< கொலோசெயர் 4 >
1 எஜமான்களே, உங்கள் அடிமைகளுக்கு சரியானதையும் நியாயமானதையும் கொடுங்கள். ஏனெனில், பரலோகத்தில் உங்களுக்கும் ஒரு எஜமான் இருக்கிறாரென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே.
அபரஞ்ச ஹே அதி⁴பதய: , யூயம்’ தா³ஸாந் ப்ரதி ந்யாய்யம்’ யதா²ர்த²ஞ்சாசரணம்’ குருத்⁴வம்’ யுஷ்மாகமப்யேகோ(அ)தி⁴பதி: ஸ்வர்கே³ வித்³யத இதி ஜாநீத|
2 விழிப்புள்ளவர்களாயும் நன்றி உள்ளவர்களாயும், மன்றாடுவதற்கு உங்களை அர்ப்பணியுங்கள்.
யூயம்’ ப்ரார்த²நாயாம்’ நித்யம்’ ப்ரவர்த்தத்⁴வம்’ த⁴ந்யவாத³ம்’ குர்வ்வந்தஸ்தத்ர ப்ரபு³த்³தா⁴ஸ்திஷ்ட²த ச|
3 கிறிஸ்துவின் இரகசியத்தை நாங்கள் அறிவிக்கும்படி, எங்களுடைய செய்திக்கான வாசலை இறைவன் திறந்துகொடுக்க வேண்டுமென்று எங்களுக்காகவும் மன்றாடுங்கள்; இந்தப் பணிக்காகவே நான் சிறையாக்கப்பட்டிருக்கிறேன்.
ப்ரார்த²நாகாலே மமாபி க்ரு’தே ப்ரார்த²நாம்’ குருத்⁴வம்’,
4 நான் அந்த இரகசியத்தை தகுந்தபடி தெளிவாய் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் மன்றாடுங்கள்.
ப²லத: க்²ரீஷ்டஸ்ய யந்நிகூ³ட⁴வாக்யகாரணாத்³ அஹம்’ ப³த்³தோ⁴(அ)ப⁴வம்’ தத்ப்ரகாஸா²யேஸ்²வரோ யத் மத³ர்த²ம்’ வாக்³த்³வாரம்’ குர்ய்யாத், அஹஞ்ச யதோ²சிதம்’ தத் ப்ரகாஸ²யிதும்’ ஸ²க்நுயாம் ஏதத் ப்ரார்த²யத்⁴வம்’|
5 திருச்சபைக்கு உட்படாத வெளி ஆட்களுடன் ஞானமாய் நடந்துகொள்ளுங்கள்; கிடைக்கும் எல்லாச் சந்தர்ப்பங்களையும் நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
யூயம்’ ஸமயம்’ ப³ஹுமூல்யம்’ ஜ்ஞாத்வா ப³ஹி: ஸ்தா²ந் லோகாந் ப்ரதி ஜ்ஞாநாசாரம்’ குருத்⁴வம்’|
6 உங்களது உரையாடல் எப்பொழுதும் கனிவானதாயும் சுவையுள்ளதாயும் இருக்கட்டும். அப்பொழுதே உங்களிடம் கேள்வி கேட்கிறவர்களுக்கு உங்களால் தகுந்த விதத்தில் பதில் சொல்லக்கூடியதாய் இருக்கும்.
யுஷ்மாகம் ஆலாப: ஸர்வ்வதா³நுக்³ரஹஸூசகோ லவணேந ஸுஸ்வாது³ஸ்²ச ப⁴வது யஸ்மை யது³த்தரம்’ தா³தவ்யம்’ தத்³ யுஷ்மாபி⁴ரவக³ம்யதாம்’|
7 தீகிக்கு என்னைப்பற்றிய செய்தி எல்லாவற்றையும் உங்களுக்கு சொல்வான். அவன் அன்பு சகோதரனாகவும், உண்மையுள்ள ஊழியக்காரனாகவும், கர்த்தரில் உடன்வேலைக்காரனாகவும் இருக்கிறான்.
