< 2 சாமுவேல் 23 >
1 தாவீதின் இறுதி வார்த்தைகள் இவையே: “ஈசாயின் மகனான தாவீதின் இறைவாக்கு: மகா உன்னதமானவரால் உயர்த்தப்பட்ட மனிதன் இந்த இறைவாக்கைச் சொன்னான். அவன் யாக்கோபின் இறைவனால் அபிஷேகம் செய்யப்பட்டவன். அவன் இஸ்ரயேலில் பாடல்களைப் பாடுபவன்.
௧தாவீதின் கடைசி வார்த்தைகள்: “மேன்மையாக உயர்த்தப்பட்டு, யாக்கோபுடைய தேவனால் அபிஷேகம் பெற்று, இஸ்ரவேலின் சங்கீதங்களை இனிமையாகப் பாடின ஈசாயின் மகனான தாவீது என்னும் மனிதன் சொல்லுகிறது என்னவென்றால்;
2 “யெகோவாவின் ஆவியானவர் என் மூலமாகப் பேசினார். அவரது வார்த்தை என் நாவிலிருந்தது.
௨யெகோவாவுடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது.
3 இஸ்ரயேலின் இறைவன் என்னிடம் பேசி, இஸ்ரயேலின் கற்பாறையானவர் என்னிடம் சொன்னதாவது: ‘ஒருவன் நியாயத்துடன் மனிதர்களை அரசாளும்போதும், இறை பயத்துடன் ஆட்சி செய்யும்போதும்,
௩இஸ்ரவேலின் தேவனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர் எனக்குச் சொல்லி உரைத்ததாவது: நீதிபதியாக மனிதர்களை ஆட்சி செய்து, தெய்வபயத்தோடு ஆளுகிறவர் இருப்பார்.
4 அவன் காலையில் மேகங்களால் மூடப்படாத சூரியனின் ஒளியைப்போல் இருப்பான். பூமியிலிருந்து புல்லை முளைக்கச் செய்யும் மழையின் பின் தோன்றும் செழிப்பைப் போலவும் இருப்பான்.’
௪அவர் காலையில் மேகம் இல்லாமல் உதித்து, மழைக்குப்பின்பு தன்னுடைய வெளிச்சத்தினால் புல்லை பூமியிலிருந்து முளைக்கச்செய்கிற சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார் என்றார்.
5 “எனது குடும்பம் இறைவனுக்கு உகந்ததாய் இருக்கவில்லையா? அவர் என்னுடன் ஒரு நித்திய உடன்படிக்கையை செய்யவில்லையா? அதை ஒழுங்குபடுத்தியும், எல்லாப் பக்கத்திலும் பாதுகாத்துமிருந்தாரே. அவர் எனது இரட்சிப்பை முழுமையாக்க மாட்டாரோ. அவர் எனது எல்லா விருப்பத்தையும் நிறைவேற்ற மாட்டாரோ.
௫என்னுடைய வீடு தேவனிடம் இப்படி இருக்காதோ? அனைத்தும் தீர்மானித்திருக்கிற நிச்சயமான நித்திய உடன்படிக்கையை என்னுடன் அவர் செய்திருக்கிறார்; ஆதலால் என்னுடைய எல்லா இரட்சிப்பும் எல்லா வாஞ்சையும் பெருகச்செய்யாமல் இருப்பாரோ?
6 கையால் சேர்க்கப்படாத முட்களைப்போல் தீய மனிதர்கள் வெளியே வீசப்பட வேண்டும்.
௬தீயவர்கள் அனைவரும், கையினால் பிடிக்கப்படமுடியாததாக எறிந்துபோடப்படவேண்டிய முள்ளுக்குச் சமானமானவர்கள்.
7 ஆனால் முட்களைத் தொடுகிற எவனும் இரும்பு ஆயுதத்தையோ அல்லது ஈட்டியையோ பயன்படுத்துகிறான். அவை கிடக்கும் இடத்திலேயே எரித்துப் போடப்படும்.”
