< உபாகமம் 4 >
1 இஸ்ரயேலரே, நான் உங்களுக்குப் போதிக்கும் விதிமுறைகளையும் சட்டங்களையும் கேளுங்கள். அவற்றைக் கைக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் வாழ்ந்திருந்து, உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் நாட்டிற்குள்போய், அதை உங்களுக்கு உரிமையாக்கிக்கொள்வீர்கள்.
이스라엘아! 이제 내가 너희에게 가르치는 규례와 법도를 듣고 준행하라! 그리하면 너희가 살 것이요 너희의 열조의 하나님 여호와께서 너희에게 주시는 땅에 들어가서 그것을 얻게 되리라
2 நான் கட்டளையிடும் இவற்றுடன் ஒன்றையும் கூட்டவும் வேண்டாம், ஒன்றையும் குறைக்கவும் வேண்டாம். ஆனால் நான் உங்களுக்குக் கொடுக்கும் உங்கள் இறைவனாகிய யெகோவாவின் கட்டளைகளைக் கைக்கொள்ளுங்கள்.
내가 너희에게 명하는 말을 너희는 가감하지 말고 내가 너희에게 명하는 너희 하나님 여호와의 명령을 지키라!
3 பாகால் பேயோரில் யெகோவா செய்தவற்றை உங்கள் கண்களாலேயே கண்டீர்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் மத்தியில் பேயோரில் இருந்த பாகாலைப் பின்பற்றிய எல்லோரையும் அழித்துப்போட்டார்.
여호와께서 바알브올의 일을 인하여 행하신 바를 너희가 목도하였거니와 바알브올을 좇은 모든 사람을 너의 하나님 여호와께서 너의 중에서 진멸하셨으되
4 ஆனால் உங்கள் இறைவனாகிய யெகோவாவை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட நீங்கள் எல்லோரும் இன்றுவரை இன்னும் உயிரோடிருக்கிறீர்கள்.
오직! 너희의 하나님 여호와께 붙어 떠나지 않은 너희는 오늘까지 다 생존하였느니라
5 பாருங்கள், என் இறைவனாகிய யெகோவா எனக்குக் கட்டளையிட்டபடியே, விதிமுறைகளையும் சட்டங்களையும் நான் உங்களுக்குப் போதித்திருக்கிறேன். ஆகவே நீங்கள் உரிமையாக்கப்போகும் நாட்டிலே அவற்றைப் பின்பற்றுங்கள்.
내가 나의 하나님 여호와의 명하신 대로 규례와 법도를 너희에게 가르쳤나니 이는 너희로 들어가서 기업으로 얻을 땅에서 그대로 행하게 하려 함인즉
6 அவற்றை நீங்கள் கவனமாய்க் கைக்கொள்ளுங்கள்; ஏனெனில் இது உங்கள் ஞானத்தையும் விவேகத்தையும் பிற நாடுகளுக்குக் காண்பிக்கும். அவர்கள் இக்கட்டளைகள் எல்லாவற்றையும் பற்றிக் கேள்விப்பட்டு, “நிச்சயமாகவே இந்தப் பெரிய நாடு ஞானமும் விவேகமும் உள்ள மக்களைக் கொண்டது” என சொல்வார்கள்.
너희는 지켜 행하라! 그리함은 열국 앞에 너희의 지혜요 너희의 지식이라 그들이 이 모든 규례를 듣고 이르기를 이 큰 나라 사람은 과연 지혜와 지식이 있는 백성이로다 하리라
7 நமது இறைவனாகிய யெகோவாவை நாம் கூப்பிடுகிறபோதெல்லாம் அவர் நமக்கு அருகில் இருப்பதுபோல, தங்களுக்கு அருகே வரத்தக்க தெய்வத்தைக்கொண்ட வேறு நாடு எது?
우리 하나님 여호와께서 우리가 그에게 기도할 때마다 우리에게 가까이 하심과 같이 그 신의 가까이 함을 얻은 나라가 어디 있느냐?
8 இன்று நான் உங்களுக்கு முன்பாக வைக்கப்போகிற, சட்டங்களை போன்ற நியாயமான விதிமுறைகளையும், நீதிநெறிகளையும் பெற்றிருக்கிற வேறு பெரிய நாடு எது?
