< அப்போஸ்தலர் 22 >

1 பவுல் அவர்களைப் பார்த்து, “சகோதரரே, தந்தையரே, எனது சார்பாக நான் சொல்வதைக் கேளுங்கள்” என்றான்.
ஹே பித்ரு’க³ணா ஹே ப்⁴ராத்ரு’க³ணா​: , இதா³நீம்’ மம நிவேத³நே ஸமவத⁴த்த|
2 அவன் தங்களுடன் எபிரெய மொழியில் பேசுவதை அவர்கள் கேட்டபோது, அவர்கள் அமைதியாயிருந்தார்கள். அப்பொழுது பவுல் சொன்னதாவது:
ததா³ ஸ இப்³ரீயபா⁴ஷயா கதா²ம்’ கத²யதீதி ஸ்²ருத்வா ஸர்வ்வே லோகா அதீவ நி​: ஸ²ப்³தா³ ஸந்தோ(அ)திஷ்ட²ந்|
3 “நான் ஒரு யூதன், சிலிசியா நாட்டிலுள்ள தர்சு பட்டணத்தில் பிறந்தவன், ஆனால் எருசலேம் நகரத்திலே வளர்க்கப்பட்டவன். கல்விமான் கமாலியேலிடம் நமது தந்தையர்களின் மோசேயின் சட்டத்தையும், அதன் வழக்கங்களையும் நுட்பமாகக் கற்றேன். இன்று நீங்கள் ஒவ்வொருவரும் இறைவனிடம் பக்திவைராக்கியமாய் இருப்பதுபோலவே நானும் இருந்தேன்.
பஸ்²சாத் ஸோ(அ)கத²யத்³ அஹம்’ யிஹூதீ³ய இதி நிஸ்²சய​: கிலிகியாதே³ஸ²ஸ்ய தார்ஷநக³ரம்’ மம ஜந்மபூ⁴மி​: ,ஏதந்நக³ரீயஸ்ய க³மிலீயேலநாம்நோ(அ)த்⁴யாபகஸ்ய ஸி²ஷ்யோ பூ⁴த்வா பூர்வ்வபுருஷாணாம்’ விதி⁴வ்யவஸ்தா²நுஸாரேண ஸம்பூர்ணரூபேண ஸி²க்ஷிதோ(அ)ப⁴வம் இதா³நீந்தநா யூயம்’ யாத்³ரு’ஸா² ப⁴வத² தாத்³ரு’ஸோ²(அ)ஹமபீஸ்²வரஸேவாயாம் உத்³யோகீ³ ஜாத​: |
4 இந்த வழியைப் பின்பற்றியவர்களை கொலைசெய்யும் அளவிற்கு துன்பப்படுத்தி இருக்கிறேன். இந்த வழியைப் பின்பற்றுகிற ஆண்களையும், பெண்களையும் கைதுசெய்து சிறையில் அடைத்தேன்.
மதமேதத்³ த்³விஷ்ட்வா தத்³க்³ராஹிநாரீபுருஷாந் காராயாம்’ ப³த்³த்⁴வா தேஷாம்’ ப்ராணநாஸ²பர்ய்யந்தாம்’ விபக்ஷதாம் அகரவம்|
5 இதைக்குறித்து பிரதான ஆசாரியனும், நீதிமன்றத்திலுள்ள அனைவரும் சாட்சி கொடுப்பார்கள். அவர்களிடமிருந்து தமஸ்குவிலுள்ள சகோதரர்களுக்குக் கொடுக்கும்படி கடிதங்களையும் பெற்றேன். இந்த வழியைப் பின்பற்றுகிறவர்களைத் தண்டிப்பதற்கென அவர்களைக் கைதுசெய்து, எருசலேமுக்குக் கொண்டுவரும்படி தமஸ்குவுக்குப் போனேன்.
