< 2 பேதுரு 2 >
1 முற்காலத்தில் பொய்த் தீர்க்கதரிசிகள் மக்கள் மத்தியிலே இருந்தார்கள். அதுபோலவே, பொய் வேத ஆசிரியர்கள் உங்கள் மத்தியிலே இருப்பார்கள். அவர்கள் அழிவை ஏற்படுத்தும் பொய்யான போதனைகளை இரகசியமாய் புகுத்துவார்கள். தங்களை விலைகொடுத்து மீட்ட எல்லாம் வல்ல கர்த்தரையும் அவர்கள் மறுதலிப்பார்கள். இவ்விதமாக அழிவைத் தங்கள்மேல் விரைவாய் வருவித்துக்கொள்வார்கள்.
அபரம்’ பூர்வ்வகாலே யதா² லோகாநாம்’ மத்⁴யே மித்²யாப⁴விஷ்யத்³வாதி³ந உபாதிஷ்ட²ந் ததா² யுஷ்மாகம்’ மத்⁴யே(அ)பி மித்²யாஸி²க்ஷகா உபஸ்தா²ஸ்யந்தி, தே ஸ்வேஷாம்’ க்ரேதாரம்’ ப்ரபு⁴ம் அநங்கீ³க்ரு’த்ய ஸத்வரம்’ விநாஸ²ம்’ ஸ்வேஷு வர்த்தயந்தி விநாஸ²கவைத⁴ர்ம்ம்யம்’ கு³ப்தம்’ யுஷ்மந்மத்⁴யம் ஆநேஷ்யந்தி|
2 பலர் அவர்களுடைய வெட்கக்கேடான வழிகளைப் பின்பற்றுவதினால் சத்திய வழிக்குக்கூட அவமானம் ஏற்படும்.
ததோ (அ)நேகேஷு தேஷாம்’ விநாஸ²கமார்க³ம்’ க³தேஷு தேப்⁴ய: ஸத்யமார்க³ஸ்ய நிந்தா³ ஸம்ப⁴விஷ்யதி|
3 இந்த வேத ஆசிரியர் தங்களுடைய பேராசையில் தாங்களே இயற்றிய கட்டுக்கதைகளைச் சொல்லி, உங்களைச் சுரண்டி வாழப்பார்ப்பார்கள். அவர்களுக்குரிய தண்டனைத்தீர்ப்பு அவர்கள்மேல் விழ, இறைவனால் வெகுகாலத்திற்கு முன்னரே ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது. அவர்கள்மேல் வரவிருக்கும் அழிவு உறங்காது.
அபரஞ்ச தே லோபா⁴த் காபட்யவாக்யை ர்யுஷ்மத்தோ லாப⁴ம்’ கரிஷ்யந்தே கிந்து தேஷாம்’ புராதநத³ண்டா³ஜ்ஞா ந விலம்ப³தே தேஷாம்’ விநாஸ²ஸ்²ச ந நித்³ராதி|
4 இறைத்தூதர்கள் பாவம் செய்தபோது, இறைவன் அவர்களைத் தப்பிப்போக விடவில்லை. அவர் அவர்களை நரகத்திற்குள் தள்ளி, அவர்களுக்குரிய நியாயத்தீர்ப்பைக் கொடுக்கும்வரைக்கும், அவர்களைப் பாதாளத்தின் இருளிலே போட்டார்; (Tartaroō )
ஈஸ்²வர: க்ரு’தபாபாந் தூ³தாந் ந க்ஷமித்வா திமிரஸ்²ரு’ங்க²லை: பாதாலே ருத்³த்⁴வா விசாரார்த²ம்’ ஸமர்பிதவாந்| (Tartaroō )
5 முற்காலத்தில் இருந்த உலகத்தையும் இறைவன் தப்பிப்போக விடவில்லை. அதில் வாழ்ந்த இறை பக்தியற்ற மக்களின்மேல் வெள்ளத்தை வரச்செய்தார். ஆனால் நீதியைப் பிரசங்கித்த நோவாவையும் ஏழு பேர்களையும் அவர் காப்பாற்றினார்;
புராதநம்’ ஸம்’ஸாரமபி ந க்ஷமித்வா தம்’ து³ஷ்டாநாம்’ ஸம்’ஸாரம்’ ஜலாப்லாவநேந மஜ்ஜயித்வா ஸப்தஜநை: ஸஹிதம்’ த⁴ர்ம்மப்ரசாரகம்’ நோஹம்’ ரக்ஷிதவாந்|
6 இறைவன் சோதோம், கொமோரா பட்டணங்களுக்குத் தண்டனைத்தீர்ப்பு வழங்கி, அவற்றைச் சுட்டெரித்து சாம்பலாக்கினார். இறை பக்தியற்றவர்களுக்கு, இதுவே நிகழும் என்று காண்பிப்பதற்காக, அந்தப் பட்டணங்கள் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்படி இப்படிச் செய்தார்.
