< ஆதியாகமம் 18 >
1 வெப்பமான பகற்பொழுதிலே, ஆபிரகாம் தன்னுடைய கூடாரவாசலில் உட்கார்ந்திருக்கையில், மம்ரேயின் மரச்சோலையருகே, யெகோவா இன்னும் ஒருமுறை அவனுக்குத் தரிசனமானார்.
Chúa Hằng Hữu lại xuất hiện cùng Áp-ra-ham tại cánh đồng Mam-rê. Áp-ra-ham đang ngồi tại cửa trại dưới tàng cây sồi trong lúc trời nắng nóng.
2 ஆபிரகாம் நிமிர்ந்து பார்த்தபோது, சிறிது தொலைவில் மூன்று மனிதர் நிற்கிறதைக் கண்டான். அவன் அவர்களைக் கண்டபோது, அவர்களைச் சந்திக்கும்படியாக, தன் கூடாரவாசலில் இருந்து விரைந்து சென்று தரைமட்டும் தலைகுனிந்து வணங்கினான்.
Vừa ngước nhìn lên, ông thấy ba người đang đứng phía trước mặt; ông liền chạy ra nghênh đón và cúi rạp xuống đất.
3 அவன், “என் ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்திருந்தால், உமது அடியானிடம் வராமல் போய்விடாதேயும்.
Áp-ra-ham thưa: “Lạy Chúa tôi, nếu tôi được Chúa đoái thương, xin đừng bỏ qua đầy tớ Chúa.
4 என் வேலைக்காரர் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும், நீங்கள் யாவரும் உங்கள் கால்களைக் கழுவி இம்மரத்தின் கீழ் இளைப்பாறலாம்.
Xin cho tôi lấy nước rửa chân Chúa và kính mời Chúa nghỉ mát dưới bóng cây.
5 இப்பொழுது நீங்கள் அடியேனிடம் வந்திருக்கிறபடியால், சாப்பிடுவதற்கு ஏதாவது கொண்டுவருகிறேன்; பின்பு நீங்கள் இளைப்பாறி, உங்கள் வழியே போகலாம்” என்றான். அதற்கு அவர்கள், “நல்லது, நீ சொன்னபடியே செய்” என்றார்கள்.
Vì Chúa đã hạ cố đến thăm nhà đầy tớ Chúa, tôi xin đem bánh để Chúa dùng trước khi lên đường.” Họ đáp: “Được, cứ làm như ông nói.”
6 உடனே ஆபிரகாம் கூடாரத்துக்குள் சாராளிடம் விரைந்து சென்று, “சீக்கிரமாய் மூன்றுபடி அளவு சிறந்த மாவை எடுத்துப் பிசைந்து கொஞ்சம் அப்பங்கள் சுடு” என்றான்.
Áp-ra-ham vội vã vào trại và bảo Sa-ra: “Mau lên! Lấy ba đấu bột lọc nhồi đi rồi làm bánh nhỏ.”
7 ஆபிரகாம் தன் மாட்டு மந்தைக்கு விரைந்து சென்று, ஒரு நல்ல இளங்கன்றைத் தெரிந்தெடுத்து, அதை ஒரு வேலைக்காரனிடம் கொடுத்தான்; அவன் அதைச் சமைப்பதற்கு விரைந்தான்.
Áp-ra-ham chạy đến bầy gia súc, chọn một con bê béo, và bảo đầy tớ nấu dọn gấp.
8 பின்பு ஆபிரகாம், வெண்ணெயையும் பாலையும், சமைத்த இளங்கன்றின் இறைச்சியையும் கொண்டுவந்து அந்த மனிதர்கள் முன்பாக வைத்தான். அவர்கள் சாப்பிடும்போது, அவன் அவர்களுக்கு அருகே மரத்தின்கீழ் நின்றுகொண்டிருந்தான்.
Áp-ra-ham đem sữa và bơ cùng thịt con bê đã nấu xong, dọn ra trước mặt ba người ấy. Khi họ ăn, Áp-ra-ham đứng cạnh hầu bàn dưới tàng cây.
9 அவர்கள் ஆபிரகாமிடம், “உன் மனைவி சாராள் எங்கே?” என்று கேட்டார்கள். “அவள் கூடாரத்தில் இருக்கிறாள்” என்றான்.