மஹாயாஜக​: ஸபா⁴ஸத³​: ப்ராசீநலோகாஸ்²ச மமைதஸ்யா​: கதா²யா​: ப்ரமாணம்’ தா³தும்’ ஸ²க்நுவந்தி, யஸ்மாத் தேஷாம்’ ஸமீபாத்³ த³ம்மேஷகநக³ரநிவாஸிப்⁴ராத்ரு’க³ணார்த²ம் ஆஜ்ஞாபத்ராணி க்³ரு’ஹீத்வா யே தத்ர ஸ்தி²தாஸ்தாந் த³ண்ட³யிதும்’ யிரூஸா²லமம் ஆநயநார்த²ம்’ த³ம்மேஷகநக³ரம்’ க³தோஸ்மி|
6 “நான் தமஸ்குவை நெருங்கியபோது, மத்தியான வேளையானது. அப்பொழுது திடீரென வானத்திலிருந்து ஒரு பிரகாசமான ஒளி என்னைச் சுற்றிலும் பிரகாசித்தது.
கிந்து க³ச்ச²ந் தந்நக³ரஸ்ய ஸமீபம்’ ப்ராப்தவாந் ததா³ த்³விதீயப்ரஹரவேலாயாம்’ ஸத்யாம் அகஸ்மாத்³ க³க³ணாந்நிர்க³த்ய மஹதீ தீ³ப்தி ர்மம சதுர்தி³ஸி² ப்ரகாஸி²தவதீ|
7 நான் தரையில் விழுந்தேன். ‘சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்?’ என்று ஒரு குரல் எனக்குச் சொல்வதைக் கேட்டேன்.
ததோ மயி பூ⁴மௌ பதிதே ஸதி, ஹே ஸௌ²ல ஹே ஸௌ²ல குதோ மாம்’ தாட³யஸி? மாம்ப்ரதி பா⁴ஷித ஏதாத்³ரு’ஸ² ஏகோ ரவோபி மயா ஸ்²ருத​: |
8 “‘அப்பொழுது நான், ஆண்டவரே, நீர் யார்?’” என்றேன். “அதற்கு அவர், ‘நான் நசரேயனாகிய இயேசு, நீ துன்புறுத்துவது என்னைத்தான்’ என்று சொன்னார்.
ததா³ஹம்’ ப்ரத்யவத³ம்’, ஹே ப்ரபே⁴ கோ ப⁴வாந்? தத​: ஸோ(அ)வாதீ³த் யம்’ த்வம்’ தாட³யஸி ஸ நாஸரதீயோ யீஸு²ரஹம்’|
9 என்னுடனேகூட வந்தவர்கள் அந்த வெளிச்சத்தைக் கண்டார்கள். ஆனால், என்னுடன் பேசிக் கொண்டிருந்தவரின் குரலை அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை.
மம ஸங்கி³நோ லோகாஸ்தாம்’ தீ³ப்திம்’ த்³ரு’ஷ்ட்வா பி⁴யம்’ ப்ராப்தா​: , கிந்து மாம்ப்ரத்யுதி³தம்’ தத்³வாக்யம்’ தே நாபு³த்⁴யந்த|
10 “அப்பொழுது நான் அவரிடம், ‘ஆண்டவரே, நான் என்ன செய்யவேண்டும்?’ என்று கேட்டேன். “அதற்கு அவர், ‘நீ எழுந்து, தமஸ்கு பட்டணத்திற்குள்ளே போ. நீ செய்ய வேண்டியதெல்லாம், அங்கே உனக்குச் சொல்லப்படும்’ என்றார்.
