< எஸ்றா 2 >

1 பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரால் சிறைபிடிக்கப்பட்டு, பாபிலோனுக்குக் கொண்டுபோகப்பட்டவர்களுள், சிறையிருப்பிலிருந்து அவர்களுடைய பட்டணமான எருசலேமுக்கும் யூதாவுக்கும்
Estes são os filhos da província, que subiram do cativeiro, dos transportados, que Nabucodonosor, rei de Babilônia, tinha transportado a Babilônia, e tornaram a Jerusalém e a Judá, cada um para a sua casa;
2 செருபாபேல், யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களுடன் திரும்பி வந்தார்கள். இவர்களுடன் திரும்பி வந்த இஸ்ரயேல் மனிதரின் பெயர் பட்டியல்:
Os quais vieram com Zorobabel, Josué, Nehemias, Seraias, Reelaias, mardocheu, Bilsan, Mispar, Bigvai, Rehum e Baana. O número dos homens do povo de Israel:
3 பாரோஷின் சந்ததி 2,172 பேர்,
Os filhos de Paros, dois mil, cento e setenta e dois.
4 செபத்தியாவின் சந்ததி 372 பேர்,
Os filhos de Sephtias, trezentos e setenta e dois.
5 ஆராகின் சந்ததி 775 பேர்,
Os filhos de Arah, setecentos e setenta e cinco.
6 யெசுவா, யோவாப்பின் வழிவந்த பாகாத் மோவாபின் சந்ததி 2,812 பேர்,
Os filhos de Pahath-moab, dos filhos de Jesua-joab, dois mil, oitocentos e doze.
7 ஏலாமின் சந்ததி 1,254 பேர்,
Os filhos de Elam, mil, duzentos e cincoênta e quatro.
8 சத்தூவின் சந்ததி 945 பேர்,
Os filhos de Zatthu, novecentos e quarenta e cinco.
9 சக்காயின் சந்ததி 760 பேர்,
Os filhos de Zaccai, setecentos e sessenta.
10 பானியின் சந்ததி 642 பேர்,
Os filhos de Bani, seiscentos e quarenta e dois.
11 பெபாயின் சந்ததி 623 பேர்,
Os filhos de Bebai, seiscentos e vinte e três.
12 அஸ்காதின் சந்ததி 1,222 பேர்,
Os filhos de Azgad, mil, duzentos e vinte e dois.
13 அதோனிகாமின் சந்ததி 666 பேர்,
Os filhos de Adonikam, seiscentos e sessenta e seis.
14 பிக்வாயின் சந்ததி 2,056 பேர்,
Os filhos de Bigvai, dois mil e cincoênta e seis.
15 ஆதீனின் சந்ததி 454 பேர்,
Os filhos de Adin, quatrocentos e cincoênta e quatro.
16 எசேக்கியாவின் வழிவந்த ஆதேரின் சந்ததி 98 பேர்,
Os filhos de Ater, de Hizkia, noventa e oito.
17 பேஸாயின் சந்ததி 323 பேர்,
Os filhos de Besai, trezentos e vinte e três.
18 யோராகின் சந்ததி 112 பேர்,
Os filhos de Jora, cento e doze.
19 ஆசூமின் சந்ததி 223 பேர்,
Os filhos de Hasum, duzentos e vinte e três.
20 கிபாரின் சந்ததி 95 பேர்.
Os filhos de Gibbar, noventa e cinco.
21 பெத்லெகேமின் மனிதர் 123 பேர்,
Os filhos de Belém, cento e vinte e três.
22 நெத்தோபாவின் மனிதர் 56 பேர்,
Os homens de Netopha, cincoênta e seis.
23 ஆனதோத்தின் மனிதர் 128 பேர்,
Os homens de Anathoth, cento e vinte e oito.
24 அஸ்மாவேத்தின் மனிதர் 42 பேர்,
Os filhos de Azmaveth, quarenta e dois.
25 கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் பட்டணங்களின் மனிதர் 743 பேர்,
Os filhos de Kiriath-arim, Chephira e Bearoth, setecentos e quarenta e três.
26 ராமா, கேபாவின் மனிதர் 621 பேர்,
Os filhos de Rama, e Gibeah, seiscentos e vinte e um.
27 மிக்மாசின் மனிதர் 122 பேர்,
Os homens de Micmas, cento e vinte e dois.
28 பெத்தேல், ஆயியின் மனிதர் 223 பேர்,
Os homens de Bethel e Ai, duzentos e vinte e três.
29 நேபோவின் மனிதர் 52 பேர்,
Os filhos de Nebo, cincoênta e dois.
30 மக்பீசின் மனிதர் 156 பேர்,
Os filhos de Magbis, cento e cincoênta e seis.
31 மற்ற ஏலாமின் மனிதர் 1,254 பேர்,
Os filhos do outro Elam, mil, duzentos e cincoênta e quatro.
