< அப்போஸ்தலர் 5 >

1 அனனியா என்னும் பெயருடைய ஒருவன், தனது மனைவி சப்பீராளுடன் சேர்ந்து, ஒரு சிறு நிலத்தை விற்றான்.
Ama niyendo, ban yi yua Ananiasa yeni den ye. Oja yeni den kuadi o kpaabu,
2 விற்ற பணத்தில் ஒரு பகுதியைத் தனது மனைவி அறியத் தனக்கென வைத்துக்கொண்டு, மறு பகுதியைக் கொண்டுவந்து முழுவதையும் கொடுப்பதுபோல, அப்போஸ்தலரின் பாதத்தில் வைத்தான்.
ki juogi yeni o pua ki kubi i ligi bɔgdima. O den cua yeni yaala n sieni ki bili Jesu tondba taana kani.
3 அப்பொழுது பேதுரு அவனிடம், “அனனியாவே, பரிசுத்த ஆவியானவரிடம் பொய் சொல்லும்படி, சாத்தான் உனது இருதயத்தை நிரப்பியது எப்படி? நிலத்தை விற்றுப் பெற்றுக்கொண்ட பணத்தில் ஒரு பகுதியை நீ உனக்கென வைத்துக்கொண்டாயே.
Ama ke Piali madi: “be cedi ke a ŋa sitaan k o kua a pali ki gbie k a pan pua fuonŋanma faama i ki ŋuuni u kpaabu ligi bɔgdnma i?
4 அதை விற்குமுன்பு அது உனக்குச் சொந்தமாக இருக்கவில்லையோ? அது விற்கப்பட்ட பின்பும், அந்தப் பணம் உன்னிடம் இருக்கவில்லையோ? இப்படிப்பட்ட ஒரு செயலைச் செய்ய நீ ஏன் நினைத்தாய்? நீ மனிதரிடம் பொய் சொல்லவில்லை, இறைவனிடமே பொய் சொன்னாய்” என்றான்.
Lan bo ki kuadi, li bo li ki tie a kpacelu kaa? lan bo ti kuadi l gɔ bo li ki tie a yaala kaa? A tieni led i ki ti maali li bonla a pali nni. A ki pua niba kaa faama a pua u Tienu i faama.”
5 அனனியா இதைக் கேட்டபோது, அவன் கீழே விழுந்து இறந்துப்போனான். நடந்ததைக் கேள்விப்பட்ட எல்லோருக்கும் மிகவும் பயமுண்டாயிற்று.
Anananiasi n gbadi li maam wan cie ki gbaani ki fuodi ki jiini.
6 அப்பொழுது இளைஞர் முன்வந்து, அவனது உடலைத் துணியில் சுற்றி, தூக்கிக்கொண்டுபோய் அடக்கம் செய்தார்கள்.
Ke ti jiwaandi cuo yaaba kuli bo gbadi lan bonla. ke bi jawaaba kadigi o ki bo piini.
7 கிட்டத்தட்ட மூன்றுமணி நேரத்திற்குப்பின், நடந்தது என்ன என்று அறியாமல், அவனுடைய மனைவி உள்ளே வந்தாள்.
Kudi puoli po k o denpua pundi kaa bani yaala bi tieni.
8 பேதுரு அவளிடம், “நிலத்தை விற்று நீயும் அனனியாவும் பெற்றுக்கொண்ட பணம் இவ்வளவுதானா?” என்று கேட்டான். அதற்கு அவள், “ஆம், இவ்வளவுதான் அதன் விலை” என்றாள்.
Piali ka maadi o: «maadi n li ya tie ki kuadi u kpaabu ne nani yin waani i ligi maama.» K o jiini: «li ligi n yeni»
9 அப்பொழுது பேதுரு அவளிடம், “கர்த்தருடைய ஆவியானவரைச் சோதிப்பதற்கு எப்படி நீயும் உடன்பட்டாய்? இதோ, உனது கணவனை அடக்கம் செய்தவர்கள் வாசற்படியிலே நிற்கின்றனர். அவர்கள் உன்னையும் சுமந்துகொண்டு போவார்கள்” என்றான்.
