< ஆதியாகமம் 5 >
1 ஆதாமின் வம்சவரலாறு இதுவே: இறைவன் மனிதரைப் படைத்தபோது, அவனை இறைவனின் சாயலிலேயே உண்டாக்கினார்.
To jest księga rodu Adama. W dniu, w którym Bóg stworzył człowieka, uczynił go na podobieństwo Boga.
2 அவர் அவர்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்து, அவர்களை ஆசீர்வதித்தார். அவர் அவர்களைப் படைத்தபோது அவர்களை, “மனிதர்” என்று அழைத்தார்.
Stworzył ich mężczyzną i kobietą; błogosławił ich i nadał im imię Adam w dniu, w którym zostali stworzeni.
3 ஆதாம் 130 வருடங்கள் வாழ்ந்தபின், ஆதாமுக்கு தன்னுடைய சாயலிலும், தன்னுடைய உருவிலும் ஒரு மகன் பிறந்தான்; அவனுக்கு “சேத்” என்று பெயரிட்டான்.
Adam żył sto trzydzieści lat i spłodził [syna] na swoje podobieństwo, na swój obraz, i nadał mu imię Set.
4 சேத் பிறந்தபின் ஆதாம் 800 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
A dni Adama po spłodzeniu Seta było osiemset lat i spłodził synów i córki.
5 ஆதாம் மொத்தம் 930 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
A [tak] wszystkich dni, które żył Adam, było dziewięćset trzydzieści lat i umarł.
6 சேத் தனது 105 வயதில் ஏனோஸுக்குத் தகப்பனானான்.
Set żył sto pięć lat i spłodził Enosza.
7 சேத் ஏனோஸைப் பெற்றபின் 807 வருடங்கள் வாழ்ந்து இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
Po spłodzeniu Enosza Set żył osiemset siedem lat i spłodził synów i córki.
8 சேத் மொத்தம் 912 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
Wszystkich dni Seta było dziewięćset dwanaście lat i umarł.
9 ஏனோஸ் தனது 90 வயதில் கேனானுக்குத் தகப்பனானான்.
Enosz żył dziewięćdziesiąt lat i spłodził Kenana.
10 கேனான் பிறந்த பிறகு ஏனோஸ் 815 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
Po spłodzeniu Kenana Enosz żył osiemset piętnaście lat i spłodził synów i córki.
11 ஏனோஸ் மொத்தம் 905 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
Wszystkich dni Enosza było dziewięćset pięć lat i umarł.
12 கேனான் தனது 70 வயதில் மகலாலெயேலுக்குத் தகப்பனானான்.
Kenan żył siedemdziesiąt lat i spłodził Mahalaleela.
13 மகலாலெயேல் பிறந்த பிறகு, கேனான் 840 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
Po spłodzeniu Mahalaleela Kenan żył osiemset czterdzieści lat i spłodził synów i córki.
14 கேனான் மொத்தம் 910 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
Wszystkich dni Kenana było dziewięćset dziesięć lat i umarł.
15 மகலாலெயேல் தனது 65 வயதில் யாரேத்திற்குத் தகப்பனானான்.
Mahalaleel żył sześćdziesiąt pięć lat i spłodził Jareda.
16 யாரேத் பிறந்த பிறகு மகலாலெயேல் 830 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
Po spłodzeniu Jareda Mahalaleel żył osiemset trzydzieści lat i spłodził synów i córki.
17 மகலாலெயேல் மொத்தம் 895 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
Wszystkich dni Mahalaleela było osiemset dziewięćdziesiąt pięć lat i umarł.
18 யாரேத் தனது 162 வயதில் ஏனோக்குக்குத் தகப்பனானான்.
Jared żył sto sześćdziesiąt dwa lata i spłodził Henocha.
19 ஏனோக்கு பிறந்த பிறகு யாரேத் 800 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
Po spłodzeniu Henocha Jared żył osiemset lat i spłodził synów i córki.
20 யாரேத் மொத்தம் 962 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
Wszystkich dni Jareda było dziewięćset sześćdziesiąt dwa lata i umarł.
21 ஏனோக்கு தனது 65 வயதில் மெத்தூசலாவுக்குத் தகப்பனானான்.
Henoch żył sześćdziesiąt pięć lat i spłodził Matuzalema.
22 மெத்தூசலா பிறந்த பிறகு ஏனோக்கு 300 வருடங்கள் இறைவனுடன் நெருங்கிய உறவுடன் அர்ப்பணிப்போடு வாழ்ந்தான். அவன் இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
Po spłodzeniu Matuzalema Henoch chodził z Bogiem trzysta lat i spłodził synów i córki.
23 ஏனோக்கு மொத்தம் 365 வருடங்கள் வாழ்ந்தான்.
Wszystkich dni Henocha było trzysta sześćdziesiąt pięć lat.
24 ஏனோக்கு இறைவனுடன் நெருங்கிய உறவுடன் அர்ப்பணிப்போடு வாழ்ந்தான்; இறைவன் அவனை எடுத்துக்கொண்டதனால், அதன்பின் அவன் காணப்படவில்லை.
Henoch chodził z Bogiem, a potem [już] go nie było, bo Bóg go zabrał.
25 மெத்தூசலா தனது 187 வயதில் லாமேக்குக்குத் தகப்பனானான்.
Matuzalem żył sto osiemdziesiąt siedem lat i spłodził Lameka.
26 லாமேக்கு பிறந்த பிறகு மெத்தூசலா 782 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
Po spłodzeniu Lameka Matuzalem żył siedemset osiemdziesiąt dwa lata i spłodził synów i córki.
27 மெத்தூசலா மொத்தம் 969 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
Wszystkich dni Matuzalema było dziewięćset sześćdziesiąt dziewięć lat i umarł.
28 லாமேக்கு தனது 182 வயதில் ஒரு மகனுக்குத் தகப்பனானான்.
Lamek żył sto osiemdziesiąt dwa lata i spłodził syna.
29 அவன், “யெகோவா சபித்த நிலத்தில் நாம் பாடுபட்டு உழைக்கும்போது, இவன் நமக்கு ஆறுதலாயிருப்பான்” என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பெயரிட்டான்.
I nadał mu imię Noe, mówiąc: Ten nas pocieszy w naszej pracy i w trudzie naszych rąk, z powodu ziemi, którą PAN przeklął.
30 நோவா பிறந்த பிறகு, லாமேக்கு 595 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
Po spłodzeniu Noego Lamek żył pięćset dziewięćdziesiąt pięć lat i spłodził synów i córki.
31 லாமேக்கு மொத்தம் 777 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
Wszystkich dni Lameka było siedemset siedemdziesiąt siedem lat i umarł.
32 நோவாவுக்கு 500 வயதான பின்பு சேம், காம், யாப்பேத் என்னும் மகன்களுக்குத் தகப்பனானான்.
A gdy Noe miał pięćset lat, spłodził Sema, Chama i Jafeta.