தத​: பரம்’ ப்ரு’ஷ்டவாநஹம்’, ஹே ப்ரபோ⁴ மயா கிம்’ கர்த்தவ்யம்’? தத​: ப்ரபு⁴ரகத²யத், உத்தா²ய த³ம்மேஷகநக³ரம்’ யாஹி த்வயா யத்³யத் கர்த்தவ்யம்’ நிரூபிதமாஸ்தே தத் தத்ர த்வம்’ ஜ்ஞாபயிஷ்யஸே|
11 என்னுடனேகூட வந்தவர்கள் எனது கையைப் பிடித்து, தமஸ்கு பட்டணத்திற்குள்ளே என்னைக் கூட்டிக்கொண்டு சென்றார்கள். ஏனெனில், அந்த ஒளியின் பிரகாசத்தினால் நான் பார்வை இழந்துபோனேன்.
அநந்தரம்’ தஸ்யா​: க²ரதரதீ³ப்தே​: காரணாத் கிமபி ந த்³ரு’ஷ்ட்வா ஸங்கி³க³ணேந த்⁴ரு’தஹஸ்த​: ஸந் த³ம்மேஷகநக³ரம்’ வ்ரஜிதவாந்|
12 “பின்பு அனனியா என்னும் பெயருடைய ஒருவன் என்னைப் பார்க்க வந்தான். அவன் மோசேயின் சட்டத்தைப் பக்தியுடன் கைக்கொள்ளும் ஒருவனாயிருந்தான். தமஸ்குவில் வாழ்ந்த எல்லா யூதராலும், அவன் உயர்வாய் மதிக்கப்பட்டவனாகவும் இருந்தான்.
தந்நக³ரநிவாஸிநாம்’ ஸர்வ்வேஷாம்’ யிஹூதீ³யாநாம்’ மாந்யோ வ்யவஸ்தா²நுஸாரேண ப⁴க்தஸ்²ச ஹநாநீயநாமா மாநவ ஏகோ
13 அவன் என் அருகே நின்று, ‘சகோதரனாகிய சவுலே, நீ உன் கண் பார்வையைப் பெற்றுக்கொள்!’ என்றான். அந்த வினாடியிலேயே, என்னால் அவனைப் பார்க்கமுடிந்தது.
மம ஸந்நிதி⁴ம் ஏத்ய திஷ்ட²ந் அகத²யத், ஹே ப்⁴ராத​: ஸௌ²ல ஸுத்³ரு’ஷ்டி ர்ப⁴வ தஸ்மிந் த³ண்டே³(அ)ஹம்’ ஸம்யக் தம்’ த்³ரு’ஷ்டவாந்|
14 “பின்பு அனனியா என்னிடம்: ‘நமது தந்தையரின் இறைவன் உன்னைத் தெரிந்தெடுத்திருக்கிறார். நீ அவருடைய திட்டத்தை அறியும்படிக்கும், நீதிமானாகிய அவரைக் காணும்படிக்கும், அவருடைய வாயிலிருந்து வார்த்தைகளைக் கேட்கும்படிக்கும் அவர் உன்னைத் தெரிந்திருக்கிறார்.
தத​: ஸ மஹ்யம்’ கதி²தவாந் யதா² த்வம் ஈஸ்²வரஸ்யாபி⁴ப்ராயம்’ வேத்ஸி தஸ்ய ஸு²த்³த⁴ஸத்த்வஜநஸ்ய த³ர்ஸ²நம்’ ப்ராப்ய தஸ்ய ஸ்ரீமுக²ஸ்ய வாக்யம்’ ஸ்²ரு’ணோஷி தந்நிமித்தம் அஸ்மாகம்’ பூர்வ்வபுருஷாணாம் ஈஸ்²வரஸ்த்வாம்’ மநோநீதம்’ க்ரு’தவாநம்’|
15 நீ கண்டதையும் கேட்டதையும் குறித்து, அனைவருக்கும் அவருடைய சாட்சியாய் இருப்பாய்.
யதோ யத்³யத்³ அத்³ராக்ஷீரஸ்²ரௌஷீஸ்²ச ஸர்வ்வேஷாம்’ மாநவாநாம்’ ஸமீபே த்வம்’ தேஷாம்’ ஸாக்ஷீ ப⁴விஷ்யஸி|
16 இப்பொழுதும், நீ எதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறாய்? எழும்பி, அவருடைய பெயரைக் கூப்பிட்டு, திருமுழுக்கைப் பெற்றுக்கொண்டு, உன் பாவங்களைக் கழுவிக்கொள்’ என்றான்.
