< எபேசியர் 6 >

1 பிள்ளைகளே, நீங்கள் கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களாக, உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். இதுவே சரியானது.
ⲁ̅ⲛ̅ϣⲏⲣⲉ ⲥⲱⲧⲙ̅ ⲛ̅ⲥⲁⲛⲉⲧⲛ̅ⲉⲓⲟⲧⲉ ϩⲙ̅ⲡϫⲟⲉⲓⲥ. ⲡⲁⲓ̈ ⲅⲁⲣ ⲡⲉ ⲡⲇⲓⲕⲁⲓⲟⲛ.
2 “உங்கள் தகப்பனையும், தாயையும் மதித்து நடவுங்கள்.” இதுவே வாக்குத்தத்தத்துடன் சேர்த்துக்கொடுக்கப்பட்ட முதலாவது கட்டளை.
ⲃ̅ⲙⲁⲧⲁⲓ̈ⲉⲡⲉⲕⲉⲓⲱⲧ ⲙⲛ̅ⲧⲉⲕⲙⲁⲁⲩ ⲉⲧⲉⲧⲁⲓ̈ ⲧⲉ ⲧϣⲟⲣⲡ̅ ⲛ̅ⲉⲛⲧⲟⲗⲏ ϩⲙ̅ⲡⲉⲣⲏⲧ
3 “மதித்து நடந்தால், உங்களுக்கு நன்மை உண்டாகும். நீங்களும் இந்தப் பூமியில் நீடித்து வாழ்வீர்கள்” என எழுதப்பட்டிருக்கிறது.
ⲅ̅ϫⲉ ⲉⲣⲉⲡⲉⲧⲛⲁⲛⲟⲩϥ ϣⲱⲡⲉ ⲙ̅ⲙⲟⲕ. ⲁⲩⲱ ⲛⲅ̅ⲣ̅ⲟⲩⲛⲟϭ ⲛ̅ⲟⲩⲟⲉⲓϣ ϩⲓϫⲙ̅ⲡⲕⲁϩ·
4 தந்தையரே, உங்கள் பிள்ளைகளைக் கோபமூட்டாதீர்கள்; பிள்ளைகளைக் கர்த்தரின் பயிற்சியிலும், அறிவுறுத்தல்களிலும் வளர்த்திடுங்கள்.
ⲇ̅ⲛ̅ⲉⲓⲟⲧⲉ ⲙ̅ⲡⲣ̅ϯⲛⲟⲩϭⲥ̅ ⲛ̅ⲛⲉⲧⲛ̅ϣⲏⲣⲉ. ⲁⲗⲗⲁ ⲥⲁⲛⲟⲩϣⲟⲩ ϩⲛ̅ⲧⲉⲥⲃⲱ ⲙⲛ̅ⲡⲧⲥⲁⲃⲟ ⲙ̅ⲡϫⲟⲉⲓⲥ·
5 அடிமைகளே, இந்தப் பூமியில் உங்களுக்கு எஜமான்களாய் இருக்கிறவர்களுக்கு பயத்துடனும் மரியாதையுடனும் கீழ்ப்படியுங்கள். நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவதுபோல, அவர்களுக்கு உண்மையான மனதுடன் கீழ்ப்படியுங்கள்.
ⲉ̅ⲛ̅ϩⲙ̅ϩⲁⲗ ⲥⲱⲧⲙ̅ ⲛ̅ⲥⲁⲛⲉⲧⲛ̅ϫⲓⲥⲟⲟⲩⲉ ⲕⲁⲧⲁⲥⲁⲣⲝ̅. ϩⲛ̅ⲟⲩϩⲟⲧⲉ. ⲙⲛ̅ⲟⲩⲥⲧⲱⲧ ϩⲛ̅ⲟⲩⲙⲛ̅ⲧϩⲁⲡⲗⲟⲩⲥ ⲛ̅ⲧⲉⲡⲉⲧⲛ̅ϩⲏⲧ. ϩⲱⲥ ⲉⲧⲉⲧⲛ̅ⲟ ⲙ̅ⲡⲉⲭ̅ⲥ̅.
