< அப்போஸ்தலர் 23 >

1 பவுல் ஆலோசனைச் சங்கத்திலுள்ளவர்களை நேருக்கு நேராகப் பார்த்து, “சகோதரரே, இன்றுவரை ஒரு நல்ல மனசாட்சியுடனே நான் இறைவனுக்குரிய எனது கடமையை நிறைவேற்றியிருக்கிறேன்” என்றான்.
ஸபா⁴ஸத்³லோகாந் ப்ரதி பௌலோ(அ)நந்யத்³ரு’ஷ்ட்யா பஸ்²யந் அகத²யத், ஹே ப்⁴ராத்ரு’க³ணா அத்³ய யாவத் ஸரலேந ஸர்வ்வாந்த​: கரணேநேஸ்²வரஸ்ய ஸாக்ஷாத்³ ஆசராமி|
2 பவுல் இதைச் சொன்னபோது, பிரதான ஆசாரியனான அனனியா, பவுலின் அருகில் நின்றவர்களைப் பார்த்து, அவனுடைய வாயிலே அடிக்கும்படி உத்தரவிட்டான்.
அநேந ஹநாநீயநாமா மஹாயாஜகஸ்தம்’ கபோலே சபேடேநாஹந்தும்’ ஸமீபஸ்த²லோகாந் ஆதி³ஷ்டவாந்|
3 அப்பொழுது பவுல் அவனிடம், “வெள்ளையடிக்கப்பட்ட சுவரே, இறைவன் உம்மை அடிப்பார்! மோசேயின் சட்டத்தின்படி என்னை நியாயம் விசாரிப்பதற்கு, நீர் அங்கே உட்கார்ந்திருக்கிறீர். ஆனால் என்னை அடிக்கும்படி கட்டளையிட்டு, நீரே மோசேயின் சட்டத்தை மீறுகிறீரே!” என்றான்.
ததா³ பௌலஸ்தமவத³த், ஹே ப³ஹிஷ்பரிஷ்க்ரு’த, ஈஸ்²வரஸ்த்வாம்’ ப்ரஹர்த்தும் உத்³யதோஸ்தி, யதோ வ்யவஸ்தா²நுஸாரேண விசாரயிதும் உபவிஸ்²ய வ்யவஸ்தா²ம்’ லங்கி⁴த்வா மாம்’ ப்ரஹர்த்தும் ஆஜ்ஞாபயஸி|
4 அப்பொழுது பவுலின் அருகே நின்றவர்கள், “இறைவனுடைய பிரதான ஆசாரியனை அவமதிக்கத் துணிகிறாயா?” என்றார்கள்.
ததோ நிகடஸ்தா² லோகா அகத²யந், த்வம்’ கிம் ஈஸ்²வரஸ்ய மஹாயாஜகம்’ நிந்த³ஸி?
5 அதற்குப் பவுல், “சகோதரரே, அவர் பிரதான ஆசாரியன் என்று எனக்குத் தெரியாது; ஏனெனில், ‘உனது மக்களின் ஆளுநனைக் குறித்துத் தீமையாய்ப் பேசவேண்டாம்’ என்று எழுதியிருக்கிறதே” என்றான்.
தத​: பௌல​: ப்ரதிபா⁴ஷிதவாந் ஹே ப்⁴ராத்ரு’க³ண மஹாயாஜக ஏஷ இதி ந பு³த்³த⁴ம்’ மயா தத³ந்யச்ச ஸ்வலோகாநாம் அதி⁴பதிம்’ ப்ரதி து³ர்வ்வாக்யம்’ மா கத²ய, ஏதாத்³ரு’ஸீ² லிபிரஸ்தி|
6 பின்பு பவுல், அவர்களில் சிலர் சதுசேயர் என்றும், மற்றவர்கள் பரிசேயர் என்றும் அறிந்து, நீதிமன்றத்தில் உள்ளவர்களைப் பார்த்துச் சொன்னதாவது: “என் சகோதரரே, நான் ஒரு பரிசேயன், பரிசேயனின் மகன். இறந்தவர்கள் உயிர்த்தெழுவார்கள் என்ற எனது எதிர்பார்ப்பின் நிமித்தமே, நான் இங்கு விசாரிக்கப்படும்படி நிற்கிறேன்” என்றான்.
