< 2 சாமுவேல் 6 >

1 தாவீது இஸ்ரயேல் மக்களனைவருக்குள்ளும் தெரிந்தெடுக்கப்பட்ட முப்பதாயிரம்பேரை மறுபடியும் ஒன்று சேர்த்தான்.
Давид а стрынс ярэшь пе тоць алеший луй Исраел, ын нумэр де трейзечь де мий де оамень.
2 கேருபீன்களுக்கு நடுவில் வீற்றிருக்கும் சேனைகளின் யெகோவாவின் பெயரால் அழைக்கப்பட்ட இறைவனின் பெட்டியைக் கொண்டுவரும்படி, யூதாவிலுள்ள பாலை என்னும் இடத்திற்கு, தாவீதும் அவன் மனிதர் அனைவரும் புறப்பட்டுச் சென்றார்கள்.
Ши Давид, ку тот попорул каре ера ку ел, а порнит де ла Баале-Иуда ка сэ суе де аколо кивотул луй Думнезеу, ынаинтя кэруя есте кемат Нумеле Домнулуй оштирилор, каре стэ ынтре херувимь, дясупра кивотулуй.
3 அந்த இறைவனின் பெட்டியை ஒரு புதிய வண்டியில் ஏற்றி மலையில் இருந்த அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டுவந்தார்கள். அபினதாபின் மகன்களான ஊசாவும், அகியோவும் அந்தப் புதிய வண்டியை நடத்தினார்கள்.
Ау пус кивотул луй Думнезеу ынтр-ун кар ноу ши л-ау ридикат дин каса луй Абинадаб, де пе дял; Уза ши Ахио, фиул луй Абинадаб, кырмуяу карул чел ноу.
4 இறைவனின் பெட்டி அதில் இருந்தது. அதற்கு முன்னால் அகியோ போய்க்கொண்டிருந்தான்.
Л-ау луат дар дин каса луй Абинадаб, де пе дял; Уза мерӂя алэтурь де кивотул луй Думнезеу ши Ахио мерӂя ынаинтя кивотулуй.
5 தாவீதும் இஸ்ரயேலின் குடும்பத்தார் அனைவரும் தேவதாரு மரத்தால் செய்யப்பட்ட யாழோடும், வீணை, தம்புரா, மேளம், தாளம் ஆகியவற்றோடும் யெகோவாவுக்கு முன்பாக தங்கள் முழு பலத்தோடும் ஆடிப்பாடிக் கொண்டுபோனார்கள்.
Давид ши тоатэ каса луй Исраел кынтау ынаинтя Домнулуй ку тот фелул де инструменте де лемн де кипарос, ку харпе, ку лэуте, ку тимпане, ку флуере ши ку цимбале.
6 அவர்கள் நாகோனின் சூடடிக்கும் களத்திற்கு வந்தபோது, மாடுகள் மிரண்டதினால் ஊசா கையை நீட்டி இறைவனின் பெட்டியை எட்டிப்பிடித்தான்.
Кынд ау ажунс ла ария луй Након, Уза а ынтинс мына спре кивотул луй Думнезеу ши л-а апукат, пентру кэ ера сэ-л рэстоарне боий.
7 ஊசாவின் பயபக்தியற்ற இச்செயலினால் ஊசாவுக்கு விரோதமாக யெகோவாவின் கோபம் மூண்டது. எனவே அவர் அந்த இடத்திலேயே ஊசாவை அடித்தார். அவன் இறைவனின் பெட்டிக்கு அருகே விழுந்து செத்தான்.
Домнул С-а апринс де мыние ымпотрива луй Уза ши Думнезеу л-а ловит пе лок пентру пэкатул луй ши а мурит аколо, лынгэ кивотул луй Думнезеу.
8 யெகோவாவின் கோபம் ஊசாவுக்கு விரோதமாய் மூண்டதினால், தாவீது கோபமடைந்தான். அதனால் இந்நாள்வரை அந்த இடம், பேரேஸ் ஊசா என அழைக்கப்படுகிறது.
Давид с-а ынтристат кэ Думнезеу ловисе пе Уза ку о астфел де педяпсэ, рупынду-л пе лок. Ши локул ачеста а фост нумит пынэ ын зиуа де азь Перец-Уза.
