< யாத்திராகமம் 39 >
1 பரிசுத்த இடத்தில் ஊழியம் செய்வதற்காக நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்பு நூல்களினால் நெய்யப்பட்ட உடைகளைச் செய்தார்கள். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோனுக்குப் பரிசுத்த உடைகளையும் செய்தார்கள்.
Bộ áo lễ thánh của A-rôn mặc trong lúc thừa hành chức vụ tại Nơi Thánh được các tay thợ khéo may đúng theo kiểu mẫu Chúa Hằng Hữu truyền cho Môi-se, đủ các màu sắc xanh, tím, và đỏ.
2 ஏபோத்தைத் தங்கத்தினாலும், நீலம், ஊதா, கருஞ்சிவப்பு ஆகிய நூல்களினாலும் திரித்த மென்பட்டுத் துணியினாலும் செய்தார்கள்.
Họ chế tạo e-phót bằng vàng, sợi chỉ xanh, chỉ tím, chỉ đỏ.
3 தங்கத்தை மெல்லிய தகடுகளாக அடித்து, அதைச் சரிகை நூலாக வெட்டி, நீலம், ஊதா, கருஞ்சிவப்புநூல், மென்பட்டுத் துணிகளுடன் நெய்து திறமையான சித்திரத்தையல் வேலையாகச் செய்தார்கள்.
Họ cán mỏng vàng, cắt thành sợi để thêu dặm vào với chỉ xanh, tím, và đỏ trên vải gai mịn, và như thế, họ chế tạo ê-phót một cách vô cùng tinh vi.
4 ஏபோத்தின் இரண்டு மூலைகளிலும் தொடுக்கப்படுவதற்கு, இணைக்கக்கூடிய ஏபோத்தின் தோள்பட்டிகளைச் செய்தார்கள்.
Ê-phót được nối liền nhau ở bên trên bằng hai cầu vai, bên dưới có dây thắt lưng.
5 அதன் நுட்பமாக நெய்யப்பட்ட இடைப்பட்டியும் அதைப் போலவே செய்யப்பட்டு, அதுவும் ஏபோத்துடன் ஒரே இணைப்பாக தங்கம், நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல், திரித்த மென்பட்டு ஆகியவற்றைக்கொண்டு இணைத்து, யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.
Thắt lưng cũng được may bằng vải gai mịn, thêu kim tuyến, chỉ xanh, tím, và đỏ vô cùng tinh vi cũng như ê-phót, đúng theo kiểu mẫu Chúa Hằng Hữu truyền cho Môi-se.
6 கோமேதகக் கற்களைத் தங்கச்சரிகை வேலைப்பாடுகளில் பதித்து, அவற்றின்மேல் இஸ்ரயேலின் மகன்களின் பெயர்களை ஒரு முத்திரையைப்போல் பொறித்தார்கள்.
Họ cắt các viên bạch ngọc, khắc tên các con trai Ít-ra-ên lên theo lối khắc con dấu để tưởng niệm con cháu Ít-ra-ên;
7 பின்பு அவற்றை இஸ்ரயேலின் மகன்களுக்கான நினைவுச்சின்னக் கற்களாக ஏபோத்தின் தோள்பட்டியில் இணைத்தார்கள். இவை யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டன.
rồi đem khảm trong khung vàng, đính nơi hai cầu vai của ê-phót các viên ngọc đúng theo điều Chúa Hằng Hữu đã phán dặn Môi-se.
8 அவர்கள் ஒரு திறமையான கைவினைக் கலைஞனின் வேலைப்பாடாக மார்பு அணியைச் செய்தார்கள். ஏபோத்தைப்போலவே அதைத் தங்கம், நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல், திரித்த மென்பட்டு ஆகியவற்றைக்கொண்டு செய்தார்கள்.
Bảng đeo ngực cũng như ê-phót được may bằng vải gai mịn thêu kim tuyến, chỉ xanh, tím, và đỏ vô cùng tinh vi.
9 மார்பு அணி ஒரு சாண் நீளமும், ஒரு சாண் அகலமும் உடைய இரண்டாக மடிக்கப்பட்ட சதுரத்துண்டாயிருந்தது.
Bảng này hình vuông, mỗi cạnh một gang tay, may bằng hai lớp vải.
