< 2 பேதுரு 2 >
1 முற்காலத்தில் பொய்த் தீர்க்கதரிசிகள் மக்கள் மத்தியிலே இருந்தார்கள். அதுபோலவே, பொய் வேத ஆசிரியர்கள் உங்கள் மத்தியிலே இருப்பார்கள். அவர்கள் அழிவை ஏற்படுத்தும் பொய்யான போதனைகளை இரகசியமாய் புகுத்துவார்கள். தங்களை விலைகொடுத்து மீட்ட எல்லாம் வல்ல கர்த்தரையும் அவர்கள் மறுதலிப்பார்கள். இவ்விதமாக அழிவைத் தங்கள்மேல் விரைவாய் வருவித்துக்கொள்வார்கள்.
അപരം പൂർവ്വകാലേ യഥാ ലോകാനാം മധ്യേ മിഥ്യാഭവിഷ്യദ്വാദിന ഉപാതിഷ്ഠൻ തഥാ യുഷ്മാകം മധ്യേഽപി മിഥ്യാശിക്ഷകാ ഉപസ്ഥാസ്യന്തി, തേ സ്വേഷാം ക്രേതാരം പ്രഭുമ് അനങ്ഗീകൃത്യ സത്വരം വിനാശം സ്വേഷു വർത്തയന്തി വിനാശകവൈധർമ്മ്യം ഗുപ്തം യുഷ്മന്മധ്യമ് ആനേഷ്യന്തി|
2 பலர் அவர்களுடைய வெட்கக்கேடான வழிகளைப் பின்பற்றுவதினால் சத்திய வழிக்குக்கூட அவமானம் ஏற்படும்.
തതോ ഽനേകേഷു തേഷാം വിനാശകമാർഗം ഗതേഷു തേഭ്യഃ സത്യമാർഗസ്യ നിന്ദാ സമ്ഭവിഷ്യതി|
3 இந்த வேத ஆசிரியர் தங்களுடைய பேராசையில் தாங்களே இயற்றிய கட்டுக்கதைகளைச் சொல்லி, உங்களைச் சுரண்டி வாழப்பார்ப்பார்கள். அவர்களுக்குரிய தண்டனைத்தீர்ப்பு அவர்கள்மேல் விழ, இறைவனால் வெகுகாலத்திற்கு முன்னரே ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது. அவர்கள்மேல் வரவிருக்கும் அழிவு உறங்காது.
അപരഞ്ച തേ ലോഭാത് കാപട്യവാക്യൈ ര്യുഷ്മത്തോ ലാഭം കരിഷ്യന്തേ കിന്തു തേഷാം പുരാതനദണ്ഡാജ്ഞാ ന വിലമ്ബതേ തേഷാം വിനാശശ്ച ന നിദ്രാതി|
4 இறைத்தூதர்கள் பாவம் செய்தபோது, இறைவன் அவர்களைத் தப்பிப்போக விடவில்லை. அவர் அவர்களை நரகத்திற்குள் தள்ளி, அவர்களுக்குரிய நியாயத்தீர்ப்பைக் கொடுக்கும்வரைக்கும், அவர்களைப் பாதாளத்தின் இருளிலே போட்டார்; (Tartaroō )
ഈശ്വരഃ കൃതപാപാൻ ദൂതാൻ ന ക്ഷമിത്വാ തിമിരശൃങ്ഖലൈഃ പാതാലേ രുദ്ധ്വാ വിചാരാർഥം സമർപിതവാൻ| (Tartaroō )
5 முற்காலத்தில் இருந்த உலகத்தையும் இறைவன் தப்பிப்போக விடவில்லை. அதில் வாழ்ந்த இறை பக்தியற்ற மக்களின்மேல் வெள்ளத்தை வரச்செய்தார். ஆனால் நீதியைப் பிரசங்கித்த நோவாவையும் ஏழு பேர்களையும் அவர் காப்பாற்றினார்;
പുരാതനം സംസാരമപി ന ക്ഷമിത്വാ തം ദുഷ്ടാനാം സംസാരം ജലാപ്ലാവനേന മജ്ജയിത്വാ സപ്തജനൈഃ സഹിതം ധർമ്മപ്രചാരകം നോഹം രക്ഷിതവാൻ|
6 இறைவன் சோதோம், கொமோரா பட்டணங்களுக்குத் தண்டனைத்தீர்ப்பு வழங்கி, அவற்றைச் சுட்டெரித்து சாம்பலாக்கினார். இறை பக்தியற்றவர்களுக்கு, இதுவே நிகழும் என்று காண்பிப்பதற்காக, அந்தப் பட்டணங்கள் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்படி இப்படிச் செய்தார்.
