< உபாகமம் 28 >

1 நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு முழுவதும் கீழ்ப்படிந்து, இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற அவருடைய கட்டளைகளையெல்லாம் கடைப்பிடித்து, அவற்றின்படி நடந்தால், உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை இந்தப் பூமியிலுள்ள எல்லா நாடுகளுக்கும் மேலாக உயர்த்துவார்.
Ka uluoro Jehova Nyasaye ma Nyasachu kendo urito adimba chikene duto ma amiyou kawuono, to Jehova Nyasaye ma Nyasachu biro tingʼou malo moloyo ogendini duto modak e piny.
2 உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால், இந்த ஆசீர்வாதங்களெல்லாம் உங்கள்மேல் வந்து உங்களோடிருக்கும்:
Gwethgi duto nobed magu kamoro amora ma untie ka uluoro Jehova Nyasaye ma Nyasachu, kendo magi e gin:
3 நீங்கள் பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள், கிராமத்திலும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.
Ibiro gwedhou ka un e dala kata ka un oko.
4 உங்கள் கர்ப்பத்தின் கனி ஆசீர்வதிக்கப்படும், உங்கள் நாட்டின் பயிர்வகையும், உங்கள் வளர்ப்பு மிருகங்களான மாட்டு மந்தையின் கன்றுகளும், செம்மறியாட்டு மந்தையின் குட்டிகளும் ஆசீர்வதிக்கப்படும்.
Nogwedhu gi nyithindo mangʼeny gi cham mogundho kod jamni mathoth ma gin kweth mag nyiroye kod mag nyirombe.
5 உங்கள் அறுவடையின் கூடையும், மா பிசையும் பாத்திரமும் ஆசீர்வதிக்கப்படும்.
Nogwedh atongeu gi dakuondeu duto.
6 நீங்கள் பட்டணத்தின் உள்ளே வரும்போதும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். பட்டணத்தின் வெளியே போகும்போதும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.
Nogwedhu ka udonjo e dala kendo ka uwuok.
7 உங்களுக்கு எதிராக வரும் பகைவர்கள் உங்களுக்கு முன்பாகத் தோல்வியடையும்படி, யெகோவா செய்வார். அவர்கள் ஒரு திசையிலிருந்து உங்களை எதிர்த்து வருவார்கள். ஆனால் உங்களைவிட்டு ஏழு திசைகளில் சிதறி ஓடுவார்கள்.
Jehova Nyasaye noket wasiku ma monjou e lwetu mi unulogi. Ginimonju ka gin oganda achiel, to ginike ka gia iru ka gin migepe abiriyo.
8 உங்கள் தானியக் களஞ்சியங்களின்மேலும், நீங்கள் கையிட்டுச்செய்யும் எல்லாவற்றின்மேலும் யெகோவா ஆசீர்வாதத்தை அனுப்புவார். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கிற நாட்டில் உங்களை ஆசீர்வதிப்பார்.
Jehova Nyasaye biro gwedho decheu kaachiel gi gimoro amora ma uchiworu timo, Jehova Nyasaye ma Nyasachu biro gwedhou e piny ma omiyou.
9 உங்கள் இறைவனாகிய யெகோவாவின் கட்டளையைக் கைக்கொண்டு, அவருடைய வழிகளில் நடந்தால், யெகோவா ஆணையிட்டு வாக்குப்பண்ணியபடி, அவர் உங்களை பரிசுத்த மக்களாக நிலைநிறுத்துவார்.
Jehova Nyasaye biro gurou kaka joge maler, mana kaka ne owacho ka okwongʼore, ka urito chike mag Jehova Nyasaye ma Nyasachu kendo uwuotho e yorene.
10 அப்பொழுது பூமியிலுள்ள மக்கள் எல்லோரும் நீங்கள் யெகோவாவின் பெயரால் அழைக்கப்படுவதைக் கண்டு உங்களுக்குப் பயப்படுவார்கள்.
Eka ji duto modak e piny none ni un joma oluong gi nying Jehova Nyasaye kendo gibiro luorou.
