< எபிரேயர் 13 >

1 ஒருவரிலொருவர், சகோதர அன்பில் தொடர்ந்து நிலைத்திருங்கள்.
ভ্ৰাতৃষু প্ৰেম তিষ্ঠতু| অতিথিসেৱা যুষ্মাভি ৰ্ন ৱিস্মৰ্য্যতাং
2 அந்நியரை உபசரிக்க மறந்துவிடாதீர்கள். ஏனெனில் அவ்விதம் செய்ததினால், சிலர் அறியாமல் இறைத்தூதர்களையும் உபசரித்திருக்கிறார்கள்.
যতস্তযা প্ৰচ্ছন্নৰূপেণ দিৱ্যদূতাঃ কেষাঞ্চিদ্ অতিথযোঽভৱন্|
3 சிறையில் இருப்பவர்களை, நீங்களும் அவர்களோடு சிறையில் இருப்பதுபோலவும், துன்பப்படுகிறவர்களை, நீங்களும் அவர்களோடு துன்பப்படுவதைப்போலவும் எண்ணிக்கொண்டு ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
বন্দিনঃ সহবন্দিভিৰিৱ দুঃখিনশ্চ দেহৱাসিভিৰিৱ যুষ্মাভিঃ স্মৰ্য্যন্তাং|
4 திருமணம் எல்லோராலும் மதிக்கப்பட வேண்டும். திருமணப்படுக்கை தூய்மையாக காக்கப்படவேண்டும். விபசாரத்திலும், முறைகேடான பாலுறவிலும் ஈடுபடுகிறவர்களை இறைவன் நியாயந்தீர்ப்பார்.
ৱিৱাহঃ সৰ্ৱ্ৱেষাং সমীপে সম্মানিতৱ্যস্তদীযশয্যা চ শুচিঃ কিন্তু ৱেশ্যাগামিনঃ পাৰদাৰিকাশ্চেশ্ৱৰেণ দণ্ডযিষ্যন্তে|
5 பண ஆசையிலிருந்து விலகி, உங்களிடம் இருப்பதைக்கொண்டு மனத்திருப்தியுடன் வாழுங்கள். ஏனெனில் இறைவன், “நான் உன்னைவிட்டு ஒருபோதும் விலகமாட்டேன்; நான் உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்” என்று சொல்லியிருக்கிறாரே.
যূযম্ আচাৰে নিৰ্লোভা ভৱত ৱিদ্যমানৱিষযে সন্তুষ্যত চ যস্মাদ্ ঈশ্ৱৰ এৱেদং কথিতৱান্, যথা, "ৎৱাং ন ত্যক্ষ্যামি ন ৎৱাং হাস্যামি| "
6 எனவே நாமும் மனத்தைரியத்துடன், “கர்த்தர் எனக்கு உதவியாளர்; நான் பயப்படமாட்டேன். மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்?” என்று சொல்வோம்.
অতএৱ ৱযম্ উৎসাহেনেদং কথযিতুং শক্নুমঃ, "মৎপক্ষে পৰমেশোঽস্তি ন ভেষ্যামি কদাচন| যস্মাৎ মাং প্ৰতি কিং কৰ্ত্তুং মানৱঃ পাৰযিষ্যতি|| "
7 உங்களுக்கு இறைவனுடைய வார்த்தையைக் கற்றுக்கொடுத்த தலைவர்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அவர்களுடைய வாழ்க்கை முறையின் பிரதிபலனை யோசித்துப் பார்த்து, அவர்களுடைய விசுவாசத்தையே நீங்களும் பின்பற்றுங்கள்.
যুষ্মাকং যে নাযকা যুষ্মভ্যম্ ঈশ্ৱৰস্য ৱাক্যং কথিতৱন্তস্তে যুষ্মাভিঃ স্মৰ্য্যন্তাং তেষাম্ আচাৰস্য পৰিণামম্ আলোচ্য যুষ্মাভিস্তেষাং ৱিশ্ৱাসোঽনুক্ৰিযতাং|
8 இயேசுகிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராகவே இருக்கிறார். (aiōn g165)
যীশুঃ খ্ৰীষ্টঃ শ্ৱোঽদ্য সদা চ স এৱাস্তে| (aiōn g165)
9 பல்வேறுபட்ட விசித்திரமான போதனைகளினால், வழிவிலகிப் போகாதிருங்கள். எந்த பயனும் இல்லாத சடங்குமுறை உணவு வகைகளினால் அல்ல கிருபையினால் நம்முடைய இருதயம் பெலப்படுவதே நல்லது.