அநந்தரம்’ பௌலஸ்தேஷாம் அர்த்³த⁴ம்’ ஸிதூ³கிலோகா அர்த்³த⁴ம்’ பி²ரூஸி²லோகா இதி த்³ரு’ஷ்ட்வா ப்ரோச்சை​: ஸபா⁴ஸ்த²லோகாந் அவத³த் ஹே ப்⁴ராத்ரு’க³ண அஹம்’ பி²ரூஸி²மதாவலம்பீ³ பி²ரூஸி²ந​: ஸத்நாநஸ்²ச, ம்ரு’தலோகாநாம் உத்தா²நே ப்ரத்யாஸா²கரணாத்³ அஹமபவாதி³தோஸ்மி|
7 பவுல் இதைச் சொன்னபோது, பரிசேயருக்கும் சதுசேயருக்கும் இடையில் விவாதம் மூண்டது. அங்கு கூடியிருந்தவர்கள் இரண்டாகப் பிரிந்தனர்.
இதி கதா²யாம்’ கதி²தாயாம்’ பி²ரூஸி²ஸிதூ³கிநோ​: பரஸ்பரம்’ பி⁴ந்நவாக்யத்வாத் ஸபா⁴யா மத்⁴யே த்³வௌ ஸம்’கௌ⁴ ஜாதௌ|
8 சதுசேயர் இறந்தவர் உயிர்த்தெழுவதில்லை என்றும், இறைத்தூதரோ ஆவிகளோ இல்லையென்று சொல்லுகிறார்கள். ஆனால் பரிசேயரோ, இவைகளெல்லாம் உண்டென்று ஏற்றுக்கொள்கிறார்கள்.
யத​: ஸிதூ³கிலோகா உத்தா²நம்’ ஸ்வர்கீ³யதூ³தா ஆத்மாநஸ்²ச ஸர்வ்வேஷாம் ஏதேஷாம்’ கமபி ந மந்யந்தே, கிந்து பி²ரூஸி²ந​: ஸர்வ்வம் அங்கீ³குர்வ்வந்தி|
9 அங்கு ஒரு பெரிய குழப்பம் ஏற்பட்டது. பரிசேயராய் இருந்த சில மோசேயின் சட்ட ஆசிரியர்கள் எழுந்து நின்று, மிகக் கடுமையாக விவாதித்தார்கள். அவர்கள், “இவனிடத்தில் நாங்கள் குற்றம் ஒன்றையும் காணவில்லை, ஒருவேளை ஒரு ஆவியோ, ஒரு இறைத்தூதனோ அவனுடனே பேசியிருக்கலாம்” என்றார்கள்.
தத​: பரஸ்பரம் அதிஸ²யகோலாஹலே ஸமுபஸ்தி²தே பி²ரூஸி²நாம்’ பக்ஷீயா​: ஸபா⁴ஸ்தா² அத்⁴யாபகா​: ப்ரதிபக்ஷா உத்திஷ்ட²ந்தோ (அ)கத²யந், ஏதஸ்ய மாநவஸ்ய கமபி தோ³ஷம்’ ந பஸ்²யாம​: ; யதி³ கஸ்²சித்³ ஆத்மா வா கஸ்²சித்³ தூ³த ஏநம்’ ப்ரத்யாதி³ஸ²த் தர்ஹி வயம் ஈஸ்²வரஸ்ய ப்ராதிகூல்யேந ந யோத்ஸ்யாம​: |
10 விவாதம் வன்முறையானபோது, பவுலைச் சின்னாபின்னமாக்கி விடுவார்களோ என்று படைத்தளபதி பயந்தான். அவன் அவர்களிடமிருந்து பவுலை விடுவித்து முகாமுக்குக் கொண்டுவரும்படி படைவீரருக்கு உத்தரவிட்டான்.