Các vị ấy hỏi: “Áp-ra-ham! Sa-ra, vợ con ở đâu?” Áp-ra-ham thưa: “Dạ ở trong trại.”
10 அப்பொழுது அம்மூவரில் ஒருவர், “அடுத்த வருடம் ஏறக்குறைய இதே காலத்தில் நான் நிச்சயமாகத் திரும்பவும் உன்னிடம் வருவேன், அப்பொழுது உன் மனைவி சாராளுக்கு ஒரு மகன் இருப்பான்” என்றார். சாராள், அவர்களுக்குப் பின்னால் இருந்த கூடாரத்தின் வாசலிலே நின்று அதைக்கேட்டுக் கொண்டிருந்தாள்.
Một vị bảo: “Độ một năm nữa, Ta sẽ trở lại đây thăm con; khi đó, Sa-ra, vợ con, sẽ có một con trai!” Sa-ra đứng sau lưng vị ấy tại cửa trại, nên nghe rõ lời hứa này.
11 ஆபிரகாமும் சாராளும் வயது முதிர்ந்தவர்களாய் இருந்தார்கள், சாராளும் பிள்ளைபெறும் வயதைத் தாண்டினவளாக இருந்தாள்.
Áp-ra-ham và Sa-ra đều già yếu. Sa-ra không còn hy vọng sinh con được nữa.
12 எனவே சாராள், “என் உடல் தளர்ந்துவிட்டது, என் கணவரும் வயது சென்றவராகிவிட்டார், இப்பொழுது இந்த இன்பம் எனக்கு இருக்குமோ?” என நினைத்துத் தனக்குள்ளே சிரித்தாள்.
Nghe Chúa hứa, Sa-ra cười thầm và tự bảo: “Già cả như tôi, đâu còn được niềm vui làm mẹ nữa! Tuổi chồng tôi cũng đã quá cao!”
13 அப்பொழுது யெகோவா ஆபிரகாமிடம், “‘நான் வயது முதிர்ந்தவளாய் இருக்கையில் உண்மையாய்ப் பிள்ளை பெறுவேனோ என சாராள் கூறிச் சிரித்தது ஏன்?’
Chúa Hằng Hữu hỏi Áp-ra-ham: “Tại sao Sa-ra cười và tự hỏi: ‘Già cả như tôi mà còn sinh sản được sao?’
14 யெகோவாவுக்கு செய்யமுடியாத கடினமானது ஏதேனும் உண்டோ? நான் அடுத்த வருடம் நியமிக்கப்பட்ட காலத்தில் திரும்பவும் உன்னிடம் வருவேன், அப்பொழுது சாராளுக்கு ஒரு மகன் இருப்பான்” என்றார்.
Có điều nào Chúa Hằng Hữu làm không được? Đúng kỳ ấn định, trong một năm nữa, Ta sẽ trở lại thăm con; lúc ấy, Sa-ra sẽ có một con trai.”
15 சாராள் பயந்ததினால், “நான் சிரிக்கவில்லை” என்று பொய் சொன்னாள். அதற்கு அவர், “ஆம், நீ உண்மையாய்ச் சிரித்தாய்” என்றார்.
Sa-ra sợ hãi và chối: “Con có dám cười đâu!” Chúa Hằng Hữu đáp: “Thật, con đã cười.”
16 பின்பு அந்த மனிதர் புறப்படுவதற்கு எழுந்தபோது, சோதோமை நோக்கிப் பார்த்தார்கள்; ஆபிரகாம் அவர்களை வழியனுப்பும்படி அவர்களோடுகூடப் போனான்.
Ba vị đứng dậy lên đường qua Sô-đôm. Áp-ra-ham theo tiễn chân một quãng đường.
17 அப்பொழுது யெகோவா, “நான் செய்யப்போவதை ஆபிரகாமுக்கு மறைக்கலாமா?
Chúa Hằng Hữu hỏi: “Ta có nên giấu Áp-ra-ham chương trình Ta sắp thực hiện không?
18 நிச்சயமாகவே ஆபிரகாம் பெரிதும் வலிமைமிக்கதுமான ஒரு நாடாக வருவான், அவன்மூலம் பூமியின் எல்லா நாடுகளும் ஆசீர்வதிக்கப்படும்.