10 அதில் நான்கு வரிசைகளில் இரத்தினக் கற்களைப் பதித்தார்கள். முதல் வரிசையில் பத்மராகம், புஷ்பராகம், மாணிக்கம்;
Trên bảng đeo ngực có gắn bốn hàng ngọc. Hàng thứ nhất gồm: Hồng mã não, hoàng ngọc, và ngọc lục bảo.
11 இரண்டாம் வரிசையில் மரகதம், இந்திரநீலம், வைரம்;
Hàng thứ hai gồm: Bích ngọc, lam ngọc, và kim cương.
12 மூன்றாம் வரிசையில் கெம்பு, வைடூரியம், சுகந்தி;
Hàng thứ ba gồm: Ngọc phong tín, ngọc mã não, và ngọc thạch anh tím.
13 நான்காம் வரிசையில் படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி ஆகியவை இருந்தது. அவற்றைத் தங்கச்சரிகை வேலையாக பதித்தார்கள்.
Hàng thứ tư gồm: Lục ngọc thạch, bạch ngọc, và vân ngọc.
14 இஸ்ரயேலின் மகன்களின் பெயர்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கற்களாக, பன்னிரண்டு கற்கள் இருந்தன. பன்னிரண்டு கோத்திரங்களின் பெயர்களும் ஒவ்வொரு கல்லிலும் முத்திரையைப்போல் பொறிக்கப்பட்டிருந்தன.
Trên mười hai viên ngọc này họ khắc tên mười hai đại tộc Ít-ra-ên theo lối khắc con dấu.
15 மார்பு அணிக்காக கயிறுபோல் பின்னப்பட்ட ஒரு சங்கிலியைச் சுத்தத் தங்கத்தினால் செய்தார்கள்.
Họ làm hai sợi dây chuyền xoắn trôn ốc bằng vàng ròng.
16 அவர்கள் இரண்டு தங்கச்சரிகை நூல் வேலைகளையும், இரண்டு தங்க வளையங்களையும் செய்தார்கள். அந்த இரண்டு வளையங்களையும் மார்பு அணியின் இரண்டு மூலைகளிலும் பொருத்தினார்கள்.
Họ cũng làm hai cái khuôn thảm và hai cái khoen bằng vàng, rồi gắn hai khoen đó vào hai cái góc của bảng đeo ngực.
17 மார்பு அணியின் இரண்டு பக்கங்களிலும் உள்ள வளையங்களில் தங்கச்சங்கிலிகளைத் தொடுத்தார்கள்.
Mỗi dây chuyền có một đầu nối với hai khoen vàng gắn trên đầu bảng đeo ngực,
18 சங்கிலிகளின் மற்ற நுனிகளைச் சரிகை நூல் வேலைகளுடன் தொடுத்து, அவற்றைத் தோள்பட்டிகளுடன் ஏபோத்தின் முன்பக்கத்தில் இணைத்தார்கள்.
đầu kia nối với hai khung vàng trên hai cầu vai ê-phót.
19 அவர்கள் தங்கத்தால் இன்னும் இரண்டு வளையங்களைச் செய்து, அவற்றை ஏபோத்தை ஒட்டியுள்ள மார்பு அணியின் கீழ் விளிம்பின் இரண்டு மூலைகளில் உட்பக்கத்தில் வைத்தார்கள்.
Họ làm thêm bốn khoen vàng nữa, hai khoen gắn ở góc trong bên dưới bảng đeo ngực, gần ê-phót.
20 அவர்கள் வேறு இரண்டு தங்க வளையங்களையும் செய்து, ஏபோத்தின் முன்பக்கத்தில் அதன் இடைப்பட்டிகளுக்கு மேல் இருந்த மூட்டுக்கு அடுத்துள்ள பொருத்தில், தோள்பட்டிகளின் அடிப்பாகத்துடன் அவற்றைப் பொருத்தினார்கள்.
Hai khoen kia gắn vào phần dưới của hai cầu vai ê-phót, về phía trước, gần chỗ nối với vạt trước ê-phót, bên trên thắt lưng.
21 மார்பு அணியை இடைப்பட்டியுடன் இணைக்கும்படியாகவும், அது ஏபோத்திலிருந்து விலகாமல் இருக்கும்படியாகவும், ஏபோத்தின் வளையங்களுடன் மார்பு அணியின் வளையங்களை நீல நாடாவால் கட்டினார்கள். இவற்றை யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
Họ dùng dây màu xanh nối các khoen này với nhau, như vậy bảng đeo ngực sẽ nằm bên trên dây thắt lưng đã được dệt một cách tinh vi đẹp đẽ, và sẽ không rời khỏi ê-phót, đúng theo điều Chúa Hằng Hữu phán dặn Môi-se.