தஸ்மாத்³ அதீவ பி⁴ந்நவாக்யத்வே ஸதி தே பௌலம்’ க²ண்ட³ம்’ க²ண்ட³ம்’ கரிஷ்யந்தீத்யாஸ²ங்கயா ஸஹஸ்ரஸேநாபதி​: ஸேநாக³ணம்’ தத்ஸ்தா²நம்’ யாதும்’ ஸபா⁴தோ ப³லாத் பௌலம்’ த்⁴ரு’த்வா து³ர்க³ம்’ நேதஞ்சாஜ்ஞாபயத்|
11 மறுநாள் இரவிலே, கர்த்தர் பவுலின் அருகே நின்று, “நீ தைரியமாய் இரு! நீ எருசலேமில் என்னைக்குறித்து சாட்சி கொடுத்ததுபோல, ரோம் நகரத்திலும் என்னைக்குறித்து சாட்சி கொடுக்கவேண்டும்” என்றார்.
ராத்ரோ ப்ரபு⁴ஸ்தஸ்ய ஸமீபே திஷ்ட²ந் கதி²தவாந் ஹே பௌல நிர்ப⁴யோ ப⁴வ யதா² யிரூஸா²லம்நக³ரே மயி ஸாக்ஷ்யம்’ த³த்தவாந் ததா² ரோமாநக³ரேபி த்வயா தா³தவ்யம்|
12 மறுநாள் காலையிலேயே சில யூதர்கள் ஒன்றுகூடி, ஒரு சூழ்ச்சி செய்தார்கள். தாங்கள் பவுலைக் கொலைசெய்யும் வரைக்கும் சாப்பிடுவதோ, குடிப்பதோ இல்லையென்று சபதமும் எடுத்துக்கொண்டார்கள்.
தி³நே ஸமுபஸ்தி²தே ஸதி கியந்தோ யிஹூதீ³யலோகா ஏகமந்த்ரணா​: ஸந்த​: பௌலம்’ ந ஹத்வா போ⁴ஜநபாநே கரிஷ்யாம இதி ஸ²பதே²ந ஸ்வாந் அப³த்⁴நந்|
13 நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் இந்த சூழ்ச்சியில் ஈடுபட்டார்கள்.
சத்வாரிம்’ஸ²ஜ்ஜநேப்⁴யோ(அ)தி⁴கா லோகா இதி பணம் அகுர்வ்வந்|
14 அவர்கள் தலைமை ஆசாரியர்களிடமும், யூதரின் தலைவர்களிடமும் சென்று, “நாங்கள் பவுலைக் கொலைசெய்யும்வரை, எதையும் சாப்பிடுவதில்லை என்று சபதம் செய்திருக்கிறோம்.
தே மஹாயாஜகாநாம்’ ப்ராசீநலோகாநாஞ்ச ஸமீபம்’ க³த்வா கத²யந், வயம்’ பௌலம்’ ந ஹத்வா கிமபி ந போ⁴க்ஷ்யாமஹே த்³ரு’டே⁴நாநேந ஸ²பதே²ந ப³த்³த்⁴வா அப⁴வாம|
15 இப்பொழுது நீங்களும், ஆலோசனைச் சங்கத்தைச் சேர்ந்தவர்களும், பவுலை உங்களுக்கு முன்பாகக் கொண்டுவரும்படி படைத்தளபதியிடம் முறையிடுங்கள். அவனுடைய வழக்கை இன்னும் தெளிவாய் விசாரிக்கப் போவதாக முயற்சிசெய்ய வேண்டும். அவன் இங்கே வருவதற்கு முன்பதாகவே, அவனைக் கொன்றுவிட நாங்கள் ஆயத்தமாக இருப்போம்” என்றார்கள்.