௭அவைகளை ஒருவன் தொடப்போனால், இரும்பாலான ஆயுதத்தையும் ஈட்டிப்பிடியையும் இறுகப் பிடித்துக்கொள்ளவேண்டும்; அவைகள் இருக்கிற இடத்திலேயே அக்கினியால் முழுவதும் சுட்டெரிக்கப்படும்” என்றான்.
8 தாவீதின் வலிமைவாய்ந்த வீரர்களின் பெயர்கள்: தக்கெமோனியனான யோசேப்பாசெபெத் அந்த மூவரில் முக்கியமானவன். இவன் ஒரு போர்முனையில் எண்ணூறு பேரைக் குத்திக் கொன்றான்.
௮தாவீதுக்கு இருந்த பலசாலிகளின் பெயர்கள்: தக்கெமோனியின் மகனான யோசேப்பாசெபெத் என்பவன் இராணுவ அதிகாரிகளின் தலைவன்; இவன் 800 பேரை ஒன்றாக வெட்டிப்போட்ட அதீனோஏஸ்னி ஊரைச்சேர்த்தவன்.
9 அவனுக்கு அடுத்தாக அகோகியனான தோதோவின் மகன் எலெயாசார் என்பவன். இவன் பெலிஸ்தியர் பாஸ்தம்மீம் என்னும் இடத்தில் போருக்குக் கூடியிருந்தபோது, தாவீதுடன் இருந்து பெலிஸ்தியரை நிந்தித்த வலிமைமிக்க மூவரில் ஒருவன். அவ்வேளையில் இஸ்ரயேலர் பின்வாங்கி ஓடினார்கள்.
௯இவனுக்கு இரண்டாவது, அகோயின் மகனான தோதோவின் மகன் எலெயாசார் என்பவன்; இவன் பெலிஸ்தர்கள் யுத்தத்திற்குக் கூடின இடத்திலே இஸ்ரவேல் மனிதர்கள் போகும்போது, தாவீதோடு இருந்து பெலிஸ்தர்களை சபித்த மூன்று பலசாலிகளில் ஒருவனாக இருந்தான்.
10 ஆனாலும் இவனே நிலைநின்று தன் கை சோர்ந்து, வாளோடு விறைத்துப் போகும்வரை பெலிஸ்தியரை வெட்டி வீழ்த்தியவன். அன்றையதினம் யெகோவா பெரும் வெற்றியைக் கொடுத்தார். போர்வீரர் எலெயாசாரிடம் திரும்பினார்கள். இறந்தவர்களிடம் கொள்ளையிட மட்டுமே அவனிடம் திரும்பி வந்தார்கள்.
௧0இவன் எழுந்து தன்னுடைய கை சோர்ந்து, தன்னுடைய கை பட்டயத்தோடு ஒட்டிக்கொள்ளும்வரை பெலிஸ்தர்களை வெட்டினான்; அன்றையதினம் யெகோவா பெரிய இரட்சிப்பை நடத்தினார்; மக்கள் கொள்ளையிடுவதற்குமட்டும் அவனுக்குப் பின்சென்றார்கள்.
11 அடுத்தவன் ஆகேயின் மகன் சம்மா என்னும் ஆராரியன். ஒருமுறை பெலிஸ்தியர் சிறுபயறு நிறைந்து விளைந்திருந்த இடத்திலே ஒன்றாகத் திரண்டிருந்தபோது இஸ்ரயேலர் அவர்களிடமிருந்து தப்பி ஓடினார்கள்.
௧௧இவனுக்கு மூன்றாவது, ஆகேயின் மகனான சம்மா என்னும் ஆராரியன்; சிறுபயிறு நிறைந்த வயலிருந்த இடத்திலே பெலிஸ்தர்கள் ஏராளமாகக் கூடி, மக்கள் பெலிஸ்தர்களைக் கண்டு ஓடுகிறபோது,
12 ஆனால் சம்மாவோ வயல் நடுவில் நின்று தனியாக பெலிஸ்தியரை எதிர்த்து, அவர்களைக் கொன்று அதைக் காத்துக்கொண்டான். யெகோவா பெரும் வெற்றியைக் கொண்டுவந்தார்.