11 யெகோவா உங்களுக்கு நிறைவான செழிப்பை வழங்குவார். உங்களுக்குக் கொடுப்பதாக உங்கள் முற்பிதாக்களுக்கு அவர் வாக்குக்கொடுத்த நாட்டில், உங்கள் கர்ப்பத்தின் கனியையும், உங்கள் வளர்ப்பு மிருகங்களின் இளமையானவற்றையும், உங்கள் நிலத்தின் விளைச்சலையும் நிறைவாகச் செழிக்கப்பண்ணுவார்.
Jehova Nyasaye biro miyou gweth mogundho; ma gin nyithindo mangʼeny, jamni mathoth kod cham mogundho e piny mane Jehova Nyasaye osingore kokwongʼore ni kwereu ni nomiu.
12 யெகோவா தமது நிறைவான களஞ்சியமான வானத்தைத் திறந்து உங்கள் நாட்டிலே பருவகாலத்தில் மழையை அனுப்புவார். உங்கள் கைவேலைகள் எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார். நீங்கள் அநேக நாட்டவர்களுக்குக் கடன்கொடுப்பீர்கள். ஆனால் ஒருவரிடமும் கடன் வாங்கமாட்டீர்கள்.
Jehova Nyasaye biro yawo polo, ma en kar keno mag mwandune, ka ochiwo koth e piny e ndalo mowinjore, kendo ka ogwedho tije duto mag lwetu. Ubiro chiwo hola ne pinje mangʼeny to un ok unuhol gimoro kuomgi.
13 யெகோவா உங்களைத் தலையாக்குவார்; வாலாக்கமாட்டார். இந்த நாளில் நான் உங்களுக்குக் கொடுக்கும் உங்கள் இறைவனாகிய யெகோவாவின் கட்டளைகளைக் கவனித்து அவற்றைக் கவனமாகப் பின்பற்றினால், நீங்கள் எப்பொழுதும் மேன்மையாய் இருப்பீர்கள். கீழாயாகமாட்டீர்கள்.
Jehova Nyasaye nomi ubed jotelo to ok joma itelonegi. Ka urito chike ma Jehova Nyasaye ma Nyasachu miyou kawuononi kendo uluwogi adimba, to kinde duto unubed jotelo to ok joma itelonegi.
14 வேறு தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றுக்குப் பணிசெய்வதினால், இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற கட்டளைகள் ஒன்றிலிருந்தும் வலதுபுறமோ, இடதுபுறமோ திரும்பவேண்டாம்.
Kik uwe chike ma amiyou kawuononi, ka udhi e bat korachwich kata koracham kendo ka uluwo nyiseche manono kendo utiyonegi.
15 ஆனாலும் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமலும், இன்று நான் உங்களுக்குக் கொடுக்கும் எல்லா கட்டளைகளையும், விதிமுறைகளையும் கவனமாய்ப் பின்பற்றாமலும்போனால், இந்த சாபங்கள் எல்லாம் உங்கள்மேல் வந்து, உங்களை பிடித்துக்கொள்ளும்:
To ka ok uchiwo luor ne Jehova Nyasaye ma Nyasachu kendo ok urito chikene duto adimba kod buchene ma amiyou kawuononi, to kwongʼ-gi duto biro makou.
16 நீங்கள் பட்டணத்திலும் சபிக்கப்படுவீர்கள், கிராமத்திலும் சபிக்கப்படுவீர்கள்.
Ibiro kwongʼou ka un e dala kata ka un oko.
17 உங்களுடைய அறுவடையின் கூடையும், மா பிசையும் பாத்திரமும் சபிக்கப்படும்.
Nokwongʼ atongeu gi dakuondeu.
18 உங்கள் கர்ப்பத்தின் கனி சபிக்கப்படும், நிலத்தின் பயிர்வகைகளும், மாட்டு மந்தையின் கன்றுகளும், ஆட்டு மந்தையின் குட்டிகளும் சபிக்கப்படும்.
Nyithindu munywolo nokwongʼ, kaachiel gi chambu, gi nyiroye mag dhou kod nyithi jambu.
19 நீங்கள் பட்டணத்திற்குள் வரும்போதும் சபிக்கப்படுவீர்கள் வெளியே போகும்போதும் சபிக்கப்படுவீர்கள்.
Ibiro kwongʼou ka udonjo kendo kuwuok.