6 அவர்களுடைய நன்மதிப்பைப் பெறுவதற்காக அவர்கள் உங்களைக் கவனிக்கும்போது மட்டும் அப்படிக் கீழ்ப்படியாமல், உங்கள் முழு இருதயத்தோடும் இறைவனுடைய சித்தத்தைச் செய்யும் கிறிஸ்துவின் அடிமைகளைப்போல கீழ்ப்படியுங்கள்.
ⲋ̅ϩⲛ̅ⲟⲩⲙⲛ̅ⲧⲉⲓⲁ ⲛ̅ϭⲁⲟⲩⲟⲛ ⲁⲛ. ϩⲱⲥ ⲣⲉϥⲁⲣⲉⲥⲕⲉ ⲛ̅ⲣⲱⲙⲉ. ⲁⲗⲗⲁ ϩⲱⲥ ϩⲙ̅ϩⲁⲗ ⲙ̅ⲡⲉⲭ̅ⲥ̅. ⲉⲧⲉⲧⲛ̅ⲉⲓⲣⲉ ⲙ̅ⲡⲟⲩⲱϣ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ ϩⲛ̅ⲧⲉⲧⲛ̅ⲯⲩⲭⲏ ⲧⲏⲣⲥ̅
7 நீங்கள் மனிதருக்கு பணிசெய்கிறவர்களைப் போலல்லாமல், கர்த்தருக்குப் பணிசெய்கிறவர்களாக, முழு இருதயத்துடனும் உங்கள் பணியைச் செய்யுங்கள்.
ⲍ̅ϩⲛ̅ⲟⲩⲧⲱⲧ ⲛ̅ϩⲏⲧ ϩⲱⲥ ⲉⲧⲉⲧⲛ̅ⲟ ⲛ̅ϩⲙ̅ϩⲁⲗ ⲙ̅ⲡϫⲟⲉⲓⲥ. ⲛ̅ⲣⲱⲙⲉ ⲁⲛ.
8 ஏனெனில் ஒருவன் அடிமையாயினும் சுதந்திரமுடையவனாயினும் அவனவன் செய்கின்ற நன்மைக்குப் பதிலாக, கர்த்தர் ஒவ்வொருவனுக்கும் அதற்குரிய பலனைக் கொடுப்பார் என்பது உங்களுக்குத் தெரியும்.
ⲏ̅ⲉⲧⲉⲧⲛ̅ⲥⲟⲟⲩⲛ ϫⲉ ⲡⲁⲅⲁⲑⲟⲛ ⲉⲧⲉⲣⲉⲡⲟⲩⲁ ⲡⲟⲩⲁ ⲛⲁⲁⲁϥ. ϥⲛⲁϫⲓⲧϥ̅ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲙ̅ⲡϫⲟⲉⲓⲥ. ⲉⲓⲧⲉ ϩⲙ̅ϩⲁⲗ ⲉⲓⲧⲉ ⲣⲙ̅ϩⲉ.
9 எஜமான்களே, உங்கள் அடிமைகளை நீங்களும் அப்படியே நடத்துங்கள். அவர்களை பயமுறுத்தவேண்டாம். நீங்களும் உங்கள் அடிமைகளும் பரலோகத்திலுள்ள ஒரே எஜமானுக்கே உரியவர்கள் என்பதையும், அவர் பாரபட்சம் காட்டுகிறவர் அல்ல என்பதையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
ⲑ̅ⲛ̅ϫⲓⲥⲟⲟⲩⲉ ⲁⲣⲓⲣⲉ ⲛⲁⲩ ϩⲱⲧⲧⲏⲩⲧⲛ̅ ⲛ̅ⲧⲉⲉⲓϩⲉ. ⲛ̅ⲧⲉⲧⲛ̅ⲕⲱ ⲛ̅ⲥⲱⲧⲛ̅ ⲙ̅ⲡⲉⲧⲛ̅ϭⲱⲛⲧ̅. ⲉⲧⲉⲧⲛ̅ⲥⲟⲟⲩⲛ ϫⲉ ⲡⲉⲧⲛ̅ϫⲟⲉⲓⲥ ⲙⲛ̅ⲡⲱⲟⲩ ϩⲛ̅ⲙ̅ⲡⲏⲩⲉ. ⲁⲩⲱ ⲙ̅ⲛ̅ⲙⲛ̅ⲧⲣⲉϥϫⲓϩⲟ ϩⲁϩⲧⲏϥ·
10 இறுதியாக, கர்த்தரிலும், அவருடைய பெரிதான வல்லமையில் பெலப்பட்டிருங்கள்.
