< 3 யோவான் 1 >

1 சபைத்தலைவனாகிய நான், சத்தியத்தின்படி நான் நேசிக்கிற, என் அன்பான நண்பன் காயுவுக்கு எழுதுகிறதாவது:
ப்ராசீநோ (அ)ஹம்’ ஸத்யமதாத்³ யஸ்மிந் ப்ரீயே தம்’ ப்ரியதமம்’ கா³யம்’ ப்ரதி பத்ரம்’ லிகா²மி|
2 பிரியமானவனே, உன் ஆத்துமா இருப்பதுபோல், நீ உன் உடல் நலத்திலும் மற்றெல்லாவற்றிலும் நன்றாயிருக்கும்படி, நான் உனக்காக மன்றாடுகிறேன்.
ஹே ப்ரிய, தவாத்மா யாத்³ரு’க் ஸு²பா⁴ந்விதஸ்தாத்³ரு’க் ஸர்வ்வவிஷயே தவ ஸு²ப⁴ம்’ ஸ்வாஸ்த்²யஞ்ச பூ⁴யாத்|
3 சில சகோதரர் வந்து, நீ எப்படி சத்தியத்தை உறுதியாய்க் கைக்கொள்கிறாய் என்றும், நீ தொடர்ந்து சத்தியத்தின்படி நடக்கிறாய் என்றும் எனக்குச் சொன்னபோது, நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
ப்⁴ராத்ரு’பி⁴ராக³த்ய தவ ஸத்யமதஸ்யார்த²தஸ்த்வம்’ கீத்³ரு’க் ஸத்யமதமாசரஸ்யேதஸ்ய ஸாக்ஷ்யே த³த்தே மம மஹாநந்தோ³ ஜாத​: |
4 எனது பிள்ளைகள் சத்தியத்தில் நடக்கிறார்கள் என்று கேள்விப்படுவதைவிட வேறு பெரிதான சந்தோஷம் எனக்கு இல்லை.
மம ஸந்தாநா​: ஸத்யமதமாசரந்தீதிவார்த்தாதோ மம ய ஆநந்தோ³ ஜாயதே ததோ மஹத்தரோ நாஸ்தி|
5 அன்பான நண்பனே, உன்னிடம் வந்துபோகிற சகோதரர் உனக்கு அந்நியராய் இருந்துங்கூட, நீ அவர்களுக்கு உதவி செய்வதில் உண்மையுள்ளவனாய் இருந்தாய்.
ஹே ப்ரிய, ப்⁴ராத்ரு’ந் ப்ரதி விஸே²ஷதஸ்தாந் விதே³ஸி²நோ ப்⁴ரு’த்ரு’ந் ப்ரதி த்வயா யத்³யத் க்ரு’தம்’ தத் ஸர்வ்வம்’ விஸ்²வாஸிநோ யோக்³யம்’|
6 அவர்கள் உன்னுடைய அன்பைக்குறித்து, இங்குள்ள திருச்சபைக்குச் சாட்சி சொல்லியிருக்கிறார்கள். நீ இறைவனுக்கு ஏற்றவிதத்தில் அப்படிப்பட்ட சகோதரர்களை வழியனுப்பி வைப்பது நல்லது.
தே ச ஸமிதே​: ஸாக்ஷாத் தவ ப்ரம்ந​: ப்ரமாணம்’ த³த்தவந்த​: , அபரம் ஈஸ்²வரயோக்³யரூபேண தாந் ப்ரஸ்தா²பயதா த்வயா ஸத்கர்ம்ம காரிஷ்யதே|
7 ஏனெனில், அவர்கள் கிறிஸ்துவின் பெயருக்காகவே அவிசுவாசிகளிடமிருந்து எவ்வித உதவியையும் பெற்றுக்கொள்ளாமல், பயணமாய் சென்றார்கள்.
யதஸ்தே தஸ்ய நாம்நா யாத்ராம்’ விதா⁴ய பி⁴ந்நஜாதீயேப்⁴ய​: கிமபி ந க்³ரு’ஹீதவந்த​: |
8 எனவே அப்படிப்பட்டவர்களை நாம் உபசரிக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். அவ்விதமாகத்தான் நாம் சத்தியத்துக்காக ஒத்துழைக்க முடியும்.
தஸ்மாத்³ வயம்’ யத் ஸத்யமதஸ்ய ஸஹாயா ப⁴வேம தத³ர்த²மேதாத்³ரு’ஸா² லோகா அஸ்மாபி⁴ரநுக்³ரஹீதவ்யா​: |
9 இதை நான் திருச்சபைக்கு எழுதினேன். ஆனால் திருச்சபையில் தான் முதல்வனாயிருக்க விரும்பிய தியோத்திரேப்பு எங்கள் தலைமைத்துவத்தை ஏற்க விரும்பவில்லை.
