< எபிரேயர் 5 >
1 ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் மனிதரிடையே இருந்து தெரிந்தெடுக்கப்பட்டு, இறைவனுக்குரிய காரியங்களில், காணிக்கைகளையும், பாவங்களுக்கான பலிகளையும் செலுத்துவதற்காக மக்கள் சார்பாய் நியமிக்கப்படுகிறான்.
ଯଃ କଶ୍ଚିତ୍ ମହାଯାଜକୋ ଭୱତି ସ ମାନୱାନାଂ ମଧ୍ୟାତ୍ ନୀତଃ ସନ୍ ମାନୱାନାଂ କୃତ ଈଶ୍ୱରୋଦ୍ଦେଶ୍ୟୱିଷଯେଽର୍ଥତ ଉପହାରାଣାଂ ପାପାର୍ଥକବଲୀନାଞ୍ଚ ଦାନ ନିଯୁଜ୍ୟତେ|
2 பிரதான ஆசாரியன் தானும் பலவீனனானபடியால், அறியாமையில் இருக்கிறவர்களுடனும் வழிவிலகிச் செல்கிறவர்களுடனும் இவன் தயவு காட்டக்கூடியவனாய் இருக்கிறான்.
ସ ଚାଜ୍ଞାନାଂ ଭ୍ରାନ୍ତାନାଞ୍ଚ ଲୋକାନାଂ ଦୁଃଖେନ ଦୁଃଖୀ ଭୱିତୁଂ ଶକ୍ନୋତି, ଯତୋ ହେତୋଃ ସ ସ୍ୱଯମପି ଦୌର୍ବ୍ବଲ୍ୟୱେଷ୍ଟିତୋ ଭୱତି|
3 இதனாலேயே அவன் தன்னுடைய பாவங்களுக்காகவும் மக்களின் பாவங்களுக்காகவும் பலிகளைச் செலுத்த வேண்டியதாயிருக்கிறது.
ଏତସ୍ମାତ୍ କାରଣାଚ୍ଚ ଯଦ୍ୱତ୍ ଲୋକାନାଂ କୃତେ ତଦ୍ୱଦ୍ ଆତ୍ମକୃତେଽପି ପାପାର୍ଥକବଲିଦାନଂ ତେନ କର୍ତ୍ତୱ୍ୟଂ|
4 மேலும் அந்த மதிப்புக்குரிய ஊழியத்தை ஒருவனும் தனக்குத்தானே பொறுப்பாக்கிக்கொள்ள முடியாது. ஆரோனைப்போலவே, அவனும் இறைவனால் அழைக்கப்பட வேண்டும்.
ସ ଘୋଚ୍ଚପଦଃ ସ୍ୱେଚ୍ଛାତଃ କେନାପି ନ ଗୃହ୍ୟତେ କିନ୍ତୁ ହାରୋଣ ଇୱ ଯ ଈଶ୍ୱରେଣାହୂଯତେ ତେନୈୱ ଗୃହ୍ୟତେ|
5 அவ்விதமாகவே, கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராகிறதற்கு அந்த மகிமையை தனதாக்கிக்கொள்ளவில்லை. இறைவனே அவரைக்குறித்து சொல்லியிருக்கிறதாவது, “நீர் என்னுடைய மகன்; இன்று நான் உமக்குத் தந்தையானேன்.”
ଏୱମ୍ପ୍ରକାରେଣ ଖ୍ରୀଷ୍ଟୋଽପି ମହାଯାଜକତ୍ୱଂ ଗ୍ରହୀତୁଂ ସ୍ୱୀଯଗୌରୱଂ ସ୍ୱଯଂ ନ କୃତୱାନ୍, କିନ୍ତୁ "ମଦୀଯତନଯୋଽସି ତ୍ୱମ୍ ଅଦ୍ୟୈୱ ଜନିତୋ ମଯେତି" ୱାଚଂ ଯସ୍ତଂ ଭାଷିତୱାନ୍ ସ ଏୱ ତସ୍ୟ ଗୌରୱଂ କୃତୱାନ୍|
6 இன்னொரு இடத்தில், இறைவன் அவரைக்குறித்து, “நீர் என்றென்றைக்கும் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி ஆசாரியராக இருக்கிறீர்” என்று சொல்லியிருக்கிறார். (aiōn )
ତଦ୍ୱଦ୍ ଅନ୍ୟଗୀତେଽପୀଦମୁକ୍ତଂ, ତ୍ୱଂ ମଲ୍କୀଷେଦକଃ ଶ୍ରେଣ୍ୟାଂ ଯାଜକୋଽସି ସଦାତନଃ| (aiōn )
7 இயேசு பூமியிலிருந்த நாட்களில், தம்மை மரணத்திலிருந்து காப்பாற்ற வல்லமையுள்ளவரை நோக்கி, சத்தமாய் கதறி, கண்ணீர்விட்டு, தமது வேண்டுதல்களைச் சொல்லி மன்றாடினார். அவருடைய பயபக்தியான அர்ப்பணிப்பினிமித்தம், அவருடைய மன்றாட்டு கேட்கப்பட்டது.