௧௨இவன் அந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றி, பெலிஸ்தர்களைக் கொன்றுபோட்டான்; அதனால் யெகோவா பெரிய இரட்சிப்பை நடத்தினார்.
13 அறுவடை காலத்தில் முப்பது படைத்தலைவர்களில் மூன்றுபேர் தாவீதைச் சந்திக்க அதுல்லாம் குகைக்கு வந்தார்கள். அப்பொழுது பெலிஸ்தியரின் படை ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் முகாமிட்டிருந்தது.
௧௩முப்பது தலைவருக்குள்ளே இந்த மூன்று பேர்களும் அறுவடையின் நாளில் அதுல்லாம் கெபியிலே தாவீதிடம் போயிருந்தார்கள்; பெலிஸ்தர்களின் படை ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே முகாமிட்டபோது,
14 அந்த நேரத்தில் தாவீது அரணான இடத்தில் இருந்தான். பெலிஸ்தியரின் படையோ பெத்லெகேமில் இருந்தது.
௧௪தாவீது பாதுகாப்பான ஒரு இடத்தில் இருந்தான்; அப்பொழுது பெலிஸ்தர்களின் முகாம் பெத்லெகேமிலே இருந்தது.
15 தாவீது தாகமாயிருந்தபடியால், “யாராவது பெத்லெகேம் வாசலருகேயுள்ள கிணற்றிலிருந்து எனக்குக் குடிக்கத் தண்ணீர் கொண்டுவருவீர்களா?” என்று கேட்டான்.
௧௫தாவீது பெத்லெகேமின் நுழைவுவாயிலில் இருக்கிற கிணற்றின் தண்ணீரின்மேல் ஆசைகொண்டு: என்னுடைய தாகத்திற்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான்.
16 எனவே அந்த மூன்று வீரரும் பெலிஸ்தியரின் முகாமின் உள்ளே சென்று பெத்லெகேம் வாசலருகேயுள்ள கிணற்றில் தண்ணீர் எடுத்துத் தாவீதிடம் கொண்டுவந்தார்கள். ஆனாலும் தாவீது அதைக் குடிக்க மறுத்தான். அதற்குப் பதிலாக யெகோவாவுக்குமுன் அதை ஊற்றினான்.
௧௬அப்பொழுது இந்த மூன்று பெலசாலிகளும் பெலிஸ்தர்களின் முகாமில் துணிந்து புகுந்துபோய், பெத்லெகேமின் நுழைவுவாசலில் இருக்கிற கிணற்றிலே தண்ணீர் மொண்டு, தாவீதிடம் கொண்டு வந்தார்கள்; ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனம் இல்லாமல் அதைக் யெகோவாவெக்கென்று ஊற்றிப்போட்டு:
17 “யெகோவாவே, நான் இதைக் குடிப்பதை எண்ணிப்பார்க்கவும் கூடாது. இது தங்கள் உயிரைப் பணயம் வைத்துச் சென்ற வீரர்களின் இரத்தமல்லவா?” என்று சொல்லி தாவீது அதைக் குடிக்க மறுத்தான். இப்படிப்பட்ட செயல்களை இந்த மூன்று வீரர்களும் செய்தார்கள்.
௧௭யெகோவாவே, தங்கள் உயிரை பொருட்டாக எண்ணாமல் போய்வந்த அந்த மனிதர்களின் இரத்தத்தைக் குடிக்கும் இந்தச்செயல் எனக்குத் தூரமாக இருப்பதாக என்று சொல்லி, அதைக் குடிக்க மனம் இல்லாமலிருந்தான்; இப்படி இந்த மூன்று பெலசாலிகளும் செய்தார்கள்.
18 யோவாபின் சகோதரனும், செருயாவின் மகனுமான அபிசாய் என்பவன் அந்த மூன்றுபேரில் முதல்வனாயிருந்தான். இவனே ஈட்டியால் முந்நூறுபேரைக் கொலைசெய்து அந்த மூன்றுபேரைப்போல் பேர்பெற்றவனானான்.