Ke Piali maadi o: «i tieni led i ki taani bigni o yonmdaano tagnmi i. Yaaba n pii a calo n yeni.»
10 அந்த வினாடியே அவளும் பேதுருவின் பாதத்தில் விழுந்து செத்துப்போனாள். அப்பொழுது அந்த இளைஞர் உள்ளே வந்து, அவள் இறந்துகிடப்பதைக் கண்டு, அவளையும் வெளியே தூக்கிக்கொண்டுபோய் அவளது கணவனுக்குப் பக்கத்தில் அடக்கம் செய்தார்கள்.
Ko baa li yogu ki jiini, ke bi jawaaba guani sua o kpe o.
11 திருச்சபையோருக்கும் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டவர்கள் எல்லோருக்கும் மிகவும் பயம் ஏற்பட்டது.
Ke ti jiwaanciandi cuo yaaba ye li jaandieli kuli yeni yaaba bo gbadi li bonla.
12 அப்போஸ்தலர் அநேக அற்புத அடையாளங்களையும், அதிசயங்களையும் மக்களிடையே செய்தார்கள். விசுவாசிகள் அனைவரும் சாலொமோனுடைய மண்டபத்தில் கூட்டம் கூடுவது வழக்கமாயிருந்தது.
Ti bonninandi yeni u yaalidgu bo tieni u niwulgu siiga nni bi tuonsɔnba nui po. Bi bo tani ye Salomɔn jaanli kani.
13 மக்கள் அவர்களை உயர்வாய் மதித்தபோதிலும், வேறு யாரும் அவர்களோடு சேரத் துணியவில்லை.
Ama ke ba yendo boo pia papaali yeni wan taani bi po ke bi niba nan bo bua bi maama.
14 ஆனால் அதிகமதிகமாய் ஆண்களும் பெண்களும் கர்த்தர்மேல் விசுவாசம் வைத்து, அவர்களின் எண்ணிக்கையுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
Bi niba yaaba bo pia li dandanli ti yonmdaano nni bo pugdi bi jaba yeni bi puoba.
15 அதன் பலனாக, மக்கள் தங்களுள் வியாதிப்பட்டிருந்தவர்களை வீதிகளுக்குக் கொண்டுவந்து, அவர்களைக் கட்டில்கள்மேலும் பாய்கள்மேலும் கிடத்தினார்கள். பேதுரு நடந்துபோகையில், அவனுடைய நிழலாகிலும் படும்படிக்கே இப்படிச் செய்தார்கள்.
Bi bo yi cendi yeni a yiama u sanu po i ki duani ba ti gadogdi yeni i diduani po i, ki fidi yaala ke Piali ya ti pendi ya yogu u junjungu n fidiki legini bi tianba.
16 எருசலேமைச் சுற்றியிருந்த பட்டணங்களிலிருந்துங்கூட, மக்கள் பெருங்கூட்டமாய் வந்தார்கள். அவர்கள் தங்களில் வியாதிப்பட்டவர்களையும் தீய ஆவியினால் துன்புறுத்தப்பட்டவர்களையும் கொண்டுவந்தார்கள்; அவர்கள் அனைவரும் சுகமடைந்தார்கள்.
Niba boncianli yaaba bo ña Jerusalemi kaalindnma mo bo baadi yeni a yiama yeni yaaba ke i cicibiadi kubi ba ke bi paagdi.
17 அப்பொழுது பிரதான ஆசாரியனும், சதுசேயர் குழுவைச் சேர்ந்த அவனுடைய கூட்டாளிகள் அனைவரும் பொறாமையால் நிறைந்து,
Ama k o yikacianmo fii ya niba kuli bo ye yeni o siiga nni (ki tie Sadusiani jaandi niba); bi bo ye yeni pabɔnli.
18 அப்போஸ்தலரைக் கைதுசெய்து, பொதுச் சிறைச்சாலையில் அடைத்தார்கள்.
Ke bi cuo bi tuonsɔnba ki kuani ba gobna dansalgi dieli nni ki luoni ba.
19 ஆனால் அந்த இரவில், கர்த்தருடைய தூதன் அந்தச் சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து, அவர்களை வெளியே கொண்டுவந்தான்.