அதஏவ குதோ விலம்ப³ஸே? ப்ரபோ⁴ ர்நாம்நா ப்ரார்த்²ய நிஜபாபப்ரக்ஷாலநார்த²ம்’ மஜ்ஜநாய ஸமுத்திஷ்ட²|
17 “பின்பு நான், எருசலேமுக்கு திரும்பிவந்து ஆலயத்தில் மன்றாடிக்கொண்டிருக்கையில், நான் ஆவிக்குட்பட்டேன்.
தத​: பரம்’ யிரூஸா²லம்நக³ரம்’ ப்ரத்யாக³த்ய மந்தி³ரே(அ)ஹம் ஏகதா³ ப்ரார்த²யே, தஸ்மிந் ஸமயே(அ)ஹம் அபி⁴பூ⁴த​: ஸந் ப்ரபூ⁴ம்’ ஸாக்ஷாத் பஸ்²யந்,
18 அப்பொழுது நான் கர்த்தரைக் கண்டேன். அவர் என்னிடம், ‘தாமதியாதே! எருசலேமைவிட்டு சீக்கிரமாய் புறப்படு. ஏனெனில், அவர்கள் என்னைக்குறித்து நீ சொல்லும் சாட்சியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்’ என்றார்.
த்வம்’ த்வரயா யிரூஸா²லம​: ப்ரதிஷ்ட²ஸ்வ யதோ லோகாமயி தவ ஸாக்ஷ்யம்’ ந க்³ரஹீஷ்யந்தி, மாம்ப்ரத்யுதி³தம்’ தஸ்யேத³ம்’ வாக்யம் அஸ்²ரௌஷம்|
19 “அப்பொழுது நான், ‘கர்த்தாவே, நான் ஒவ்வொரு ஜெப ஆலயத்திற்கும் போய், உம்மில் விசுவாசமாய் இருந்தவர்களைச் சிறையிலிட்டு அடித்தது இவர்களுக்குத் தெரியுமே.
ததோஹம்’ ப்ரத்யவாதி³ஷம் ஹே ப்ரபோ⁴ ப்ரதிப⁴ஜநப⁴வநம்’ த்வயி விஸ்²வாஸிநோ லோகாந் ப³த்³த்⁴வா ப்ரஹ்ரு’தவாந்,
20 உமக்காக இரத்தச் சாட்சியாய் இறந்த ஸ்தேவான் கொலைசெய்யப்பட்டபோது, நானும் அங்கு நின்று அவர்களோடு உடன்பட்டேன். அத்துடன், அவனைக் கொன்றவர்களின் உடைகளுக்கும் நானே காவல் இருந்தேன்’ என்றேன்.
ததா² தவ ஸாக்ஷிண​: ஸ்திபா²நஸ்ய ரக்தபாதநஸமயே தஸ்ய விநாஸ²ம்’ ஸம்மந்ய ஸந்நிதௌ⁴ திஷ்ட²ந் ஹந்த்ரு’லோகாநாம்’ வாஸாம்’ஸி ரக்ஷிதவாந், ஏதத் தே விது³​: |
21 “அப்பொழுது கர்த்தர் என்னிடம், ‘நீ போ; நான் உன்னைத் தூரத்திலிருக்கிற யூதரல்லாதவர்களிடத்திற்கு அனுப்புவேன்’ என்றார்” என்று பவுல் பேசி முடித்தான்.