அதஏவ ஸாம்ப்ரதம்’ ஸபா⁴ஸத்³லோகை​: ஸஹ வயம்’ தஸ்மிந் கஞ்சித்³ விஸே²ஷவிசாரம்’ கரிஷ்யாமஸ்தத³ர்த²ம்’ ப⁴வாந் ஸ்²வோ (அ)ஸ்மாகம்’ ஸமீபம்’ தம் ஆநயத்விதி ஸஹஸ்ரஸேநாபதயே நிவேத³நம்’ குருத தேந யுஷ்மாகம்’ ஸமீபம்’ உபஸ்தி²தே​: பூர்வ்வம்’ வயம்’ தம்’ ஹந்து ஸஜ்ஜிஷ்யாம|
16 ஆனால் பவுலின் சகோதரியின் மகன், இந்தச் சூழ்ச்சியைக் குறித்துக் கேள்விப்பட்டு, அவன் முகாமுக்குள் போய், இதைப் பவுலுக்குச் சொன்னான்.
ததா³ பௌலஸ்ய பா⁴கி³நேயஸ்தேஷாமிதி மந்த்ரணாம்’ விஜ்ஞாய து³ர்க³ம்’ க³த்வா தாம்’ வார்த்தாம்’ பௌலம் உக்தவாந்|
17 அப்பொழுது பவுல் நூற்றுக்குத் தலைவர்களில் ஒருவனைக் கூப்பிட்டு, “இந்த வாலிபனை படைத்தளபதியிடம் கூட்டிக்கொண்டுபோ; இவன் தலைவனுக்கு அறிவிக்க வேண்டிய ஒரு காரியம் இருக்கிறது” என்றான்.
தஸ்மாத் பௌல ஏகம்’ ஸ²தஸேநாபதிம் ஆஹூய வாக்யமித³ம் பா⁴ஷிதவாந் ஸஹஸ்ரஸேநாபதே​: ஸமீபே(அ)ஸ்ய யுவமநுஷ்யஸ்ய கிஞ்சிந்நிவேத³நம் ஆஸ்தே, தஸ்மாத் தத்ஸவித⁴ம் ஏநம்’ நய|
18 அப்படியே அவன் வாலிபனை படைத்தளபதியிடம் கூட்டிக்கொண்டு போனான். அந்த நூற்றுக்குத் தலைவன் படைத்தளபதியிடம், “சிறைக்கைதியாய் இருக்கிற பவுல் என்னை ஆளனுப்பி கூப்பிட்டு, இந்த வாலிபனை உம்மிடம் கூட்டிக்கொண்டு போகும்படி என்னைக் கேட்டுக்கொண்டான். ஏனெனில், இவன் ஏதோ ஒரு காரியத்தை உம்மிடம் சொல்லவேண்டும்” என்றான்.
தத​: ஸ தமாதா³ய ஸஹஸ்ரஸேநாபதே​: ஸமீபம் உபஸ்தா²ய கதி²தவாந், ப⁴வத​: ஸமீபே(அ)ஸ்ய கிமபி நிவேத³நமாஸ்தே தஸ்மாத் ப³ந்தி³​: பௌலோ மாமாஹூய ப⁴வத​: ஸமீபம் ஏநம் ஆநேதும்’ ப்ரார்தி²தவாந்|
19 படைத்தளபதி அந்த வாலிபனின் கையைப் பிடித்து, ஒரு பக்கமாய் கூட்டிக்கொண்டுபோய், “நீ எனக்கு சொல்ல விரும்புகிற காரியம் என்ன?” என்று கேட்டான்.