ସ ଚ ଦେହୱାସକାଲେ ବହୁକ୍ରନ୍ଦନେନାଶ୍ରୁପାତେନ ଚ ମୃତ୍ୟୁତ ଉଦ୍ଧରଣେ ସମର୍ଥସ୍ୟ ପିତୁଃ ସମୀପେ ପୁନଃ ପୁନର୍ୱିନତିଂ ପ୍ରର୍ଥନାଞ୍ଚ କୃତ୍ୱା ତତ୍ଫଲରୂପିଣୀଂ ଶଙ୍କାତୋ ରକ୍ଷାଂ ପ୍ରାପ୍ୟ ଚ
8 இயேசு இறைவனின் மகனாய் இருந்துங்கூட, தாம் அனுபவித்த வேதனையின் மூலமாகவே, கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.
ଯଦ୍ୟପି ପୁତ୍ରୋଽଭୱତ୍ ତଥାପି ଯୈରକ୍ଲିଶ୍ୟତ ତୈରାଜ୍ଞାଗ୍ରହଣମ୍ ଅଶିକ୍ଷତ|
9 இப்படி இயேசு முழுமையாகப் பிரதான ஆசாரியனாக்கப்பட்ட பின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற எல்லோருக்கும் நித்திய இரட்சிப்பைக் கொடுக்கும் காரணரானார். (aiōnios )
ଇତ୍ଥଂ ସିଦ୍ଧୀଭୂଯ ନିଜାଜ୍ଞାଗ୍ରାହିଣାଂ ସର୍ୱ୍ୱେଷାମ୍ ଅନନ୍ତପରିତ୍ରାଣସ୍ୟ କାରଣସ୍ୱରୂପୋ ଽଭୱତ୍| (aiōnios )
10 இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி பிரதான ஆசாரியனாய் இருப்பதற்காக, இறைவனாலே நியமிக்கப்பட்டார்.
ତସ୍ମାତ୍ ସ ମଲ୍କୀଷେଦକଃ ଶ୍ରେଣୀଭୁକ୍ତୋ ମହାଯାଜକ ଈଶ୍ୱରେଣାଖ୍ୟାତଃ|
11 இதைக்குறித்து சொல்ல நமக்கு அதிகம் உண்டு. ஆனால் நீங்கள் கற்றுக்கொள்வதில் மந்தமாய் இருப்பதனால், இதை விளங்கப்படுத்துவது கடினமாயிருக்கிறது.
ତମଧ୍ୟସ୍ମାକଂ ବହୁକଥାଃ କଥଯିତୱ୍ୟାଃ କିନ୍ତୁ ତାଃ ସ୍ତବ୍ଧକର୍ଣୈ ର୍ୟୁଷ୍ମାଭି ର୍ଦୁର୍ଗମ୍ୟାଃ|
12 உண்மையிலேயே இக்காலத்திற்குள் நீங்கள் வேத ஆசிரியர்களாய் இருந்திருக்க வேண்டும். ஆனால் இறைவனுடைய வார்த்தைகளின் ஆரம்ப பாடங்களையே மீண்டும் ஒருவர் உங்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய நிலையிலேயே நீங்கள் இருக்கிறீர்கள். உங்களுக்குத் தேவையானது பால்தான், திடமான உணவு அல்ல.
ଯତୋ ଯୂଯଂ ଯଦ୍ୟପି ସମଯସ୍ୟ ଦୀର୍ଘତ୍ୱାତ୍ ଶିକ୍ଷକା ଭୱିତୁମ୍ ଅଶକ୍ଷ୍ୟତ ତଥାପୀଶ୍ୱରସ୍ୟ ୱାକ୍ୟାନାଂ ଯା ପ୍ରଥମା ୱର୍ଣମାଲା ତାମଧି ଶିକ୍ଷାପ୍ରାପ୍ତି ର୍ୟୁଷ୍ମାକଂ ପୁନରାୱଶ୍ୟକା ଭୱତି, ତଥା କଠିନଦ୍ରୱ୍ୟେ ନହି କିନ୍ତୁ ଦୁଗ୍ଧେ ଯୁଷ୍ମାକଂ ପ୍ରଯୋଜନମ୍ ଆସ୍ତେ|
13 பாலைக் குடிக்கிறவன் இன்னும் குழந்தையாகவே இருக்கிறான். இதனால் அவன் நீதியைப் பற்றின படிப்பினையில் தேர்ச்சி பெறாதவனாய் இருக்கிறான்.
ଯୋ ଦୁଗ୍ଧପାଯୀ ସ ଶିଶୁରେୱେତିକାରଣାତ୍ ଧର୍ମ୍ମୱାକ୍ୟେ ତତ୍ପରୋ ନାସ୍ତି|
14 முதிர்ச்சியடைந்தவர்களுக்கே திடமான உணவு தகுதியானது. அவர்களே தொடர்ச்சியான பயிற்சியினால், தீமையிலிருந்து நன்மையை வித்தியாசம் காணக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.
କିନ୍ତୁ ସଦସଦ୍ୱିଚାରେ ଯେଷାଂ ଚେତାଂସି ୱ୍ୟୱହାରେଣ ଶିକ୍ଷିତାନି ତାଦୃଶାନାଂ ସିଦ୍ଧଲୋକାନାଂ କଠୋରଦ୍ରୱ୍ୟେଷୁ ପ୍ରଯୋଜନମସ୍ତି|