ஸிதோ³மம் அமோரா சேதிநாமகே நக³ரே ப⁴விஷ்யதாம்’ து³ஷ்டாநாம்’ த்³ரு’ஷ்டாந்தம்’ விதா⁴ய ப⁴ஸ்மீக்ரு’த்ய விநாஸே²ந த³ண்டி³தவாந்;
7 ஆனால் இறைவன் நீதிமானாயிருந்த லோத்தைக் காப்பாற்றினார். அவனோ, அநியாயக்காரர்களின் அசுத்த வாழ்க்கையினாலே மனம் புண்பட்டவனாய் இருந்தான்.
கிந்து தை: குத்ஸிதவ்யபி⁴சாரிபி⁴ ர்து³ஷ்டாத்மபி⁴: க்லிஷ்டம்’ தா⁴ர்ம்மிகம்’ லோடம்’ ரக்ஷிதவாந்|
8 அந்த நீதிமான் அவர்களிடையே வாழ்ந்தபோது, நாளுக்குநாள் தான் கண்டதும் கேட்டதுமான அநியாயச் செயல்களினாலே, தன் நீதியான உள்ளத்தில் வேதனையடைந்தான்.
ஸ தா⁴ர்ம்மிகோ ஜநஸ்தேஷாம்’ மத்⁴யே நிவஸந் ஸ்வீயத்³ரு’ஷ்டிஸ்²ரோத்ரகோ³சரேப்⁴யஸ்தேஷாம் அத⁴ர்ம்மாசாரேப்⁴ய: ஸ்வகீயதா⁴ர்ம்மிகமநஸி தி³நே தி³நே தப்தவாந்|
9 அது அப்படியானால், இறை பக்தியுள்ள மனிதரை சோதனைகளிலிருந்து எப்படிக் காப்பாற்றுவது என்றும், அநியாயக்காரர்களை எப்படி நியாயத்தீர்ப்பின் நாள்வரைக்கும் தண்டனைக்கு உட்படுத்தும்படி வைத்துக்கொள்ளுவது என்றும், கர்த்தர் அறிந்திருக்கிறார்.
ப்ரபு⁴ ர்ப⁴க்தாந் பரீக்ஷாத்³ உத்³த⁴ர்த்தும்’ விசாரதி³நஞ்ச யாவத்³ த³ண்ட்³யாமாநாந் அதா⁴ர்ம்மிகாந் ரோத்³து⁴ம்’ பாரயதி,
10 விசேஷமாக பாவ இயல்பிலிருந்து எழும் தங்களுடைய சீர்கெட்ட ஆசையின்படி நடந்து, அதிகாரத்தை அலட்சியம் செய்கிறவர்களுக்கு இந்த தண்டனை உண்டாகும். இப்படிப்பட்டவர்கள் துணிகரமும் அகந்தையும் உள்ளவர்கள். இவர்கள் பரலோகத்தில் உள்ளவர்களை அவதூறாய் பேசவும் பயப்படுவதில்லை.
விஸே²ஷதோ யே (அ)மேத்⁴யாபி⁴லாஷாத் ஸா²ரீரிகஸுக²ம் அநுக³ச்ச²ந்தி கர்த்ரு’த்வபதா³நி சாவஜாநந்தி தாநேவ (ரோத்³து⁴ம்’ பாரயதி| ) தே து³: ஸாஹஸிந: ப்ரக³ல்பா⁴ஸ்²ச|
11 ஆனால், இவர்களைவிட வலிமை வாய்ந்தவர்களும், அதிக வல்லமையுடையவர்களுமான இறைவனுடைய தூதர்கள்கூட பரலோகத்தில் உள்ளவர்களுக்கு எதிராகக் கர்த்தர் முன்னிலையில் நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருவதில்லை.
அபரம்’ ப³லகௌ³ரவாப்⁴யாம்’ ஸ்²ரேஷ்டா² தி³வ்யதூ³தா: ப்ரபோ⁴: ஸந்நிதௌ⁴ யேஷாம்’ வைபரீத்யேந நிந்தா³ஸூசகம்’ விசாரம்’ ந குர்வ்வந்தி தேஷாம் உச்சபத³ஸ்தா²நாம்’ நிந்த³நாத்³ இமே ந பீ⁴தா: |
12 ஆனால் இவர்களோ, தாங்கள் விளங்கிக்கொள்ளாத விஷயங்களில் அவதூறாகப் பேசுகிறார்கள். இவர்கள் மனிதத் தன்மையற்ற மிருகங்களைப் போன்றவர்கள். தங்கள் இயல்பின்படியே நடக்கின்ற உயிரினங்களைப் போன்றவர்கள். இவர்கள் பிடிக்கப்பட்டு அழிக்கப்படுவதற்கென்றே பிறந்திருக்கின்ற மிருகங்களைப்போலவே இவர்களும் அழிந்துபோவார்கள்.