Ama u ñuagu u Tienu meleki bo ki luodi li ganli ki ñani ba ki maadi ba:
20 அவன் அவர்களிடம், “நீங்கள் போய் ஆலய முற்றத்தில் நின்று, இந்த ஜீவ வார்த்தைகள் எல்லாவற்றையும் மக்களுக்குச் சொல்லுங்கள்” என்றான்.
«Pan sedi mani li jaandieli nni ki waani bi niba li miali maama»
21 அதிகாலையிலேயே, அவர்கள் தங்களுக்குச் சொல்லப்பட்டபடியே, ஆலய முற்றத்திற்குள் போய் மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்கள். பிரதான ஆசாரியனும் அவனுடன் இருந்தவர்களும் அங்கே வந்து சேர்ந்தபோது, அவர்கள் ஆலோசனைச் சங்கத்தை, அதாவது இஸ்ரயேல் மக்களின் எல்லா யூதரின் தலைவர்களையும் ஒன்றுகூட்டி, சிறையிலிருந்து அப்போஸ்தலரைக் கொண்டுவரும்படி ஆட்களை அனுப்பினார்கள்.
Ban bo gbadi lani ki fii ki kua li jaandieli nni gu siŋaagu nni ki tundi bi niba. Ama k oyikacianmo cua yeni yaaba bo ye yeni o ki yini mi taankalima ki sɔni ke bi gedi ñani bi tuonsɔnba dansalgi.
22 ஆனால் ஆலயக்காவலர் அங்கே போனபோது, சிறைச்சாலையில் அப்போஸ்தலரைக் காணவில்லை. எனவே, அவர்கள் திரும்பிவந்து அதை அறிவித்தார்கள்.
Ama ya soje gbenga bo gedi boo la ba dansaldieli nni, ke bi guani maadi ne:
23 திரும்பி வந்தவர்கள் அவர்களிடம், “சிறைச்சாலை பாதுகாப்பாகப் பூட்டப்பட்டிருப்பதையும் சிறைக்காவலர் வாசல்களில் நின்று கொண்டிருப்பதையும் நாங்கள் கண்டோம். ஆனால் சிறைச்சாலைக் கதவுகளை நாங்கள் திறந்தபோது, உள்ளே நாங்கள் ஒருவரையும் காணவில்லை” என்றார்கள்.
«Ti la k u dansaldieli luoi kpakpab ke sojenba yaaba guu se u bulñɔbu nni; Ama tin luodi ya yogu tii obo deni nni.»
24 ஆலயக்காவலர் தலைவனும் தலைமை ஆசாரியர்களும் இந்த செய்தியைக் கேட்டபோது, அதனால் என்ன நடக்கப்போகிறதோ என நினைத்து, மனக்குழப்பமடைந்தார்கள்.
Li jaandieli nni soje cianma yeni o yidkacianmo n gbadi yeni ke li cuo ba i jeje yeni yaala ba fidi ki cua li puoli po.
25 அப்பொழுது ஒருவன் வந்து, “இதோ, நீங்கள் சிறையில் அடைத்தவர்கள் ஆலய முற்றத்தில் நின்று மக்களுக்குப் போதிக்கிறார்கள்” என்று அறிவித்தான்.
Ke o nulo cua ki maadi ba: «ya niba ki luomi dansalgi ye li jaandieli nni ki tundi u nuwulgu.»
26 அப்பொழுது, ஆலயக்காவலர் தலைவன் தனது ஆலயக்காவலருடன் போய், அப்போஸ்தலர்களைக் கொண்டுவந்தான். ஆனால், அவர்கள்மேல் வன்முறையைக் கையாளவில்லை. ஏனெனில் மக்கள் தங்கள்மேல் கல்லெறிவார்கள் என்று பயந்திருந்தார்கள்.
Ke o sojecianmo yeni sojenba gedi ki guani yenba suoo kaa tieni ba paalu bonli, kelima bi bo jie ke bi niba bo lugdi ba a tana.
