< ஆதியாகமம் 17 >
1 ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதாயிருந்தபோது, யெகோவா அவனுக்குத் தோன்றி, “நான் எல்லாம் வல்ல இறைவன்; நீ எனக்கு முன்பாக உண்மையாய் நடந்து குற்றமற்றவனாய் இரு.
Khi Áp-ram chín mươi chín tuổi, Chúa Hằng Hữu lại xuất hiện và phán: “Ta là Đức Chúa Trời Toàn Năng, con hãy sống một cuộc đời hoàn hảo trước mặt Ta.
2 நான் உனக்கும் எனக்கும் இடையில் என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, மேலும் உறுதிப்படுத்துவேன், உன்னை மிகவும் பெருகப்பண்ணுவேன்” என்றார்.
Ta sẽ lập giao ước với con và làm cho dòng dõi con gia tăng bội phần.”
3 ஆபிராம் முகங்குப்புற விழுந்தான், இறைவன் அவனுடன் பேசி,
Áp-ram sấp mặt xuống đất. Đức Chúa Trời phán với ông:
4 “என்னைப் பொறுத்தமட்டில் நான் உன்னுடன் செய்யும் உடன்படிக்கை இதுவே: நீ பல நாடுகளுக்குத் தகப்பனாவாய்.
“Này là giao ước của Ta với con: Ta sẽ làm cho con trở nên tổ phụ của nhiều dân tộc.
5 நான் உன்னை அநேக நாடுகளுக்குத் தகப்பனாக்கியிருப்பதால், இனி நீ ஆபிராம் என்று அழைக்கப்படாமல், ஆபிரகாம் என்றே அழைக்கப்படுவாய்.
Ta sẽ đổi tên con. Người ta không gọi con là Áp-ram (nghĩa là cha tôn quý) nữa; nhưng gọi là Áp-ra-ham (nghĩa là cha của các dân tộc)—vì Ta cho con làm tổ phụ nhiều dân tộc.
6 நான் உன்னை மிகவும் இனவிருத்தி உள்ளவனாக்குவேன்; உன்னிலிருந்து பல நாடுகளை உருவாக்குவேன், அரசர்கள் உன்னிலிருந்து தோன்றுவார்கள்.
Ta cho con sinh sôi nẩy nở ra nhiều dân tộc; hậu tự con gồm nhiều vua chúa!
7 நான் உன் இறைவனாகவும் உனக்குப்பின் உன் சந்ததிகளுடைய இறைவனாகவும் இருப்பேன்; இந்த என் உடன்படிக்கையை, எனக்கும் உனக்கும் இடையில் ஒரு நித்திய உடன்படிக்கையாக உன்னுடனும் உனக்குப்பின் தலைமுறைதோறும் உன் சந்ததிகளுடனும் ஏற்படுத்துவேன்.
Ta lập giao ước này với con và hậu tự con từ đời này sang đời khác. Giao ước này còn mãi đời đời: Ta sẽ luôn là Đức Chúa Trời của con và Đức Chúa Trời của hậu tự con.
8 நீ இப்பொழுது அந்நியனாய் வாழும் இந்தக் கானான் நாடு முழுவதையும், உனக்கும் உனக்குப்பின் உன் சந்ததிகளுக்கும் ஒரு நித்திய உடைமையாகக் கொடுப்பேன்; நானே அவர்களுக்கு இறைவனாய் இருப்பேன்” என்றார்.
Ta sẽ cho con và hậu tự con đất mà con đang kiều ngụ, tức đất Ca-na-an. Đó sẽ là cơ nghiệp đời đời, và Ta sẽ làm Đức Chúa Trời của họ mãi mãi.”
9 அதன்பின் இறைவன் ஆபிரகாமிடம், “உன்னைப் பொறுத்தமட்டில், என் உடன்படிக்கையை நீயும் உனக்குப்பின் உன் சந்ததியும் தலைமுறை தலைமுறையாக அதைக் கடைபிடிக்க வேண்டும்.
Đức Chúa Trời phán cùng Áp-ra-ham: “Phần con và hậu tự con từ đời này sang đời kia phải giữ giao ước này của Ta: Tất cả người nam trong dòng dõi con phải chịu cắt bì.