오늘 내가 너희에게 선포하는 이 율법과 같이 그 규례와 법도가 공의로운 큰 나라가 어디 있느냐?
9 எச்சரிக்கையாயிருங்கள், உங்கள் கண்கள் கண்ட காரியங்களை மறவாமலும், நீங்கள் உயிர்வாழும் நாளெல்லாம் அவற்றை உங்கள் இருதயத்தில் காத்துக்கொள்ள கவனமாயிருங்கள். அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கும் உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் போதியுங்கள்.
오직 너는 스스로 삼가며 네 마음을 힘써 지키라 두렵건대 네가 그 목도한 일을 잊어버릴까 하노라 두렵건대 네 생존하는 날 동안에 그 일들이 네 마음 속에서 떠날까 하노라 너는 그 일들을 네 아들들과 네 손자들에게 알게 하라
10 ஓரேபிலே உங்கள் இறைவனாகிய யெகோவா முன்பாக நீங்கள் நின்ற அந்த நாளை நினைவுகூருங்கள். அப்பொழுது யெகோவா என்னிடம், “என் வார்த்தைகளைக் கேட்கும்படி மக்களை எனக்கு முன்பாக கூடிவரச்செய். அவர்கள் அந்த நாட்டில் வாழும் காலம் முழுவதும் எனக்குப் பயபக்தியாய் இருக்கக் கற்றுக்கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்கும் போதிக்கட்டும்” என்றார்.
네가 호렙산에서 네 하나님 여호와 앞에 섰던 날에 여호와께서 내게 이르시기를 나를 위하여 백성을 모으라 내가 그들에게 내 말을 들려서 그들로 세상에 사는 날 동안 나 경외함을 배우게 하며 그 자녀에게 가르치게 하려 하노라 하시매
11 நீங்கள் அருகே வந்து மலையடிவாரத்தில் நின்றீர்கள். அப்பொழுது மலை நெருப்புப் பற்றி, அதன் ஜூவாலை வானமட்டும் எழும்ப, கார்மேகமும் காரிருளும் சூழ்ந்தன.
너희가 가까이 나아와서 산 아래 서니 그 산에 불이 붙어 화염이 충천하고 유암과 구름과 흑암이 덮였는데
12 பின்பு யெகோவா நெருப்பின் நடுவிலிருந்து உங்களுடன் பேசினார். நீங்கள் அவருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டீர்கள், ஆனால் ஒரு உருவத்தையும் காணவில்லை. குரல் மட்டுமே கேட்டது.
여호와께서 화염 중에서 너희에게 말씀하시되 음성 뿐이므로 너희가 그 말소리만 듣고 형상은 보지 못하였느니라
13 அவர் பத்துக் கட்டளைகளான தமது உடன்படிக்கையை உங்களுக்கு அறிவித்து, நீங்கள் அவற்றைப் பின்பற்றும்படி உங்களுக்குக் கட்டளையிட்டார். பின்பு அவர் அவற்றை இரண்டு கற்பலகைகளில் எழுதினார்.
여호와께서 그 언약을 너희에게 반포하시고 너희로 지키라 명하셨으니 곧 십계명이며 두 돌판에 친히 쓰신 것이라
14 நீங்கள் யோர்தானைக் கடந்து உரிமையாக்கப்போகும் நாட்டில் நீங்கள் பின்பற்றவேண்டிய விதிமுறைகளையும், சட்டங்களையும் உங்களுக்குப் போதிக்கும்படியாக அக்காலத்தில் யெகோவா எனக்குக் கட்டளையிட்டார்.
그 때에 여호와께서 내게 명하사 너희에게 규례와 법도를 교훈하게 하셨나니 이는 너희로 건너가서 얻을 땅에서 행하게 하심이니라
15 யெகோவா ஓரேப் மலையில் நெருப்பின் நடுவிலிருந்து உங்களுடன் பேசிய அந்த நாளிலே, நீங்கள் எந்தவித ஒரு உருவத்தையுமே காணவில்லை. ஆகையால் உங்களைக்குறித்து மிகக் கவனமாயிருங்கள்.
여호와께서 호렙산 화염 중에서 너희에게 말씀하시던 날에 너희가 아무 형상도 보지 못하였은즉 너희는 깊이 삼가라!