20 யெகோவா உங்கள்மேல் சாபங்களை அனுப்புவார், உங்களுடைய கையின் வேலைகள் எல்லாவற்றின்மேலும் கலகத்தையும், கண்டனத்தையும் அனுப்புவார். நீங்கள் அவரைக் கைவிட்ட அந்த தீமையான செயலின் நிமித்தம் திடீரென அழிந்து பாழாய்போகும் வரைக்கும், இவற்றை உங்கள்மேல் அனுப்புவார்.
Jehova Nyasaye biro oronu kwongʼ, ngʼengʼ kod achaya e gimoro amora ma utimo, nyaka urum chuth makaru lal nono nikech richo ma usetimo ma ujwangʼe.
21 யெகோவா நீங்கள் உரிமையாக்கிக்கொள்ளும்படி போகும் நாட்டிலிருந்து நீங்கள் அழிந்துபோகும்வரை உங்களை நோய்களால் வாதிப்பார்.
Jehova Nyasaye biro goyou gi tuoche mi otieku e piny ma udhi kawo.
22 யெகோவா உங்களை உடலுருக்கும் நோயினாலும், காய்ச்சலினாலும், வீக்கத்தினாலும், கொப்பளிக்கும் வெப்பத்தினாலும், வறட்சியினாலும், தாவர நோயினாலும், விஷப்பனியினாலும் தாக்குவார். நீங்கள் அழிந்துபோகும்வரை அவை உங்களை வாதிக்கும்.
Jehova Nyasaye nogou gi tuo mar kahera, midhusi gi tuo akuodi kod gwonyo kendo obiro kelonu oro mi cham rochre ewi dongo; kendo gigo duto biro thagou nyaka urum chuth.
23 உங்களுக்கு மேலாக இருக்கும் வானம் வெண்கலமாயும், உங்களுக்குக் கீழிருக்கும் நிலம் இரும்பாயும் இருக்கும்.
Polo norieny ka mula ewiu, piny to nobed matek ka chuma.
24 யெகோவா உங்கள் நாட்டில் தூசியையும், புழுதியையுமே மழைக்குப் பதிலாகப் பெய்யச்செய்வார். நீங்கள் அழியும்வரை அவை வானத்திலிருந்து வந்துகொண்டிருக்கும்.
Jehova Nyasaye enolok koth machwe e pinyu obed mana lo kod buru malich, gini olre koa e polo nyaka unurum.
25 யெகோவா உங்கள் பகைவர்களுக்கு முன்னே உங்களைத் தோல்வி அடையப்பண்ணுவார். ஒரு திசையிலிருந்து அவர்களை எதிர்த்து வருவீர்கள். ஆனால் அவர்களைவிட்டு ஏழு திசைகளில் ஓடுவீர்கள். பூமியிலுள்ள எல்லா அரசுகளுக்கும் நீங்கள் ஒரு பயங்கரக் காட்சியாய் இருப்பீர்கள்.
Jehova Nyasaye nomi lou e nyim wasiku. Unumonjgi ka un e achiel, to unuring-gi kuke e migepe abiriyo, kendo unubed gima wichkuot ne ogendini duto manie piny.
26 உங்கள் பிரேதங்கள், எல்லா ஆகாயத்துப் பறவைகளுக்கும் பூமியின் எல்லா மிருகங்களுக்கும் உணவாகும். அவற்றைப் பயமுறுத்தித் துரத்திவிட யாரும் இரார்.
Ringreu modongʼ ema nobed chiemb winy manie kor polo gi ondiegi manie thim, kendo onge ngʼato angʼata manogolgi kuomu.
27 சுகமடைய முடியாதபடி யெகோவா உங்களை எகிப்தின் கொப்புளங்களினாலும், பருக்களின் கட்டிகளினாலும், சீழ்வடியும் புண்களினாலும், சிரங்கினாலும் வாதிப்பார்.
Jehova Nyasaye nogou gi tuo mag buche mag Misri, akuodi, gwonyo kod kalanga ma ok thiedhi.
28 யெகோவா உங்களைப் பைத்தியத்தினாலும், குருட்டுத்தன்மையினாலும், மனோவியாதியினாலும் வாதிப்பார்.
Jehova Nyasaye nogou gi tuo mar neko kendo noloku muofni kendo joma orundore.
29 குருடன் இரவில் தடவித்திரிவதுபோல், நீங்கள் நடுப்பகலில் தடவித்திரிவீர்கள். நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் தோல்வி அடைவீர்கள். நாள்தோறும் நீங்கள் ஒடுக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்படுவீர்கள். ஒருவரும் உங்களை விடுவிக்கமாட்டார்கள்.