தத​: ஸோ(அ)கத²யத் ப்ரதிஷ்ட²ஸ்வ த்வாம்’ தூ³ரஸ்த²பி⁴ந்நதே³ஸீ²யாநாம்’ ஸமீபம்’ ப்ரேஷயிஷ்யே|
22 பவுல் இதைச் சொல்லும்வரை கூடியிருந்தவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். பின்பு அவர்கள் உரத்த குரலில், “பூமியிலிருந்து இவனை அடியோடு ஒழியுங்கள். இவன் வாழ்வதற்குத் தகுதியற்றவன்!” என்று சத்தமிட்டார்கள்.
ததா³ லோகா ஏதாவத்பர்ய்யந்தாம்’ ததீ³யாம்’ கதா²ம்’ ஸ்²ருத்வா ப்ரோச்சைரகத²யந், ஏநம்’ பூ⁴மண்ட³லாத்³ தூ³ரீகுருத, ஏதாத்³ரு’ஸ²ஜநஸ்ய ஜீவநம்’ நோசிதம்|
23 அவர்கள் சத்தமிட்டுக்கொண்டு தங்கள் உடைகளைக் கழற்றி எறிந்தார்கள். புழுதியை அள்ளி மேலே வீசினார்கள்.
இத்யுச்சை​: கத²யித்வா வஸநாநி பரித்யஜ்ய க³க³ணம்’ ப்ரதி தூ⁴லீரக்ஷிபந்
24 அதனால் அந்த படைத்தளபதி, பவுலை முகாமுக்குள் கொண்டுபோகும்படி உத்தரவிட்டான். பின்பு அவன், கூடியிருந்த மக்கள் ஏன் பவுலைப் பார்த்து இப்படிச் சத்தமிட்டார்கள் என்று அறியும்படி, அவனை சவுக்கால் அடித்து விசாரிக்கும்படி உத்தரவிட்டான்.
தத​: ஸஹஸ்ரஸேநாபதி​: பௌலம்’ து³ர்கா³ப்⁴யந்தர நேதும்’ ஸமாதி³ஸ²த்| ஏதஸ்ய ப்ரதிகூலா​: ஸந்தோ லோகா​: கிந்நிமித்தம் ஏதாவது³ச்சை​: ஸ்வரம் அகுர்வ்வந், ஏதத்³ வேத்தும்’ தம்’ கஸ²யா ப்ரஹ்ரு’த்ய தஸ்ய பரீக்ஷாம்’ கர்த்துமாதி³ஸ²த்|
25 அவர்கள் அவனைச் சவுக்கால் அடிப்பதற்காக வாரினால் இழுத்துக் கட்டியபோது, பவுல் அங்கு நின்ற நூற்றுக்குத் தலைவனைப் பார்த்து, “குற்றவாளியாகக் காணப்படாத ரோம குடிமகன் ஒருவனை சவுக்கால் அடிப்பது சட்டபூர்வமானதா?” என்று கேட்டான்.
பதா³தயஸ்²சர்ம்மநிர்ம்மிதரஜ்ஜுபி⁴ஸ்தஸ்ய ப³ந்த⁴நம்’ கர்த்துமுத்³யதாஸ்தாஸ்ததா³நீம்’ பௌல​: ஸம்முக²ஸ்தி²தம்’ ஸ²தஸேநாபதிம் உக்தவாந் த³ண்டா³ஜ்ஞாயாம் அப்ராப்தாயாம்’ கிம்’ ரோமிலோகம்’ ப்ரஹர்த்தும்’ யுஷ்மாகம் அதி⁴காரோஸ்தி?
26 இதைக் கேட்ட நூற்றுக்குத் தலைவன், படைத்தளபதியிடம் சென்று இதை அறிவித்தான். அவன் அந்தத் தலைவனிடம், “நீர் என்ன செய்யப்போகிறீர்? இவன் ஒரு ரோம குடிமகன்” என்றான்.
