< 2 சாமுவேல் 4 >

1 அப்னேர் எப்ரோனிலே கொலைசெய்யப்பட்டதைக் கேள்விப்பட்ட சவுலின் மகன் இஸ்போசேத் தன் தைரியத்தை இழந்தான். இஸ்ரயேலர் எல்லோரும் திகிலடைந்தார்கள்.
וַיִּשְׁמַ֣ע בֶּן־שָׁא֗וּל כִּ֣י מֵ֤ת אַבְנֵר֙ בְּחֶבְרֹ֔ון וַיִּרְפּ֖וּ יָדָ֑יו וְכָל־יִשְׂרָאֵ֖ל נִבְהָֽלוּ׃
2 கொள்ளைக் கூட்டத்திற்கு தலைவர்களான இருவர் சவுலின் மகனுக்கு இருந்தனர். ஒருவன் பெயர் பானா, மற்றவன் பெயர் ரேகாப். இவர்கள் பென்யமீன் கோத்திரத்தில் பேரோத்தியனான ரிம்மோனின் மகன்கள். பேரோத்தும் பென்யமீன் கோத்திரத்தின் ஒரு பகுதியாக கருதப்பட்டது.
וּשְׁנֵ֣י אֲנָשִׁ֣ים שָׂרֵֽי־גְדוּדִ֣ים הָי֪וּ בֶן־שָׁא֟וּל שֵׁם֩ הָאֶחָ֨ד בַּֽעֲנָ֜ה וְשֵׁ֧ם הַשֵּׁנִ֣י רֵכָ֗ב בְּנֵ֛י רִמֹּ֥ון הַבְּאֶֽרֹתִ֖י מִבְּנֵ֣י בִנְיָמִ֑ן כִּ֚י גַּם־בְּאֵרֹ֔ות תֵּחָשֵׁ֖ב עַל־בִּנְיָמִֽן׃
3 ஏனெனில் பேரோத்தியர் கித்தாயீமுக்கு தப்பி ஓடிப்போய் அங்கே அந்நியராய் இன்றுவரை வாழ்ந்து வருகிறார்கள்.
וַיִּבְרְח֥וּ הַבְּאֵרֹתִ֖ים גִּתָּ֑יְמָה וַֽיִּהְיוּ־שָׁ֣ם גָּרִ֔ים עַ֖ד הַיֹּ֥ום הַזֶּֽה׃ ס
4 சவுலின் மகன் யோனத்தானுக்கு இரண்டு கால்களும் முடமான ஒரு மகன் இருந்தான்; சவுலும், யோனத்தானும் இறந்த செய்தி யெஸ்ரயேலிருந்து வந்தபோது, அவன் ஐந்து வயதுடையவனாயிருந்தான். அவனுடைய தாதி அவனைத் தூக்கிக்கொண்டு அவ்விடத்தைவிட்டுத் தப்பி, ஓடியவேகத்தில் அவன் விழுந்தபோதே அவன் முடவனானான். அவன் பெயர் மேவிபோசேத்.
וְלִיהֹֽונָתָן֙ בֶּן־שָׁא֔וּל בֵּ֖ן נְכֵ֣ה רַגְלָ֑יִם בֶּן־חָמֵ֣שׁ שָׁנִ֣ים הָיָ֡ה בְּבֹ֣א שְׁמֻעַת֩ שָׁא֨וּל וִיהֹֽונָתָ֜ן מִֽיִּזְרְעֶ֗אל וַתִּשָּׂאֵ֤הוּ אֹֽמַנְתֹּו֙ וַתָּנֹ֔ס וַיְהִ֞י בְּחָפְזָ֥הּ לָנ֛וּס וַיִּפֹּ֥ל וַיִּפָּסֵ֖חַ וּשְׁמֹ֥ו מְפִיבֹֽשֶׁת׃
5 பேரோத்தியனான ரிம்மோனின் மகன்களாகிய ரேகாபும், பானாவும் இஸ்போசேத்தின் வீட்டிற்குப் போகப் புறப்பட்டார்கள். மத்தியான வேளையில் அவன் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது அவனுடைய வீட்டிற்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள்.