ⲓ̅ϫⲓⲛⲧⲉⲛⲟⲩ ϭⲙ̅ϭⲟⲙ ϩⲙ̅ⲡϫⲟⲉⲓⲥ. ⲁⲩⲱ ϩⲙ̅ⲡⲁⲙⲁϩⲧⲉ ⲛ̅ⲧⲉϥϭⲟⲙ.
11 நீங்கள் பிசாசின் எல்லாவித தந்திரங்களை எதிர்த்து நிற்கக் கூடியவர்களாய் இருக்கும்படி, இறைவனின் முழுப் போர்க்கவசத்தையும் அணிந்துகொள்ளுங்கள்.
ⲓ̅ⲁ̅ϯ ϩⲓⲱⲧⲧⲏⲩⲧⲛ̅ ⲛ̅ⲧⲡⲁⲛϩⲟⲡⲗⲓⲁ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ ϫⲉ ⲉⲧⲉⲧⲛⲉϣϭⲙ̅ϭⲟⲙ ⲉⲁϩⲉⲣⲁⲧⲧⲏⲩⲧⲛ̅ ⲛ̅ⲛⲁϩⲣⲛ̅ⲛ̅ⲕⲟⲧⲥ̅ ⲙ̅ⲡⲇⲓⲁⲃⲟⲗⲟⲥ.
12 ஏனெனில், நமது போராட்டம் மனித எதிரிகளோடு அல்ல. அது தீமையான ஆட்சியாளர்களுக்கும், காணக்கூடாத உலகத்தின் அதிகாரங்களுக்கும், இந்த இருள் உலகில் ஆட்சிசெய்யும் வல்லமைகளுக்கும் எதிரானதுமாய் இருக்கிறது; அது வான மண்டலங்களிலுள்ள தீய ஆவிகளின் சேனைகளுக்கும் எதிரானதாயிருக்கிறது. (aiōn g165)
ⲓ̅ⲃ̅ϫⲉ ⲉⲣⲉⲡⲉⲛⲙⲓϣⲉ ϣⲟⲟⲡ ⲛⲁⲛ ⲁⲛ ⲟⲩⲃⲉⲥⲛⲟϥ ϩⲓⲥⲁⲣⲝ̅. ⲁⲗⲗⲁ ⲟⲩⲃⲉⲛⲁⲣⲭⲏ ⲟⲩⲃⲉⲛⲉⲝⲟⲩⲥⲓⲁ. ⲟⲩⲃⲉⲛ̅ⲕⲟⲥⲙⲟⲕⲣⲁⲧⲱⲣ ⲛ̅ⲧⲉⲡⲉⲉⲓⲕⲁⲕⲉ. ⲟⲩⲃⲉⲛⲉⲡⲛⲉⲩⲙⲁⲧⲓⲕⲟⲛ ⲛ̅ⲧⲡⲟⲛⲏⲣⲓⲁ ⲉⲧϩⲛ̅ⲙ̅ⲡⲏⲩⲉ· (aiōn g165)
13 எனவே, தீமையின் நாள் வரும்போது, எதிரியின் தாக்குதலை எதிர்த்து நிற்கவும், எல்லாவற்றையும் செய்துமுடித்த பின்பு, வெற்றி பெற்று உறுதியுடன் நிலைநிற்கவும், இறைவனின் முழுப் போர்கவசத்தையும் அணிந்துகொள்ளுங்கள்.