9 தாவீது அன்றையதினம் யெகோவாவுக்குப் பயந்து, “யெகோவாவின் பெட்டி எப்படி என்னிடம் வரமுடியும்?” என்று கூறினான்.
Давид с-а темут де Домнул ын зиуа ачея ши а зис: „Кум сэ интре кивотул Домнулуй ла мине?”
10 எனவே யெகோவாவின் பெட்டியை தன்னுடன் தாவீதின் நகரத்தில் இருக்கும்படி, அதை அங்கு கொண்டுவர அவன் விரும்பவில்லை. அதனால், அவன் அதைப் புறம்பே கொண்டுபோய் கித்தியனான ஓபேத் ஏதோமின் வீட்டிலே வைத்தான்.
Н-а врут сэ адукэ кивотул Домнулуй ла ел, ын четатя луй Давид, ши л-а дус ын каса луй Обед-Едом дин Гат.
11 யெகோவாவின் பெட்டி கித்தியனான ஓபேத் ஏதோமின் வீட்டில் மூன்று மாதங்கள் இருந்தது. யெகோவா ஓபேத் ஏதோமையும் அவன் குடும்பம் முழுவதையும் ஆசீர்வதித்தார்.
Кивотул Домнулуй а рэмас трей лунь ын каса луй Обед-Едом дин Гат ши Домнул а бинекувынтат пе Обед-Едом ши тоатэ каса луй.
12 அப்பொழுது, இறைவனின் பெட்டி ஓபேத் ஏதோமின் வீட்டில் இருப்பதால், அவனையும், குடும்பத்தாரையும் அவனுக்குள்ள எல்லாவற்றையும் யெகோவா ஆசீர்வதிக்கிறார் என தாவீதுக்குச் சொல்லப்பட்டது. எனவே தாவீது போய் இறைவனின் பெட்டியை ஓபேத் ஏதோமின் வீட்டிலிருந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் தாவீதின் நகரத்திற்குக் கொண்டுவந்தான்.
Ау венит ши ау спус ымпэратулуй Давид: „Домнул а бинекувынтат каса луй Обед-Едом ши тот че авя дин причина кивотулуй луй Думнезеу.” Атунч, Давид а порнит ши а суит кивотул луй Думнезеу дин каса луй Обед-Едом ын четатя луй Давид, ын мижлокул веселией.
13 யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்து வந்தவர்கள் ஆறு அடி எடுத்து வைத்ததும் தாவீது ஒரு மாட்டையும், ஒரு கொழுத்த கன்றையும் அங்கே பலிசெலுத்தினான்.
Кынд чей че дучяу кивотул Домнулуй ау фэкут шасе пашь, ау жертфит ун боу ши ун вицел грас.
14 அப்பொழுது தாவீது நார்ப்பட்டு ஏபோத்தை அணிந்துகொண்டு யெகோவாவுக்கு முன்பாகத் தன் முழு பலத்தோடும் நடனமாடினான்.
Давид жука дин рэспутерь ынаинтя Домнулуй ши ера ынчинс ку ефодул де ин субцире.
15 தாவீதும் இஸ்ரயேல் குடும்பத்தார் யாவரும் ஆரவாரத்தோடும், எக்காள சத்தத்தோடும் யெகோவாவின் பெட்டியைக் கொண்டுவந்தார்கள்.
Астфел ау суит Давид ши тоатэ каса луй Исраел кивотул Домнулуй ын стригэте де букурие ши ын сунет де трымбице.
16 யெகோவாவின் பெட்டி தாவீதின் நகரத்திற்குள்ளே வருகின்றபோது, சவுலின் மகள் மீகாள் ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டிருந்தாள். அரசன் தாவீது யெகோவாவுக்கு முன்பாகத் துள்ளிக் குதித்து ஆடுவதைக் கண்டதும் அவள் தன் இருதயத்தில் அவனை அவமதித்தாள்.
Пе кынд кивотул Домнулуй интра ын четатя луй Давид, Микал, фата луй Саул, се уйта пе ферястрэ ши, вэзынд пе ымпэратул Давид сэринд ши жукынд ынаинтя Домнулуй, л-а диспрецуит ын инима ей.