27 அவர்கள் அப்போஸ்தலர்களைக் கொண்டுவந்து, ஆலோசனைச் சங்கத்தின் முன்நிறுத்தினார்கள். பிரதான ஆசாரியன் கேள்விகளைக் கேட்டான்.
Ban guani yenba bi sieni ba bi ceglkaaba kani ke o yidikacianmo buali ba
28 அவன் அவர்களிடம், “இந்தப் பெயரால் நீங்கள் போதிக்கக் கூடாது என்று நாங்கள் உங்களுக்குக் கடுமையாக உத்தரவிட்டிருந்தோம். ஆனால் நீங்கள் உங்கள் போதனையினாலே எருசலேமை நிரப்பிவிட்டீர்கள். அந்த மனிதனைக் கொன்ற இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தவே நீங்கள் உறுதிகொண்டிருக்கிறீர்கள்” என்றான்.
ke maadi: «ti kuani ke yi daa tieni i tundi o nulo ne yeli po ke i nan tieni li tundi ki gbieni Jerusalemi kuli ke li ja sɔma ba wuli po.
29 ஆனால், பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும் அவர்களிடம்: “மனிதனைவிட நாங்கள் இறைவனுக்கே கீழ்ப்படிய வேண்டும்!
Piali yeni o tuonsɔnba bo ŋmia ba ki yedi ti bi cɔlni u Tienu ya maama ki cie bi niba maama.
30 நீங்கள் மரத்தில் தொங்கவிட்டுக் கொலைசெய்த இயேசுவை, நம்முடைய தந்தையரின் இறைவன் மரித்தோரிலிருந்து எழும்பச்செய்தார்.
Ti yaja nba Tienu fiini Jesu bi tinkpiiba siiga nni yua ke i bo cɔni o bu tibu po ki kpaa o.
31 இறைவனோ இயேசுவை அதிபதியாகவும், இரட்சகராகவும், தனது வலதுபக்கத்தில் இருக்கும்படி உயர்த்தி, இவர் இஸ்ரயேலுக்கு மனந்திரும்புதலையும், பாவங்களுக்கான மன்னிப்பையும் கொடுக்கும்படி செய்தார்.
U Tienu duoni wani ki kaani o u nuuienu ke wan tua o bado bijua ti candaano, ki daa nua Isaraheli yaaba biidi ki gɔ mia sugli b biidi po.
32 இவற்றிற்கு நாங்கள் சாட்சிகளாய் இருக்கிறோம். தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு, இறைவன் கொடுத்திருக்கும் பரிசுத்த ஆவியானவரும் சாட்சியாய் இருக்கிறார்” என்றார்கள்.
Ti tie iesd nba li bona po yeni fuoŋanma gɔ yua ke u Tienu puni tinba yaaba n cɔlni o.»
33 அவர்கள் இதைக் கேட்டபோது, கடுங்கோபமடைந்து இவர்களைக் கொல்ல யோசித்தார்கள்.
Bi ceglkaaba n bo gbadi bi pala bo biidi ke bi bua ban kpaa bi tuonsɔnba
34 ஆனால் அந்த ஆலோசனைச் சங்கத்தில், கமாலியேல் என்னும் பெயருடைய ஒரு பரிசேயன் இருந்தான். அவன் ஒரு மோசேயின் சட்ட ஆசிரியனாகவும், எல்லா மக்களுடைய மதிப்பைப் பெற்றவனாகவும் இருந்தான்; அவன் எழுந்து நின்று, சிறிது நேரத்திற்கு அப்போஸ்தலரை வெளியே கொண்டுபோகும்படி உத்தரவிட்டான்.
Ama falisiani yua ke bi bo yi o Galmali ki tie bil maama bangika kuli siiga nni yua pia ti kpiagidi ke bi cɔlni o bi niba kani bo yi ñani Yesu tuonsɔnba lan nii po lan waaagi.
35 பின்பு கமாலியேல் அங்கிருந்தவர்களைப் பார்த்து: “இஸ்ரயேலரே, இவர்களுக்கு நீங்கள் செய்யப்போவதைக் கவனமாய் எண்ணிப்பாருங்கள்.
