< உபாகமம் 8 >

1 இன்று நான் உங்களுக்குக் கொடுக்கும் ஒவ்வொரு கட்டளையையும் பின்பற்றக் கவனமாய் இருங்கள், அப்பொழுது நீங்கள் வாழ்ந்து பெருகுவீர்கள். உங்கள் முற்பிதாக்களுக்கு யெகோவா ஆணையிட்டு வாக்குக்கொடுத்த நாட்டிற்குள்போய் அதை உரிமையாக்கிக்கொள்வீர்கள்.
Wszystkich przykazań, które ci dziś nakazuję, będziecie przestrzegać i wypełniać [je], abyście żyli, rozmnażali się, weszli i posiedli ziemię, którą PAN przysiągł waszym ojcom.
2 உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை சிறுமைப்படுத்தி, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்வீர்களோ கைக்கொள்ளமாட்டீர்களோ என உங்களைச் சோதித்து, உங்கள் இருதயத்தில் உள்ளதை அறியும்படிக்கும், இந்த நாற்பது வருடங்களாக பாலைவனத்தில் வழியெங்கும் உங்களை எப்படி வழிநடத்தினார் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள்.
Pamiętaj całą drogę, którą prowadził cię PAN, twój Bóg, przez te czterdzieści lat po pustyni, by cię ukorzyć i doświadczać, aby poznać, co jest w twoim sercu, czy będziesz przestrzegał jego przykazań, czy nie.
3 அவர் உங்களை சிறுமைப்படுத்தி, உங்களை பசியடையச்செய்து, பின்பு உங்கள் முற்பிதாக்கள் அறியாதிருந்த மன்னாவை உங்களுக்கு உண்ணக்கொடுத்தார். மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல, யெகோவாவினுடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையினாலும் வாழ்வான் என்று உங்களுக்குப் போதிக்கும்படியே இப்படிச் செய்தார்.
Upokorzył cię, dawał ci odczuć głód i karmił cię manną, której nie znałeś ani ty, ani twoi ojcowie, aby cię nauczyć, że nie samym chlebem człowiek żyje, ale że człowiek żyje każdym słowem, które wychodzi z ust PANA.
4 இந்த நாற்பது வருட காலத்தில் உங்கள் உடைகள் பழையதாகிக் கிழியவுமில்லை, உங்கள் கால்கள் வீங்கவுமில்லை.
Twoja odzież nie zniszczyła się na tobie i twoja noga nie opuchła [przez] te czterdzieści lat.
5 ஒருவன் தன் மகனைக் கண்டித்து நடத்துவதுபோல, உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களைக் கண்டித்து நடத்துகிறார் என்பதை உங்கள் இருதயத்தில் அறிந்துகொள்ளுங்கள்.
Rozważ więc w swym sercu, że jak człowiek karze swego syna, [tak] PAN, twój Bóg, karze ciebie.
6 உங்கள் இறைவனாகிய யெகோவாவின் வழிகளில் நடந்து அவரிடத்தில் பயபக்தியாயிருந்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுங்கள்.
Dlatego przestrzegaj przykazań PANA, swego Boga, abyś chodził jego drogami i bał się go.
7 ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை வளமான நாட்டிற்குக் கொண்டுவரப்போகிறார். அது ஆறுகளும் நீரோடைகளும் ஏரிகளும் நிறைந்து பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலும் பாய்ந்தோடும் நாடு.
PAN, twój Bóg, prowadzi cię bowiem do ziemi dobrej, [do] ziemi potoków wód, źródeł i głębin, wytryskających w dolinach i górach;
8 அது கோதுமையும் வாற்கோதுமையும், திராட்சைத் தோட்டங்களும், அத்திமரங்களும், மாதுளம்பழங்களும், ஒலிவ எண்ணெயும், தேனும் நிறைந்த நாடு.
[Do] ziemi pszenicy i jęczmienia, winorośli, figowców i drzew granatu; [do] ziemi oliwy i miodu;
9 அது உணவு குறைவுபடாத நாடு, அங்கு உங்களுக்குக் குறைவே இருக்காது; அந்த நாட்டின் கற்பாறைகள் இரும்பாய் இருக்கின்றன. அதன் மலைகளில் இருந்து செம்பைத் தோண்டி எடுக்கலாம்.
[Do] ziemi, w której będziesz jeść chleb, nie odczuwając niedostatku; w której niczego ci nie zabraknie; do ziemi, której kamienie są żelazem, a z jej gór będziesz wydobywać miedź.
10 நீங்கள் சாப்பிட்டுத் திருப்தியாயிருக்கும்போது, உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுத்த அந்த வளமான நாட்டிற்காக அவரைத் துதியுங்கள்.
Gdy będziesz jadł do syta, będziesz błogosławił PANA, swego Boga, za dobrą ziemię, którą ci dał.