ததா³ ஸஹஸ்ரஸேநாபதிஸ்தஸ்ய ஹஸ்தம்’ த்⁴ரு’த்வா நிர்ஜநஸ்தா²நம்’ நீத்வா ப்ரு’ஷ்ட²வாந் தவ கிம்’ நிவேத³நம்’? தத் கத²ய|
20 அவன் சொன்னதாவது: “பவுலைக் குறித்து இன்னும் அதிகத் தெளிவாய் விசாரணை செய்யப்போவதாக முயற்சி செய்து, அவரை ஆலோசனைச் சங்கத்தின் முன்பாக, நாளைக்குக் கொண்டுவர வேண்டும் என்று உம்மைக் கேட்டுக் கொள்வதற்கு யூதர்கள் உடன்பட்டிருக்கிறார்கள்.
தத​: ஸோகத²யத், யிஹூதீ³யலாகா​: பௌலே கமபி விஸே²ஷவிசாரம்’ ச²லம்’ க்ரு’த்வா தம்’ ஸபா⁴ம்’ நேதும்’ ப⁴வத​: ஸமீபே நிவேத³யிதும்’ அமந்த்ரயந்|
21 ஆனால், நீங்கள் அவர்களுக்கு சம்மதிக்கவேண்டாம். ஏனெனில் அவர்களில் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் பவுலை வழியில் கொலைசெய்வதற்காக மறைந்திருக்கிறார்கள். அவரைக் கொலைசெய்யும்வரை, தாங்கள் சாப்பிடுவதோ குடிப்பதோ இல்லையென்று, அவர்கள் சபதம் எடுத்திருக்கிறார்கள். அவர்கள் இப்பொழுது ஆயத்தமாகி, அவர்களின் வேண்டுகோளுக்கு நீர் சம்மதிக்க வேண்டுமென்று காத்துக்கொண்டிருக்கிறார்கள்” என்றான்.
கிந்து மவதா தந்ந ஸ்வீகர்த்தவ்யம்’ யதஸ்தேஷாம்’ மத்⁴யேவர்த்திநஸ்²சத்வாரிம்’ஸ²ஜ்ஜநேப்⁴யோ (அ)தி⁴கலோகா ஏகமந்த்ரணா பூ⁴த்வா பௌலம்’ ந ஹத்வா போ⁴ஜநம்’ பாநஞ்ச ந கரிஷ்யாம இதி ஸ²பதே²ந ப³த்³தா⁴​: ஸந்தோ கா⁴தகா இவ ஸஜ்ஜிதா இதா³நீம்’ கேவலம்’ ப⁴வதோ (அ)நுமதிம் அபேக்ஷந்தே|
22 அந்த படைத்தளபதி அந்த வாலிபனைப் போகும்படி சொல்லி, “நீ இதை எனக்கு அறிவித்ததைப்பற்றி ஒருவருக்கும் சொல்லாதே” என்று அவனை எச்சரித்தான்.
யாமிமாம்’ கதா²ம்’ த்வம்’ நிவேதி³தவாந் தாம்’ கஸ்மைசித³பி மா கத²யேத்யுக்த்வா ஸஹஸ்ரஸேநாபதிஸ்தம்’ யுவாநம்’ விஸ்ரு’ஷ்டவாந்|
23 பின்பு படைத்தளபதி, தன் கீழுள்ள நூற்றுக்குத் தலைவர்களில் இருவரை அழைத்து, அவர்களுக்கு உத்தரவிட்டதாவது: “இன்று இரவு ஒன்பது மணிக்கு செசரியாவுக்குப் போவதற்கு இருநூறு படைவீரரையும், எழுபது குதிரைவீரரையும், இருநூறு ஈட்டி ஏந்தும் வீரரையும் கொண்ட ஒரு படைப்பிரிவை ஆயத்தமாக்குங்கள்.
