< உபாகமம் 34 >
1 அதன்பின் மோசே, மோவாபின் சமபூமியிலிருந்து புறப்பட்டு நேபோ மலையின்மேல் ஏறி, பிஸ்கா உச்சிக்குப் போனான். நேபோ மலை எரிகோவுக்கு எதிரே இருந்தது. அங்கே யெகோவா அந்த முழு நாட்டையும் அவனுக்குக் காண்பித்தார். யெகோவா அவனுக்கு தாண்வரைக்கும் உள்ள கீலேயாத் நாடு,
И взыде Моисей от аравофа Моавля на гору Навав, на верх Фазга, яже есть прямо Иерихону: и показа ему Господь всю землю Галаадску даже до Дана,
2 முழு நப்தலி நாடு, எப்பிராயீம், மனாசேயின் பிரதேசங்கள், மத்திய தரைக்கடல்வரை உள்ள முழு யூதாவின் நாடு,
и всю землю Неффалимлю, и всю землю Ефремову и Манассиину, и всю землю Иудину даже до моря последняго,
3 தெற்கே, பேரீச்சமரங்களின் பட்டணமான எரிகோவின் பள்ளத்தாக்கிலிருந்து சோவார் வரையுள்ள முழுபிரதேசம் ஆகிய முழு நாட்டையும் காட்டினார்.
и пустыню и окрестная (села) Иерихона, град Фиников даже до Сигора,
4 யெகோவா அவனிடம், “உங்கள் சந்ததிக்குக் கொடுப்பேன் என ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்த நாடு இதுவே. நான் உன் கண்களால் அதைக் காணும்படி அனுமதித்தேன். ஆனால் நீ அதற்குள் கடந்துசெல்லமாட்டாய்” என்றார்.
и рече Господь к Моисею: сия земля, еюже кляхся Аврааму и Исааку и Иакову, глаголя: семени вашему дам ю: и показах ю очесем твоим, и тамо не внидеши.
5 யெகோவாவின் அடியவனான மோசே யெகோவா சொல்லியிருந்தபடியே மோவாப், நாட்டில் இறந்தான்.
И скончася тамо Моисей раб Господень в земли Моавли словом Господним.
6 மோவாபிய நாட்டிலே பெத்பெயோருக்கு எதிரே உள்ள பள்ளத்தாக்கில் யெகோவா அவனை அடக்கம்பண்ணினார், ஆனால் இன்றுவரை அவனுடைய கல்லறை எங்கேயிருக்கிறது என ஒருவருக்கும் தெரியாது.
И погребоша его в земли Моавли близ дому Фогорова. И не уведа никтоже погребения его даже до дне сего.
7 இறக்கும்போது மோசேக்கு வயது நூற்று இருபது. ஆனாலும் அவன் கண்கள் மங்கிப்போகவுமில்லை. அவன் பெலன் குறையவுமில்லை.
Моисею же бе сто и двадесять лет, егда скончася: не отемнесте очи его, ни истлеста устне его.
8 இஸ்ரயேலர் மோவாப் சமபூமியிலே மோசேக்காக முப்பது நாட்கள் துக்கங்கொண்டாடினர். அந்த துக்கநாட்கள் முடியும்வரை அவர்கள் அங்கேயே தங்கியிருந்தனர்.
И плакашася сынове Израилевы Моисеа во Аравофе Моавли у Иордана близ Иерихона тридесять дний. И скончашася дние плача сетования о Моисей.
9 இப்பொழுது நூனின் மகனான யோசுவாவின்மேல் மோசே தன் கைகளை வைத்தபடியால், அவன் ஞானத்தின் ஆவியால் நிரப்பப்பட்டிருந்தான். ஆகவே இஸ்ரயேலர் அவனுக்குச் செவிகொடுத்து, யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டிருந்ததை எல்லாம் செய்தார்கள்.
И Иисус сын Навин наполнися духа разума: возложи бо Моисей руце свои на него. И послушаша его сынове Израилевы, и сотвориша якоже заповеда Господь Моисею.
10 இதற்கு பின்பு மோசேயைப்போல் யெகோவா முகமுகமாய் அறிந்திருந்த ஒரு இறைவாக்கினனும் இஸ்ரயேலில் தோன்றியதில்லை.
И не воста ктому пророк во Израили якоже Моисей, егоже позна Господь лицем к лицу,
11 எகிப்திலே பார்வோனுக்கும், முழு அதிகாரிகளுக்கும், நாடு முழுவதற்கும் அற்புத அடையாளங்களையும், அதிசயங்களையும் செய்துகாண்பிக்கும்படி யெகோவா அவனை அனுப்பினார். அவனும் இவை எல்லாவற்றையும் செய்தான்.
во всех знамениих и чудесех, егоже посла Господь сотворити я в земли Египетстей фараону и рабом его и всей земли его,
12 ஏனெனில் இஸ்ரயேலர் காணத்தக்கதாக மோசே செய்ததுபோன்ற பெரும் வல்லமையும், பயங்கரமுமான செயல்களை ஒருவரும் ஒருபோதும் காண்பித்ததும் இல்லை, செய்ததும் இல்லை.
дивная великая, и руку крепкую (и мышцу высокую), яже сотвори Моисей пред всем Израилем.