17 அவர்கள் யெகோவாவின் பெட்டியைக் கொண்டுவந்து தாவீது அதற்காக அமைத்திருந்த கூடாரத்திற்குள் அதற்குரிய இடத்தில் அதை வைத்தார்கள். அப்பொழுது தாவீது யெகோவாவுக்கு முன்பாக தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் செலுத்தினான்.
Дупэ че ау адус кивотул Домнулуй, л-ау пус ла локул луй, ын мижлокул кортулуй пе каре-л ридикасе Давид пентру кивот, ши Давид а адус ынаинтя Домнулуй ардерь-де-тот ши жертфе де мулцумире.
18 தாவீது தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் செலுத்தியபின் சேனைகளின் யெகோவாவின் பெயராலே மக்களை ஆசீர்வதித்தான்.
Кынд а испрэвит Давид де адус ардериле-де-тот ши жертфеле де мулцумире, а бинекувынтат попорул ын Нумеле Домнулуй оштирилор.
19 பின்பு அவன் அங்கேயிருந்த இஸ்ரயேலின் திரள்கூட்டமான ஆண்கள், பெண்கள் என ஒவ்வொருவருக்கும் ஒரு அப்பத்தையும், ஒரு பேரீச்சம்பழ அடையையும், ஒரு திராட்சைப்பழ அடையையும் கொடுத்தான். பின்பு எல்லா மக்களும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப் போனார்கள்.
Апой а ымпэрцит ла тот попорул, ла тоатэ мулцимя луй Исраел, бэрбаць ши фемей, фиекэруя кыте о пыне, о букатэ де карне ши о туртэ де стафиде. Ши тот попорул а плекат, фиекаре ла каса луй.
20 தாவீது தன் குடும்பத்தாரை ஆசீர்வதிக்கும்படி வீட்டிற்குத் திரும்பியபோது, சவுலின் மகள் மீகாள் தாவீதைச் சந்திக்கும்படி அவனிடம் வந்தாள். அவள், “இஸ்ரயேலின் அரசன் தன் பணியாட்களான அடிமைப் பெண்கள் முன்னிலையில் இழிவான ஒருவன் செய்வதுபோல, தன் உடைகளைக் கழற்றியதினால் தன்னை எவ்வளவாய் மேன்மைப்படுத்திக் கொண்டார்!” என்று சொன்னாள்.
Давид с-а ынторс сэ-шь бинекувынтезе каса. Микал, фата луй Саул, й-а ешит ынаинте ши а зис: „Ку кытэ чинсте с-а пуртат азь ымпэратул луй Исраел дескоперинду-се ынаинтя служничелор супушилор луй, кум с-ар дескопери ун ом де нимик!”
21 அதற்குத் தாவீது மீகாளிடம், “நான் யெகோவாவுக்கு முன்பாகவே ஆடினேன். அவர் யெகோவாவின் மக்களான இஸ்ரயேலரின்மேல் என்னை ஆளுநனாக நியமித்தபோது, உன்னுடைய தகப்பனையோ அல்லது அவருடைய வீட்டாரில் ஒருவனையோவிட, என்னையே தெரிந்துகொண்டார். நான் யெகோவாவுக்கு முன்பாக ஆடிப்பாடுவேன்.
Давид а рэспунс Микалей: „Ынаинтя Домнулуй, каре м-а алес май пресус де татэл тэу ши де тоатэ каса луй, ка сэ мэ пунэ кэпетение песте попорул Домнулуй, песте Исраел, ынаинтя Домнулуй ам жукат.
22 நான் அதைப் பார்க்கிலும் இன்னும் அதிகமாய் மதிப்பற்றவனாவேன்; எனது பார்வையிலுங்கூட நான் தாழ்மைப்படுவேன். ஆனால் நீ சொல்லிக் குறிப்பிட்ட அந்த அடிமைப் பெண்களால் நான் கனம்செய்யப்படுவேன்” என்றான்.
Вряу сэ мэ арэт ши май де нимик декыт де дата аста ши сэ мэ ынжосеск ын окий мей, тотушь вой фи ын чинсте ла служничеле де каре ворбешть.”
23 சவுலின் மகள் மீகாள் சாகும் நாள்வரை பிள்ளையற்றவளாய் இருந்தாள்.
Ши Микал, фата луй Саул, н-а авут копий пынэ ын зиуа морций ей.

< 2 சாமுவேல் 6 >