32 ஆரீமின் மனிதர் 320 பேர்,
Os filhos de Harim, trezentos e vinte.
33 லோத், ஆதித், ஓனோ பட்டணங்களின் மனிதர் 725 பேர்,
Os filhos de Lod, Hadid e Ono, setecentos e vinte e cinco.
34 எரிகோவின் மனிதர் 345 பேர்,
Os filhos de Jericó, trezentos e quarenta e cinco.
35 செனாகாவின் மனிதர் 3,630 பேர்.
Os filhos de Senaa, três mil, seiscentos e trinta.
36 ஆசாரியர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் சந்ததி 973 பேர்,
Os sacerdotes: os filhos de Jedaias, da casa de Jesua, novecentos e setenta e três.
37 இம்மேரின் சந்ததி 1,052 பேர்,
Os filhos de Immer, mil e cincoênta e dois.
38 பஸ்கூரின் சந்ததி 1,247 பேர்,
Os filhos de Pashur, mil, duzentos e quarenta e sete.
39 ஆரீமின் சந்ததி 1,017 பேர்.
Os filhos de Harim, mil e dezesete.
40 லேவியர்கள்: ஓதவியாவின் வழிவந்த யெசுவா, கத்மியேல் ஆகியோரின் சந்ததி 74 பேர்.
Os levitas: os filhos de Jesua e Kadmiel, dos filhos de Hodavias, setenta e quatro.
41 பாடகர்கள்: ஆசாப்பின் சந்ததி 128 பேர்.
Os cantores: os filhos de Asaph, cento e vinte e oito.
42 ஆலய வாசல் காவலர்கள்: சல்லூம் அதேர், தல்மோன், அக்கூப், அதிதா, சோபாய் ஆகியோரின் சந்ததிகள் 139 பேர்.
Os filhos dos porteiros: os filhos de Sallum, os filhos de Ater, os filhos de Talmon, os filhos de Akkub, os filhos de Hatita, os filhos de Sobai: por todos, cento e trinta e nove.
43 திரும்பி வந்த ஆலய பணியாட்கள்: சீகா, அசுபா, தபாயோத்,
Os nethineos: os filhos de Ziha, os filhos de Hasupha, os filhos de Tabbaoth,
44 கேரோசு, சீயாகா, பாதோன்,
Os filhos de Keros, os filhos de Siaha, os filhos de Padon,
45 லெபானா, அகாபா, அக்கூப்,
Os filhos de Lebana, os filhos de Hagaba, os filhos de Akkub,
46 ஆகாப், சல்மாயி, ஆனான்,
Os filhos de Hagab, os filhos de Samlai, os filhos de Hanan,
47 கித்தேல், காகார், ரயாயா,
Os filhos de Giddel, os filhos de Gahar, os filhos de Reaias,
48 ரேசீன், நெக்கோதா, காசாம்,
Os filhos de Resin, os filhos de Nekoda, os filhos de Gazam,
49 ஊசா, பாசெயா, பேசாய்,
Os filhos de Uzar, os filhos de Paseah, os filhos de Besai,
50 அஸ்னா, மெயூனீம், நெபுசீம்,
Os filhos de Asna, os filhos dos meuneos, os filhos dos nephuseos,
51 பக்பூக், அகுபா, அர்கூர்,
Os filhos de Bakbuk, os filhos de Hakupha, os filhos de Harhur,
52 பஸ்லூத், மெகிதாவ், அர்ஷா,
Os filhos de Basluth, os filhos de Mehida, os filhos de Harsa,
53 பர்கோஸ், சிசெரா, தேமா,
Os filhos de Barkos, os filhos de Sisera, os filhos de Temah,
54 நெத்சியா, அதிபா ஆகியோரின் சந்ததிகள்.
Os filhos de Nesiah, os filhos de Hatipha.
55 திரும்பி வந்த சாலொமோனின் வேலையாட்களின் சந்ததிகள்: சோதாய், சொபெரேத், பெருதா,
Os filhos dos servos de Salomão: os filhos de Sotai, os filhos de Sophereth, os filhos de Peruda,
56 யாலா, தர்கோன், கித்தேல்,
Os filhos de Jaala, os filhos de Darkon, os filhos de Giddel,
57 செபத்தியா, அத்தீல், பொகெரேத் செபாயீம், ஆமி ஆகியோரின் சந்ததிகள்.
Os filhos de Sephatias, os filhos de Hattil, os filhos de Pochereth-hat-sebaim, os filhos de Ami.
58 ஆலய பணியாட்களுடன், சாலொமோனின் பணியாட்களின் சந்ததிகளும் சேர்த்து 392 பேர்.
Todos os nethineos, e os filhos dos servos de Salomão, trezentos e noventa e dois.