E dier odiechiengʼ tir ubiro rundoru ka muofni e mudho. Onge gima unutim manodhi maber, ndalo duto nothiru kendo noyak giu maonge ngʼama noresu.
30 உங்களுக்கு ஒரு பெண் திருமணம் செய்ய நிச்சயிக்கப்படும். வேறொருவனோ அவளைக் கொண்டுபோய் கற்பழிப்பான். நீங்கள் ஒரு வீட்டைக் கட்டுவீர்கள். அதில் வேறொருவன் குடியிருப்பான். நீங்கள் ஒரு திராட்சைத் தோட்டத்தை நாட்டுவீர்கள், அதன் பழத்தையோ சுவைக்கத் தொடங்கவும்மாட்டீர்கள்.
Inichan kendo nyako mihero, to ngʼat moro nono ema nokawe mabed kode. Iniger ot to ok inidagie, kendo inipidh mzabibu to ok inicham gik monyak kuomgi.
31 உங்கள் கண்களுக்கு முன்னால் உங்கள் மாடுகள் கொல்லப்படும். ஆனால் அதில் ஒன்றையும் நீங்கள் சாப்பிடமாட்டீர்கள். உங்கள் கழுதை உங்களிடமிருந்து பலாத்காரமாக பறிக்கப்படும். அது திருப்பிக் கொடுக்கப்படமாட்டாது. உங்கள் செம்மறியாடுகள் உங்கள் பகைவர்களிடம் கொடுக்கப்படும். அவற்றை யாரும் தப்புவிக்கமாட்டார்கள்.
Rwadhi noyangʼ kineno, to ok ni cham ringe. Kanyna mari nokaw kuomi githuon, to ok noduognigo. Rombe magi nomi wasiki, to onge ngʼama noresgi.
32 உங்கள் மகன்களும், மகள்களும் வேறு நாட்டவர்களுக்குக் கொடுக்கப்படுவார்கள். நீங்களோ அவர்களுக்காக நாள்தோறும் காத்திருந்து கண்களை பூத்துப்போகச்செய்வீர்கள். அதைக் கை நீட்டித் தடுக்கவும் வலிமையற்றவர்களாய் இருப்பீர்கள்.
Yawuoti kod nyigi noter e pinje mamoko, kendo inimanygi gi wengeni odiechiengʼ duto kionge gi teko mar resogi.
33 உங்கள் நிலமும், உங்கள் முயற்சியும் விளைவித்த பலனை, நீங்கள் அறியாத மக்கள் சாப்பிடுவார்கள். உங்கள் வாழ்நாளெல்லாம் கொடுமையான ஒடுக்குதலைத்தவிர, வேறொன்றும் உங்களுக்குக் கிடைக்காது.
Oganda ma ok ingʼeyo nocham gik mitiyo matek gi luchi e puotheni kendo onge gima initim makmana tingʼ mapek kod achune e ndalou duto.
34 நீங்கள் காணும் இக்காட்சிகள், உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களாக்கும்.
Gik ma wangʼi neno noloki neko.
35 யெகோவா உங்கள் முழங்கால்களையும், கால்களையும் குணமாக்கமுடியாதபடி வேதனை நிறைந்த கொப்புளங்களால் வாதிப்பார். அவை உங்கள் உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைவரை பரவும்.
Jehova Nyasaye nomi buche maremo ma ok thiedhi mak chongeni gi tiendeni kendo ginilandre koa e pat tiendi nyaka e wiyi.
36 யெகோவா உங்களையும், நீங்கள் உங்களுக்கென்று ஏற்படுத்துகிற அரசனையும், நீங்களோ, உங்கள் முற்பிதாக்களோ அறியாத ஒரு நாட்டவரிடம் துரத்துவார். அங்கே நீங்கள் மரத்தாலும், கல்லாலும் செய்யப்பட்ட தெய்வங்களான அந்நிய தெய்வங்களை வழிபடுவீர்கள்.
Jehova Nyasaye biro riembou, to ruoth ma unuyier notelnu noteru e lwet piny ma kata kwereu ne ok ongʼeyo. Kuno unulamie nyiseche mamoko, ma gin nyiseche mopa gi yien kod kite.
