< 2 இராஜாக்கள் 12 >

1 யெகூவின் ஆட்சியின் ஏழாம் வருடத்தில் யோவாஸ் யூதாவில் அரசனாக வந்தான். இவன் எருசலேமில் நாற்பது வருடங்கள் ஆட்சிசெய்தான். அவனுடைய தாய் பெயெர்செபாவைச் சேர்ந்த சிபியா என்பவள்.
בִּשְׁנַת־שֶׁ֤בַע לְיֵהוּא֙ מָלַ֣ךְ יְהֹואָ֔שׁ וְאַרְבָּעִ֣ים שָׁנָ֔ה מָלַ֖ךְ בִּירֽוּשָׁלָ֑͏ִם וְשֵׁ֣ם אִמֹּ֔ו צִבְיָ֖ה מִבְּאֵ֥ר שָֽׁבַע׃
2 ஆசாரியன் யோய்தா அறிவுறுத்தல்கள் வழங்கிய காலம் முழுவதும், அரசன் யோவாஸ் யெகோவாவின் பார்வையில் சரியானவற்றையே செய்து வந்தான்.
וַיַּ֨עַשׂ יְהֹואָ֧שׁ הַיָּשָׁ֛ר בְּעֵינֵ֥י יְהוָ֖ה כָּל־יָמָ֑יו אֲשֶׁ֣ר הֹורָ֔הוּ יְהֹויָדָ֖ע הַכֹּהֵֽן׃
3 ஆனால் உயர்ந்த மேடைகளோ அகற்றப்படவில்லை. மக்கள் தொடர்ந்து அந்த மேடைகளில் பலிகளைச் செலுத்தியும், தூபங்காட்டியும் வந்தனர்.
רַ֥ק הַבָּמֹ֖ות לֹא־סָ֑רוּ עֹ֥וד הָעָ֛ם מְזַבְּחִ֥ים וּֽמְקַטְּרִ֖ים בַּבָּמֹֽות׃
4 யோவாஸ் ஆசாரியர்களைப் பார்த்து, “குடிமதிப்பின்போது வசூலிக்கப்படும் பணம், தனிப்பட்டோரின் நேர்த்திக்கடன்கள் மூலம் பெறப்படும் பணம், ஆலயத்துக்கு மக்கள் சுயவிருப்பமாகக் கொடுக்கும் பணம் ஆகியவை யெகோவாவினுடைய ஆலயத்துக்கு பரிசுத்த காணிக்கையாகக் கொண்டுவரப்படும். அவற்றையெல்லாம் சேர்த்தெடுங்கள்.
וַיֹּ֨אמֶר יְהֹואָ֜שׁ אֶל־הַכֹּהֲנִ֗ים כֹּל֩ כֶּ֨סֶף הַקֳּדָשִׁ֜ים אֲשֶׁר־יוּבָ֤א בֵית־יְהוָה֙ כֶּ֣סֶף עֹובֵ֔ר אִ֕ישׁ כֶּ֥סֶף נַפְשֹׁ֖ות עֶרְכֹּ֑ו כָּל־כֶּ֗סֶף אֲשֶׁ֤ר יַֽעֲלֶה֙ עַ֣ל לֶב־אִ֔ישׁ לְהָבִ֖יא בֵּ֥ית יְהוָֽה׃
5 ஒவ்வொரு ஆசாரியனும் பொருளாளர்கள் ஒருவனிடமிருந்து அப்பணத்தைப் பெற்று ஆலயத்தில் என்ன பழுதுகள் காணப்படுகின்றனவோ அவற்றைத் திருத்துவதற்காக அப்பணத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டும்” எனக் கூறினான்.
יִקְח֤וּ לָהֶם֙ הַכֹּ֣הֲנִ֔ים אִ֖ישׁ מֵאֵ֣ת מַכָּרֹ֑ו וְהֵ֗ם יְחַזְּקוּ֙ אֶת־בֶּ֣דֶק הַבַּ֔יִת לְכֹ֛ל אֲשֶׁר־יִמָּצֵ֥א שָׁ֖ם בָּֽדֶק׃ פ
6 ஆனால் யோவாஸ் அரசேற்று இருபத்தி மூன்று வருடங்களாகியும் ஆலயத்தில் எவ்வித திருத்த வேலைகளும் ஆசாரியர்களால் செய்யப்படவில்லை.