যূযং নানাৱিধনূতনশিক্ষাভি ৰ্ন পৰিৱৰ্ত্তধ্ৱং যতোঽনুগ্ৰহেণান্তঃকৰণস্য সুস্থিৰীভৱনং ক্ষেমং ন চ খাদ্যদ্ৰৱ্যৈঃ| যতস্তদাচাৰিণস্তৈ ৰ্নোপকৃতাঃ|
10 இறைசமுகக் கூடாரத்தில் பணிபுரிகிறவர்கள் அதிலிருந்து சாப்பிட அதிகாரமில்லாத ஒரு பலிபீடம் நமக்கு உண்டு.
১০যে দষ্যস্য সেৱাং কুৰ্ৱ্ৱন্তি তে যস্যা দ্ৰৱ্যভোজনস্যানধিকাৰিণস্তাদৃশী যজ্ঞৱেদিৰস্মাকম্ আস্তে|
11 பிரதான ஆசாரியன் மிருகங்களின் இரத்தத்தை, மகா பரிசுத்த இடத்திற்கு பாவநிவாரண காணிக்கையாகக் கொண்டுபோகிறான். ஆனால் மிருகங்களின் உடல்களோ முகாமுக்கு வெளியே எரிக்கப்படுகின்றன.
১১যতো যেষাং পশূনাং শোণিতং পাপনাশায মহাযাজকেন মহাপৱিত্ৰস্থানস্যাভ্যন্তৰং নীযতে তেষাং শৰীৰাণি শিবিৰাদ্ বহি ৰ্দহ্যন্তে|
12 இவ்விதமே இயேசுவும்கூட, நகர வாசலுக்கு வெளியே வேதனைகளை அனுபவித்து, தமது சொந்த இரத்தத்தின் மூலமாக மக்களைப் பரிசுத்தமாக்கினார்.
১২তস্মাদ্ যীশুৰপি যৎ স্ৱৰুধিৰেণ প্ৰজাঃ পৱিত্ৰীকুৰ্য্যাৎ তদৰ্থং নগৰদ্ৱাৰস্য বহি ৰ্মৃতিং ভুক্তৱান্|
13 ஆகையால், அவர் சுமந்த அவமானத்தை நாமும் சுமந்து, முகாமுக்கு வெளியே அவரிடம் போவோம்.
১৩অতো হেতোৰস্মাভিৰপি তস্যাপমানং সহমানৈঃ শিবিৰাদ্ বহিস্তস্য সমীপং গন্তৱ্যং|
14 ஏனெனில், நித்தியமான நகரம் நமக்கு இங்கு இல்லை. வரப்போகின்ற ஒரு நகரத்திற்காகவே நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
১৪যতো ঽত্ৰাস্মাকং স্থাযি নগৰং ন ৱিদ্যতে কিন্তু ভাৱি নগৰম্ অস্মাভিৰন্ৱিষ্যতে|
15 ஆகவே இயேசுவின் மூலமாய் இறைவனுடைய பெயரை அறிக்கையிடுகிற உதடுகளின் கனியை, துதியின் காணிக்கையாக இறைவனுக்கு இடைவிடாது செலுத்துவோமாக.
১৫অতএৱ যীশুনাস্মাভি ৰ্নিত্যং প্ৰশংসাৰূপো বলিৰৰ্থতস্তস্য নামাঙ্গীকুৰ্ৱ্ৱতাম্ ওষ্ঠাধৰাণাং ফলম্ ঈশ্ৱৰায দাতৱ্যং|
16 நன்மைசெய்ய மறக்கவேண்டாம், உங்களிடம் இருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் மறந்துவிடவேண்டாம். இப்படியான பலிகளிலேயே இறைவன் பிரியப்படுகிறார்.
১৬অপৰঞ্চ পৰোপকাৰো দানঞ্চ যুষ্মাভি ৰ্ন ৱিস্মৰ্য্যতাং যতস্তাদৃশং বলিদানম্ ঈশ্ৱৰায ৰোচতে|
17 உங்கள் தலைவர்களுக்குக் கீழ்ப்படிந்து, அவர்களுடைய அதிகாரத்திற்கு பணிந்து நடவுங்கள். ஏனெனில், அவர்கள் கணக்குக் கொடுக்கவேண்டியவர்களாக, உங்கள்மேல் கண்காணிப்பு செய்கிறார்கள். நீங்கள் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால், அவர்களது பொறுப்பு அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அது ஒரு துயரமாய் இருக்காது. அவர்கள் துயரத்தோடு பொறுப்பெடுத்தால், உங்களுக்கு ஒரு நன்மையும் ஏற்படாது.
