< எபிரேயர் 2 >

1 எனவே நாம் கேட்டறிந்த உண்மைகளை அதிக கவனமாய் பற்றிக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான், நாம் அவைகளிலிருந்து விலகிப்போகாமல் இருப்போம்.
Διά τούτο πρέπει ημείς να προσέχωμεν περισσότερον εις όσα ηκούσαμεν, διά να μη εκπέσωμέν ποτέ.
2 இறைவனின் தூதர்கள் மூலமாய் பேசப்பட்டசெய்தி உறுதிப்படுத்தியபடியால், அதை மீறியதற்கும், கீழ்ப்படியாததற்கும் நீதியான தண்டனை கொடுக்கப்பட்டது.
Διότι εάν ο λόγος ο λαληθείς δι' αγγέλων έγεινε βέβαιος, και πάσα παράβασις και παρακοή έλαβε δικαίαν μισθαποδοσίαν,
3 அப்படியானால், இப்படிப்பட்ட பெரிதான இரட்சிப்பை நாம் அலட்சியம் செய்தால், நாம் எப்படித் தப்பமுடியும்? இந்த இரட்சிப்போ முதலாவது கர்த்தராகிய இயேசுவினாலேயே அறிவிக்கப்பட்டது. அவர் சொன்னதைக் கேட்டவர்கள் அதை நமக்கு உறுதிப்படுத்தினார்கள்.
πως ημείς θέλομεν εκφύγει, εάν αμελήσωμεν τόσον μεγάλην σωτηρίαν; ήτις αρχίσασα να λαλήται διά του Κυρίου, εβεβαιώθη εις ημάς υπό των ακουσάντων,
4 இறைவனும் அடையாளங்களினாலும், அதிசயங்களினாலும், பலவித அற்புதங்களினாலும், தம்முடைய திட்டத்தின்படியே, பரிசுத்த ஆவியானவருடைய வரங்களையும் பகிர்ந்துகொடுத்து, அதற்குச் சாட்சி அளித்தார்.
και ο Θεός συνεπεμαρτύρει με σημεία και τέρατα και με διάφορα θαύματα και με διανομάς του Αγίου Πνεύματος κατά την θέλησιν αυτού.
5 வரப்போகும் உலகத்தைக்குறித்து நாம் பேசுகிறோமே, அதை இறைவன் தமது தூதர்களுக்குக் கீழ்ப்படுத்தவில்லை.
Διότι δεν υπέταξεν εις αγγέλους την οικουμένην την μέλλουσαν, περί της οποίας λαλούμεν.
6 ஒரு இடத்திலே ஒருவர் சாட்சியாய் சொல்லுகையில், “இறைவனே, மனிதனில் நீர் கரிசனை கொள்வதற்கும், மானிடமகனில் நீர் அக்கறை கொள்வதற்கும் அவன் எம்மாத்திரம்?
Εμαρτύρησε δε τις εν τινί μέρει, λέγων· Τι είναι ο άνθρωπος, ώστε να ενθυμήσαι αυτόν, Η ο υιός του ανθρώπου, ώστε να επισκέπτησαι αυτόν;
7 நீர் அவர்களைத் தேவதூதர்களைப்பார்க்கிலும் சற்றுச் சிறியவர்களாகப் படைத்து, அவர்களை மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டினீர்.
Έκαμες αυτόν ολίγον τι κατώτερον των αγγέλων, με δόξαν και τιμήν εστεφάνωσας αυτόν και κατέστησας αυτόν επί τα έργα των χειρών σου·
8 எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.” இதில் இறைவன் எல்லாவற்றையும் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தினார் என்பதிலிருந்து, அவர் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தாமல் எதையுமே விட்டுவிடவில்லை என்பது தெளிவாகிறது. இருந்தபோதும் எல்லாம் அவர்களுக்கு இன்னும் அடிபணியவில்லை.
Πάντα υπέταξας υποκάτω των ποδών αυτού. Διότι υποτάξας εις αυτόν τα πάντα, δεν αφήκεν ουδέν ανυπότακτον εις αυτόν. Τώρα όμως δεν βλέπομεν έτι τα πάντα υποτεταγμένα εις αυτόν·
9 ஆனாலும் சிறிது காலத்திற்கு இறைத்தூதர்களிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்ட இயேசுவோ, மரண வேதனையடைந்தவராய் இறைவனுடைய கிருபையினாலே, ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசிப்பார்த்தபடியால் இப்பொழுது மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.
τον δε ολίγον τι παρά τους αγγέλους ηλαττωμένον Ιησούν βλέπομεν διά το πάθημα του θανάτου με δόξαν και τιμήν εστεφανωμένον, διά να γευθή θάνατον υπέρ παντός ανθρώπου διά της χάριτος του Θεού.