கிந்து யே பு³த்³தி⁴ஹீநா: ப்ரக்ரு’தா ஜந்தவோ த⁴ர்த்தவ்யதாயை விநாஸ்²யதாயை ச ஜாயந்தே தத்ஸத்³ரு’ஸா² இமே யந்ந பு³த்⁴யந்தே தத் நிந்த³ந்த: ஸ்வகீயவிநாஸ்²யதயா விநம்’க்ஷ்யந்தி ஸ்வீயாத⁴ர்ம்மஸ்ய ப²லம்’ ப்ராப்ஸ்யந்தி ச|
13 தாங்கள் செய்த தீமைக்குப் பதிலாக, தீமையையே பெறுவார்கள். பகல் வேளையிலேயே மதுபான வெறியில் ஈடுபடுவதை இன்பம் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். இவர்கள் உங்களுடைய விருந்துகளில் கலந்துகொள்கிற அதேவேளையில், தங்கள் சிற்றின்பக் களியாட்டுக்களில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் உங்கள் மத்தியில் அசிங்கமும், கறையுமாயிருக்கிறார்கள்.
தே தி³வா ப்ரக்ரு’ஷ்டபோ⁴ஜநம்’ ஸுக²ம்’ மந்யந்தே நிஜச²லை: ஸுக²போ⁴கி³ந: ஸந்தோ யுஷ்மாபி⁴: ஸார்த்³த⁴ம்’ போ⁴ஜநம்’ குர்வ்வந்த: கலங்கிநோ தோ³ஷிணஸ்²ச ப⁴வந்தி|
14 இவர்களுடைய கண்கள் விபசாரத்தால் நிறைந்திருக்கின்றன. பாவம் செய்வதை இவர்கள் ஒருபோதும் நிறுத்துவதில்லை; உறுதியற்றவர்களை இவர்கள் தங்கள் வசப்படுத்திக்கொள்கிறார்கள்; இவர்கள் இருதயம் பேராசையில் தேர்ச்சி பெற்றது, இவர்கள் சபிக்கப்பட்ட கூட்டமே.
தேஷாம்’ லோசநாநி பரதா³ராகாங்க்ஷீணி பாபே சாஸ்²ராந்தாநி தே சஞ்சலாநி மநாம்’ஸி மோஹயந்தி லோபே⁴ தத்பரமநஸ: ஸந்தி ச|
15 இவர்கள் நேர்வழியை விட்டு விலகி, அநீதியை செய்து கூலியைப் பெற ஆசைப்பட்டவனான பேயோரின் மகன் பிலேயாமின் வழியைப் பின்பற்றும்படி போய்விட்டார்கள்.
தே ஸா²பக்³ரஸ்தா வம்’ஸா²: ஸரலமார்க³ம்’ விஹாய பி³யோரபுத்ரஸ்ய பி³லியமஸ்ய விபதே²ந வ்ரஜந்தோ ப்⁴ராந்தா அப⁴வந்| ஸ பி³லியமோ (அ)ப்யத⁴ர்ம்மாத் ப்ராப்யே பாரிதோஷிகே(அ)ப்ரீயத,
16 ஆனால் பிலேயாமோ ஒரு கழுதையினாலே அவனுடைய தவறான செயலைக்குறித்து கடிந்துகொள்ளப்பட்டான். வாய்ப்பேசாத அந்த மிருகம் மனிதக் குரலில் பேசி, அந்தத் தீர்க்கதரிசியின் மதிகேடான செயலைத் தடுத்து நிறுத்தியது.