১৭যূযং স্ৱনাযকানাম্ আজ্ঞাগ্ৰাহিণো ৱশ্যাশ্চ ভৱত যতো যৈৰুপনিধিঃ প্ৰতিদাতৱ্যস্তাদৃশা লোকা ইৱ তে যুষ্মদীযাত্মনাং ৰক্ষণাৰ্থং জাগ্ৰতি, অতস্তে যথা সানন্দাস্তৎ কুৰ্য্যু ৰ্ন চ সাৰ্ত্তস্ৱৰা অত্ৰ যতধ্ৱং যতস্তেষাম্ আৰ্ত্তস্ৱৰো যুষ্মাকম্ ইষ্টজনকো ন ভৱেৎ|
18 எங்களுக்காக மன்றாடுங்கள். எங்களுக்கு நல்ல மனசாட்சி உண்டு என்பதில், நாங்கள் நிச்சயமுடையவர்களாய் இருக்கிறோம். எல்லா வழியிலும் நன்மதிப்புக்குரியவர்களாக வாழவே ஆசைப்படுகிறோம்.
১৮অপৰঞ্চ যূযম্ অস্মন্নিমিত্তিং প্ৰাৰ্থনাং কুৰুত যতো ৱযম্ উত্তমমনোৱিশিষ্টাঃ সৰ্ৱ্ৱত্ৰ সদাচাৰং কৰ্ত্তুম্ ইচ্ছুকাশ্চ ভৱাম ইতি নিশ্চিতং জানীমঃ|
19 நான் சீக்கிரமாய் உங்களிடம் வரும்படி, நீங்கள் மன்றாட வேண்டும் என உங்களிடம் விசேஷமாக வேண்டிக்கொள்கிறேன்.
১৯ৱিশেষতোঽহং যথা ৎৱৰযা যুষ্মভ্যং পুন ৰ্দীযে তদৰ্থং প্ৰাৰ্থনাযৈ যুষ্মান্ অধিকং ৱিনযে|
20 நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே, ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பிய சமாதானத்தின் இறைவன், (aiōnios g166)
২০অনন্তনিযমস্য ৰুধিৰেণ ৱিশিষ্টো মহান্ মেষপালকো যেন মৃতগণমধ্যাৎ পুনৰানাযি স শান্তিদাযক ঈশ্ৱৰো (aiōnios g166)
21 இயேசுகிறிஸ்துவின் வழியாகத் தமக்கு பிரியமானதை உங்களில் செயலாற்றி, நீங்கள் இறைவனுடைய சித்தத்தின்படி செய்ய உங்களை எல்லா நல்ல செயல்களிலும் ஆயத்தப்படுத்துவாராக. கிறிஸ்துவுக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
২১নিজাভিমতসাধনায সৰ্ৱ্ৱস্মিন্ সৎকৰ্ম্মণি যুষ্মান্ সিদ্ধান্ কৰোতু, তস্য দৃষ্টৌ চ যদ্যৎ তুষ্টিজনকং তদেৱ যুষ্মাকং মধ্যে যীশুনা খ্ৰীষ্টেন সাধযতু| তস্মৈ মহিমা সৰ্ৱ্ৱদা ভূযাৎ| আমেন্| (aiōn g165)
22 சகோதரர்களே, நான் உற்சாகப்படுத்தி எழுதியிருக்கும் இந்த வார்த்தைகளுக்குப் பொறுமையாய் செவிகொடுங்கள். நான் சுருக்கமான ஒரு கடிதத்தையே உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.
২২হে ভ্ৰাতৰঃ, ৱিনযেঽহং যূযম্ ইদম্ উপদেশৱাক্যং সহধ্ৱং যতোঽহং সংক্ষেপেণ যুষ্মান্ প্ৰতি লিখিতৱান্|
23 நமது சகோதரன் தீமோத்தேயு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறான் என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவன் சீக்கிரம் வந்தால், நான் உங்களைப் பார்ப்பதற்கு அவனுடனேயே வருவேன்.
২৩অস্মাকং ভ্ৰাতা তীমথিযো মুক্তোঽভৱদ্ ইতি জানীত, স চ যদি ৎৱৰযা সমাগচ্ছতি তৰ্হি তেন সাৰ্দ্ধংম্ অহং যুষ্মান্ সাক্ষাৎ কৰিষ্যামি|
24 உங்கள் தலைவர்கள் அனைவருக்கும், இறைவனின் மக்கள் எல்லோருக்கும் எங்கள் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள். இத்தாலியில் உள்ளவர்களும் உங்களுக்குத் தங்கள் வாழ்த்துதலைக் கூறுகிறார்கள்.
২৪যুষ্মাকং সৰ্ৱ্ৱান্ নাযকান্ পৱিত্ৰলোকাংশ্চ নমস্কুৰুত| অপৰম্ ইতালিযাদেশীযানাং নমস্কাৰং জ্ঞাস্যথ|
25 கிருபை உங்கள் எல்லோருடனும் இருப்பதாக! ஆமென்.
২৫অনুগ্ৰহো যুষ্মাকং সৰ্ৱ্ৱেষাং সহাযো ভূযাৎ| আমেন্|

< எபிரேயர் 13 >