10 நான் உன்னோடும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிகளோடும் செய்துகொள்ளும் என் உடன்படிக்கையில் நீங்கள் கைக்கொள்ளவேண்டிய பங்காவது: உங்கள் மத்தியில் உள்ள ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும்.
Đây là giao ước các con phải giữ, tức là giao ước lập giữa Ta và các con cùng dòng dõi sau con. Các con phải chịu cắt bì; lễ đó là dấu hiệu của giao ước giữa Ta và các con;
11 நீயும் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும், அது எனக்கும் உனக்கும் இடையிலான உடன்படிக்கையின் அடையாளமாயிருக்கும்.
da quy đầu phải bị cắt đi để chứng tỏ rằng con và hậu tự con vâng giữ giao ước này.
12 தலைமுறைதோறும், ஒவ்வொரு ஆண் குழந்தைக்கும் பிறந்து எட்டாவது நாள் விருத்தசேதனம் செய்யப்படவேண்டும். உங்கள் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கும், உங்கள் சந்ததியாய் இராமல், அந்நியரிடமிருந்து பணத்துக்கு வாங்கப்பட்டவர்களுக்கும் விருத்தசேதனம் செய்யப்படவேண்டும்.
Từ đời nay về sau, mỗi bé trai phải chịu cắt bì sau khi sinh được tám ngày; con cái sinh trong gia đình hoặc con cái của đầy tớ mua từ nước ngoài, dù không phải hậu tự, cũng phải cắt bì.
13 அவர்கள் உன் குடும்பத்தில் பிறந்தவர்களாய் இருந்தாலென்ன, பணத்திற்கு வாங்கப்பட்டவர்களாய் இருந்தாலென்ன, அவர்களுக்கும் கட்டாயம் விருத்தசேதனம் செய்யவேண்டும். இவ்வாறு இது உங்கள் உடலில் என் நித்திய உடன்படிக்கையின் அடையாளமாக இருக்கும்.
Dù sinh ra trong gia đình hay mua bằng tiền, tất cả đều phải chịu cắt bì. Giao ước Ta lập trong xác thịt con là giao ước vĩnh hằng.
14 எந்த ஆணுக்கும் தன் உடலில் நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படாதிருந்தால், அவன் தன் சொந்த மக்களிலிருந்து விலக்கப்படுவான்; ஏனெனில், அவன் என் உடன்படிக்கையை நிராகரித்துவிட்டான்” என்றார்.
Ai khước từ luật lệ đó sẽ bị khai trừ ra khỏi dân tộc, vì đã vi phạm giao ước Ta.”
15 மேலும் இறைவன் ஆபிரகாமிடம், “உன் மனைவி சாராயை இனிமேல் நீ சாராய் என்று அழைக்கவேண்டாம்; சாராள் என்பதே அவள் பெயராகும்.
Đức Chúa Trời dạy thêm: “Vợ của con cũng được đổi tên, không còn gọi là Sa-rai nữa nhưng là Sa-ra (nghĩa là công chúa).
16 நான் அவளை ஆசீர்வதித்து, நிச்சயமாக அவள் மூலம் உனக்கு ஒரு மகனைக் கொடுப்பேன். நான் அவளை ஆசீர்வதிப்பதனால், அவள் நாடுகளுக்குத் தாயாவாள்; மக்கள் கூட்டங்களின் அரசர்களும் அவளிலிருந்து தோன்றுவார்கள்” என்றார்.
Ta sẽ ban phước lành cho người và cho người sinh con trai kế nghiệp. Phải, Ta sẽ ban phước lành dồi dào cho Sa-ra, cho người làm tổ mẫu nhiều dân tộc; và hậu tự người gồm nhiều vua chúa.”
17 அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து சிரித்து, “நூறு வயதுள்ள மனிதனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதில் சாராள் பிள்ளை பெறுவாளோ?” என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
Áp-ra-ham sấp mình xuống đất, cười thầm, và tự nhủ: “Trăm tuổi mà có con được sao? Sa-ra đã chín mươi còn sinh nở được ư?”
