< ஆகாய் 2 >

1 ஏழாம் மாதம் இருபத்தோராம் நாள், யெகோவாவின் வார்த்தை ஆகாய் என்னும் இறைவாக்கினன் மூலமாக வந்தது.
ராஜாவாகிய தரியு அரசாண்ட ஏழாம் மாதம் இருபத்தொன்றாம் தேதியிலே ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாக, யெகோவாவுடைய வார்த்தை உண்டானது; அவர்:
2 “நீ யூதாவின் ஆளுநரான செயல்தியேலின் மகன் செருபாபேலிடமும், தலைமை ஆசாரியனான யெகோசாதாக்கின் மகன் யோசுவாவிடமும், மக்களில் மீதியானோரிடமும் பேசி கேட்கவேண்டியதாவது:
நீ செயல்தியேலின் மகனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனோடும், யோத்சதாக்கின் மகனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனோடும், மக்களில் மீதியானவர்களோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்:
3 இந்த ஆலயத்தின் முந்திய மகிமையை கண்டவர்கள் யாராவது, உங்களுக்குள்ளே இருக்கிறார்களா? இப்பொழுது இது உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? உங்களுக்கு இது ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை அல்லவா?
இந்த ஆலயத்தின் முந்தின மகிமையைக் கண்டவர்களில் உங்களுக்குள்ளே மீதியாயிருக்கிறவர்கள் யார்? இப்பொழுது இது உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? அதற்கு இது உங்கள் பார்வையில் ஒன்றுமில்லாததுபோல் தோன்றுகிறதல்லவா?
4 ஆயினும் செருபாபேலே, நீ இப்பொழுது திடமனதாயிரு என யெகோவா அறிவிக்கிறார். யெகோசாதாக்கின் மகனும் தலைமை ஆசாரியனுமாகிய யோசுவாவே, நீயும் திடமனதாயிரு; நாட்டிலுள்ள மக்களே, நீங்கள் எல்லோரும் திடமனதாயிருந்து வேலையை செய்யுங்கள் என யெகோவா அறிவிக்கிறார். ஏனெனில் நான் உங்களுடனே இருக்கிறேன், என சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.
ஆனாலும் செருபாபேலே, நீ திடன்கொள் என்று யெகோவா சொல்லுகிறார்; யோத்சதாக்கின் மகனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனே, நீ திடன்கொள்; தேசத்தின் எல்லா மக்களே, நீங்கள் திடன் கொள்ளுங்கள், வேலையை நடத்துங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; நான் உங்களுடனே இருக்கிறேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
5 நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வருகையில் இதுவே நான் உங்களுடன் செய்த உடன்படிக்கை. என் ஆவியானவர் உங்கள் மத்தியில் தங்கியிருக்கிறார். பயப்படாதிருங்கள்.
நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகிறபோது நான் உங்களோடே உடன்படிக்கைசெய்த வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள்.
6 “சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: ‘இன்னும் கொஞ்சக்காலத்தில் இன்னும் ஒருமுறை நான் வானத்தையும், பூமியையும் அசைப்பேன், கடலையும், வெட்டாந்தரையையும் அசைப்பேன்.
சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்: கொஞ்சக்காலத்திற்குள்ளே இன்னும் ஒருமுறை நான் வானத்தையும், பூமியையும், சமுத்திரத்தையும், வெட்டாந்தரையையும் அசையச்செய்வேன்.
7 எல்லா நாடுகளையும் அசைப்பேன், எல்லா மக்களாலும் விரும்பப்படுகிறவர் வருவார், நான் இந்த ஆலயத்தை என் மகிமையால் நிரப்புவேன்,’ என சேனைகளின் யெகோவா சொல்கிறார்.
சகல தேசங்களையும் அசையச்செய்வேன், சகல தேசங்களாலும் விரும்பப்பட்டவர் வருவார்; இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையச்செய்வேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
8 ‘வெள்ளியும் என்னுடையதே, தங்கமும் என்னுடையதே,’ என சேனைகளின் யெகோவா சொல்கிறார்.
வெள்ளியும் பொன்னும் என்னுடையது என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
9 ‘ஆயினும் முந்திய ஆலயத்தின் மகிமையைவிட இந்த ஆலயத்தின் மகிமை பெரியதாயிருக்கும்,’ என சேனைகளின் யெகோவா சொல்கிறார். ‘இந்த இடத்திலே நான் என் சமாதானத்தைக் கொடுப்பேன்,’ என சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.”
முந்தின ஆலயத்தின் மகிமையைக்காட்டிலும், இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; இவ்விடத்திலே சமாதானத்தைக் கட்டளையிடுவேன் என்று சேனைகளின் யெகோவா உரைக்கிறார் என்று சொல் என்றார்.