ஸமிதிம்’ ப்ரத்யஹம்’ பத்ரம்’ லிகி²தவாந் கிந்து தேஷாம்’ மத்⁴யே யோ தி³யத்ரிபி²​: ப்ரதா⁴நாயதே ஸோ (அ)ஸ்மாந் ந க்³ரு’ஹ்லாதி|
10 எனவே நான் அங்கு வந்தால், அவன் செய்வதைக்குறித்து உங்கள் எல்லோருக்கும் எடுத்துச்சொல்வேன். அவன் தீய எண்ணத்துடன் எங்களைப்பற்றி அவதூறாய்ப் பேசுகிறான். அதிலும் திருப்தியடையாமல், அங்கு வருகின்ற சகோதரரையும் வரவேற்க மறுக்கின்றான். அவர்களை வரவேற்க விரும்புகிற மற்றவர்களையும் தடைசெய்து, அப்படிச் செய்கிறவர்களையும் திருச்சபையைவிட்டு விலக்குகிறான்.
அதோ (அ)ஹம்’ யதோ³பஸ்தா²ஸ்யாமி ததா³ தேந யத்³யத் க்ரியதே தத் ஸர்வ்வம்’ தம்’ ஸ்மாரயிஷ்யாமி, யத​: ஸ து³ர்வ்வாக்யைரஸ்மாந் அபவத³தி, தேநாபி த்ரு’ப்திம்’ ந க³த்வா ஸ்வயமபி ப்⁴ராத்ரு’ந் நாநுக்³ரு’ஹ்லாதி யே சாநுக்³ரஹீதுமிச்ச²ந்தி தாந் ஸமிதிதோ (அ)பி ப³ஹிஷ்கரோதி|
11 அன்பான நண்பனே, தீமையைப் பார்த்து, நீயும் தீமை செய்யாதே! நன்மையையே செய். நன்மை செய்கிறவன் யாரோ, அவன் இறைவனுக்குரியவனாகவே இருக்கிறான். தீமையைச் செய்கிறவன் யாரோ அவன் இறைவனைக் கண்டதேயில்லை.
ஹே ப்ரிய, த்வயா து³ஷ்கர்ம்ம நாநுக்ரியதாம்’ கிந்து ஸத்கர்ம்மைவ| ய​: ஸத்கர்ம்மாசாரீ ஸ ஈஸ்²வராத் ஜாத​: , யோ து³ஷ்கர்ம்மாசாரீ ஸ ஈஸ்²வரம்’ ந த்³ரு’ஷ்டவாந்|
12 தேமேத்திரியுவைக்குறித்து எல்லோரும் நன்றாக பேசுகிறார்கள்; அதுவுமல்லாமல் அவன் சத்தியத்தாலும் நற்சாட்சி பெற்றிருக்கிறான். நாங்களும் அவனைக்குறித்து நற்சாட்சி கொடுக்கிறோம், எங்கள் சாட்சி உண்மை என்பதை நீ அறிவாய்.
தீ³மீத்ரியஸ்ய பக்ஷே ஸர்வ்வை​: ஸாக்ஷ்யம் அதா³யி விஸே²ஷத​: ஸத்யமதேநாபி, வயமபி தத்பக்ஷே ஸாக்ஷ்யம்’ த³த்³ம​: , அஸ்மாகஞ்ச ஸாக்ஷ்யம்’ ஸத்யமேவேதி யூயம்’ ஜாநீத²|
13 உனக்கு எழுதவேண்டிய காரியங்கள் அதிகம் உண்டு; ஆனால் நான் அவற்றை மையினால் காகிதங்களில் எழுத விரும்பவில்லை.
த்வாம்’ ப்ரதி மயா ப³ஹூநி லேகி²தவ்யாநி கிந்து மஸீலேக²நீப்⁴யாம்’ லேகி²தும்’ நேச்சா²மி|
14 உன்னை விரைவில் சந்திப்பேன் என எதிர்பார்க்கிறேன். அப்பொழுது, நாம் நேரடியாகவே பேசிக்கொள்ளலாம். உனக்கு சமாதானம் உண்டாவதாக. இங்குள்ள மற்ற நண்பர்களும் தங்கள் வாழ்த்துதல்களை அனுப்புகிறார்கள். அங்குள்ள ஒவ்வொருவருக்கும் பெயர்பெயராக வாழ்த்துதல் கூறு.
அசிரேண த்வாம்’ த்³ரக்ஷ்யாமீதி மம ப்ரத்யாஸா²ஸ்தே ததா³வாம்’ ஸம்முகீ²பூ⁴ய பரஸ்பரம்’ ஸம்பா⁴ஷிஷ்யாவஹே| தவ ஸா²ந்தி ர்பூ⁴யாத்| அஸ்மாகம்’ மித்ராணி த்வாம்’ நமஸ்காரம்’ ஜ்ஞாபயந்தி த்வமப்யேகைகஸ்ய நாம ப்ரோச்ய மித்ரேப்⁴யோ நமஸ்குரு| இதி|

< 3 யோவான் 1 >