22 அவர்கள் ஏபோத்தின் மேலங்கி முழுவதையும் நீலநிறத் துணியினால் ஒரு நெசவாளியின் வேலையாகச் செய்தார்கள்.
Áo khoác ngoài ê-phót được dệt toàn màu xanh.
23 அந்த அங்கியின் நடுவில் கழுத்துப்பட்டியின் திறப்பைப் போன்ற ஒரு திறப்பை அமைத்தார்கள். கழுத்துத் துவாரம் கிழியாதபடி சுற்றிலும் ஒரு பட்டியை வைத்துத் தைத்தார்கள்.
Giữa áo có một lỗ để tròng đầu, giống như cổ của áo giáp, quanh cổ được viền cẩn thận cho khỏi rách.
24 அந்த அங்கியின் கீழ்ப்பக்க ஓரத்தைச் சுற்றிலும், நீலம், ஊதா, கருஞ்சிவப்பு நூல்களினாலும், திரித்த மென்பட்டுத் துணியினாலும் மாதுளம் பழங்களைச் செய்து அலங்கரித்தார்கள்.
Họ dùng chỉ xanh, tím, đỏ và chỉ gai thắt trái lựu, kết dọc theo gấu áo này.
25 அங்கியின் ஓரங்களைச் சுற்றிலும் மாதுளம் பழங்களின் இடையிடையே இருக்கத்தக்கதாக சுத்தத் தங்கத்தினால் மணிகளைச் செய்து தொங்கவிட்டார்கள்.
Họ cũng làm chuông nhỏ bằng vàng ròng, kết xen kẽ với trái lựu trên gấu áo.
26 யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, ஆசாரியப் பணியைச் செய்வதற்காக ஆரோன் உடுத்தியிருக்கும் அங்கியின் கீழ்ப்பக்க ஓரத்தைச் சுற்றிலும் ஒரு மாதுளம் பழமும், ஒரு மணியுமாக, மாறிமாறி அலங்கரிக்கப்பட்டிருந்தன.
Áo này sẽ được A-rôn mặc khi phụng sự Chúa Hằng Hữu, theo điều Ngài dạy Môi-se.
27 ஆரோனுக்காகவும், அவனுடைய மகன்களுக்காகவும் மென்பட்டு நூலினால் ஒரு நெசவாளியின் வேலையாக உள் அங்கிகளைச் செய்தார்கள்.
Họ cũng dùng sợi gai mịn dệt áo dài cho A-rôn và các con trai người.
28 மென்பட்டினால் தலைப்பாகையையும், அதன் கச்சையையும், திரித்த மென்பட்டுத் துணியினால் கால் சட்டைகளையும் செய்தார்கள்.
Họ còn dệt khăn, mũ, quần lót ngắn, toàn bằng sợi gai mịn.
29 திரித்த மென்பட்டுத் துணி, நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல் ஆகியவற்றால் சித்திரத்தையற்காரனின் வேலையாய் ஒரு இடைப்பட்டியையும் செய்தார்கள். இவை யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டன.
Dây thắt lưng bằng vải gai mịn được thêu xanh, tím, và đỏ, như Chúa Hằng Hữu đã phán dặn Môi-se.
30 மேலும் அவர்கள் சுத்தத் தங்கத்தினால் தகடு ஒன்றைச் செய்து, முத்திரையைப்போல அதில் இதைப் பொறித்தார்கள்: “யெகோவாவுக்குப் பரிசுத்தம்”
Họ làm một thẻ vàng ròng, và khắc trên thẻ này theo lối khắc con dấu dòng chữ: “THÁNH CHO CHÚA HẰNG HỮU.”
31 அதில் ஒரு நீலநிற நாடாவைக் கட்டி தலைப்பாகையோடு இருக்கும்படி அதை இணைத்தார்கள். இவை யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டன.
Họ dùng dây màu xanh buộc thẻ vào khăn đội đầu, như điều Chúa Hằng Hữu phán dặn Môi-se.