௧௮யோவாபின் சகோதரனும் செருயாவின் மகனுமான அபிசாய் என்பவன், அந்த மூன்றுபேரில் முதன்மையானவன்; அவன் தன்னுடைய ஈட்டியை ஓங்கி 300 பேரைக் கொன்றதால், இந்த மூன்றுபேர்களில் பெயர்பெற்றவனானான்.
19 அவன் அந்த மூன்று தலைவர்களில் அதிகமாய் மதிக்கப்படவில்லையோ? அவன் அவர்களுடன் சேர்க்கப்படாத போதிலும் அவர்களுக்குத் தளபதியானான்.
௧௯இந்த மூன்றுபேர்களில் அவன் மேன்மையுள்ளவனாக இருந்ததால் அல்லவோ, அவர்களில் தலைவனானான்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கு அவன் சமமானவன் அல்ல.
20 கப்சேயேல் ஊரைச்சேர்ந்த யோய்தாவின் மகன் பெனாயா, மிகவும் பலமுள்ள போர்வீரனாயிருந்தான்; அவன் பல துணிச்சலான செயல்களைச் செய்திருந்தான். இவன் மோவாபியரில் இரண்டு சிறந்த வீரர்களை கொலைசெய்திருந்தான். அதோடு உறைபனி காலத்தில் ஒரு குழிக்குள் இறங்கி ஒரு சிங்கத்தையும் கொன்றான்.
௨0பலசாலியான யோய்தாவின் மகனும் கப்செயேல் ஊரைச்சேர்ந்தவனுமான பெனாயாவும் செயல்களில் வல்லவனாக இருந்தான்; அவன் மோவாப் தேசத்தின் இரண்டு வலிமையான சிங்கங்களைக் கொன்றதுமல்லாமல், உறைந்த மழைக்காலத்தில் அவன் இறங்கிப்போய், ஒரு கெபிக்குள் இருந்த ஒரு சிங்கத்தையும் கொன்றுபோட்டான்.
21 அவன் ஒரு உடல் பருத்த எகிப்தியனை அடித்து வீழ்த்தினான். எகிப்தியன் தனது கையில் ஈட்டியை வைத்திருந்தும் பெனாயா ஒரு தடியுடன் எதிர்த்துப் போனான். அவன் ஈட்டியைப் பறித்து, அதனாலேயே எகிப்தியனைக் கொன்றான்.
௨௧அவன் பயங்கர உயரமுள்ள ஒரு எகிப்தியனையும் கொன்றுபோட்டான்; அந்த எகிப்தியன் கையில் ஒரு ஈட்டி இருக்கும்போது, இவன் ஒரு தடியைப்பிடித்து, அவனிடம் போய், அந்த எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப் பிடுங்கி, அவன் ஈட்டியாலே அவனைக் கொன்றுபோட்டான்.
22 இவ்விதமாக யோய்தாவின் மகன் பெனாயா பல வீரச்செயல்களைச் செய்தான். அவனும் மற்ற மூன்று தலைவர்களைப்போல் பிரபலமானவனாக இருந்தான்.
௨௨இவைகளை யோய்தாவின் மகனான பெனாயா செய்தபடியால், மூன்று பலசாலிகளுக்குள்ளே புகழ்பெற்றவனாக இருந்தான்.
23 அந்த முப்பது தலைவர்களில் எவரையும்விட இவனே மதிப்புக்குரியவனாயிருந்தான். ஆனாலும் அந்த மூன்றுபேருள் இவன் சேர்க்கப்படவில்லை. தாவீது அவனைத் தன் மெய்க்காவலருக்குப் பொறுப்பாக நியமித்தான்.
௨௩30 பேர்களிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கும் இவன் சமானமானவன் அல்ல; இவனை தாவீது தன்னுடைய மெய்க்காவலர்களுக்குத் தலைவனாக வைத்தான்.