Vì Áp-ra-ham sẽ thành một dân tộc lớn và cường thịnh, và sẽ làm nguồn phước cho các dân tộc trên thế giới.
19 ஏனெனில் நானே ஆபிரகாமைத் தெரிந்தெடுத்தேன், அவன் தனக்குப்பின் தனது பிள்ளைகளும், தனது குடும்பமும் சரியானதையும் நீதியானதையும் செய்து, யெகோவாவின் வழியைக் கடைப்பிடிப்பதற்கு அவர்களை வழிநடத்துவான். அப்பொழுது யெகோவா ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார்” என்றார்.
Ta đã chọn Áp-ra-ham để người dạy dỗ con cháu và gia nhân vâng giữ đạo Ta, làm điều công chính và cương trực; nhờ đó, Ta có thể thực thi các lời Chúa Hằng Hữu đã hứa với Áp-ra-ham.”
20 அதன்பின் யெகோவா, “சோதோம், கொமோராவின் பாவம் மிகவும் கொடியதாய் இருக்கிறது, அவர்களுக்கு விரோதமான கூக்குரலும் அதிகமாய் எழும்பியிருக்கின்றது.
Chúa Hằng Hữu phán cùng Áp-ra-ham: “Ta đã nghe tiếng ai oán từ Sô-đôm và Gô-mô-rơ, vì tội ác của chúng thật nặng nề.
21 அவர்களின் செய்கைகள், எனக்கு எட்டிய கூக்குரலுக்கேற்ப கொடியதாய் இருக்கின்றனவோ என்று நான் போய்ப்பார்ப்பேன். அப்படியில்லையென்றால், அதையும் அறிவேன்” என்றார்.
Ta sẽ xuống đó xem có đúng như vậy không. Nếu không, Ta muốn biết.”
22 பின்பு அந்த மனிதர் அவ்விடத்தைவிட்டுச் சோதோமை நோக்கிப் போனார்கள், ஆனால் ஆபிரகாம் யெகோவாவுக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான்.
Hai thiên sứ đi ngay qua Sô-đôm, nhưng Chúa Hằng Hữu còn nán lại với Áp-ra-ham.
23 ஆபிரகாம் யெகோவாவை அணுகி, “கொடியவர்களுடன் நீதிமான்களையும் அழிப்பீரோ?
Áp-ra-ham đến gần và kính cẩn hỏi: “Chúa tiêu diệt người thiện chung với người ác sao?
24 ஒருவேளை பட்டணத்தில் நீதிமான்கள் ஐம்பதுபேர் இருந்தால் அதை அழித்து விடுவீரோ? நீதிமானான அந்த ஐம்பது பேர்களுக்காகிலும் அதை அழியாமல் விடமாட்டீரோ?
Nếu có năm mươi người công chính trong thành, Chúa có tiêu diệt hết không? Chúa sẽ không dung thứ họ vì năm mươi người ấy sao?
25 கொடியவர்களுடன் நீதிமான்களையும் கொல்லுவதும், கொடியவர்களையும் நீதிமான்களையும் ஒரேவிதமாக நடத்துவதும் உமக்கு ஒருபோதும் ஏற்றதல்ல. அது உமக்குத் தூரமாயிருப்பதாக! பூமி முழுவதற்கும் நீதிபதியானவர் நியாயத்தைச் செய்யமாட்டாரோ?” என்று கேட்டான்.
Chắc chắn Chúa sẽ không làm việc ấy, diệt người công chính chung với người ác! Không bao giờ Chúa đối xử người công chính và người ác giống như nhau! Chắc chắn Chúa không làm vậy! Lẽ nào Vị Thẩm Phán Chí Cao của cả thế giới lại không xử đoán công minh?”
26 அதற்கு யெகோவா ஆபிரகாமிடம், “நீதிமான்கள் ஐம்பது பேரை சோதோம் பட்டணத்தில் நான் காண்பேனாகில், அவர்களுக்காக அந்த முழு இடத்தையும் தப்பவிடுவேன்” என்றார்.
Chúa Hằng Hữu đáp: “Nếu Ta tìm được năm mươi người công chính trong Sô-đôm, Ta sẽ dung thứ cả thành vì thương số người đó.”