கிந்து நிஜாபராதா⁴த்³ ப⁴ர்த்ஸநாம் அலப⁴த யதோ வசநஸ²க்திஹீநம்’ வாஹநம்’ மாநுஷிககி³ரம் உச்சார்ய்ய ப⁴விஷ்யத்³வாதி³ந உந்மத்ததாம் அபா³த⁴த|
17 இவர்கள் தண்ணீர் இல்லாத ஊற்றுக்கள்; புயல்காற்றினால் அடித்துச் செல்லப்படும் பனிமூட்டங்கள். காரிருளே இவர்களுக்கென்று நியமிக்கப்பட்டிருக்கிறது. ()
இமே நிர்ஜலாநி ப்ரஸ்ரவணாநி ப்ரசண்ட³வாயுநா சாலிதா மேகா⁴ஸ்²ச தேஷாம்’ க்ரு’தே நித்யஸ்தா²யீ கோ⁴ரதராந்த⁴கார: ஸஞ்சிதோ (அ)ஸ்தி| ()
18 இவர்கள் வீண் பெருமைகொண்ட வார்த்தைகளைப் பேசுகிறார்கள். இவர்கள் மனிதனுடைய பாவ இயல்பிலிருந்து காமவேட்கையுள்ள ஆசைகளைத் தூண்டும் விதத்தில் பேசி, தவறான வழியில் வாழுகிறவர்களிடமிருந்து தப்பித்துக்கொள்ள முயலும் மக்களைத் தங்கள் வசப்படுத்திக்கொள்கிறார்கள்.
யே ச ஜநா ப்⁴ராந்த்யாசாரிக³ணாத் க்ரு’ச்ச்²ரேணோத்³த்⁴ரு’தாஸ்தாந் இமே (அ)பரிமிதத³ர்பகதா² பா⁴ஷமாணா: ஸா²ரீரிகஸுகா²பி⁴லாஷை: காமக்ரீடா³பி⁴ஸ்²ச மோஹயந்தி|
19 இவர்கள் மற்றவர்களுக்கு ஒரு சுதந்திரமான வாழ்க்கையை வாக்குப்பண்ணுகிறார்கள். ஆனால் அவர்களோ, தாங்களே சீர்கெட்ட வாழ்க்கைக்கு அடிமைகளாய் இருக்கிறார்கள். ஏனெனில் எதனால் ஒருவன் மேற்கொள்ளப்படுகிறானோ, அவன் அதற்கு அடிமையாக இருக்கிறான்.
தேப்⁴ய: ஸ்வாதீ⁴நதாம்’ ப்ரதிஜ்ஞாய ஸ்வயம்’ விநாஸ்²யதாயா தா³ஸா ப⁴வந்தி, யத: , யோ யேநைவ பராஜிக்³யே ஸ ஜாதஸ்தஸ்ய கிங்கர: |
20 நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவை அறிந்துகொண்டதன் மூலமாக, இவர்கள் உலகத்தின் சீர்கேட்டுக்குத் தப்பித்திருந்தும், மீண்டும் அதே சீர்கேட்டில் அகப்பட்டிருக்கிறார்கள். அப்படி அவர்கள் அதனால் மேற்கொள்ளப்பட்டால், ஆரம்பத்தில் அவர்கள் இருந்த நிலைமையைவிட, முடிவில் அவர்கள் இருக்கும் நிலைமை மிக மோசமானது.
த்ராது: ப்ரபோ⁴ ர்யீஸு²க்²ரீஷ்டஸ்ய ஜ்ஞாநேந ஸம்’ஸாரஸ்ய மலேப்⁴ய உத்³த்⁴ரு’தா யே புநஸ்தேஷு நிமஜ்ஜ்ய பராஜீயந்தே தேஷாம்’ ப்ரத²மத³ஸா²த: ஸே²ஷத³ஸா² குத்ஸிதா ப⁴வதி|
21 இவர்கள் நீதி வாழ்வின் வழியை அறியாதிருந்திருந்தால், அது இவர்களுக்கு அதிக நலமாயிருந்திருக்கும். ஏனெனில், இவர்கள் நீதி வாழ்வின் வழியை அறிந்த பின்பும், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பரிசுத்த கட்டளைகளைவிட்டுத் திரும்பிப் போனார்களே.
தேஷாம்’ பக்ஷே த⁴ர்ம்மபத²ஸ்ய ஜ்ஞாநாப்ராப்தி ர்வரம்’ ந ச நிர்த்³தி³ஷ்டாத் பவித்ரவிதி⁴மார்கா³த் ஜ்ஞாநப்ராப்தாநாம்’ பராவர்த்தநம்’|
22 “நாய் தான் கக்கினதை மீண்டும் தேடிப்போகிறது,” மற்றும், “கழுவப்பட்ட ஒரு பன்றி, மீண்டும் சேற்றில் புரளும்படி போகிறது,” என்ற பழமொழிகள் இவர்களுக்குப் பொருந்தும்.
கிந்து யேயம்’ ஸத்யா த்³ரு’ஷ்டாந்தகதா² ஸைவ தேஷு ப²லிதவதீ, யதா², குக்குர: ஸ்வீயவாந்தாய வ்யாவர்த்ததே புந: புந: | லுடி²தும்’ கர்த்³த³மே தத்³வத் க்ஷாலிதஸ்²சைவ ஸூ²கர: ||