37 யெகோவா உங்களைத் துரத்திவிடும் மக்கள் கூட்டங்களுக்குள் நீங்கள் அவர்களுக்கு பயங்கரக் காட்சியாகவும், ஏளனத்துக்கும், கேலிக்கும் உரியவர்களாகவும் இருப்பீர்கள்.
Inibed gima mono miyanyo kendo ijaro e kind ogendini duto kuma Jehova Nyasaye noterue.
38 நீங்கள் அதிக விதைகளை விதைப்பீர்கள். ஆனால் சொற்ப அறுவடையே பெறுவீர்கள். ஏனெனில் வெட்டுக்கிளிகள் அவற்றைத் தின்றுவிடும்.
Unuchwo kothe mangʼeny to unuka manok, nikech bonyo nokethgi.
39 நீங்கள் திராட்சைத் தோட்டங்களை நாட்டி, அவற்றைப் பேணி வளர்ப்பீர்கள். ஆனால் அவற்றிலிருந்து பழங்களைச் சேர்க்கவோ, இரசத்தைக் குடிக்கவோமாட்டீர்கள். ஏனெனில் புழுக்கள் அவற்றைத் தின்றுவிடும்.
Unupidh mzabibu e puotheu ma ukagi to ok unumadh olemo mochwer kuomgi kata choko olembgigo nikech kute nochamgi.
40 நாடெங்கும் ஒலிவமரங்கள் நிற்கும். ஆனால் உங்கள் தேவைக்கு எண்ணெய் இராது. ஏனெனில் ஒலிவக்காய்கள் உதிர்ந்துவிடும்.
Ubiro bedo kod yien zeituni e pinyu to ok unukonyru gi moe nikech zeituni nolwar piny.
41 உங்களுக்கு மகன்களும், மகள்களும் இருப்பார்கள். ஆனால் நீங்கள் அவர்களை வைத்திருக்கமாட்டீர்கள். ஏனெனில் அவர்கள் சிறைபிடிக்கப்படுவார்கள்.
Unubed gi yawuowi kod nyiri to ok unuritgi nimar notergi e twech e pinje mamoko.
42 உங்கள் மரங்களையும், நிலத்தின் பயிர்களையும் வெட்டுக்கிளிக்கூட்டங்கள் அரித்துவிடும்.
Kweth mag bonyo noketh yiendu kod chambu duto e pinyu.
43 உங்கள் மத்தியில் வாழும் அந்நியன் உங்களைவிட மேலும் மேலும் உயர்நிலையடைவான். நீங்களோ மேலும் மேலும் கீழ்நிலையடைவீர்கள்.
Jopinje mamoko modak e pinyu nonyaa mamedre moloyou, to un to unubed manok.
44 அவன் உங்களுக்குக் கடன் கொடுப்பான், நீங்கள் அவனுக்குக் கடன் கொடுக்கமாட்டீர்கள். அவன் தலையாயிருப்பான், நீங்களோ வாலாயிருப்பீர்கள்.
Ginibed gi gik ma giholou, to un ok nubed gi gima unyalo hologi. Ginibed jotelo, to un nubed joma itelonegi.
45 இந்தச் சாபங்கள் எல்லாம் உங்கள்மேல் வரும். நீங்கள் அழிந்துபோகும்வரை அவை உங்களைப் பின்தொடர்ந்து பற்றிப்பிடிக்கும். நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமலும், அவர் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளையும் விதிமுறைகளையும் கைக்கொள்ளாமலும் போனபடியினால் இப்படி நடக்கும்.
Kwongʼ-gi duto nobi kuomu. Kwongʼ-gi nolaw bangʼu mijuku manyaka urum uduto, nikech ne ok uwinjo Jehova Nyasaye ma Nyasachu, kata rito chikene kod buchene duto mane omiyou.
46 இவை உங்களுக்கும், உங்கள் சந்ததிக்கும் என்றென்றைக்கும் ஒரு அடையாளமும், அதிசயமுமாய் இருக்கும்.
Ginibed ranyisi kod midhiero kuomu kod nyikwau nyaka chiengʼ.
47 நீங்கள் செழிப்பாய் இருந்த காலத்தில், உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு நீங்கள் மகிழ்ச்சியுடனும், சந்தோஷத்துடனும் பணிசெய்யவில்லை.