וַיֵּ֨לְכ֜וּ בְּנֵֽי־רִמֹּ֤ון הַבְּאֵֽרֹתִי֙ רֵכָ֣ב וּבַעֲנָ֔ה וַיָּבֹ֙אוּ֙ כְּחֹ֣ם הַיֹּ֔ום אֶל־בֵּ֖ית אִ֣ישׁ בֹּ֑שֶׁת וְה֣וּא שֹׁכֵ֔ב אֵ֖ת מִשְׁכַּ֥ב הַֽצָּהֳרָֽיִם׃
6 அவர்கள் இருவரும் கோதுமையை வாங்க வருகிறவர்கள்போல இஸ்போசேத்தின் வீட்டின் உட்பகுதிக்குச் சென்று அவனுடைய வயிற்றில் குத்தினார்கள். பின் பானாவும் அவன் சகோதரன் ரேகாபும் தப்பி ஓடிவிட்டார்கள்.
וְ֠הֵנָּה בָּ֜אוּ עַד־תֹּ֤וךְ הַבַּ֙יִת֙ לֹקְחֵ֣י חִטִּ֔ים וַיַּכֻּ֖הוּ אֶל־הַחֹ֑מֶשׁ וְרֵכָ֛ב וּבַעֲנָ֥ה אָחִ֖יו נִמְלָֽטוּ׃
7 இஸ்போசேத் தன் படுக்கை அறையில் கட்டிலில் படுத்திருக்கும் போதுதான் அவர்கள் உள்ளே போனார்கள். அவனைக் குத்திக் கொன்றபின் அவன் தலையை வெட்டி அதை எடுத்துக்கொண்டு இரவு முழுவதும் அரபா வழியாகப் பயணம் செய்தார்கள்.
וַיָּבֹ֣אוּ הַבַּ֗יִת וְהֽוּא־שֹׁכֵ֤ב עַל־מִטָּתֹו֙ בַּחֲדַ֣ר מִשְׁכָּבֹ֔ו וַיַּכֻּ֙הוּ֙ וַיְמִתֻ֔הוּ וַיָּסִ֖ירוּ אֶת־רֹאשֹׁ֑ו וַיִּקְחוּ֙ אֶת־רֹאשֹׁ֔ו וַיֵּֽלְכ֛וּ דֶּ֥רֶךְ הָעֲרָבָ֖ה כָּל־הַלָּֽיְלָה׃
8 பின்பு அவர்கள் இஸ்போசேத்தின் தலையை எப்ரோனில் இருந்த தாவீது அரசனிடம் கொண்டுவந்தார்கள். அவர்கள் அவனிடம், “இதோ உமது உயிரை வாங்கத்தேடிய, உமது பகைவனான சவுலின் மகன் இஸ்போசேத்தின் தலை. இன்றைய தினம் யெகோவா என் தலைவனான அரசருக்காக சவுலையும் அவன் பிள்ளைகளையும் பழிவாங்கினார்” என்றார்கள்.
