< ஆதியாகமம் 13 >

1 ஆகையால், ஆபிராம் தன் மனைவியுடனும் தன் எல்லா உடைமைகளுடனும், எகிப்திலிருந்து நெகேப்புக்குப் போனான்; லோத்தும் அவனுடன் போனான்.
Shuning bilen Abram ayali we uning barliq nersilirini hemde Lutni élip Misirdin chiqip, Qanaanning jenubidiki Negew yurtigha mangdi.
2 ஆபிராம் வளர்ப்பு மிருகங்களையும், தங்கத்தையும் வெள்ளியையும் கொண்ட பெரிய செல்வந்தனாக இருந்தான்.
U chaghda Abramning mal-waran we altun-kümüshliri köp bolup, xélila bay idi.
3 அவன் நெகேப்பிலிருந்து இடம்விட்டு இடம்பெயர்ந்து பெத்தேலுக்கு வந்து, அங்கே பெத்தேலுக்கும் ஆயிக்கும் இடையில் தான் முன்பு கூடாரம் போட்டிருந்த இடத்துக்கு வந்தான்.
U köchüp yürüp, jenubtiki Negewdin Beyt-Elge, yeni Beyt-El bilen Ayining otturisidiki eslide chédir tikken jaygha,
4 அவன் தான் முதலாவதாகப் பலிபீடத்தைக் கட்டியிருந்த இடத்துக்குச் சென்று, அங்கே ஆபிராம் யெகோவாவினுடைய பெயரைக் கூப்பிட்டு வழிபட்டான்.
qurban’gah yasighan jaygha qaytip keldi. Abram shu yerde Perwerdigarning namini chaqirip ibadet qildi.
5 ஆபிராமுடன் பயணம் செய்த லோத்துக்கும் ஆடுமாடுகளும் கூடாரங்களும் இருந்தன.
Abram bilen bille mangghan Lutningmu qoy-kala padiliri we chédirliri bar idi.
6 அவர்கள் இருவரது உடைமைகளும் ஏராளமாய் இருந்தபடியால், அவர்கள் சேர்ந்து வாழ அங்கிருந்த நிலவளம் போதாமல் இருந்தது.
Emdi ular bille tursa, zémin ularni qamdiyalmaytti;
7 அதனால் ஆபிராமின் மந்தை மேய்ப்பர்களுக்கும், லோத்தின் மந்தை மேய்ப்பர்களுக்கும் இடையில் சச்சரவுகள் உண்டாயின. அக்காலத்தில் கானானியரும், பெரிசியரும் அதே நாட்டில் குடியிருந்தார்கள்.
bu sewebtin Abramning padichiliri bilen Lutning padichilirining arisida jédel chiqti (u waqitta Qanaaniylar bilen Perizziyler shu zéminda turatti).
8 இதனால் ஆபிராம் லோத்திடம், “எனக்கும் உனக்கும் இடையிலோ அல்லது எனது மந்தை மேய்ப்பருக்கும் உனது மந்தை மேய்ப்பருக்கும் இடையிலோ சச்சரவுகள் வேண்டாம்; ஏனெனில் நாம் நெருங்கிய உறவினர்கள்.
Shunga Abram Lutqa: — «Biz bolsaq qérindashlarmiz, sen bilen méning aramda, méning padichilirim bilen séning padichiliring arisida talash-tartish peyda bolmisun.
9 இதோ நாடு முழுவதும் உனக்கு முன்பாக இருக்கிறது அல்லவா? நாம் இருவரும் பிரிந்து போவோம். நீ இடது பக்கம் போனால், நான் வலதுபக்கம் போவேன்; நீ வலதுபக்கம் போனால் நான் இடது பக்கம் போவேன்” என்றான்.
Mana, aldingda pütkül zémin turmamdu? Emdi sen mendin ayrilghin; eger sen sol terepke barsang, men ong terepke baray; eger sen ong terepke barsang, men sol terepke baray», — dédi.