16 நீங்கள் சீர்கெட்டவர்களாகி உங்களுக்காக ஒரு விக்கிரகத்தையும் செய்யவேண்டாம். ஒரு ஆணின் உருவத்திலோ, பெண்ணின் உருவத்திலோ,
두렵건대 스스로 부패하여 자기를 위하여 아무 형상대로든지 우상을 새겨 만들되 남자의 형상이라든지, 여자의 형상이라든지,
17 அல்லது பூமியிலுள்ள எந்தவொரு மிருகத்தின் உருவத்திலோ, ஆகாயத்தில் பறக்கும் எந்தவொரு பறவையின் உருவத்திலோ,
땅 위에 있는 아무 짐승의 형상이라든지, 하늘에 나는 아무 새의 형상이라든지,
18 நிலத்தில் ஊர்ந்து செல்லும் எந்தவொரு உயிரினத்தின் உருவத்திலோ, கீழே தண்ணீரில் வாழும் எந்தவொரு மச்சத்தின் உருவத்திலோ எந்தவொரு உருவச்சிலையையும் செய்யவேண்டாம்.
땅 위에 기는 아무 곤충의 형상이라든지, 땅 아래 물 속에 있는 아무 어족(魚族)의 형상이라든지 만들까 하노라
19 நீங்கள் ஆகாயத்தைப் பார்த்து, வானத்தில் அணிவகுத்திருக்கிற சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் காணும்போது, அவற்றை வணங்கும்படி அவற்றால் கவரப்படவேண்டாம். உங்கள் இறைவனாகிய யெகோவா அவற்றை வானத்தின் கீழுள்ள எல்லா நாடுகளுக்குமென வைத்திருக்கிறபடியால், நீங்கள் அவற்றை வணங்கவேண்டாம்.
또 두렵건대 네가 하늘을 향하여 눈을 들어 일월 성신 하늘 위의 군중 곧 너희 하나님 여호와께서 천하 만민을 위하여 분정하신 것을 보고 미혹하여 그것에 경배하며 섬길까 하노라
20 ஆனால் உங்களை, நீங்கள் இப்பொழுது இருக்கிறதுபோல, இரும்பு உருக்கும் சூளையான எகிப்திலிருந்து யெகோவா தமது உரிமைச்சொத்தான மக்களாய் இருக்கும்படி வெளியே கொண்டுவந்திருக்கிறார்.
여호와께서 너희를 택하시고 너희를 쇠풀무 곧 애굽에서 인도하여 내사 자기 기업의 백성을 삼으신 것이 오늘과 같아도
21 உங்கள் நிமித்தம் யெகோவா என்னுடன் கோபங்கொண்டார். அதனால் யோர்தானைக் கடந்து, உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு உரிமையாகக் கொடுக்கிற அந்த நாட்டிற்கு நான் போவதில்லை என எனக்குக் கடுமையாய் ஆணையிட்டுக் கூறினார்.
여호와께서 너희로 인하여 내게 진노하사 나로 요단을 건너지 못하며 네 하나님 여호와께서 네게 기업으로 주신 그 아름다운 땅에 들어가지 못하게 하리라고 맹세하셨은즉
22 ஆகவே, நான் இந்த நாட்டிலேயே இறப்பேன்; யோர்தானைக் கடக்கமாட்டேன். ஆனால் நீங்கள் கடந்துபோய், அந்த நல்ல நாட்டை உரிமையாக்கிக்கொள்வீர்கள்.
나는 이 땅에서 죽고 요단을 건너지 못하려니와 너희는 건너가서 그 아름다운 땅을 얻으리니
23 உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுடன் செய்த அவருடைய உடன்படிக்கையை மறவாதபடி நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள்; உங்கள் இறைவனாகிய யெகோவா தடைசெய்திருக்கிற எந்த உருவத்திலும் உங்களுக்காக விக்கிரகங்களைச் செய்யவேண்டாம்.
너희는 스스로 삼가서 너희 하나님 여호와께서 너희와 세우신 언약을 잊어버려서 네 하나님 여호와께서 금하신 아무 형상의 우상이든지 조각하지 말라
24 ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவா சுட்டெரிக்கும் நெருப்பு, அவர் தமக்குரிய வழிபாட்டைக் குறித்து வைராக்கியமுள்ள இறைவனாயும் இருக்கிறார்.
네 하나님 여호와는 소멸하는 불이시요! 질투하는 하나님이시니라!