18 மேலும் ஆபிரகாம் இறைவனிடம், “இஸ்மயேல் உம்முடைய ஆசீர்வாதத்தில் வாழ்ந்தாலே போதும்!” என்று சொன்னான்.
Kế đó, Áp-ra-ham thưa với Đức Chúa Trời: “Ước gì Ích-ma-ên được sống dưới ơn phước của Ngài!”
19 அதற்கு இறைவன், “ஆம்; ஆனாலும், சாராள் உனக்கு ஒரு மகனைப் பெறுவாள்; நீ அவனுக்கு ஈசாக்கு என்று பெயரிடு. என் உடன்படிக்கையை நான் அவனுடன் ஏற்படுத்துவேன்; அது அவனுக்குப்பின் அவனுடைய சந்ததிகளுக்கு ஒரு நித்திய உடன்படிக்கையாக இருக்கும்.
Đức Chúa Trời đáp: “Sa-ra, vợ con sẽ sinh con trai. Con sẽ đặt tên nó là Y-sác. Ta sẽ lập giao ước với nó và hậu tự nó đời đời.
20 இஸ்மயேலைப் பொறுத்தமட்டில், நான் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்: நான் அவனை நிச்சயமாக ஆசீர்வதிப்பேன்; நான் அவனை இனவிருத்தி உள்ளவனாக்கி, அவனுடைய சந்ததியையும் பலுகிப் பெருகப்பண்ணுவேன். அவன் பன்னிரண்டு ஆளுநர்களுக்குத் தகப்பனாயிருப்பான், நான் அவனை ஒரு பெரிய நாடாக்குவேன்.
Còn Ích-ma-ên, Ta đã nghe lời con xin. Ta ban phước lành cho nó và cho nó sinh sôi nẩy nở đông đúc thành một dân tộc lớn. Nó sẽ làm tổ phụ mười hai vua chúa.
21 ஆனால், அடுத்த வருடம் இதே காலத்தில், சாராள் உனக்குப் பெறப்போகும் ஈசாக்குடனேயே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்” என்றார்.
Tuy nhiên, Ta sẽ lập giao ước với Y-sác, mà Sa-ra sẽ sinh ra cho con vào độ này sang năm.”
22 இறைவன் ஆபிரகாமுடன் பேசி முடித்தபின் மேலெழுந்து போனார்.
Đến đây, Chúa chấm dứt nói chuyện với Áp-ra-ham và ngự lên trời.
23 ஆபிரகாம், இறைவன் தனக்குச் சொன்னபடி அந்த நாளிலேயே, இஸ்மயேலுக்கும், தன் வீட்டில் பிறந்தவர்களும், பணத்திற்கு வாங்கப்பட்டவர்களுமான தன் வீட்டிலுள்ள எல்லா ஆண்களுக்கும் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம் செய்தான்.
Ngay hôm ấy, Áp-ra-ham làm lễ cắt bì cho Ích-ma-ên, con trai mình, và tất cả những người nam sinh trong nhà hay nô lệ ông đã mua về, đúng theo lời Chúa dạy.
24 ஆபிரகாமுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படும்போது அவன் தொண்ணூற்றொன்பது வயதுடையவனாய் இருந்தான்.
Lúc chịu cắt bì, Áp-ra-ham đã chín mươi chín tuổi;
25 அவனுடைய மகன் இஸ்மயேலுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படும்போது அவன் பதின்மூன்று வயதுடையவனாய் இருந்தான்;
còn Ích-ma-ên mới mười ba.
26 ஆபிரகாமும் அவன் மகன் இஸ்மயேலும் ஒரே நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டார்கள்.
Áp-ra-ham và Ích-ma-ên chịu cắt bì cùng trong một ngày,
27 ஆபிரகாமின் வீட்டில் பிறந்தவர்களும், அவனால் பணங்கொடுத்து அந்நியரிடம் வாங்கப்பட்டவர்களுமான அவனுடைய குடும்பத்தைச் சேர்ந்த எல்லா ஆண்களும் ஆபிரகாமுடன் விருத்தசேதனம் செய்யப்பட்டார்கள்.
luôn với tất cả những người nam sinh trong nhà, và nô lệ ông đã mua về. Tất cả đều cùng chịu cắt bì với ông.