27 மறுபடியும் ஆபிரகாம் யெகோவாவிடம், “புழுதியும் சாம்பலுமான நான் யெகோவாவுடன் பேசத் துணிவுகொண்டேன்,
Áp-ra-ham tiếp lời: “Thưa Chúa, con mạo muội thưa với Chúa, dù con chỉ là tro bụi.
28 ஒருவேளை நீதிமான்கள் நாற்பத்தைந்து பேர் மட்டும் இருந்தால், ஐந்துபேர் குறைவாக இருப்பதனால் அந்த முழுப்பட்டணத்தையும் அழிப்பீரோ?” எனக் கேட்டான். அதற்கு யெகோவா, “நீதிமான்கள் நாற்பத்தைந்து பேர் அங்கிருந்தாலும் அதை அழிக்கமாட்டேன்” என்றார்.
Nhỡ thiếu mất năm người trong số năm mươi, vì thiếu mất năm người Chúa có tiêu diệt cả thành chăng?” Chúa Hằng Hữu đáp: “Nếu Ta tìm gặp bốn mươi lăm người công chính, Ta sẽ chẳng diệt hết đâu.”
29 மேலும் ஆபிரகாம் அவரிடம், “ஒருவேளை நீதிமான்கள் நாற்பது பேர் மட்டும் இருந்தால்?” என்றான். அதற்கு அவர், “நாற்பது பேர் இருந்தாலும் நான் அழிக்கமாட்டேன்” என்றார்.
Áp-ra-ham đánh bạo: “Thưa Chúa, nếu chỉ có bốn mươi người thì sao?” Chúa Hằng Hữu đáp: “Ta sẽ dung thứ cả thành vì bốn mươi người ấy.”
30 பின்பு ஆபிரகாம், “நான் மறுபடியும் பேசுவதற்காக யெகோவா கோபிக்காதிருப்பாராக, முப்பது பேர் மட்டும் இருப்பார்களானால் என்ன செய்வீர்?” என்றான். அதற்கு அவர், “முப்பது பேர் அங்கிருந்தாலும் அதை அழிக்கமாட்டேன்” என்றார்.
Áp-ra-ham năn nỉ: “Xin Chúa đừng giận, con xin thưa: Nếu chỉ có ba mươi người thì sao?” Chúa Hằng Hữu đáp: “Ta sẽ dung thứ cả thành vì ba mươi người ấy.”
31 ஆபிரகாம், “நான் இப்பொழுது யெகோவாவுடன் பேசத்துணிந்தேன், ஒருவேளை இருபது பேர் மட்டும் அங்கிருந்தால் என்ன செய்வீர்?” என்றான். அதற்கு அவர், “அந்த இருபது பேருக்காகவும் அதை அழிக்கமாட்டேன்” என்றார்.
Áp-ra-ham khẩn khoản: “Vì con đã đánh bạo nài xin Chúa, nên con xin hỏi—nhỡ chỉ có hai mươi người thì sao?” Chúa Hằng Hữu đáp: “Ta sẽ dung thứ thành vì hai mươi người ấy.”
32 மறுபடியும் ஆபிரகாம், “நான் இன்னும் ஒருமுறை பேசுவதற்கு யெகோவா என்னோடு கோபிக்காதிருப்பாராக. பத்துப்பேர் மட்டும் அங்கிருந்தால் என்ன செய்வீர்?” என்றான். அதற்கு யெகோவா, “அந்த பத்துப்பேருக்காகவும் அதை நான் அழிக்கமாட்டேன்” என்றார்.
Cố nài nỉ lần cuối, Áp-ra-ham thưa: “Xin Chúa đừng giận, con chỉ xin thưa một lời nữa. Nhỡ chỉ có mười người thì sao?” Chúa Hằng Hữu đáp: “Ta cũng dung thứ cả thành vì mười người ấy.”
33 யெகோவா ஆபிரகாமோடு பேசியபின், அவ்விடத்தைவிட்டுப் போனார். ஆபிரகாமும் தன் இருப்பிடத்திற்குத் திரும்பிச்சென்றான்.
Khi nói chuyện với Áp-ra-ham xong, Chúa Hằng Hữu ra đi. Áp-ra-ham quay về trại.