அநந்தரம்’ ஸஹஸ்ரஸேநாபதி ர்த்³வௌ ஸ²தஸேநாபதீ ஆஹூயேத³ம் ஆதி³ஸ²த், யுவாம்’ ராத்ரௌ ப்ரஹரைகாவஸி²ஷ்டாயாம்’ ஸத்யாம்’ கைஸரியாநக³ரம்’ யாதும்’ பதா³திஸைந்யாநாம்’ த்³வே ஸ²தே கோ⁴டகாரோஹிஸைந்யாநாம்’ ஸப்ததிம்’ ஸ²க்திதா⁴ரிஸைந்யாநாம்’ த்³வே ஸ²தே ச ஜநாந் ஸஜ்ஜிதாந் குருதம்’|
24 பவுலுக்கும் குதிரைகளை ஆயத்தமாக்குங்கள். அவன் ஆளுநர் பேலிக்ஸினிடம் பாதுகாப்பாய் கொண்டு செல்லப்பட வேண்டும்.”
பௌலம் ஆரோஹயிதும்’ பீ²லிக்ஷாதி⁴பதே​: ஸமீபம்’ நிர்வ்விக்⁴நம்’ நேதுஞ்ச வாஹநாநி ஸமுபஸ்தா²பயதம்’|
25 அந்த படைத்தளபதி ஒரு கடிதத்தை பின்வருமாறு எழுதினான்:
அபரம்’ ஸ பத்ரம்’ லிகி²த்வா த³த்தவாந் தல்லிகி²தமேதத்,
26 கிலவுதியு லீசியா ஆகிய நான், மாண்புமிகு ஆளுநர் பேலிக்ஸ் அவர்களுக்கு எழுதுகிறதாவது: வாழ்த்துகள்.
மஹாமஹிமஸ்ரீயுக்தபீ²லிக்ஷாதி⁴பதயே க்லௌதி³யலுஷியஸ்ய நமஸ்கார​: |
27 இந்த மனிதன் பவுல் யூதரால் பிடிக்கப்பட்டிருந்தான். அவர்கள் இவனைக் கொலைசெய்ய முயற்சிக்கையில், இவன் ஒரு ரோம குடிமகன் என்று நான் அறிந்து, எனது படைவீரருடன் சென்று, இவனைத் தப்புவித்தேன்.
யிஹூதீ³யலோகா​: பூர்வ்வம் ஏநம்’ மாநவம்’ த்⁴ரு’த்வா ஸ்வஹஸ்தை ர்ஹந்தும் உத்³யதா ஏதஸ்மிந்நந்தரே ஸஸைந்யோஹம்’ தத்ரோபஸ்தா²ய ஏஷ ஜநோ ரோமீய இதி விஜ்ஞாய தம்’ ரக்ஷிதவாந்|
28 அவர்கள் இவனைக் குற்றம் சாட்டுவது ஏன் என்று அறிய விரும்பி, நான் இவனை அவர்களுடைய ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாகக் கொண்டுவந்தேன்.
கிந்நிமித்தம்’ தே தமபவத³ந்தே தஜ்ஜ்ஞாதும்’ தேஷா ஸபா⁴ம்’ தமாநாயிதவாந்|
29 அவர்கள் சுமத்திய குற்றச்சாட்டு, அவர்களது சட்டத்தைக் குறித்த கேள்விகளோடு சம்பந்தப்பட்டதாகவே இருந்தது. அவை மரண தண்டனைக்கோ, சிறைத் தண்டனைக்கோ ஏதுவான குற்றச்சாட்டாய் இருக்கவில்லை.
ததஸ்தேஷாம்’ வ்யவஸ்தா²யா விருத்³த⁴யா கயாசந கத²யா ஸோ(அ)பவாதி³தோ(அ)ப⁴வத், கிந்து ஸ ஸ்²ரு’ங்க²லப³ந்த⁴நார்ஹோ வா ப்ராணநாஸா²ர்ஹோ ப⁴வதீத்³ரு’ஸ²​: கோப்யபராதோ⁴ மயாஸ்ய ந த்³ரு’ஷ்ட​: |
30 இவனுக்கு எதிராக சூழ்ச்சி செய்யப்படுவதாக எனக்கு அறிவிக்கப்பட்டபோது, நான் உடனே இவனை உம்மிடத்திற்கு அனுப்பிவைக்கிறேன். இவனைக் குற்றம் சாட்டியவர்களுக்கும், இவனுக்கு விரோதமான தங்களது வழக்கை உம்மிடம் கொண்டுவரும்படி உத்தரவிட்டிருக்கிறேன்.