மம யா த³ஸா²க்தி தாம்’ துகி²கநாமா ப்ரபௌ⁴ ப்ரியோ மம ப்⁴ராதா விஸ்²வஸநீய: பரிசாரக: ஸஹதா³ஸஸ்²ச யுஷ்மாந் ஜ்ஞாபயிஷ்யதி|
8 நாங்கள் எல்லோரும் எப்படியிருக்கிறோம் என்பதை அவன் உங்களுக்குச் சொல்லி, உங்களை மனதளவில் உற்சாகப்படுத்தும் நோக்கத்திற்காகவேதான், நான் அவனை உங்களிடம் அனுப்புகிறேன்.
ஸ யத்³ யுஷ்மாகம்’ த³ஸா²ம்’ ஜாநீயாத் யுஷ்மாகம்’ மநாம்’ஸி ஸாந்த்வயேச்ச தத³ர்த²மேவாஹம்’
9 அவன் எங்கள் அன்புள்ள சகோதரனான நம்பிக்கைக்குரிய ஒநேசிமுவுடன் வருகிறான். அவனும் உங்களில் ஒருவனே. அவர்கள் இங்கு நடப்பவை எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவிப்பார்கள்.
தம் ஓநீஷிமநாமாநஞ்ச யுஷ்மத்³தே³ஸீ²யம்’ விஸ்²வஸ்தம்’ ப்ரியஞ்ச ப்⁴ராதரம்’ ப்ரேஷிதவாந் தௌ யுஷ்மாந் அத்ரத்யாம்’ ஸர்வ்வவார்த்தாம்’ ஜ்ஞாபயிஷ்யத: |
10 என்னுடன் சிறையில் இருக்கும் அரிஸ்தர்க்கு உங்களுக்கு வாழ்த்துதல் அனுப்புகிறான். அப்படியே பர்னபாவின் ஒன்றுவிட்ட சகோதரனான மாற்குவும் வாழ்த்துதல் அனுப்புகிறான். அவனைக்குறித்து ஏற்கெனவே நீங்கள் அறிவுறுத்தல் பெற்றிருக்கிறீர்கள்; அவன் உங்களிடம் வந்தால், அவனை வரவழைத்துக்கொள்ளுங்கள்.
ஆரிஷ்டார்க²நாமா மம ஸஹப³ந்தீ³ ப³ர்ணப்³பா³ பா⁴கி³நேயோ மார்கோ யுஷ்டநாம்நா விக்²யாதோ யீஸு²ஸ்²சைதே சி²ந்நத்வசோ ப்⁴ராதரோ யுஷ்மாந் நமஸ்காரம்’ ஜ்ஞாபயந்தி, தேஷாம்’ மத்⁴யே மார்கமதி⁴ யூயம்’ பூர்வ்வம் ஆஜ்ஞாபிதா: ஸ யதி³ யுஷ்மத்ஸமீபம் உபதிஷ்டே²த் தர்ஹி யுஷ்மாபி⁴ ர்க்³ரு’ஹ்யதாம்’|
11 யுஸ்து என அழைக்கப்படும் இயேசுவும், உங்களுக்கு வாழ்த்துதல் அனுப்புகிறான். இறைவனுடைய அரசின் வேலையில், எனது உடன் ஊழியர்கள் மத்தியில் இருக்கும் யூதர்கள் இவர்கள் மட்டுமே. இவர்கள் எனக்கு ஆறுதலாய் இருக்கிறார்கள்.
கேவலமேத ஈஸ்²வரராஜ்யே மம ஸாந்த்வநாஜநகா: ஸஹகாரிணோ(அ)ப⁴வந்|
12 கிறிஸ்து இயேசுவினுடைய ஊழியனான எப்பாப்பிராத்து உங்களுக்கு வாழ்த்துதல் அனுப்புகிறான். அவனும் உங்களில் ஒருவனே. இறைவனுடைய சித்தம் முழுவதிலும் நீங்கள் வளர்ச்சியடைந்தவர்களும் முழுமையான நிச்சயம் உடையவர்களுமாய் உறுதியாய் நிற்கவேண்டும் என்பதற்காக அவன் உங்களுக்காய் எப்பொழுதும் மன்றாட்டிலே போராடுகிறான்.