11 நீங்கள் இறைவனை மறந்து நான் இன்று உங்களுக்குக் கொடுக்கும் உங்கள் இறைவனாகிய யெகோவாவினுடைய கட்டளைகளையும், சட்டங்களையும், விதிமுறைகளையும் கைக்கொள்ளத் தவறாதபடி எச்சரிக்கையாயிருங்கள்.
Strzeż się, byś nie zapomniał PANA, swego Boga, i nie zaniedbał jego przykazań, jego praw i jego nakazów, które ci dziś nakazuję;
12 ஏனெனில் நீங்கள் சாப்பிட்டுத் திருப்தியாயிருக்கும்போதும், நல்ல வீடுகளைக் கட்டி, அங்கு குடியிருக்கும்போதும்,
Aby – gdy najesz się do syta, pobudujesz piękne domy i zamieszkasz w nich;
13 உங்கள் மாட்டு மந்தைகளும், உங்கள் ஆட்டு மந்தைகளும் பெருகும்போதும், உங்கள் வெள்ளியும் தங்கமும் அதிகரித்து, உங்களிடம் உள்ளவைகள் எல்லாம் பெருகும்போதும் கவனமாயிருக்க வேண்டும்.
I kiedy twoje bydło i owce rozmnożą się, przybędzie ci srebra i złota oraz wszystko, co będziesz miał, powiększy się;
14 அப்பொழுது உங்கள் இருதயங்கள் பெருமையடைந்து, அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து உங்களை மீட்டுக் கொண்டுவந்த உங்கள் இறைவனாகிய யெகோவாவை நீங்கள் மறந்துவிடவேண்டாம்.
Twoje serce nie uniosło się i abyś nie zapomniał PANA, swego Boga, który cię wyprowadził z ziemi Egiptu, z domu niewoli;
15 ஏனெனில் அவரே உங்களை விஷப்பாம்புகளும் தேள்களும் நிறைந்த, விசாலமும் பயங்கரமுமான, தண்ணீரில்லாத அந்த வறண்ட நிலமாகிய கடினமான பாலைவனத்தின் வழியாக வழிநடத்தி வந்தார். அவர் உங்களுக்குக் கற்பாறையிலிருந்து தண்ணீர் கொடுத்தார்.
Który cię przeprowadził przez tę wielką i straszną pustynię, [gdzie były] węże jadowite i skorpiony, [przez] suchą [ziemię], bez wody, i wydobył ci wodę z krzemiennej skały;
16 உங்கள் முற்பிதாக்கள் அறிந்திராத மன்னாவை அவர் உங்களுக்குப் பாலைவனத்தில் சாப்பிடக் கொடுத்தார். முடிவில் எல்லாம் உங்களுக்கு நலமாய் இருக்கும்படியாக உங்களைத் தாழ்மைப்படுத்தி உங்களைப் பரீட்சிப்பதற்காகவே அவர் இப்படிச் செய்தார்.
Który cię karmił na pustyni manną, której nie znali twoi ojcowie, aby cię ukorzyć i doświadczać, by w przyszłości wyświadczyć ci dobro;
17 நீங்கள், “எங்கள் வல்லமையும், எங்கள் கையின் வலிமையுமே இந்த செல்வத்தை எங்களுக்குச் சம்பாதித்தன” என்று எண்ணலாம்.
Abyś nie mówił w swym sercu: Moja moc i siła mojej ręki zdobyły mi to bogactwo;
18 ஆனால் நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவை நினைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், அவரே இந்த செல்வத்தைச் சம்பாதிக்கும் ஆற்றலை உங்களுக்குக் கொடுக்கிறார்; அவர் இன்றிருப்பதுபோலவே உங்கள் முற்பிதாக்களுக்கு ஆணையிட்ட தமது உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறவர்.
Ale pamiętaj PANA, swego Boga, gdyż to on daje ci siłę do zdobywania bogactwa, aby potwierdzić swoje przymierze, które poprzysiągł twoim ojcom, jak się to dziś okazuje.
19 நீங்களோ எப்பொழுதாவது உங்கள் இறைவனாகிய யெகோவாவை மறந்து, வேறு தெய்வங்களைப் பின்பற்றி அவைகளை வழிபட்டு வணங்குவீர்களானால், நிச்சயமாகவே நீங்கள் அழிக்கப்படுவீர்கள் என்று நான் இன்று உங்களுக்கு விரோதமாய் சாட்சி கூறுகிறேன்.
Ale jeśli całkiem zapomnisz PANA, swego Boga, i pójdziesz za innymi bogami, będziesz im służył i oddawał pokłon, to oświadczam wam dziś, że na pewno zginiecie.
20 உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு நீங்கள் கீழ்ப்படியாதபடியால், உங்களுக்கு முன்பாக யெகோவா அழித்த நாடுகளைப்போலவே நீங்களும் அழிக்கப்படுவீர்கள்.
Jak narody, które PAN niszczy przed wami, tak zginiecie, ponieważ nie słuchaliście głosu PANA, waszego Boga.

< உபாகமம் 8 >