Nikech ne ok utiyo ne Jehova Nyasaye ma Nyasachu gi ilo kod mor e ndalo mane un gi mwandu,
48 ஆகையால் நீங்கள் பசியோடும், தாகத்தோடும், நிர்வாணத்தோடும், கொடிய வறுமையோடும் யெகோவா உங்களுக்கு எதிராக அனுப்பும் பகைவருக்குப் பணிசெய்வீர்கள். அவர் உங்களை அழித்தொழிக்கும் வரைக்கும் உங்கள் கழுத்தில் இரும்பு நுகத்தை வைப்பார்.
omiyo e kech, e riyo, e duk, kod dhier unutine wasiku ma Jehova Nyasaye oseoronu. Enoket jok mar mula mapek e ngʼutu nyaka chop otieku.
49 யெகோவா உங்களுக்கு எதிராகப் பூமியின் கடைசியான தூரத்திலிருந்து ஒரு நாட்டைக் கொண்டுவருவார். அவர்கள் ஒரு கழுகு பறக்கும் வேகத்துடன் வருவார்கள். அந்த நாட்டவர்களின் மொழி உங்களுக்கு விளங்காது.
Jehova Nyasaye enokel piny moro moa mabor, ma en piny mantie e giko piny, machal gi ongo mafuyo, gin oganda ma dhogi ok unuwinji,
50 பயங்கரத் தோற்றமுடைய அந்த நாடு முதியோருக்கு மதிப்பையோ, வாலிபருக்கு அனுதாபத்தையோ காட்டாது.
oganda maneno makwiny maonge gi luor ne joma oti kata joma pod tindo.
51 நீங்கள் அழியும்வரை அவர்கள் உங்கள் வளர்ப்பு மிருகங்களின் குட்டிகளையும், நிலத்தின் பலனையும் விழுங்கிவிடுவார்கள். நீங்கள் பாழாய்ப்போகும்வரை உங்களுக்காக தானியத்தையோ, புது திராட்சை இரசத்தையோ, ஒலிவ எண்ணெயையோ, மாட்டு மந்தையின் கன்றுகளையோ, செம்மறியாட்டு மந்தையின் குட்டிகளையோ விட்டுவைக்கமாட்டார்கள்.
Ginineg jambu ma pod tindo kendo giniketh chambu e puothe mi nyaka ginitieku chuth. Ok ginicham, divai manyien kata mo, kata mana nyiroye mag dhou kod nyirombe mag jambu nyaka chop gitieku chuth.
52 நீங்கள் நம்பியிருக்கும் அரண்செய்யப்பட்ட உயர்ந்த மதில்கள் விழும்வரை, உங்கள் நாட்டிலுள்ள எல்லா பட்டணங்களையும் முற்றுகையிடுவார்கள். அவர்கள் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கிற நாடு முழுவதிலுமுள்ள எல்லா பட்டணங்களையும் முற்றுகையிடுவார்கள்.
Ginitim agengʼa ne miechu madongo duto nyaka kuonde mochiel motingʼore gi malo ma uketo genou kuomgi lwar. Ginikethi mier madongo e piny duto ma Jehova Nyasaye ma Nyasachu miyou.
53 முற்றுகையிடும்போது, உங்கள் பகைவர்கள் உங்களைத் துன்புறுத்தி வேதனைப்படுத்துவதினால், உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுத்திருக்கிற கர்ப்பத்தின் கனியான மகன்கள் மற்றும் மகள்களின் மாம்சத்தை சாப்பிடுவீர்கள்.
Nikech chandruok maniyudi ka wasiki okeloni ka in e twech, nucham nyaka nyithindu munywolo, ma gin ringre yawuotu kod nyiu ma Jehova Nyasaye ma Nyasachu osemiyou.
54 உங்கள் மத்தியில் மிகுந்த சாதுவாகவும், மென்மையாகவும் இருக்கும் மனிதன்கூட, தன் சொந்த சகோரனிடத்திலோ, தான் அன்பு செலுத்துகிற மனைவியினிடத்திலோ, தப்பிப்பிழைத்த தன் பிள்ளைகளினிடத்திலோ கருணை காட்டமாட்டான்.