25 வருங்காலத்தில் நீங்கள் பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் பெற்று அந்த நாட்டில் அதிக நாட்கள் வாழ்வீர்கள். அப்போது நீங்கள் சீர்கெட்டு எந்தவித விக்கிரகத்தையும் உருவாக்கி உங்கள் இறைவனாகிய யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்து, கோபமூட்டினால்,
네가 그 땅에서 아들을 낳고 손자를 얻으며 오래 살 때에 만일 스스로 부패하여 무슨 형상의 우상이든지 조각하여 네 하나님 여호와 앞에 악을 행함으로 그의 노를 격발하면
26 நீங்கள் யோர்தானைக் கடந்து உரிமையாக்கிக்கொள்ளப்போகும் நாட்டிலே மிகவிரைவில் அழிந்துபோவீர்கள் என்பதற்கு வானத்தையும் பூமியையும் உங்களுக்கு விரோதமான சாட்சிகளாக வைக்கிறேன். நீங்கள் அங்கு நீண்டகாலம் வாழமாட்டீர்கள், நிச்சயமாய் அழிக்கப்படுவீர்கள்.
내가 오늘날 천지를 불러 증거를 삼노니 너희가 요단을 건너가서 얻는 땅에서 속히 망할 것이라 너희가 거기서 너희 날이 길지 못하고 전멸될 것이니라
27 யெகோவா உங்களை மக்கள் கூட்டங்களுக்குள்ளே சிதறப்பண்ணுவார். உங்களில் சிலர் மட்டுமே யெகோவா உங்களைத் துரத்திவிடுகிற அந்த நாடுகளின் மத்தியில் தப்பியிருப்பீர்கள்.
여호와께서 너희를 열국 중에 흩으실 것이요 여호와께서 너희를 쫓아 보내실 그 열국 중에 너희의 남은 수가 많지 못할 것이며
28 அங்கே நீங்கள் மரத்தினாலும் கல்லினாலும் மனிதன் செய்த தெய்வங்களை வணங்குவீர்கள். அவற்றால் பார்க்கவோ, கேட்கவோ, உண்ணவோ, முகர்ந்தறியவோ முடியாது.
너희는 거기서 사람의 손으로 만든바 보지도 못하며 듣지도 못하며 먹지도 못하며 냄새도 맡지 못하는 목석의 신들을 섬기리라
29 ஆனால் அங்கிருந்தும் உங்கள் இறைவனாகிய யெகோவாவைத் தேடுவீர்கள்; உங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் நீங்கள் அவரைத் தேடினால் அவரைக் காண்பீர்கள்.
그러나 네가 거기서 네 하나님 여호와를 구하게 되리니 만일 마음을 다하고 성품을 다하여 그를 구하면 만나리라!
30 அக்காலங்களில் நீங்கள் துன்பப்பட இவைகளெல்லாம் உங்களுக்கு நிகழும். இவற்றின் பின்பு வரப்போகும் கடைசி நாட்களில் நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் திரும்பி அவருக்குக் கீழ்ப்படிவீர்கள்.
이 모든 일이 네게 임하여 환난을 당하다가 끝날에 네가 네 하나님 여호와께로 돌아와서 그 말씀을 청종하리니
31 ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவா இரக்கம் நிறைந்த இறைவனாய் இருக்கிறார்; அவர் உங்களைக் கைவிடவோ, அழிக்கவோமாட்டார். அவர் உங்களுடைய முற்பிதாக்களுக்கு ஆணையிட்டு உறுதிப்படுத்தி, அவர்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை மறக்கவுமாட்டார்.
네 하나님 여호와는 자비하신 하나님이심이라! 그가 너를 버리지 아니하시며 너를 멸하지 아니하시며 네 열조에게 맹세하신 언약을 잊지 아니하시리라
32 இறைவன் மனிதனைப் பூமியில் படைத்த நாள் முதல், உங்கள் காலத்திற்கு மிக முன்னதாக உள்ள அந்த பூர்வீக நாட்களைப்பற்றிக் கேட்டு அறியுங்கள். வானத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை கேளுங்கள். எங்கேயாவது இதுபோன்ற ஒரு பெரிய காரியம் நடந்திருக்கிறதோ? இதுபோன்ற எதையேனும் கேள்விப்பட்டதுண்டோ?