ததா²பி மநுஷ்யஸ்யாஸ்ய வதா⁴ர்த²ம்’ யிஹூதீ³யா கா⁴தகாஇவ ஸஜ்ஜிதா ஏதாம்’ வார்த்தாம்’ ஸ்²ருத்வா தத்க்ஷணாத் தவ ஸமீபமேநம்’ ப்ரேஷிதவாந் அஸ்யாபவாத³காம்’ஸ்²ச தவ ஸமீபம்’ க³த்வாபவதி³தும் ஆஜ்ஞாபயம்| ப⁴வத​: குஸ²லம்’ பூ⁴யாத்|
31 எனவே படைவீரர்கள் தங்களுக்கு உத்தரவிடப்பட்டபடியே, இரவுவேளையில் பவுலைத் தங்களுடன் கூட்டிக்கொண்டு, அந்திப்பத்திரி பட்டணம்வரை வந்தார்கள்.
ஸைந்யக³ண ஆஜ்ஞாநுஸாரேண பௌலம்’ க்³ரு’ஹீத்வா தஸ்யாம்’ ரஜந்யாம் ஆந்திபாத்ரிநக³ரம் ஆநயத்|
32 மறுநாள் குதிரைவீரரை அவனுடன் போகும்படி அனுப்பிவிட்டு, மற்றவர்கள் முகாமுக்குத் திரும்பினார்கள்.
பரே(அ)ஹநி தேந ஸஹ யாதும்’ கோ⁴டகாரூட⁴ஸைந்யக³ணம்’ ஸ்தா²பயித்வா பராவ்ரு’த்ய து³ர்க³ம்’ க³தவாந்|
33 குதிரைவீரர் செசரியாவைச் சென்றடைந்தபோது, கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்து, பவுலையும் அவனிடம் ஒப்படைத்தார்கள்.
தத​: பரே கோ⁴டகாரோஹிஸைந்யக³ண​: கைஸரியாநக³ரம் உபஸ்தா²ய தத்பத்ரம் அதி⁴பதே​: கரே ஸமர்ப்ய தஸ்ய ஸமீபே பௌலம் உபஸ்தா²பிதவாந்|
34 ஆளுநன் கடிதத்தை வாசித்துவிட்டு, பவுல் எந்த பகுதியைச் சேர்ந்தவன் என்று கேட்டு, சிலிசியாவைச் சேர்ந்தவன் என்று அறிந்து,
ததா³தி⁴பதிஸ்தத்பத்ரம்’ படி²த்வா ப்ரு’ஷ்ட²வாந் ஏஷ கிம்ப்ரதே³ஸீ²யோ ஜந​: ? ஸ கிலிகியாப்ரதே³ஸீ²ய ஏகோ ஜந இதி ஜ்ஞாத்வா கதி²தவாந்,
35 அவன் பவுலிடம், “உன்னைக் குற்றம் சாட்டுகிறவர்கள் இங்கே வரும்போது, நான் உனது வழக்கை விசாரிப்பேன்” என்றான். பின்பு அவன் ஏரோதுவின் அரண்மனையில் பவுலைக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டான்.
தவாபவாத³கக³ண ஆக³தே தவ கதா²ம்’ ஸ்²ரோஷ்யாமி| ஹேரோத்³ராஜக்³ரு’ஹே தம்’ ஸ்தா²பயிதும் ஆதி³ஷ்டவாந்|

< அப்போஸ்தலர் 23 >