Lani k o bo uansi yedi «Yinba Isaraheli yaaba yeni yi bua ki tieni bi niba yaala ne.
36 ஏனெனில் சிலகாலத்திற்கு முன்பு, தெயுதாஸ் என்பவன் முன்வந்து, தன்னை ஒரு பெரிய ஆளாக எல்லோருக்கும் காண்பித்தான், கிட்டத்தட்ட நானூறுபேர் அவனுடன் சேர்ந்துகொண்டார்கள். ஆனால் அவன் கொல்லப்பட்டான்; அவனைப் பின்பற்றிய அனைவரும் சிதறிப்போனார்கள். அந்தக் கூட்டத்தினர் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டனர்.
Kelima Todasi bo fii ki sedi yognu bá ki u niwulgu bo ŋɔdi o ki pundi nani niba kobina bi bo kpaa'og ke yaaba bo ŋua'o sani ki yadi.
37 அவனுக்குப்பின்பு, குடிமதிப்பு எடுக்கப்பட்ட காலத்தில் கலிலேயனான யூதாஸ் என்பவன் முன்வந்து, அவனும் ஒரு மக்கள் குழுவை கலகத்திற்கு வழிநடத்தினான். ஆனால் அவனும் கொல்லப்பட்டான்; அவனைப் பின்பற்றியவர்களும் சிதறடிக்கப்பட்டார்கள்.
Li puoli Juda Galile mo bo fii li cɔdli yogu ki dadi niba waamu. K o kpe ke yaaba bo ŋua o kuli sani ki yadi.
38 எனவே, இப்பொழுது இந்த விஷயத்திலும்கூட, நான் கூறும் ஆலோசனை இதுவே: இவர்களை விட்டுவிடுங்கள்! இவர்கள் போகட்டும்! ஏனெனில் இந்தத் திட்டமும், இந்த செயலும் மனிதரிடமிருந்து வந்ததானால், இது இல்லாமற்போகும்.
Mɔla n ji maadi yi fagdi mani ke ŋa ba suoo li ya tie ke li tuadnma ñani bi niba kani li kan tuo.
39 ஆனால் இது இறைவனிடமிருந்து வந்ததானால், உங்களால் இவர்களை நிறுத்தமுடியாது; அப்படி முயன்றால், நீங்கள் இறைவனுக்கு விரோதமாக யுத்தம் செய்கிறவர்களாய் இருப்பீர்களே” என்றான்.
Ama li ñani u Tienu ya kani yinkan fidi paadi ba yi ti bo bandi mono ki kɔni yeni u Tienu i.» Ke bi gbadi niinma nni.
40 அங்கிருந்தவர்கள் கமாலியேல் சொன்னதற்கு இணங்கினார்கள். அப்பொழுது அவர்கள் அப்போஸ்தலரை உள்ளே கூப்பிட்டு, அவர்களைச் சவுக்கினால் அடித்தார்கள். பின்பு அவர்கள், இயேசுவின் பெயரினால் பேசக்கூடாது என்று கட்டளையிட்டு, அவர்களைப் போகவிட்டார்கள்.
Li puoli po ke yi nni bi tuonsɔnba ki puabi ba, ki kuami ba ke ban da faa maadi Yesu maama ke ŋaa ba ke bi kuni.
41 அப்போஸ்தலர் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் போனபின், இயேசுவின் பெயருக்காக தாங்கள் அவமானப்பட்டுத் துன்பம் அடைவதற்குத் தகுந்தவர்களாக கருதப்பட்டதால், பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.
Bi bo ñani i nikpeli tundi kani kani ke bi pala mangi yeni u Tienu n bua ke bani ń la fala o ya yeli o.
42 ஒவ்வொரு நாளும் அவர்கள் ஆலய முற்றத்திலும், வீடுகள்தோறும் இடைவிடாது போதித்து, இயேசுவே கிறிஸ்து என்று நற்செய்தியை அறிவித்துவந்தார்கள்.
Faadima fandi kuli u Tienu tuonsɔnba bo yi cua li jaadieli nni yeni bi niba deni ke wangi ke Yesu tie u Tienu n gandi yua i.

< அப்போஸ்தலர் 5 >