Kata mana ngʼat maber kendo ngʼwon ahinya e dieru ok nobed gi miwafu ne owadgi owuon kata mana ne chiege mohero kata nyithinde modongʼ,
55 அவர்களில் ஒருவனுக்காவது தான் சாப்பிடும் தன் பிள்ளைகளின் சதையை அவன் கொடுக்கமாட்டான். உங்கள் பட்டணங்களையெல்லாம் உங்கள் பகைவர் முற்றுகையிடும்போதும், உங்களைக் கொடுமையாய் வேதனைப்படுத்தும்போதும் அவனுக்குச் சாப்பிடுவதற்கு அந்தப் பிள்ளையின் சதையைவிட வேறு எதுவும் கிடைக்காது.
kendo ok enomi ngʼato angʼata ringre nyathineno ma en owuon ochamo nikech mano kende e gima nodongʼ bangʼ ka wasigu osemonjo miechu.
56 தன் பாதங்களை நிலத்தில் வைத்து நடக்கத் துணியாமல் மிகவும் சாதுவாகவும், மென்மையாகவும் உங்கள் மத்தியில் இருக்கும் பெண்ணும்கூட, தான் அன்பு செலுத்தும் கணவனுக்கோ, தன் சொந்த மகனுக்கோ, மகளுக்கோ
Dhako makare kendo man-gi lony mamalo e dieru, ngʼat modimbore kendo man-gi ngʼwono malach ma bende ok osewuotho e lowo gi tiende nono, nobed ka iye kwar kod chwore owuon kata mana gi yawuote kod nyige ma en owuon ema onywolo.
57 தன் கர்ப்பப்பையிலிருந்து வெளிப்படும் நச்சுக்கொடியையும், தான் பெற்றெடுக்கும் குழந்தைகளையும்கூட கொடுத்துச் சாப்பிடமாட்டாள். ஏனெனில் உங்கள் பட்டணங்களில் உங்கள் பகைவர் உங்களைக் கொடுமையாய் வேதனைப்படுத்தும்போது, அந்த முற்றுகை வேளையில் அவற்றை இரகசியமாகவே தான் சாப்பிடுவது அவளின் நோக்கமாயிருக்கும்.
Notamre pogonegi kata mana bieche owuon bangʼ nywol, nimar oparo mondo ochamgi lingʼ-lingʼ e ndalo ma wasiku nogonu agengʼa ka masira olworo miechu madongo.
58 இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிற சட்டங்களின் வார்த்தைகளையெல்லாம் நீங்கள் கவனமாகப் பின்பற்றாமலும், உங்கள் இறைவனாகிய யெகோவாவின் மகிமையும், பயங்கரமுமான பெயரைக்குறித்து பயபக்தி உள்ளவர்களாய் இராமலும் போனால்,
Ka ok urito weche duto manie chikni ma ondiki e kitabuni kendo ka ok uchiwo luor ne nyinge man-gi teko ma en Jehova Nyasaye ma Nyasachu,
59 யெகோவா உங்கள்மேலும், உங்கள் சந்ததிகள்மேலும் பயங்கரமான கொள்ளைநோய்களையும், நீடித்திருக்கும் கொடுமையான பேராபத்துக்களையும், மாறாத கடுமையான நோய்களையும் கொண்டுவருவார்.
Jehova Nyasaye biro kelo masiche malich kuomu kaachiel gi nyikwau, tuoche maywayo dend ji kuom kinde mangʼeny.
60 நீங்கள் எகிப்திலே எந்த வியாதிகளுக்குப் பயந்தீர்களோ, அந்த வியாதிகளை எல்லாம் உங்கள்மேல் திரும்பவும் வரப்பண்ணுவார். அவை உங்களைப் பிடித்துக்கொள்ளும்.
Obiro keto kuomu tuoche duto mag Misri ma uluoro kendo ginibed kuomu.
61 மேலும், நீங்கள் அழியுமட்டும் இந்த சட்ட புத்தகத்தில் எழுதப்படாத வேறுவிதமான நோய்களையும், பேராபத்துக்களையும் யெகோவா உங்கள்மேல் வரப்பண்ணுவார்.
Jehova Nyasaye nokel kuomu kit tuoche duto ma ok ondiki e kitabuni mar chik nyaka chop tieku chuth.