59 பின்வருவோர் தெல்மெலா, தெல்அர்ஷா, கேரூப், ஆதோன், இம்மேர் ஆகிய நகரங்களிலிருந்து திரும்பி வந்தவர்கள். ஆனால் அவர்களுக்கோ தங்கள் குடும்பங்கள் இஸ்ரயேலின் வழிவந்தவை என நிரூபிக்க முடியவில்லை.
Também estes subiram de Tel-melah e Tel-harsa, Cherub, Addan e Immer: porém não puderam mostrar a casa de seus pais, e sua linhagem, se de Israel eram.
60 அவர்கள், தெலாயா, தொபியா, நெக்கோதா ஆகியோரின் சந்ததிகளான 652 பேர்.
Os filhos de Dalaias, os filhos de Tobias, os filhos de Nekoda, seiscentos e cincoênta e dois.
61 ஆசாரியர்களைச் சேர்ந்தவர்கள்: அபாயா, அக்கோஸ், அக்கோசு, பர்சில்லாய் ஆகியோரின் சந்ததிகள். பர்சில்லாய் என்பவன் கீலேயாத்திய மனிதனான பர்சில்லாயின் மகள்களில் ஒருத்தியைத் திருமணம் செய்ததால் இப்பெயரால் அழைக்கப்பட்டான்.
E dos filhos dos sacerdotes: os filhos de Habaias, os filhos de Kos, os filhos de Barzillai, que tomou mulher das filhas de Barzillai, o gileadita, e que foi chamado do seu nome.
62 இவர்கள் தங்கள் குடும்ப அட்டவணையைத் தேடினார்கள்; ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் ஆசாரியப் பணியிலிருந்து அசுத்தமானவர்கள் எனத் தள்ளி வைக்கப்பட்டார்கள்.
Estes buscaram o seu registro entre os que estavam registrados nas genealogias, mas não se acharam nelas; pelo que por imundos foram rejeitados do sacerdócio.
63 ஊரீம், தும்மீம் அணிந்த ஒரு ஆசாரியன் எழும்பும் வரைக்கும் அவர்கள் மகா பரிசுத்த உணவிலிருந்து எதையும் சாப்பிடக்கூடாது என ஆளுநன் உத்தரவிட்டான்.
E o tirsatha lhes disse que não comessem das coisas sagradas, até que houvesse sacerdote com Urim e com tumim.
64 எண்ணப்பட்ட முழுத் தொகை 42,360 பேர்.
Toda esta congregação junta foi, quarenta e dois mil trezentos e sessenta,
65 இவர்களைத் தவிர அவர்களின் ஆண் பெண் வேலைக்காரர் 7,337 பேரும், பாடகர்களும் பாடகிகளும் 200 பேரும் இருந்தனர்.
A fora os seus servos e as suas servas, que foram sete mil, trezentos e trinta e sete: também tinha duzentos cantores e cantoras.
66 அவர்களிடம் 736 குதிரைகளும், 245 கோவேறு கழுதைகளும்,
Os seus cavalos, setecentos e trinta e seis: os seus mulos, duzentos e quarenta e cinco;
67 435 ஒட்டகங்களும், 6,720 கழுதைகளும் இருந்தன.
Os seus camelos, quatrocentos e trinta e cinco: os jumentos, seis mil, setecentos e vinte.
68 அவர்கள் எல்லோரும் எருசலேமிலுள்ள யெகோவாவின் ஆலயத்துக்கு வந்து சேர்ந்தவுடனே, குடும்பத் தலைவர்களில் சிலர் இறைவனுடைய ஆலயத்தை அதனுடைய இடத்தில் திரும்பக் கட்டுவதற்காக சுயவிருப்புக் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்.
E alguns dos chefes dos pais, vindo à casa do Senhor, que habita em Jerusalém, deram voluntárias ofertas para a casa de Deus, para a fundarem no seu lugar.
69 அவர்கள் தங்களால் முடியுமானவரை 61,000 தங்கக் காசுகளையும், 5,000 வெள்ளியையும், ஆசாரியருக்கான 100 உடைகளையும் அவ்வேலைக்கென ஆலயத் திரவிய களஞ்சியத்துக்குக் கொடுத்தார்கள்.
Conforme ao seu poder, deram para o tesouro da obra, em ouro, sessenta e um mil dracmas, e em prata cinco mil libras, e cem vestes sacerdotais.
70 ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள், வாசல் காவலர்கள், ஆலய பணியாளர்கள் ஆகியோர் வேறுசில மக்களுடனும், மீதியான இஸ்ரயேலருடனும் தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியமர்ந்தார்கள்.
E habitaram os sacerdotes e os levitas, e alguns do povo, tanto os cantores, como os porteiros, e os nethineos, nas suas cidades; como também todo o Israel nas suas cidades.

< எஸ்றா 2 >