സിദോമമ് അമോരാ ചേതിനാമകേ നഗരേ ഭവിഷ്യതാം ദുഷ്ടാനാം ദൃഷ്ടാന്തം വിധായ ഭസ്മീകൃത്യ വിനാശേന ദണ്ഡിതവാൻ;
7 ஆனால் இறைவன் நீதிமானாயிருந்த லோத்தைக் காப்பாற்றினார். அவனோ, அநியாயக்காரர்களின் அசுத்த வாழ்க்கையினாலே மனம் புண்பட்டவனாய் இருந்தான்.
കിന്തു തൈഃ കുത്സിതവ്യഭിചാരിഭി ർദുഷ്ടാത്മഭിഃ ക്ലിഷ്ടം ധാർമ്മികം ലോടം രക്ഷിതവാൻ|
8 அந்த நீதிமான் அவர்களிடையே வாழ்ந்தபோது, நாளுக்குநாள் தான் கண்டதும் கேட்டதுமான அநியாயச் செயல்களினாலே, தன் நீதியான உள்ளத்தில் வேதனையடைந்தான்.
സ ധാർമ്മികോ ജനസ്തേഷാം മധ്യേ നിവസൻ സ്വീയദൃഷ്ടിശ്രോത്രഗോചരേഭ്യസ്തേഷാമ് അധർമ്മാചാരേഭ്യഃ സ്വകീയധാർമ്മികമനസി ദിനേ ദിനേ തപ്തവാൻ|
9 அது அப்படியானால், இறை பக்தியுள்ள மனிதரை சோதனைகளிலிருந்து எப்படிக் காப்பாற்றுவது என்றும், அநியாயக்காரர்களை எப்படி நியாயத்தீர்ப்பின் நாள்வரைக்கும் தண்டனைக்கு உட்படுத்தும்படி வைத்துக்கொள்ளுவது என்றும், கர்த்தர் அறிந்திருக்கிறார்.
പ്രഭു ർഭക്താൻ പരീക്ഷാദ് ഉദ്ധർത്തും വിചാരദിനഞ്ച യാവദ് ദണ്ഡ്യാമാനാൻ അധാർമ്മികാൻ രോദ്ധും പാരയതി,
10 விசேஷமாக பாவ இயல்பிலிருந்து எழும் தங்களுடைய சீர்கெட்ட ஆசையின்படி நடந்து, அதிகாரத்தை அலட்சியம் செய்கிறவர்களுக்கு இந்த தண்டனை உண்டாகும். இப்படிப்பட்டவர்கள் துணிகரமும் அகந்தையும் உள்ளவர்கள். இவர்கள் பரலோகத்தில் உள்ளவர்களை அவதூறாய் பேசவும் பயப்படுவதில்லை.
വിശേഷതോ യേ ഽമേധ്യാഭിലാഷാത് ശാരീരികസുഖമ് അനുഗച്ഛന്തി കർതൃത്വപദാനി ചാവജാനന്തി താനേവ (രോദ്ധും പാരയതി| ) തേ ദുഃസാഹസിനഃ പ്രഗൽഭാശ്ച|
11 ஆனால், இவர்களைவிட வலிமை வாய்ந்தவர்களும், அதிக வல்லமையுடையவர்களுமான இறைவனுடைய தூதர்கள்கூட பரலோகத்தில் உள்ளவர்களுக்கு எதிராகக் கர்த்தர் முன்னிலையில் நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருவதில்லை.
അപരം ബലഗൗരവാഭ്യാം ശ്രേഷ്ഠാ ദിവ്യദൂതാഃ പ്രഭോഃ സന്നിധൗ യേഷാം വൈപരീത്യേന നിന്ദാസൂചകം വിചാരം ന കുർവ്വന്തി തേഷാമ് ഉച്ചപദസ്ഥാനാം നിന്ദനാദ് ഇമേ ന ഭീതാഃ|
12 ஆனால் இவர்களோ, தாங்கள் விளங்கிக்கொள்ளாத விஷயங்களில் அவதூறாகப் பேசுகிறார்கள். இவர்கள் மனிதத் தன்மையற்ற மிருகங்களைப் போன்றவர்கள். தங்கள் இயல்பின்படியே நடக்கின்ற உயிரினங்களைப் போன்றவர்கள். இவர்கள் பிடிக்கப்பட்டு அழிக்கப்படுவதற்கென்றே பிறந்திருக்கின்ற மிருகங்களைப்போலவே இவர்களும் அழிந்துபோவார்கள்.