וַיְהִ֗י בִּשְׁנַ֨ת עֶשְׂרִ֧ים וְשָׁלֹ֛שׁ שָׁנָ֖ה לַמֶּ֣לֶךְ יְהֹואָ֑שׁ לֹֽא־חִזְּק֥וּ הַכֹּהֲנִ֖ים אֶת־בֶּ֥דֶק הַבָּֽיִת׃
7 ஆகவே யோவாஸ் அரசன் ஆசாரியனான யோய்தாவையும் மற்ற ஆசாரியர்களையும் வரும்படி அழைத்து அவர்களிடம், “ஆலயத்தை ஏன் பழுதுபார்க்கவில்லை?” என்று கேட்டான். பின்பு அவன், “இனிமேல் உங்கள் பொருளாளர்களிடமிருந்து பணம் வாங்கவேண்டாம். ஆலயத்தைத் திருத்துவதற்காக அந்தப் பணத்தைக் கொடுத்துவிடுங்கள்” என்றான்.
וַיִּקְרָא֩ הַמֶּ֨לֶךְ יְהֹואָ֜שׁ לִיהֹויָדָ֤ע הַכֹּהֵן֙ וְלַכֹּ֣הֲנִ֔ים וַיֹּ֣אמֶר אֲלֵהֶ֔ם מַדּ֛וּעַ אֵינְכֶ֥ם מְחַזְּקִ֖ים אֶת־בֶּ֣דֶק הַבָּ֑יִת וְעַתָּ֗ה אַל־תִּקְחוּ־כֶ֙סֶף֙ מֵאֵ֣ת מַכָּֽרֵיכֶ֔ם כִּֽי־לְבֶ֥דֶק הַבַּ֖יִת תִּתְּנֻֽהוּ׃
8 ஆசாரியர்கள் தாம் இனிமேல் மக்களிடமிருந்து பணத்தைச் சேர்ப்பதில்லை என்றும், ஆலயத்தைப் பழுது பார்ப்பதில்லை என்றும் ஒத்துக்கொண்டனர்.
וַיֵּאֹ֖תוּ הַכֹּֽהֲנִ֑ים לְבִלְתִּ֤י קְחַת־כֶּ֙סֶף֙ מֵאֵ֣ת הָעָ֔ם וּלְבִלְתִּ֥י חַזֵּ֖ק אֶת־בֶּ֥דֶק הַבָּֽיִת׃
9 ஆசாரியனான யோய்தா ஒரு பெட்டியை எடுத்து அதன் மூடியில் ஒரு துவாரமிட்டு, அதை யெகோவாவின் ஆலயத்துக்கு மக்கள் வரும் வாசலில் வலதுபக்கத்தில் பலிபீடத்துக்கு அருகே வைத்தான். யெகோவாவின் ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்ட எல்லாப் பணத்தையும், ஆலய வாசலைப் பாதுகாத்த ஆசாரியர்கள் அந்தப் பெட்டிக்குள் போட்டனர்.
וַיִּקַּ֞ח יְהֹויָדָ֤ע הַכֹּהֵן֙ אֲרֹ֣ון אֶחָ֔ד וַיִּקֹּ֥ב חֹ֖ר בְּדַלְתֹּ֑ו וַיִּתֵּ֣ן אֹתֹו֩ אֵ֨צֶל הַמִּזְבֵּ֜חַ בַּיָּמִין (מִיָּמִ֗ין) בְּבֹֽוא־אִישׁ֙ בֵּ֣ית יְהוָ֔ה וְנָֽתְנוּ־שָׁ֤מָּה הַכֹּֽהֲנִים֙ שֹׁמְרֵ֣י הַסַּ֔ף אֶת־כָּל־הַכֶּ֖סֶף הַמּוּבָ֥א בֵית־יְהוָֽה׃
10 அந்தப் பெட்டியில் பெருந்தொகை பணம் இருப்பதைக் கண்டபோதெல்லாம், அரசனின் செயலாளரும் தலைமை ஆசாரியனாகவும் வந்து யெகோவாவின் ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்ட பணத்தை எண்ணிப் பைகளில் போட்டார்கள்.