10 லோத்து சுற்றிலும் பார்த்தபோது, சோவார் வரையுள்ள யோர்தான் சமபூமி முழுவதும் நீர்வளம் நிறைந்திருந்ததைக் கண்டான்; அது யெகோவாவினுடைய தோட்டத்தைப் போலவும், எகிப்து தேசத்தைப் போலவும் இருந்தது. யெகோவா சோதோமையும் கொமோராவையும் அழிக்குமுன் அவ்வாறு இருந்தது.
U waqitta Lut nezer sélip kördiki, Iordan wadisidiki barliq tüzlenglikning Zoar shehirigiche hemmila yerning süyi intayin mol idi; Perwerdigar Sodom bilen Gomorrani weyran qilishtin ilgiri bu yer beeyni Perwerdigarning béghi, Misir zéminidek idi.
11 எனவே லோத்து, யோர்தான் சமபூமி முழுவதையும் தனக்காகத் தெரிந்துகொண்டு, கிழக்குப் பக்கமாகப் போனான். அவர்கள் இருவரும், ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்தார்கள்.
Shuning bilen Lut özige Iordan wadisidiki pütkül tüzlenglikni talliwaldi; andin Lut meshriq terepke köchüp bardi. Shundaq qilip ikkiylen ayrildi.
12 ஆபிராம் கானான் நாட்டில் குடியிருந்தான், லோத்து யோர்தான் சமபூமியின் பட்டணங்கள் நடுவில் குடியிருந்து, சோதோமுக்கு அருகே தன் கூடாரங்களைப் போட்டான்.
Abram Qanaan zéminida olturaqlashti; Lut bolsa tüzlengliktiki sheherlerning arisida turdi; u bara-bara chédirlirini Sodom shehiri terepke yötkidi.
13 சோதோமின் மனிதர் கொடியவர்களாய், யெகோவாவுக்கு விரோதமாகப் பெரும் பாவம் செய்துகொண்டிருந்தார்கள்.
Sodom xelqi rezil ademler bolup, Perwerdigarning neziride tolimu éghir gunahkarlar idi.
14 லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்தபின் யெகோவா ஆபிராமிடம், “நீ இருக்கிற இடத்திலிருந்து உன் கண்களை உயர்த்தி, வடக்கேயும் தெற்கேயும், கிழக்கேயும் மேற்கேயும் பார்.
Lut Abramdin ayrilip ketkendin kéyin, Perwerdigar Abramgha: — Sen emdi béshingni kötürüp, özüng turghan jaydin shimal we jenubqa, meshriq we meghrip terepke qarighin;
15 நீ காண்கிற இடம் முழுவதையும், உனக்கும் உன் சந்ததிக்கும் நான் என்றென்றைக்கும் கொடுப்பேன்.
chünki sen hazir körüwatqan bu barliq zéminni sanga we neslingge menggülük bérimen.
16 நான் உன் சந்ததியைப் பூமியின் புழுதியைப்போல் பெருகப்பண்ணுவேன், பூமியின் புழுதியை ஒருவனால் எண்ண முடியுமானால், உன் சந்ததியையும் எண்ணலாம்.
Séning neslingni yerdiki topidek köp qilimen; shundaqki, eger birsi yerdiki topini sanap chiqalisa, séning neslingnimu sanap chiqalishi mumkin bolidu.
17 நீ நாட்டின் நீளமும் அகலமும் எவ்வளவோ அதுவரை நடந்து செல், ஏனெனில் நான் அதை உனக்குத் தருவேன்” என்றார்.
Ornungdin tur, bu zéminni uzunluqi we kengliki boyiche aylinip chiqqin; chünki Men uni sanga ata qilimen, — dédi.
18 ஆபிராம் தன் கூடாரங்களைக் கழற்றிக்கொண்டு, எப்ரோனில் இருக்கும் மம்ரேயின் கருவாலி மரங்களின் அருகே குடியிருக்கச் சென்றான். அங்கே அவன் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
Shunga Abram chédirlirini yötkep, Hébron shehirige yéqin Mamrediki dubzarliqning yénigha bérip olturaqlashti; u shu yerde Perwerdigargha atap bir qurban’gah yasidi.

< ஆதியாகமம் 13 >