62 அப்பொழுது வானத்து நட்சத்திரங்களைப்போல எண்ணிக்கையில் அதிகமாய் இருந்த நீங்கள், எண்ணிக்கையில் ஒரு சிலராய் குறைந்துபோவீர்கள். ஏனெனில், நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படியவில்லை.
Un ma ungʼeny ka sulwe manie polo unudongʼ matin nikech ne ok urito chike Jehova Nyasaye ma Nyasachu.
63 யெகோவா உங்களை செழிக்கப்பண்ணி, உங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க விருப்பம் கொண்டதுபோலவே, உங்களைப் பாழாக்கி அழிக்கவும் விருப்பம்கொள்வார். நீங்கள் உரிமையாக்கப்போகும் நாட்டிலிருந்து வேரோடு பிடுங்கப்படுவீர்கள்.
Mana kaka ne omoro Jehova Nyasaye mondo omiu gweth kendo ubed mangʼeny, e kaka obiro bedo gi mor ka oranou kendo otiekou. Notieku e piny ma udonjoe mondo ukaw.
64 யெகோவா உங்களைப் பூமியின் ஒரு எல்லையிலிருந்து மறு எல்லைவரைக்குமுள்ள எல்லா நாடுகள் மத்தியிலும் சிதறடிப்பார். அங்கே நீங்களோ, உங்கள் முற்பிதாக்களோ அறியாததும், மரத்தினாலும், கல்லினாலும் செய்யப்பட்டதுமான தெய்வங்களை வணங்குவீர்கள்.
Eka Jehova Nyasaye nokewu e pinje duto, koa e tungʼ piny konchiel nyaka machielo. Kanyo unulamie nyiseche mamoko, ma gin nyiseche mopa mag yiende kod kite ma un uwegi kod ka kwereu ne ok ongʼeyo.
65 அந்த நாடுகள் மத்தியில் அங்கே உங்களுக்கு ஆறுதல் இருக்காது. உங்களுக்குக் காலூன்றி இளைப்பாற இடமும் கிடைக்காது. யெகோவா அங்கே உங்களுக்கு அமைதியற்ற மனதையும், ஏக்கத்தால் சோர்வுற்ற கண்களையும், நம்பிக்கை இழந்த இருதயத்தையும் கொடுப்பார்.
E kind pinjego ok unuyudie hoch kata yweyo ka ombongʼ tiendeu ool. Kuno Jehova Nyasaye nomiu paro maliw, wangʼ maneno ka ool gi dwaro to gi chuny machandore.
66 நீங்கள் இரவும் பகலும் திகில் நிறைந்து, தொடர்ச்சியாக அமைதியற்றவர்களாய் வாழ்ந்து உங்கள் வாழ்க்கையைப் பற்றி நம்பிக்கை இழந்தவர்களாய் இருப்பீர்கள்.
Unudag ka ukia gima biro timorenu; ka un gilworo odiechiengʼ kod otieno, ka ukia gima biro timore ne ngimau.
67 உங்கள் இருதயங்களை நிரப்பும் திகிலினாலும், உங்கள் கண்கள் காணும் காட்சிகளினாலும் காலையில், “மாலை வராதோ?” என்றும் மாலையில், “காலை வராதோ?” என்றும் நீங்கள் சொல்வீர்கள்.
Ka piny oru gokinyi unuwach niya, “Mad ne bedni en odhiambo” kendo godhiambo unuwach niya, “Mad ne piny bed ni en okinyi” nikech masira ma unune nopongʼ chunyu kod gik ma wengeu none.
68 “இனி எகிப்திற்கு ஒருபோதும் பயணமாய் போகக்கூடாது” என நான் உங்களுக்குச் சொன்னேன். ஆனாலும் யெகோவா உங்களைத் திரும்பவும் எகிப்திற்குக் கப்பல்களில் அனுப்புவார். நீங்கள் அங்கே உங்கள் பகைவர்களிடம் ஆண் அடிமைகளாகவும், பெண் அடிமைகளாகவும் உங்களை விற்கும்படி முயற்சிப்பீர்கள். ஆனால் ஒருவரும் உங்களை வாங்கமாட்டார்கள்.
Jehova Nyasaye nooru dok Misri gi yiedhi, e wuoth mane awacho ni ok onego udhiye. Kuno unuchiwru ne wasiku kaka chwo kod mon ma jotich to onge ngʼama noyie ngʼiewou.

< உபாகமம் 28 >