וַֽיְהִי֙ כִּרְאֹותָ֔ם כִּֽי־רַ֥ב הַכֶּ֖סֶף בָּֽאָרֹ֑ון וַיַּ֨עַל סֹפֵ֤ר הַמֶּ֙לֶךְ֙ וְהַכֹּהֵ֣ן הַגָּדֹ֔ול וַיָּצֻ֙רוּ֙ וַיִּמְנ֔וּ אֶת־הַכֶּ֖סֶף הַנִּמְצָ֥א בֵית־יְהוָֽה׃
11 இந்தத் தொகை எண்ணி முடிந்ததும் ஆலயப் பணிசெய்ய நியமிக்கப்பட்ட மேற்பார்வையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அதை யெகோவாவின் ஆலய வேலைசெய்யும் தச்சுவேலை செய்வோருக்கும், கட்டிடவேலை செய்வோருக்கும்,
וְנָתְנוּ֙ אֶת־הַכֶּ֣סֶף הַֽמְתֻכָּ֔ן עַל־יַד (יְדֵי֙) עֹשֵׂ֣י הַמְּלָאכָ֔ה הַפְּקֻדִים (הַמֻּפְקָדִ֖ים) בֵּ֣ית יְהוָ֑ה וַיֹּוצִיאֻ֜הוּ לְחָרָשֵׁ֤י הָעֵץ֙ וְלַבֹּנִ֔ים הָעֹשִׂ֖ים בֵּ֥ית יְהוָֽה׃
12 கொல்லருக்கும், கல் வெட்டுவோருக்கும் கொடுத்தார்கள். பின் அவர்கள் யெகோவாவின் ஆலயத்தை திருத்துவதற்கான மரங்களையும் செதுக்கப்பட்ட கற்களையும் வாங்கியதோடு, ஆலயத்தைத் திருத்தியமைப்பதற்கு வேண்டிய மற்ற செலவுகளுக்கும் அதைப் பயன்படுத்தினர்.
וְלַגֹּֽדְרִים֙ וּלְחֹצְבֵ֣י הָאֶ֔בֶן וְלִקְנֹ֤ות עֵצִים֙ וְאַבְנֵ֣י מַחְצֵ֔ב לְחַזֵּ֖ק אֶת־בֶּ֣דֶק בֵּית־יְהוָ֑ה וּלְכֹ֛ל אֲשֶׁר־יֵצֵ֥א עַל־הַבַּ֖יִת לְחָזְקָֽה׃
13 இப்பணம், வெள்ளிப் பாத்திரங்கள், திரிவெட்டிகள், தெளிக்கும் கிண்ணங்கள், எக்காளங்கள் ஆகியவற்றை செய்வதற்கோ அல்லது யெகோவாவின் ஆலயத்திற்குத் தங்கத்தினாலும், வெள்ளியினாலும் வேறேதும் பொருட்கள் செய்வதற்கோ செலவழிக்கப்படவில்லை.
אַךְ֩ לֹ֨א יֵעָשֶׂ֜ה בֵּ֣ית יְהוָ֗ה סִפֹּ֥ות כֶּ֙סֶף֙ מְזַמְּרֹ֤ות מִזְרָקֹות֙ חֲצֹ֣צְרֹ֔ות כָּל־כְּלִ֥י זָהָ֖ב וּכְלִי־כָ֑סֶף מִן־הַכֶּ֖סֶף הַמּוּבָ֥א בֵית־יְהוָֽה׃
14 இப்பணம் யெகோவாவினுடைய ஆலயத்தின் திருத்த வேலைகளைச் செய்த வேலையாட்களுக்கே கொடுக்கப்பட்டது. அவர்கள் அதை ஆலயத்தின் திருத்த வேலைகளுக்கே உபயோகித்தனர்.
כִּֽי־לְעֹשֵׂ֥י הַמְּלָאכָ֖ה יִתְּנֻ֑הוּ וְחִזְּקוּ־בֹ֖ו אֶת־בֵּ֥ית יְהוָֽה׃
15 மேலும் வேலைசெய்வோருக்கு கூலி கொடுக்கும்படி பணம் ஒப்படைக்கப்பட்ட மேற்பார்வையாளர்கள் மிகவும் நேர்மையாய் நடந்துகொண்டதால், அவர்களிடமிருந்து எந்தவித கணக்கு வழக்கும் கேட்கப்படவில்லை.
וְלֹ֧א יְחַשְּׁב֣וּ אֶת־הָאֲנָשִׁ֗ים אֲשֶׁ֨ר יִתְּנ֤וּ אֶת־הַכֶּ֙סֶף֙ עַל־יָדָ֔ם לָתֵ֖ת לְעֹשֵׂ֣י הַמְּלָאכָ֑ה כִּ֥י בֶאֱמֻנָ֖ה הֵ֥ם עֹשִֽׂים׃
16 குற்றநிவாரண காணிக்கைப் பணமும், பாவநிவாரண காணிக்கைப் பணமும் யெகோவாவின் ஆலயத்திற்குள் கொண்டுவரப்படவில்லை. அவை ஆசாரியருக்கே உரிமையாக இருந்தன.
