﹖因為你們的仁愛有如旱晨的浮雲,有如易於消散的朝露。
5 அதனால்தான் நான் இறைவாக்கினர்மூலம் உங்களை வெட்டினேன்; என் வாயின் வார்த்தையினால் உங்களைக் கொன்றேன்; என் நியாயத்தீர்ப்பு உங்கள்மேல் ஒளிபோல் வெளிப்படும்.
因此,我藉先知們砍伐了他們,以我口中的言語殺死戳了他們;我的的裁判出現有如光明:
6 நான் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்; தகன காணிக்கைகளை அல்ல, இறைவனை அறியும் அறிவையே விரும்புகிறேன்.
因為我喜歡仁慈勝過祭獻,喜歡人認識天主勝過全燔祭。
7 ஆனால், ஆதாமைப்போல் அவர்கள் என் உடன்படிக்கையை மீறி, அங்கே எனக்கு துரோகம் பண்ணினார்கள்.
但是他們在阿當就犯了罪,在那裏已背叛了我。
8 கீலேயாத் கொடுமையானவர்களின் பட்டணம்; அது இரத்தம் தோய்ந்த அடிச்சுவடுகளால் கறைப்பட்டிருக்கிறது.
基肋阿得是座作惡的城池,滿了血跡。
9 கொள்ளையர் கூட்டம் ஒருவனுக்காகப் பதுங்கிக் காத்திருப்பதுபோல, ஆசாரியர்களின் கூட்டமும் இருக்கிறார்கள். அவர்கள் சீகேமுக்குப் போகும் வழியிலே கொலைசெய்து, வெட்கக்கேடான குற்றங்களை செய்கிறார்கள்.
一隊司祭就如埋伏的強盜,在往舍根的路上行兇;的確,他們行了可恥的事
10 இஸ்ரயேல் குடும்பத்தாரே, உங்கள் நாட்டில் கொடூரமான செயலைக் கண்டேன்; எப்பிராயீமோ வேசித்தனத்தில் ஈடுபட்டிருக்கிறது, இஸ்ரயேல் தீட்டுப்பட்டிருக்கிறது.
在貝特耳我見了可惡的事:在那裏厄弗辣因行了淫,以色列玷污了自己
11 யூதாவே, உனக்கும் ஒரு அறுவடை நியமிக்கப்பட்டிருக்கிறது. “என் மக்களின் செல்வங்களை நான் அவர்களுக்குத் திரும்பக் கொடுக்கும்போது,
當我轉變我百姓的命運時,猶大啊! 為你也注定了一個收割期。

< ஓசியா 6 >