കിന്തു യേ ബുദ്ധിഹീനാഃ പ്രകൃതാ ജന്തവോ ധർത്തവ്യതായൈ വിനാശ്യതായൈ ച ജായന്തേ തത്സദൃശാ ഇമേ യന്ന ബുധ്യന്തേ തത് നിന്ദന്തഃ സ്വകീയവിനാശ്യതയാ വിനംക്ഷ്യന്തി സ്വീയാധർമ്മസ്യ ഫലം പ്രാപ്സ്യന്തി ച|
13 தாங்கள் செய்த தீமைக்குப் பதிலாக, தீமையையே பெறுவார்கள். பகல் வேளையிலேயே மதுபான வெறியில் ஈடுபடுவதை இன்பம் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். இவர்கள் உங்களுடைய விருந்துகளில் கலந்துகொள்கிற அதேவேளையில், தங்கள் சிற்றின்பக் களியாட்டுக்களில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் உங்கள் மத்தியில் அசிங்கமும், கறையுமாயிருக்கிறார்கள்.
തേ ദിവാ പ്രകൃഷ്ടഭോജനം സുഖം മന്യന്തേ നിജഛലൈഃ സുഖഭോഗിനഃ സന്തോ യുഷ്മാഭിഃ സാർദ്ധം ഭോജനം കുർവ്വന്തഃ കലങ്കിനോ ദോഷിണശ്ച ഭവന്തി|
14 இவர்களுடைய கண்கள் விபசாரத்தால் நிறைந்திருக்கின்றன. பாவம் செய்வதை இவர்கள் ஒருபோதும் நிறுத்துவதில்லை; உறுதியற்றவர்களை இவர்கள் தங்கள் வசப்படுத்திக்கொள்கிறார்கள்; இவர்கள் இருதயம் பேராசையில் தேர்ச்சி பெற்றது, இவர்கள் சபிக்கப்பட்ட கூட்டமே.
തേഷാം ലോചനാനി പരദാരാകാങ്ക്ഷീണി പാപേ ചാശ്രാന്താനി തേ ചഞ്ചലാനി മനാംസി മോഹയന്തി ലോഭേ തത്പരമനസഃ സന്തി ച|
15 இவர்கள் நேர்வழியை விட்டு விலகி, அநீதியை செய்து கூலியைப் பெற ஆசைப்பட்டவனான பேயோரின் மகன் பிலேயாமின் வழியைப் பின்பற்றும்படி போய்விட்டார்கள்.
തേ ശാപഗ്രസ്താ വംശാഃ സരലമാർഗം വിഹായ ബിയോരപുത്രസ്യ ബിലിയമസ്യ വിപഥേന വ്രജന്തോ ഭ്രാന്താ അഭവൻ| സ ബിലിയമോ ഽപ്യധർമ്മാത് പ്രാപ്യേ പാരിതോഷികേഽപ്രീയത,
16 ஆனால் பிலேயாமோ ஒரு கழுதையினாலே அவனுடைய தவறான செயலைக்குறித்து கடிந்துகொள்ளப்பட்டான். வாய்ப்பேசாத அந்த மிருகம் மனிதக் குரலில் பேசி, அந்தத் தீர்க்கதரிசியின் மதிகேடான செயலைத் தடுத்து நிறுத்தியது.