10 அநேக பிள்ளைகளை மகிமைக்குள் கொண்டுவரும் பொருட்டு, அவர்களது இரட்சிப்பின் மூலகாரணரான கிறிஸ்துவை, வேதனை அனுபவிப்பதன் மூலமாக, முழுநிறைவுள்ள மூலகாரணராய் இறைவன் ஆக்கியது அவருக்கேற்ற செயலே. இறைவனுக்காகவும், இறைவனின் மூலமாகவுமே எல்லாம் இருக்கின்றன.
Διότι έπρεπεν εις αυτόν, διά τον οποίον είναι τα πάντα και διά του οποίου έγειναν τα πάντα, φέρων εις την δόξαν πολλούς υιούς, να κάμη τέλειον τον αρχηγόν της σωτηρίας αυτών διά των παθημάτων.
11 பரிசுத்தமாக்குகிற அவரும், பரிசுத்தமாக்கப்படுகிறவர்களும் ஒரே குடும்பத்தினரே. அதனாலேயே இயேசு அவர்களைச் சகோதரர் என்று அழைப்பதற்கு வெட்கப்படாதிருக்கிறார்.
Επειδή και ο αγιάζων και οι αγιαζόμενοι εξ ενός είναι πάντες· δι' ην αιτίαν δεν επαισχύνεται να ονομάζη αυτούς αδελφούς,
12 இயேசு அவர்களைக்குறித்து சொல்லுகிறதாவது, “நான் உம்முடைய பெயரை, எனது சகோதரர்களுக்கு அறிவிப்பேன்; திருச்சபையின் முன்னிலையில் உம்முடைய துதிகளைப் பாடுவேன்.”
λέγων· Θέλω απαγγείλει το όνομά σου προς τους αδελφούς μου, εν μέσω εκκλησίας θέλω σε υμνήσει·
13 மேலும், “நான் அவரில் என் நம்பிக்கையை வைப்பேன், இதோ நானும் இறைவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் இங்கே இருக்கிறோம்” என்றும் கூறியுள்ளார்.
και πάλιν· Εγώ θέλω έχει την πεποίθησίν μου επ' αυτόν· και πάλιν· Ιδού, εγώ και τα παιδία, τα οποία μοι έδωκεν ο Θεός.
14 பிள்ளைகள் இரத்தமும், மாம்சமும் உடையவர்களாய் இருக்கிறபடியால், அவர்களுடைய மனித இயல்பில் இயேசுவும் பங்குகொண்டார். அவருடைய மரணத்தினால், மரணத்தின் அதிகாரத்தைத் தன்னிடம் வைத்துக்கொண்டிருந்த பிசாசை அழிக்கும்படிக்கும்,
Επειδή λοιπόν τα παιδία εμέθεξαν από σαρκός και αίματος, και αυτός παρομοίως μετέλαβεν από των αυτών, διά να καταργήση διά του θανάτου τον έχοντα το κράτος του θανάτου, τουτέστι τον διάβολον,
15 தங்களுடைய வாழ்நாள் எல்லாம் சாவைக்குறித்த பயத்தினாலே, அடிமைகளாய் இருந்தவர்களை விடுதலை செய்யும்படிக்கும் அவர் மனித இயல்பில் பங்குகொண்டார்.
και ελευθερώση εκείνους, όσοι διά τον φόβον του θανάτου ήσαν διά παντός του βίου υποκείμενοι εις την δουλείαν.
16 இயேசு உதவிசெய்வது இறைத்தூதர்களுக்கு அல்ல, ஆபிரகாமின் சந்ததிக்கே.
Διότι βεβαίως δεν ανέλαβεν αγγέλων φύσιν, αλλά σπέρματος Αβραάμ ανέλαβεν.
17 இதன் காரணமாகவே, இயேசு எல்லாவிதத்திலும் தம்முடைய சகோதரர்களைப்போல் ஆகவேண்டியிருந்தது. இறைவனுடைய ஊழியத்தில், அவர் இரக்கமும் உண்மையுள்ள பிரதான ஆசாரியன் ஆவதற்காகவும், மக்களுடைய பாவங்களுக்கான பாவநிவிர்த்தியைச் செய்வதற்காகவுமே, அவர் தம்முடைய சகோதரர்களைப் போலானார்.
Όθεν έπρεπε να ομοιωθή κατά πάντα με τους αδελφούς, διά να γείνη ελεήμων και πιστός αρχιερεύς εις τα προς τον Θεόν, διά να κάμνη εξιλέωσιν υπέρ των αμαρτιών του λαού.
18 இயேசு சோதனைக்குட்பட்டபோது, வேதனைகளை அனுபவித்தபடியால், இப்பொழுது சோதிக்கப்படுகிறவர்களுக்கு, அவர் உதவிசெய்ய வல்லவராக இருக்கிறார்.
Επειδή καθ' ότι αυτός έπαθε πειρασθείς, δύναται να βοηθήση τους πειραζομένους.

< எபிரேயர் 2 >