ஏநாம்’ கதா²ம்’ ஸ்²ருத்வா ஸ ஸஹஸ்ரஸேநாபதே​: ஸந்நிதி⁴ம்’ க³த்வா தாம்’ வார்த்தாமவத³த் ஸ ரோமிலோக ஏதஸ்மாத் ஸாவதா⁴ந​: ஸந் கர்ம்ம குரு|
27 அப்பொழுது அந்த படைத்தளபதி பவுலிடம் போய், “நீ ஒரு ரோம குடிமகனா? அதை எனக்குச் சொல்” என்றான் அதற்குப் பவுல். “ஆம், நான் ஒரு ரோம குடிமகன்தான்” என்றான்.
தஸ்மாத் ஸஹஸ்ரஸேநாபதி ர்க³த்வா தமப்ராக்ஷீத் த்வம்’ கிம்’ ரோமிலோக​: ? இதி மாம்’ ப்³ரூஹி| ஸோ(அ)கத²யத் ஸத்யம்|
28 அப்பொழுது அந்த படைத்தளபதி பவுலிடம், “நான் பெருந்தொகைப் பணத்தைச் செலுத்தியே என் குடியுரிமையைப் பெற்றுக்கொண்டேன்” என்றான். அதற்கு பவுல், “நானோ இந்தக் குடியுரிமை உடையவனாகவே பிறந்தேன்” என்றான்.
தத​: ஸஹஸ்ரஸேநாபதி​: கதி²தவாந் ப³ஹுத்³ரவிணம்’ த³த்த்வாஹம்’ தத் பௌரஸக்²யம்’ ப்ராப்தவாந்; கிந்து பௌல​: கதி²தவாந் அஹம்’ ஜநுநா தத் ப்ராப்தோ(அ)ஸ்மி|
29 பவுலை விசாரிக்க இருந்தவர்கள், உடனே அவனைவிட்டு விலகிச்சென்றார்கள். தான், ஒரு ரோம குடிமகனான பவுலை சங்கிலிகளால் கட்டுவித்ததை உணர்ந்தபோது, அந்த படைத்தளபதியும் பயமடைந்தான்.
இத்த²ம்’ ஸதி யே ப்ரஹாரேண தம்’ பரீக்ஷிதும்’ ஸமுத்³யதா ஆஸந் தே தஸ்ய ஸமீபாத் ப்ராதிஷ்ட²ந்த; ஸஹஸ்ரஸேநாபதிஸ்தம்’ ரோமிலோகம்’ விஜ்ஞாய ஸ்வயம்’ யத் தஸ்ய ப³ந்த⁴நம் அகார்ஷீத் தத்காரணாத்³ அபி³பே⁴த்|
30 மறுநாளில் படைத்தளபதி, பவுல் ஏன் யூதர்களினால் குற்றம் சாட்டப்பட்டான் என்று சரியாக அறிய விரும்பினான். அதனால் அவன் பவுலை சங்கிலிகளிலிருந்து விடுவித்து, தலைமை ஆசாரியர்களையும், ஆலோசனைச் சங்கத்திலுள்ள அனைவரையும் ஒன்றுகூடும்படி உத்தரவிட்டான். பின்பு அவன் பவுலைக் கொண்டுவந்து, அவர்களுக்கு முன்பாக நிறுத்தினான்.
யிஹூதீ³யலோகா​: பௌலம்’ குதோ(அ)பவத³ந்தே தஸ்ய வ்ரு’த்தாந்தம்’ ஜ்ஞாதும்’ வாஞ்ச²ந் ஸஹஸ்ரஸேநாபதி​: பரே(அ)ஹநி பௌலம்’ ப³ந்த⁴நாத் மோசயித்வா ப்ரதா⁴நயாஜகாந் மஹாஸபா⁴யா​: ஸர்வ்வலோகாஸ்²ச ஸமுபஸ்தா²தும் ஆதி³ஸ்²ய தேஷாம்’ ஸந்நிதௌ⁴ பௌலம் அவரோஹ்ய ஸ்தா²பிதவாந்|

< அப்போஸ்தலர் 22 >