ⲓ̅ⲅ̅ⲉⲧⲃⲉⲡⲁⲓ̈ ϫⲓ ⲛⲏⲧⲛ̅ ⲛ̅ⲧⲡⲁⲛϩⲟⲡⲗⲓⲁ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ ϫⲉ ⲉⲧⲉⲧⲛⲉϣϭⲙ̅ϭⲟⲙ ⲉⲁϩⲉⲣⲁⲧⲧⲏⲩⲧⲛ̅ ϩⲙ̅ⲡⲉϩⲟⲟⲩ ⲉⲑⲟⲟⲩ. ⲁⲩⲱ ⲉⲁⲧⲉⲧⲛ̅ϫⲉⲕϩⲱⲃ ⲛⲓⲙ ⲉⲃⲟⲗ ⲛ̅ⲧⲉⲧⲛ̅ⲧⲁϫⲣⲟ.
14 உங்கள் இடுப்பைச் சுற்றி, சத்தியம் என்னும் இடைக்கச்சையைக் கட்டிக்கொண்டு. நீதி ஆகிய மார்கவசத்தை அணிந்துகொண்டு, உறுதியாய் நில்லுங்கள்.
ⲓ̅ⲇ̅ⲁϩⲉⲣⲁⲧⲧⲏⲩⲧⲛ̅ ϭⲉ ⲉⲧⲉⲧⲛ̅ⲙⲏⲣ ⲉⲧⲉⲧⲛ̅ϯⲡⲉ ϩⲛ̅ⲧⲙⲉ. ⲉⲁⲧⲉⲧⲛ̅ϯ ϩⲓⲱⲧⲧⲏⲩⲧⲛ̅ ⲙ̅ⲡϩⲱⲕ ⲛ̅ⲧⲇⲓⲕⲁⲓⲟⲥⲩⲛⲏ.
15 சமாதானத்தின் நற்செய்தியை அறிவிக்கும் ஆயத்தத்தை உங்கள் பாதரட்சைகளாகப் போட்டுக்கொள்ளுங்கள்.
ⲓ̅ⲉ̅ⲉⲁⲧⲉⲧⲛ̅ⲱⲧϩ̅ ⲛ̅ⲛⲉⲧⲛ̅ⲟⲩⲉⲣⲏⲧⲉ ϩⲙ̅ⲡⲥⲟⲃⲧⲉ ⲙ̅ⲡⲉⲩⲁⲅⲅⲉⲗⲓⲟⲛ ⲛ̅ϯⲣⲏⲛⲏ
16 இவை எல்லாவற்றிலும், விசுவாசம் என்னும் கேடயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதைக்கொண்டே, தீமைசெய்பவன் எய்துவிடும் நெருப்பு அம்புகளை உங்களால் அணைத்துவிட முடியும்.
ⲓ̅ⲋ̅ϩⲛ̅ϩⲱⲃ ⲛⲓⲙ. ⲉⲁⲧⲉⲧⲛ̅ϫⲓ ⲙ̅ⲡⲉⲑⲩⲣⲱⲛ ⲛ̅ⲧⲡⲓⲥⲧⲓⲥ. ⲡⲁⲓ̈ ⲉⲧⲉⲧⲛⲁϣϭⲙ̅ϭⲟⲙ ⲛ̅ϩⲏⲧϥ̅ ⲉⲉϣⲙ̅ⲥⲟⲧⲉ ⲛⲓⲙ ⲙ̅ⲡ̅ⲡⲟⲛⲏⲣⲟⲥ ⲉⲧϫⲉⲣⲟ.
17 இரட்சிப்பைத் தலைக்கவசமாக அணிந்துகொள்ளுங்கள். இறைவனுடைய வார்த்தையாகிய பரிசுத்த ஆவியானவரின் வாளை எடுத்துக்கொள்ளுங்கள்.