க்²ரீஷ்டஸ்ய தா³ஸோ யோ யுஷ்மத்³தே³ஸீ²ய இபப்²ரா: ஸ யுஷ்மாந் நமஸ்காரம்’ ஜ்ஞாபயதி யூயஞ்சேஸ்²வரஸ்ய ஸர்வ்வஸ்மிந் மநோ(அ)பி⁴லாஷே யத் ஸித்³தா⁴: பூர்ணாஸ்²ச ப⁴வேத தத³ர்த²ம்’ ஸ நித்யம்’ ப்ரார்த²நயா யுஷ்மாகம்’ க்ரு’தே யததே|
13 அவன் உங்களுக்காகவும், லவோதிக்கேயாவிலும் எராப்போலியிலும் இருக்கிறவர்களுக்காகவும், ஊக்கமாய் வேலைசெய்கிறான் என்பதை நான் சாட்சியாகக் கூறுகிறேன்.
யுஷ்மாகம்’ லாயதி³கேயாஸ்தி²தாநாம்’ ஹியராபலிஸ்தி²தாநாஞ்ச ப்⁴ராத்ரு’ணாம்’ ஹிதாய ஸோ(அ)தீவ சேஷ்டத இத்யஸ்மிந் அஹம்’ தஸ்ய ஸாக்ஷீ ப⁴வாமி|
14 எங்கள் அன்புக்குரிய வைத்தியன் லூக்காவும் தேமாவும் உங்களுக்கு வாழ்த்துதல் அனுப்புகிறார்கள்.
லூகநாமா ப்ரியஸ்²சிகித்ஸகோ தீ³மாஸ்²ச யுஷ்மப்⁴யம்’ நமஸ்குர்வ்வாதே|
15 லவோதிக்கேயாவிலிருக்கிற சகோதரர்களுக்கும், நிம்பாவுக்கும், அவளுடைய வீட்டில் கூடிவருகிற சபையினருக்கும் என் வாழ்த்துதல்களைத் தெரிவியுங்கள்.
யூயம்’ லாயதி³கேயாஸ்தா²ந் ப்⁴ராத்ரு’ந் நும்பா²ம்’ தத்³க்³ரு’ஹஸ்தி²தாம்’ ஸமிதிஞ்ச மம நமஸ்காரம்’ ஜ்ஞாபயத|
16 இந்தக் கடிதம் உங்களிடையே வாசிக்கப்பட்டபின், லவோதிக்கேயாவிலிருக்கிற திருச்சபைகளிலேயும் இதை வாசிக்க ஏற்பாடு செய்யுங்கள்; அதுபோலவே, லவோதிக்கேயாவில் இருக்கிறவர்களுக்கு நான் எழுதிய கடிதத்தை நீங்கள் வாசியுங்கள்.
அபரம்’ யுஷ்மத்ஸந்நிதௌ⁴ பத்ரஸ்யாஸ்ய பாடே² க்ரு’தே லாயதி³கேயாஸ்த²ஸமிதாவபி தஸ்ய பாடோ² யதா² ப⁴வேத் லாயதி³கேயாஞ்ச யத் பத்ரம்’ மயா ப்ரஹிதம்’ தத்³ யதா² யுஷ்மாபி⁴ரபி பட்²யேத ததா² சேஷ்டத்⁴வம்’|
17 நீங்கள் அர்க்கிப்புவிடம், “கர்த்தரில் நீ பெற்றுக்கொண்ட பணியை நிறைவேற்றும்படி பார்த்துக்கொள்” என்று சொல்லுங்கள்.
அபரம் ஆர்கி²ப்பம்’ வத³த ப்ரபோ⁴ ர்யத் பரிசர்ய்யாபத³ம்’ த்வயாப்ராபி தத்ஸாத⁴நாய ஸாவதா⁴நோ ப⁴வ|
18 பவுலாகிய நான் இந்த வாழ்த்துதலை என் சொந்தக் கையினாலே எழுதுகிறேன். நான் சிறையாக்கப்பட்டிருப்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.
அஹம்’ பௌல: ஸ்வஹஸ்தாக்ஷரேண யுஷ்மாந் நமஸ்காரம்’ ஜ்ஞாபயாமி யூயம்’ மம ப³ந்த⁴நம்’ ஸ்மரத| யுஷ்மாந் ப்ரத்யநுக்³ரஹோ பூ⁴யாத்| ஆமேந|