네가 있기 전 하나님이 사람을 세상에 창조하신 날부터 지금까지 지나간 날을 상고하여 보라! 하늘 이 끝에서 저 끝까지 이런 큰 일이 있었느냐? 이런 일을 들은 적이 있었느냐?
33 நெருப்பின் மத்தியிலிருந்து பேசும் இறைவனின் குரலை நீங்கள் கேட்டதுபோல் வேறு எந்த மக்களாவது கேட்டு உயிரோடிருந்தது உண்டோ?
어떤 국민이 불 가운데서 말씀하시는 하나님의 음성을 너처럼 듣고 생존하였었느냐?
34 உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் கண்களுக்கு முன்பாக எகிப்திலே அநேக காரியங்களைச் செய்து, பரீட்சைகளாலும், அற்புத அடையாளங்களாலும், அதிசயங்களாலும், யுத்தத்தினாலும், வலிமையுள்ள கரத்தினாலும், நீட்டப்பட்ட புயத்தினாலும், பெரிதும் பயங்கரமுமான எல்லா காரியங்களினாலும் ஒரு நாட்டை வேறொரு நாட்டிலிருந்து தனக்கென்றுப் பிரித்தெடுக்க முயற்சித்த வேறே தெய்வம் உண்டோ?
어떤 신이 와서 시험과 이적과 기사와 전쟁과 강한 손과 편 팔과 크게 두려운 일로 한 민족을 다른 민족에게서 인도하여 낸 일이 있느냐? 이는 다 너희 하나님 여호와께서 애굽에서 너희를 위하여 너희의 목전에서 행하신 일이라
35 யெகோவாவே இறைவன், அவரையன்றி வேறு ஒருவர் இல்லை என்பதை நீங்கள் அறியும்படி இவை எல்லாம் உங்களுக்குக் காண்பிக்கப்பட்டன.
이것을 네게 나타내심은 여호와는 하나님이시요 그 외에는 다른 신이 없음을 네게 알게 하려 하심이니라
36 அவர் உங்களுக்கு அறிவுறுத்தும்படி வானத்திலிருந்து தமது குரலை உங்களுக்குக் கேட்கப்பண்ணினார். பூமியிலே அவர் தமது பெரும் நெருப்பை உங்களுக்குக் காண்பித்தார்; நெருப்பின் நடுவிலிருந்து வந்த அவருடைய வார்த்தைகளை நீங்கள் கேட்டீர்கள்.
여호와께서 너를 교훈하시려고 하늘에서부터 그 음성을 너로 듣게 하시며 땅에서는 그 큰 불을 네게 보이시고 너로 불가운데서 나오는 그 말씀을 듣게 하셨느니라
37 அவர் உங்களுடைய முற்பிதாக்களில் அன்பாயிருந்தபடியாலும், அவர்களுக்குப்பின் அவர்களுடைய சந்ததியாரைத் தெரிந்துகொண்டதினாலும் அவர் உங்களோடு இருந்து, தமது பெரும் வல்லமையினால் உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார்.
여호와께서 네 열조를 사랑 하신고로 그 후손 너를 택하시고 큰 권능으로 친히 인도하여 애굽에서 나오게 하시며
38 அவர் உங்களைவிட பெரிதும், வல்லமையும் உள்ள நாடுகளை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு, இன்று இருக்கிறபடி அவர்களுடைய நாட்டை உங்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுப்பதற்காக உங்களை அவர் அதற்குள் கொண்டுவந்தார்.
너보다 강대한 열국을 네 앞에서 쫓아내고 너를 그들의 땅으로 인도하여 들여서 그것을 네게 기업으로 주려 하심이 오늘과 같으니라
39 மேலே வானத்திலும் கீழே பூமியிலும் யெகோவாவே இறைவன், அவரைத்தவிர வேறு யாருமே இல்லை என்பதை, இன்றே நீங்கள் ஏற்று அதை உங்கள் இருதயத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
그런즉 너는 오늘날 상천 하지에 오직 여호와는 하나님이시요! 다른 신이 없는 줄을 알아 명심하고
40 நான் இன்று உங்களுக்குக் கொடுக்கும் அவரது விதிமுறைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்களுக்கும் உங்களுக்குப்பின் உங்கள் பிள்ளைகளுக்கும் எல்லாம் நலமாயிருக்கும். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு நிரந்தரமாய்க் கொடுக்கும் அந்த நாட்டில் நீங்கள் நீடித்து வாழ்வீர்கள்.