24 அந்த முப்பதுபேரின் பெயர்களாவன: யோவாபின் சகோதரன் ஆசகேல், பெத்லெகேமைச் சேர்ந்த தோதோவின் மகன் எல்க்கானான்,
௨௪யோவாபின் தம்பி ஆசகேல் மற்ற 30 பேர்களில் ஒருவன்; அவர்கள் யாரெனில், பெத்லகேம் ஊரைச்சேர்ந்த தோதோவின் மகன் எல்க்கானான்,
25 ஆரோதியனான சம்மா, ஆரோதியனான எலிக்கா,
௨௫ஆரோதியனான சம்மா, ஆரோதியனான எலிக்கா,
26 பல்தியனான ஏலேஸ், தெக்கோவியனான இக்கேசின் மகன் ஈரா,
௨௬பல்தியனான ஏலெஸ், இக்கேசின் மகனான ஈரா என்னும் தெக்கோவியன்.
27 ஆனதோத்தியனான அபியேசர், ஊஷாத்தியனான மெபுன்னாயி,
௨௭ஆனதோத்தியனான அபியேசர், ஊசாத்தியனாகிய மெபுன்னாயி,
28 அகோகியனான சல்மோன், நெத்தோபாத்தியனான மகராயி,
௨௮அகோகியனான சல்மோன், நெத்தோபாத்தியனான மகராயி,
29 நெத்தோபாத்தியனான பானாவின் மகன் ஏலேப், பென்யமீனியரின் கிபியா ஊரைச்சேர்ந்த ரிபாயின் மகன் இத்தாயி,
௨௯பானாவின் மகனான ஏலேப் என்னும் நெத்தோபாத்தியன், பென்யமீன் வம்சத்தார்களின் கிபியா ஊரைச்சேர்ந்த ரிபாயின் மகன் இத்தாயி,
30 பிரத்தோனியனான பெனாயா, காயாஸ் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவனான ஈத்தாயி,
௩0பிரத்தோனியனான பெனாயா, காகாஸ் நீரோடைகளின் தேசத்தானான ஈத்தாயி,
31 அர்பாத்தியனான அபிஅல்போன், பர்குமியனான அஸ்மாவேத்,
௩௧அர்பாத்தியனாகிய அபிஅல்பொன், பருமியனான அஸ்மாவேத்,
32 சால்போனியனான எலியாபா, யாசேனின் மகன்களில் ஒருவனான யோனத்தான்,
௩௨சால்போனியனான ஏலியாபா, யாசேனின் மகன்களில் யோனத்தான் என்பவன்.
33 ஆராரியனான சம்மா, ஆராரியனான சாராரின் மகன் அகியாம்,
௩௩ஆராரியனான சம்மா, சாராரின் மகனான அகியாம் என்னும் ஆராரியன்,
34 மாகாத்தியனான அகஸ்பாயின் மகன் எலிப்பெலேத், கீலொனியனான அகிதோப்பேலின் மகன் எலியாம்,
௩௪மாகாத்தியனின் மகனான அகஸ்பாயிம் மகன் எலிப்பெலேத், கீலோனியனான அகித்தோப்பேலின் மகன் எலியாம் என்பவன்.
35 கர்மேலியனான எஸ்ராயி, அர்பியனான பாராயி,
௩௫கர்மேலியனான எஸ்ராயி, அர்பியனான பாராயி,
36 சோபா ஊரானான நாத்தானின் மகன் ஈகால், காதியனான பானி,
௩௬சோபா ஊரைச்சேர்ந்த நாத்தானின் மகன் ஈகால், காத்தியனான பானி,
37 அம்மோனியனான சேலேக், செருயாவின் மகனும் யோவாபின் யுத்த ஆயுதங்களைச் சுமக்கிறவனுமான பேரோத்தியனான நகராய்,
௩௭அம்மோனியனான சேலேக், செருயாவின் மகனான யோவாபின் ஆயுதம் ஏந்திய பெரோத்தியனான நகராய்,
38 இத்திரியனான ஈரா, இத்திரியனான காரேப்,
௩௮இத்ரியனான ஈரா, இத்ரியனான காரேப்,
39 ஏத்தியனான உரியா என்பவர்களே. எல்லாமாக முப்பத்தேழுபேர் இருந்தார்கள்.
௩௯ஏத்தியனான உரியா என்பவர்களே; ஆக 37 பேர்.