ⲓ̅ⲍ̅ⲁⲩⲱ ⲛ̅ⲧⲉⲧⲛ̅ϫⲓ ⲛ̅ⲧⲡⲉⲣⲓⲕⲉⲫⲁⲗⲁⲓⲁ ⲙ̅ⲡⲟⲩϫⲁⲓ̈. ⲁⲩⲱ ⲧⲥⲏϥⲉ ⲙ̅ⲡⲉⲡ̅ⲛ̅ⲁ̅ ⲉⲧⲉⲡⲁⲓ̈ ⲡⲉ ⲡϣⲁϫⲉ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ.
18 எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எல்லா விதமான வேண்டுதல்களையும் விண்ணப்பங்களையும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையோடு மன்றாடுங்கள். இதை மனதில்கொண்டு, விழிப்புணர்வுள்ளவர்களாய் இருங்கள். எல்லாப் பரிசுத்தவான்களுக்காகவும் எப்பொழுதும் மன்றாடுங்கள்.
ⲓ̅ⲏ̅ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲛ̅ϣⲗⲏⲗ ⲛⲓⲙ. ϩⲓⲥⲟⲡⲥ̅. ⲉⲧⲉⲧⲛ̅ϣⲗⲏⲗ ⲛ̅ⲟⲩⲟⲉⲓϣ ⲛⲓⲙ ϩⲙ̅ⲡⲉⲡ̅ⲛ̅ⲁ̅ ⲁⲩⲱ ⲉⲧⲉⲧⲛ̅ⲟ ⲛ̅ⲟⲩϣⲏ ⲛ̅ⲣⲟⲉⲓⲥ ⲉⲡⲁⲓ̈ ϩⲛ̅ⲥⲣ̅ϥⲉ ⲛⲓⲙ. ⲙⲛ̅ⲥⲟⲡⲥ̅ ⲛⲓⲙ ϩⲁⲛⲉⲧⲟⲩⲁⲁⲃ ⲧⲏⲣⲟⲩ.
19 எனக்காகவும் மன்றாடுங்கள், நான் செய்தி கொடுக்கும் போதெல்லாம் இறைவன் எனக்கு நற்செய்தியின் இரகசியத்தை பயமின்றி எடுத்துக்கூற வார்த்தைகளைக் கொடுக்கும்படி மன்றாடுங்கள்.
ⲓ̅ⲑ̅ⲁⲩⲱ ϩⲁⲣⲟⲓ̈ ϫⲉ ⲉⲩⲉϯ ⲛⲁⲓ̈ ⲙ̅ⲡϣⲁϫⲉ ϩⲙ̅ⲡⲟⲩⲱⲛ ⲛ̅ⲣⲱⲓ̈. ⲉⲟⲩⲱⲛϩ̅ ⲉⲃⲟⲗ ⲙ̅ⲡⲙⲩⲥⲧⲏⲣⲓⲟⲛ ⲙ̅ⲡⲉⲩⲁⲅⲅⲉⲗⲓⲟⲛ ϩⲛ̅ⲟⲩⲡⲁⲣϩⲏⲥⲓⲁ.
20 அந்த நற்செய்திக்காகவே நான் இப்பொழுது விலங்கிடப்பட்ட ஒரு தூதுவனாக இருக்கிறேன். நான் பேசவேண்டிய விதமாய் பயமின்றி அறிவிக்க மன்றாடுங்கள்.
ⲕ̅ⲡⲁⲓ̈ ⲉϯⲡⲣⲉⲥⲃⲉⲩⲉ ϩⲁⲣⲟϥ ϩⲛ̅ⲙ̅ⲙⲣ̅ⲣⲉ. ϫⲉ ⲉⲓ̈ⲉⲡⲁⲣϩⲏⲥⲓⲁⲍⲉ ⲙ̅ⲙⲟⲓ̈ ⲛ̅ϩⲏⲧϥ̅ ⲛ̅ⲑⲉ ⲉⲧϣⲉ ⲉⲧⲣⲁϫⲟⲟϥ.