오늘 내가 네게 명하는 여호와의 규례와 명령을 지키라! 너와 네 후손이 복을 받아 네 하나님 여호와께서 네게 주시는 땅에서 한 없이 오래 살리라
41 மோசே யோர்தானுக்குக் கிழக்கே மூன்று பட்டணங்களை ஒதுக்கி வைத்தான்.
때에 모세가 요단 이편 해 돋는 편에서 세 성읍을 구별하였으니
42 யாராவது தன் அயலானுக்குத் தீங்குசெய்ய முன்யோசனையின்றி, தவறுதலாக அவனைக் கொன்றுவிட்டால், அவன் அங்கு ஓடித்தப்பலாம். அவன் அந்தப் பட்டணங்களில் ஒன்றுக்குள் ஓடித்தப்பி, தன் உயிரைக் காப்பாற்றலாம்.
이는 과거에 원혐이 없이 부지중에 오살한 자로 그곳으로 도피케 하기 위함이며 그 한 성읍으로 도피한 자로 그 생명을 보존케 하기 위함이라
43 அப்பட்டணங்களாவன: ரூபனியருக்குப் பாலைவன பீடபூமியிலுள்ள பேசேர் பட்டணம். காத்தியருக்குக் கீலேயாத்திலுள்ள ராமோத் பட்டணம். மனாசேயினருக்கு பாசானிலுள்ள கோலான் பட்டணம் என்பனவாகும்.
하나는 광야 평원에 있는 베셀이라 르우벤 지파를 위한 것이요 하나는 길르앗 라못이라 갓 지파를 위한 것이요 하나는 바산 골란이라 므낫세 지파를 위한 것이었더라
44 மோசே இஸ்ரயேலருக்கு முன்வைத்த சட்டம் இதுவே.
모세가 이스라엘 자손에게 선포한 율법이 이러하니라
45 இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வெளியே வந்தபோது அவர்களுக்கு மோசே கொடுத்த ஒழுங்குவிதிகளும், நிபந்தனைகளும், சட்டங்களும் இவையே.
이스라엘 자손이 애굽에서 나온 후에 증거하신 것과 규례와 법도를 모세가 선포하였으니
46 அப்பொழுது அவர்கள் யோர்தானுக்குக் கிழக்கே பெத்பெயோருக்கு அருகேயிருந்த பள்ளத்தாக்கில் இருந்தார்கள். அந்த நாடு எஸ்போனில் ஆட்சி செய்த எமோரியரின் அரசனான சீகோனுடையது. மோசேயும், இஸ்ரயேலரும் எகிப்திலிருந்து வருகையில் அவனைத் தோற்கடித்தார்கள்.
요단 동편 벳브올 맞은편 골짜기에서라 이 땅은 헤스본에 거하는 아모리 족속의 왕 시혼에게 속하였더니 모세와 이스라엘 자손이 애굽에서 나온 후에 그를 쳐서 멸하고
47 அவர்கள் யோர்தானுக்குக் கிழக்கே இருந்த இரு எமோரிய அரசர்களான சீகோனின் நாட்டையும், பாசானின் அரசனான ஓகின் நாட்டையும் கைப்பற்றினார்கள்.
그 땅을 기업으로 얻었고 또 바산 왕 옥의 땅을 얻었으니 그 두 사람은 아모리 족속의 왕으로서 요단 이편 해 돋는 편에 거하였었으며
48 இந்த நாடு அர்னோன் ஆற்றுப் பள்ளத்தாக்கின் ஓரத்திலுள்ள அரோயேர் என்ற இடத்திலிருந்து, எர்மோன் என அழைக்கப்படும் சீயோன் மலைவரைக்கும் பரந்திருந்தது.
그 얻은 땅은 아르논 골짜기 가의 아로엘에서부터 시온산 곧 헤르몬산까지요
49 இந்த நாடு யோர்தானுக்குக் கிழக்கே அரபாவையும், பிஸ்கா மலைச்சரிவின்கீழ் இருந்த உப்புக்கடலையும் உள்ளடக்கியிருந்தது.
요단 이편 곧 그 동편 온 아라바니 비스가 산록 아래 아라바의 바다까지니라