וַ֠יָּבִאוּ אֶת־רֹ֨אשׁ אִֽישׁ־בֹּ֥שֶׁת אֶל־דָּוִד֮ חֶבְרֹון֒ וַיֹּֽאמְרוּ֙ אֶל־הַמֶּ֔לֶךְ הִנֵּֽה־רֹ֣אשׁ אִֽישׁ־בֹּ֗שֶׁת בֶּן־שָׁאוּל֙ אֹֽיִבְךָ֔ אֲשֶׁ֥ר בִּקֵּ֖שׁ אֶת־נַפְשֶׁ֑ךָ וַיִּתֵּ֣ן יְ֠הוָה לַֽאדֹנִ֨י הַמֶּ֤לֶךְ נְקָמֹות֙ הַיֹּ֣ום הַזֶּ֔ה מִשָּׁא֖וּל וּמִזַּרְעֹֽו׃ ס
9 அதற்குத் தாவீது பேரோத்தியனான ரிம்மோனின் மகன்களான ரேகாபிடமும் அவன் சகோதரனான பானாவிடமும், “என்னை எல்லா இக்கட்டுகளிலும் இருந்து மீட்டுக்கொண்ட யெகோவா இருப்பது நிச்சயமெனில்,
וַיַּ֨עַן דָּוִ֜ד אֶת־רֵכָ֣ב ׀ וְאֶת־בַּעֲנָ֣ה אָחִ֗יו בְּנֵ֛י רִמֹּ֥ון הַבְּאֵֽרֹתִ֖י וַיֹּ֣אמֶר לָהֶ֑ם חַי־יְהוָ֕ה אֲשֶׁר־פָּדָ֥ה אֶת־נַפְשִׁ֖י מִכָּל־צָרָֽה׃
10 ஒரு மனிதன் நற்செய்தி கொண்டுவருவதாக என்னிடம் வந்து, ‘சவுல் இறந்துபோனான்’ என்று எனக்குச் சொன்னபோது, நான் அவனைப் பிடித்து சிக்லாக்கிலே கொலைசெய்ததும் நிச்சயம். அதுவே அவன் கொண்டுவந்த நற்செய்திக்கு நான் கொடுத்த வெகுமதி.
כִּ֣י הַמַּגִּיד֩ לִ֨י לֵאמֹ֜ר הִנֵּה־מֵ֣ת שָׁא֗וּל וְהֽוּא־הָיָ֤ה כִמְבַשֵּׂר֙ בְּעֵינָ֔יו וָאֹחֲזָ֣ה בֹ֔ו וָאֶהְרְגֵ֖הוּ בְּצִֽקְלָ֑ג אֲשֶׁ֥ר לְתִתִּי־לֹ֖ו בְּשֹׂרָֽה׃
11 அப்படியிருக்கத் தனது வீட்டிற்குள் தன் படுக்கையில் படுத்திருந்த குற்றமற்ற ஒரு மனிதனைக் கொலைசெய்த கொடிய மனிதருக்கு நான் எவ்வளவு கடுமையாகத் தண்டனை கொடுக்கவேண்டும்? உங்களைப் பூமியில் இருந்து அழித்து அவனுடைய இரத்தத்திற்காக உங்களைப் பழிவாங்கமாட்டேனோ!” என்றான்.
אַ֞ף כִּֽי־אֲנָשִׁ֣ים רְשָׁעִ֗ים הָרְג֧וּ אֶת־אִישׁ־צַדִּ֛יק בְּבֵיתֹ֖ו עַל־מִשְׁכָּבֹ֑ו וְעַתָּ֗ה הֲלֹ֨וא אֲבַקֵּ֤שׁ אֶת־דָּמֹו֙ מִיֶּדְכֶ֔ם וּבִעַרְתִּ֥י אֶתְכֶ֖ם מִן־הָאָֽרֶץ׃
12 தாவீது அவனுடைய மனிதருக்குக் கட்டளையிட்டதும் அவர்கள் அந்த இருவரையும் கொன்றனர். பின்னர் அவர்களுடைய கைகளையும், கால்களையும் வெட்டி உடல்களை எப்ரோனில் உள்ள குளத்தருகில் தொங்கவிட்டார்கள். ஆனால் இஸ்போசேத்தின் தலையை எடுத்துச்சென்று எப்ரோனிலுள்ள அப்னேரின் கல்லறையிலே அடக்கம்பண்ணினார்கள்.
וַיְצַו֩ דָּוִ֨ד אֶת־הַנְּעָרִ֜ים וַיַּהַרְג֗וּם וַֽיְקַצְּצ֤וּ אֶת־יְדֵיהֶם֙ וְאֶת־רַגְלֵיהֶ֔ם וַיִּתְל֥וּ עַל־הַבְּרֵכָ֖ה בְּחֶבְרֹ֑ון וְאֵ֨ת רֹ֤אשׁ אִֽישׁ־בֹּ֙שֶׁת֙ לָקָ֔חוּ וַיִּקְבְּר֥וּ בְקֶֽבֶר־אַבְנֵ֖ר בְּחֶבְרֹֽון׃ פ

< 2 சாமுவேல் 4 >