10 தரியு அரசாண்ட இரண்டாம் வருடம் ஒன்பதாம் மாதம் இருபத்து நான்காம் நாள், ஆகாய் என்னும் இறைவாக்கினனுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது.
௧0தரியுவின் ஆட்சியின் இரண்டாம் வருடம் ஒன்பதாம் மாதம் இருபத்திநான்காம் தேதியிலே, ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாகக் யெகோவாவுடைய வார்த்தை உண்டானது; அவர்:
11 “சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: ‘நீ ஆசாரியர்களிடம், சட்டம் சொல்வது என்ன? என்று கேள்:
௧௧ஒருவன் தன் ஆடையின் தொங்கலிலே பரிசுத்த மாம்சத்தைக் கொண்டுபோகும்போது தன் ஆடையின் தொங்கல், அப்பத்தையாகிலும், சாதத்தையாகிலும், திராட்சைரசத்தையாகிலும், எண்ணெயையாகிலும், மற்றெந்த உணவையாகிலும் தொட்டால் அது பரிசுத்தமாகுமோ என்று நீ ஆசாரியர்களிடத்தில் வேத நியாயத்தைப்பற்றிக் கேள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்றார்.
12 உங்களில் ஒருவன் தன் அங்கியின் மடிப்பில் அர்ப்பணிக்கப்பட்ட இறைச்சியை கொண்டுபோகையில், அங்கியின் மடிப்பு, அப்பத்தையோ சமைக்கப்பட்ட உணவையோ திராட்சை இரசத்தையோ எண்ணெயையோ வேறு ஏதாவது தின்பண்டத்தையோ தொட்டால் அது பரிசுத்தமாக்கப்படுமா?’” என்று கேட்டான். அதற்கு ஆசாரியர்கள், “இல்லை” என விடையளித்தனர்.
௧௨அதற்கு ஆசாரியர்கள் மறுமொழியாக: பரிசுத்தமாகாது என்றார்கள்.
13 அப்பொழுது ஆகாய், “பிணத்தைத் தொட்டதால் அசுத்தமான ஒருவன், இவற்றில் எதையாகிலும் தொட்டால், அது அசுத்தமாகுமா?” என்று கேட்டான். அதற்கு ஆசாரியர்கள், “ஆம், அசுத்தமாகும்” என்றார்கள்.
௧௩பிணத்தால் தீட்டுப்பட்டவன் அவைகளில் எதையாகிலும் தொட்டால், அது தீட்டுப்படுமோ என்று ஆகாய் மேலும் கேட்டான்; அதற்கு ஆசாரியர்கள் மறுமொழியாக: தீட்டுப்படும் என்றார்கள்.
14 அப்பொழுது ஆகாய் அவர்களிடம் சொன்னதாவது, “‘அப்படியே இந்த மக்களும், இந்த நாடு முழுவதும் என் பார்வையில் இருக்கிறார்கள்,’ என யெகோவா அறிவிக்கிறார். ‘அவர்கள் எதைச் செய்தாலும், அவர்கள் எதைச் செலுத்தினாலும் அவை எல்லாம் அவருக்கு அசுத்தமுள்ளதாய் இருக்கின்றன.
௧௪அப்பொழுது ஆகாய்; அப்படியே இந்த மக்களும் இந்த தேசத்தாரும் என் சமுகத்தில் இருக்கிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; அவர்களுடைய கைகளின் எல்லா செயல்களும் அப்படியே இருக்கிறது; அவர்கள் அங்கே கொண்டுவந்து படைக்கிறதும் தீட்டுப்பட்டிருக்கிறது.
15 “‘இப்போதாவது, இதை மிகக் கவனமாய் சிந்தியுங்கள். யெகோவாவின் ஆலயத்தைத் திரும்பக் கட்டும்படி, அஸ்திபாரம் போட்டும் ஒரு கல்லின்மேல் ஒரு கல் வைக்கப்படும் முன்பு நிலைமை எவ்வாறு இருந்தது என சிந்தித்துப் பாருங்கள்.
௧௫இப்போதும் யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டுவதற்கு ஒரு கல்லின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டதுமுதல் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்.
16 இருநூறு கிலோகிராம் தானியக் குவியலுக்கு அருகில் ஒருவன் வந்தபோது, அங்கு பத்து நூறு கிலோகிராம் மட்டுமே இருந்தன. திராட்சை ஆலையின் தொட்டிக்கு ஒருவன் ஐம்பது குடங்கள் திராட்சை இரசம் மொள்ள வந்தபோது, அங்கு இருபது குடங்கள் மட்டுமே இருந்தன.
௧௬அந்த நாட்கள்முதல் ஒருவன் இருபது மரக்காலாகக் கண்ட தானியக் குவியலிடம் வந்தபோது, பத்து மரக்கால் மாத்திரம் இருந்தது; ஒருவன் ஆலையின் தொட்டியில் ஐம்பது குடம் மொள்ள ஆலையினிடத்திலே வந்தபோது இருபது குடம் மாத்திரம் இருந்தது.