കിന്തു നിജാപരാധാദ് ഭർത്സനാമ് അലഭത യതോ വചനശക്തിഹീനം വാഹനം മാനുഷികഗിരമ് ഉച്ചാര്യ്യ ഭവിഷ്യദ്വാദിന ഉന്മത്തതാമ് അബാധത|
17 இவர்கள் தண்ணீர் இல்லாத ஊற்றுக்கள்; புயல்காற்றினால் அடித்துச் செல்லப்படும் பனிமூட்டங்கள். காரிருளே இவர்களுக்கென்று நியமிக்கப்பட்டிருக்கிறது. ()
ഇമേ നിർജലാനി പ്രസ്രവണാനി പ്രചണ്ഡവായുനാ ചാലിതാ മേഘാശ്ച തേഷാം കൃതേ നിത്യസ്ഥായീ ഘോരതരാന്ധകാരഃ സഞ്ചിതോ ഽസ്തി| ()
18 இவர்கள் வீண் பெருமைகொண்ட வார்த்தைகளைப் பேசுகிறார்கள். இவர்கள் மனிதனுடைய பாவ இயல்பிலிருந்து காமவேட்கையுள்ள ஆசைகளைத் தூண்டும் விதத்தில் பேசி, தவறான வழியில் வாழுகிறவர்களிடமிருந்து தப்பித்துக்கொள்ள முயலும் மக்களைத் தங்கள் வசப்படுத்திக்கொள்கிறார்கள்.
യേ ച ജനാ ഭ്രാന്ത്യാചാരിഗണാത് കൃച്ഛ്രേണോദ്ധൃതാസ്താൻ ഇമേ ഽപരിമിതദർപകഥാ ഭാഷമാണാഃ ശാരീരികസുഖാഭിലാഷൈഃ കാമക്രീഡാഭിശ്ച മോഹയന്തി|
19 இவர்கள் மற்றவர்களுக்கு ஒரு சுதந்திரமான வாழ்க்கையை வாக்குப்பண்ணுகிறார்கள். ஆனால் அவர்களோ, தாங்களே சீர்கெட்ட வாழ்க்கைக்கு அடிமைகளாய் இருக்கிறார்கள். ஏனெனில் எதனால் ஒருவன் மேற்கொள்ளப்படுகிறானோ, அவன் அதற்கு அடிமையாக இருக்கிறான்.
തേഭ്യഃ സ്വാധീനതാം പ്രതിജ്ഞായ സ്വയം വിനാശ്യതായാ ദാസാ ഭവന്തി, യതഃ, യോ യേനൈവ പരാജിഗ്യേ സ ജാതസ്തസ്യ കിങ്കരഃ|
20 நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவை அறிந்துகொண்டதன் மூலமாக, இவர்கள் உலகத்தின் சீர்கேட்டுக்குத் தப்பித்திருந்தும், மீண்டும் அதே சீர்கேட்டில் அகப்பட்டிருக்கிறார்கள். அப்படி அவர்கள் அதனால் மேற்கொள்ளப்பட்டால், ஆரம்பத்தில் அவர்கள் இருந்த நிலைமையைவிட, முடிவில் அவர்கள் இருக்கும் நிலைமை மிக மோசமானது.
ത്രാതുഃ പ്രഭോ ര്യീശുഖ്രീഷ്ടസ്യ ജ്ഞാനേന സംസാരസ്യ മലേഭ്യ ഉദ്ധൃതാ യേ പുനസ്തേഷു നിമജ്ജ്യ പരാജീയന്തേ തേഷാം പ്രഥമദശാതഃ ശേഷദശാ കുത്സിതാ ഭവതി|
21 இவர்கள் நீதி வாழ்வின் வழியை அறியாதிருந்திருந்தால், அது இவர்களுக்கு அதிக நலமாயிருந்திருக்கும். ஏனெனில், இவர்கள் நீதி வாழ்வின் வழியை அறிந்த பின்பும், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பரிசுத்த கட்டளைகளைவிட்டுத் திரும்பிப் போனார்களே.
തേഷാം പക്ഷേ ധർമ്മപഥസ്യ ജ്ഞാനാപ്രാപ്തി ർവരം ന ച നിർദ്ദിഷ്ടാത് പവിത്രവിധിമാർഗാത് ജ്ഞാനപ്രാപ്താനാം പരാവർത്തനം|
22 “நாய் தான் கக்கினதை மீண்டும் தேடிப்போகிறது,” மற்றும், “கழுவப்பட்ட ஒரு பன்றி, மீண்டும் சேற்றில் புரளும்படி போகிறது,” என்ற பழமொழிகள் இவர்களுக்குப் பொருந்தும்.
കിന്തു യേയം സത്യാ ദൃഷ്ടാന്തകഥാ സൈവ തേഷു ഫലിതവതീ, യഥാ, കുക്കുരഃ സ്വീയവാന്തായ വ്യാവർത്തതേ പുനഃ പുനഃ| ലുഠിതും കർദ്ദമേ തദ്വത് ക്ഷാലിതശ്ചൈവ ശൂകരഃ||