21 நமது அன்பு சகோதரனும், கர்த்தருடைய ஊழியத்தில் உண்மையுள்ள ஊழியக்காரனுமான தீகிக்கு என்னைப்பற்றிய எல்லாவற்றையும் உங்களுக்குத் தெரிவிப்பான். அப்பொழுது நான் எப்படியிருக்கிறேன் என்றும், என்ன செய்கிறேன் என்றும் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
ⲕ̅ⲁ̅ϫⲉⲕⲁⲁⲥ ⲇⲉ ⲉⲧⲉⲧⲛⲉⲉⲓⲙⲉ ϩⲱⲧⲧⲏⲩⲧⲛ̅ ⲉⲡⲁⲟⲩⲱ ϫⲉ ⲉⲓ̈ⲣ̅ⲟⲩ. ϥⲛⲁⲟⲩⲱⲛϩ̅ (ⲛ̅)ϩⲱⲃ ⲛⲓⲙ ⲉⲣⲱⲧⲛ̅ ⲛ̅ϭⲓⲧⲩⲭⲓⲕⲟⲥ ⲡⲙⲉⲣⲓⲧ ⲛ̅ⲥⲟⲛ. ⲁⲩⲱ ⲛ̅ⲇⲓⲁⲕⲟⲛⲟⲥ. ⲙ̅ⲡⲓⲥⲧⲟⲥ ϩⲙ̅ⲡϫⲟⲉⲓⲥ.
22 நாங்கள் எல்லோரும் எப்படியிருக்கிறோம் என்பதை அவன் உங்களுக்குச் சொல்லி, உங்களை மனதளவில் உற்சாகப்படுத்தும் நோக்கத்திற்காகவேதான், நான் அவனை உங்களிடம் அனுப்புகிறேன்.
ⲕ̅ⲃ̅ⲡⲁⲓ̈ ⲉⲛⲧⲁⲓ̈ⲧⲛ̅ⲛⲟⲟⲩϥ ϣⲁⲣⲱⲧⲛ̅ ⲉⲡⲉⲉⲓϩⲱⲃ. ϫⲉ ⲉⲧⲉⲧⲛⲉⲉⲓⲙⲉ ⲉⲡⲉⲛⲟⲩⲱ ⲁⲩⲱ ⲛϥ̅ⲡⲁⲣⲁⲕⲁⲗⲉⲓ ⲛ̅ⲛⲉⲧⲛ̅ϩⲏⲧ·
23 பிதாவாகிய இறைவனிடமும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிடமும் இருந்து, எல்லாச் சகோதரருக்கும் சமாதானமும், விசுவாசத்துடன் இணைந்த அன்பும் இருப்பதாக.
ⲕ̅ⲅ̅ϯⲣⲏⲛⲏ ⲛ̅ⲛⲉⲥⲛⲏⲩ. ⲁⲩⲱ ⲧⲁⲅⲁⲡⲏ ⲙⲛ̅ⲧⲡⲓⲥⲧⲓⲥ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ ⲡⲓⲱⲧ. ⲙⲛ̅ⲡϫⲟⲉⲓⲥ ⲓ̅ⲥ̅ ⲡⲉⲭ̅ⲥ̅.
24 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அழிந்துபோகாத அன்புடன் நேசிக்கும் அனைவருடனும் கிருபை இருப்பதாக.
ⲕ̅ⲇ̅ⲧⲉⲭⲁⲣⲓⲥ ⲙⲛ̅ⲟⲩⲟⲛ ⲛⲓⲙ ⲉⲧⲙⲉ ⲙ̅ⲡⲉⲛϫⲟⲉⲓⲥ ⲓ̅ⲥ̅ ⲡⲉⲭ̅ⲥ̅ ϩⲛ̅ⲟⲩⲙⲛ̅ⲧⲁⲧⲧⲁⲕⲟ· ·ⲧⲉⲡⲣⲟⲥ· ·ⲉⲫⲉⲥⲓⲟⲩⲥ·

< எபேசியர் 6 >