17 நான், நீங்கள் கையிட்டுச் செய்த பயிர்களை இலைசுருட்டி வியாதியினாலும், பூஞ்சண வியாதியினாலும், பனிக்கட்டி மழையினாலும் அழித்தேன். அப்படியிருந்தும் நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை,’ என யெகோவா அறிவிக்கிறார்.
௧௭பிஞ்சுக்காய்களினாலும், விஷப்பனியினாலும், கல்மழையினாலும் உங்களை உங்கள் கைகளின் வேலைகளிலெல்லாம் அடித்தேன்; ஆனாலும் நீங்கள் என்னிடத்தில் மனதைத் திருப்பாமல்போனீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
18 ‘யெகோவாவின் ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்பட்ட அந்த நாளிலிருந்து, ஒன்பதாம் மாதம் இருபத்து நான்காம் நாளாகிய இந்த நாள்வரை, நடந்தவற்றைக் கவனமாய் சிந்தித்துப் பாருங்கள்.
௧௮இப்போதும் இதற்கு முந்தின காலத்தில் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்; ஒன்பதாம் மாதம் இருபத்திநான்காம் தேதியாகிய இந்நாள்முதல் யெகோவாவுடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்பட்ட அந்நாள்வரைக்கும் சென்ற காலத்தில் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்.
19 களஞ்சியத்தில் இன்னும் விதைத்தானியம் ஏதாவது மீதியாயிருக்கிறதா? திராட்சைக்கொடியும், அத்திமரமும், மாதுளஞ்செடியும், ஒலிவமரமும் இதுவரை காய்க்கவில்லையே. “‘ஆனால், இன்றுமுதல் உங்களை நான் ஆசீர்வதிப்பேன்.’”
௧௯களஞ்சியத்தில் இன்னும் விதைத்தானியம் உண்டோ? திராட்சைச்செடியும், அத்திமரமும், மாதுளம்செடியும், ஒலிவமரமும் பழங்களைக் கொடுக்கவில்லையே; நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல்லுகிறார் என்றான்.
20 அம்மாதம் இருபத்து நான்காம் தேதியாகிய அதேநாளிலே, இரண்டாம் முறையும், இறைவாக்கினன் ஆகாய் என்பவனுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது:
௨0இருபத்திநான்காம் தேதியாகிய அதே நாளிலே யெகோவாவுடைய வார்த்தை இரண்டாவதுமுறை ஆகாய் என்பவனுக்கு உண்டாகி, அவர்:
21 “யூதாவின் ஆளுநரான செருபாபேலுக்கு நீ சொல்லவேண்டியதாவது, நான் வானத்தையும், பூமியையும் அசைப்பேன்.
௨௧நீ யூதாவின் தலைவனாகிய செருபாபேலோடே சொல்லவேண்டியது என்னவென்றால், நான் வானத்தையும் பூமியையும் அசையச்செய்து,
22 அரச அரியணைகளையும் கவிழ்ப்பேன். அந்நிய அரசுகளின் வல்லமையையும் சிதறடிப்பேன். தேர்களையும், அதில் ஏறியிருக்கிறவர்களையும் கவிழ்த்துப் போடுவேன்; குதிரைகளுடன் அதில் ஏறிச்செல்வோர் ஒவ்வொருவரும் தங்கள் சகோதரனின் வாளினால் வெட்டுண்டு விழுவார்கள்.
௨௨இராஜ்யங்களின் சிங்காசனத்தைக் கவிழ்த்து, தேசங்களுடைய ராஜ்யங்களின் பெலத்தை அழித்து, இரதத்தையும் அதில் ஏறியிருக்கிறவர்களையும் கவிழ்த்துப்போடுவேன்; குதிரைகளோடே அவைகளின்மேல் ஏறியிருப்பவர்களும் அவரவர் தங்கள் தங்கள் சகோதரனின் பட்டயத்தினாலே விழுவார்கள்.
23 “சேனைகளின் யெகோவா அறிவிக்கிறதாவது, ‘என் பணியாளனாகிய செருபாபேலே! செயல்தியேலின் மகனே, அப்போது நான் உன்னை எடுத்து என் முத்திரை மோதிரத்தைப் போலாக்குவேன் என யெகோவா அறிவிக்கிறார், ஏனெனில் நானே உன்னைத் தெரிந்துகொண்டேன்,’ என சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.”
௨௩சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்: செயல்தியேலின் மகனாகிய செருபாபேல் என்னும் என் ஊழியக்காரனே, உன்னை நான் அந்நாளிலே சேர்த்துக்கொண்டு, உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்; நான் உன்னைத் தெரிந்துகொண்டேன் என்று சேனைகளின் யெகோவா உரைக்கிறார் என்று சொல் என்றார்.

< ஆகாய் 2 >