32 சபைக் கூடாரமான இறைசமுகக் கூடாரத்தின் வேலைகளெல்லாம் செய்துமுடிக்கப்பட்டன. யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரயேல் மக்கள் எல்லாவற்றையும் செய்தார்கள்.
Vậy, công việc Đền Tạm tức là Lều Hội Kiến hoàn tất đúng theo mọi điều Chúa Hằng Hữu dặn bảo Môi-se.
33 அதன்பின் இறைசமுகக் கூடாரத்தை மோசேயிடம் கொண்டுவந்தார்கள்: கூடாரமும், அதன் எல்லா பணிமுட்டுகளும், கொக்கிகள், சட்டப்பலகைகள், குறுக்குச் சட்டங்கள், கம்பங்கள், அடித்தளங்கள்,
Họ đem tất cả mọi thứ đến cho Môi-se: Lều và đồ phụ tùng, móc, khung, thanh ngang, trụ, và lỗ trụ;
34 அத்துடன் சிவப்புச் சாயம் தோய்க்கப்பட்ட ஆட்டுக்கடாத் தோலினால் செய்யப்பட்ட மூடுதிரை, கடல்பசுத் தோலினால் செய்யப்பட்ட மூடுதிரை, மறைக்கும் திரை,
lớp da chiên nhuộm đỏ và da dê; các bức màn che trước Hòm;
35 சாட்சிப்பெட்டியுடன் அதன் கம்புகள், அதன் கிருபாசனம்,
Hòm Giao Ước với đòn khiêng;
36 மேஜையுடன் அதற்குரிய எல்லா பொருட்கள், இறைசமுக அப்பம்,
nắp chuộc tội trên Hòm; bàn và đồ phụ tùng; Bánh Thánh;
37 சுத்தத் தங்கத்தாலான குத்துவிளக்கு, அதில் வரிசையாக உள்ள அகல்விளக்குகள், அதன் உபகரணங்கள், வெளிச்சத்துக்கான எண்ணெய்,
chân đèn bằng vàng ròng, đồ phụ tùng, và dầu thắp;
38 தங்கத் தூபபீடம், அபிஷேக எண்ணெய், நறுமணத்தூள், கூடார வாசலின் திரை,
bàn thờ bằng vàng; dầu xức thánh và hương thơm; bức màn che cửa đền;
39 வெண்கலப் பலிபீடம், அதன் வெண்கலச் சல்லடை, அதன் கம்புகள், அதன் எல்லா பாத்திரங்கள், தொட்டி, அதன் கால்கள்,
bàn thờ bằng đồng; rá đồng, đòn khiêng, và đồ phụ tùng; bồn rửa và chân bồn;
40 முற்றத்திற்கான திரைகள், அதற்குரிய கம்புகள், அடித்தளங்கள், முற்ற வாசலுக்கான திரைகள், அதன் கயிறுகள், முற்றத்திலுள்ள முளைகள், சபைக் கூடாரமான இறைசமுகக் கூடாரத்தின் எல்லா பொருட்கள்;
các bức màn che quanh hành lang; dây và đinh; cùng với tất cả đồ phụ tùng dùng trong công việc Đền Tạm;
41 உட்பட ஆசாரியனான ஆரோனுக்கான பரிசுத்த உடைகளும், அவன் மகன்கள் பரிசுத்த இடத்தில் ஆசாரியப் பணிசெய்யும்போது உடுத்தும் உடைகளுமான நெய்யப்பட்ட உடைகளையும் கொண்டுவந்தார்கள்.
bộ áo lễ của Thầy Tế lễ A-rôn và các con trai người mặc trong lúc thi hành chức vụ trong Nơi Thánh.
42 யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரயேல் மக்கள் எல்லா வேலைகளையும் செய்திருந்தார்கள்.
Người Ít-ra-ên thực hiện mọi điều gì Chúa Hằng Hữu đã phán dặn Môi-se.
43 மோசே அவைகளையெல்லாம் பார்வையிட்டான். அப்பொழுது யெகோவா கட்டளையிட்டபடியே அவைகளைச் செய்திருக்கிறார்கள் என்று மோசே கண்டான். எனவே மோசே அவர்களை ஆசீர்வதித்தான்.
Sau khi xem xét kiểm tra lại mọi vật, Môi-se thấy họ làm đúng theo lời Chúa Hằng Hữu đã phán dạy, nên chúc phước cho họ.