כֶּ֤סֶף אָשָׁם֙ וְכֶ֣סֶף חַטָּאֹ֔ות לֹ֥א יוּבָ֖א בֵּ֣ית יְהוָ֑ה לַכֹּהֲנִ֖ים יִהְיֽוּ׃ פ
17 இந்த நாட்களில் சீரிய அரசன் ஆசகேல், காத்தை எதிர்த்துத் தாக்கிக் கைப்பற்றினான். அங்கிருந்து எருசலேமைத் தாக்குவற்காகத் திரும்பினான்.
אָ֣ז יַעֲלֶ֗ה חֲזָאֵל֙ מֶ֣לֶךְ אֲרָ֔ם וַיִּלָּ֥חֶם עַל־גַּ֖ת וַֽיִּלְכְּדָ֑הּ וַיָּ֤שֶׂם חֲזָאֵל֙ פָּנָ֔יו לַעֲלֹ֖ות עַל־יְרוּשָׁלָֽ͏ִם׃
18 ஆனால் யூதாவின் அரசன் யோவாஸ் தன் தந்தையரான யூதாவின் அரசர்களான யோசபாத், யெகோராம், அகசியா என்பவர்களால் அர்ப்பணிக்கப்பட்ட பரிசுத்த பொருட்களையும், தான் அர்ப்பணித்த அன்பளிப்புகளையும் யெகோவாவின் ஆலயத்திலும், அரசனின் அரண்மனையிலும் உள்ள திரவிய களஞ்சியங்களில் இருந்த எல்லாத் தங்கத்தையும் எடுத்து அவற்றை சீரிய அரசன் ஆசகேலுக்கு அனுப்பினான். அதனால் ஆசகேல் எருசலேமிலிருந்து திரும்பிச்சென்றான்.
וַיִּקַּ֞ח יְהֹואָ֣שׁ מֶֽלֶךְ־יְהוּדָ֗ה אֵ֣ת כָּל־הַקֳּדָשִׁ֡ים אֲשֶׁר־הִקְדִּ֣ישׁוּ יְהֹושָׁפָ֣ט וִיהֹורָם֩ וַאֲחַזְיָ֨הוּ אֲבֹתָ֜יו מַלְכֵ֤י יְהוּדָה֙ וְאֶת־קֳדָשָׁ֔יו וְאֵ֣ת כָּל־הַזָּהָ֗ב הַנִּמְצָ֛א בְּאֹצְרֹ֥ות בֵּית־יְהוָ֖ה וּבֵ֣ית הַמֶּ֑לֶךְ וַיִּשְׁלַ֗ח לַֽחֲזָאֵל֙ מֶ֣לֶךְ אֲרָ֔ם וַיַּ֖עַל מֵעַ֥ל יְרוּשָׁלָֽ͏ִם׃
19 யோவாசின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவன் செய்தவை யாவும் யூதா அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன.
וְיֶ֛תֶר דִּבְרֵ֥י יֹואָ֖שׁ וְכָל־אֲשֶׁ֣ר עָשָׂ֑ה הֲלֹוא־הֵ֣ם כְּתוּבִ֗ים עַל־סֵ֛פֶר דִּבְרֵ֥י הַיָּמִ֖ים לְמַלְכֵ֥י יְהוּדָֽה׃
20 யோவாசினுடைய அதிகாரிகள் அவனுக்கு எதிராகச் சதிசெய்து, சில்லாவுக்குப் போகும் வழியிலுள்ள பெத்மில்லோவில் அவனைக் கொலைசெய்தனர்.
וַיָּקֻ֥מוּ עֲבָדָ֖יו וַיִּקְשְׁרֽוּ־קָ֑שֶׁר וַיַּכּוּ֙ אֶת־יֹואָ֔שׁ בֵּ֥ית מִלֹּ֖א הַיֹּורֵ֥ד סִלָּֽא׃
21 சிமியாத்தின் மகன் யோசகாரும், சோமேரின் மகன் யோசபாத்தும் ஆகிய அவனுடைய அதிகாரிகளே அவனைக் கொன்றார்கள். அவர்கள் அவனை அவனுடைய தந்தையர்களோடு தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள். அவனுடைய மகனான அமத்சியா அவனுக்குப்பின் அரசனானான்.
וְיֹוזָבָ֣ד בֶּן־שִׁ֠מְעָת וִיהֹוזָבָ֨ד בֶּן־שֹׁמֵ֤ר ׀ עֲבָדָיו֙ הִכֻּ֣הוּ וַיָּמֹ֔ת וַיִּקְבְּר֥וּ אֹתֹ֛ו עִם־אֲבֹתָ֖יו בְּעִ֣יר דָּוִ֑ד וַיִּמְלֹ֛ךְ אֲמַצְיָ֥ה בְנֹ֖ו תַּחְתָּֽיו׃ פ

< 2 இராஜாக்கள் 12 >