< 2 கொரிந்தியர் 4 >
1 ஆகவே நாங்கள் இறைவனுடைய இரக்கத்தினால் இந்த ஊழியத்தைப் பெற்றிருக்கிறபடியால், நாங்கள் மனந்தளர்ந்து போவதில்லை.
那么,上帝凭借其悲悯给予我们新方法,与他建立联系,我们就不能放弃。
2 வெட்கத்துக்குரிய இரகசியமான செயல்களை நாங்கள் கைக்கொள்வதில்லை. நாங்கள் ஏமாற்றுகிறவர்களாய் இருக்கவில்லை. இறைவனுடைய வார்த்தையை நாங்கள் திரித்துக் கூறவதில்லை. மாறாக, சத்தியத்தை வெளிப்படையாய் எடுத்துக்கூறுகிறோம். இப்படி, இறைவனுக்கு முன்பாக ஒவ்வொரு மனிதனின் மனசாட்சிக்கும் எங்களைப்பற்றி நற்சான்று அளிக்கிறோம்.
但我们已经放弃了秘密的、可耻的行为。我们绝不欺骗,绝不曲解上帝之道。我们在上帝面前彰显真理,让每个人都可以凭借自己的良心做决定。
3 எங்களுடைய நற்செய்தி மறைக்கப்பட்டிருந்தால், அது அழிந்து போகிறவர்களுக்கே மறைக்கப்பட்டிருக்கிறது.
尽管我们传播的福音蒙着面纱,但这只是在将死之人的眼中才是如此。
4 இவ்வுலகின் தேவன் அவிசுவாசிகளாகிய அவர்களின் மனங்களைக் குருடாக்கியிருக்கிறான். அதனாலேயே இறைவனின் சாயலாய் விளங்கும் கிறிஸ்துவின் மகிமை பொருந்திய நற்செய்தியின் ஒளியை, அவர்களால் காண முடியாதிருக்கிறது. (aiōn )
那些不信上帝的人,是因为俗世的神明蒙蔽了他们的心灵。基督就是上帝的形象,但他们无法看到基督荣耀的福音。 (aiōn )
5 ஏனெனில் நாங்கள் எங்களைக் குறித்து பிரசங்கிப்பதில்லை. இயேசுகிறிஸ்துவைக் கர்த்தர் என்றும், எங்களையோ இயேசுவுக்காக உங்கள் ஊழியர்கள் என்றும் பிரசங்கிக்கிறோம்.
我们并不是宣扬自己,而是在传播耶稣基督就是主,事实上,我们因耶稣的缘故成了你们的仆人。
6 “இருளின்மேல் வெளிச்சம் பிரகாசிக்கட்டும்” எனக்கூறிய இறைவன், தமது ஒளியை எங்கள் இருதயங்களில் பிரகாசிக்கச் செய்திருக்கிறார். கிறிஸ்துவின் முகத்திலே உள்ள இறைவனது மகிமையின் அறிவின் ஒளியை எங்களுக்குக் கொடுப்பதற்கே அவர் இதைச் செய்தார்.
因为上帝说“要有光从黑暗里照出来”,这光已经照在我们的心里,点亮耶稣基督脸庞的荣光,那是上帝知识的荣光。
7 ஆனால் இந்தச் செல்வத்தை மண்பாண்டங்களில் நாங்கள் பெற்றிருக்கிறோம். இதனால், எல்லாவற்றிற்கும் மேலான இந்த வல்லமை எங்களிடமிருந்து அல்ல, இறைவனிடமிருந்தே கிடைக்கின்றது என்பதை எல்லோரும் அறிவார்கள்.
我们将这珍宝放在瓦罐中,显明这超强力量源自上帝而非我们。
8 ஒவ்வொரு பக்கத்திலும் எங்களுக்கு நெருக்கடியே ஏற்படுகிறது, ஆனாலும் நாங்கள் நசுங்குண்டு போவதில்லை; குழப்பமடைந்திருக்கிறோம், ஆனாலும் மனந்தளர்ந்து போவதில்லை;
我们虽然遭受各方面的攻击,却没有破碎。我们也会对前路感到迷茫,却从不绝望。
9 துன்புறுத்தப்பட்டோம், ஆனாலும் கைவிடப்படுவதில்லை; அடித்து வீழ்த்தப்பட்டோம், ஆனாலும் அழிந்து போவதில்லை.
我们受到迫害,却上帝并未丢弃我们。我们被打倒了,却没有死亡。
10 எங்கள் உடலில் இயேசுவின் வாழ்வு வெளிப்படுபடி, நாங்கள் எப்பொழுதும் இயேசுவின் மரண வேதனையை எங்கள் உடலில் அனுபவிக்கிறோம்.
我们以肉体之躯体现耶稣之死,所以也能让这肉体之躯体现耶稣之生。
11 இதனால் உயிரோடிருக்கும் நாங்கள் இயேசுவினிமித்தம் எப்பொழுதும் மரணத்துக்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம். இதனால் அவருடைய வாழ்வு சாகும் தன்மையுள்ள எங்கள் உடலில் வெளிப்படுகிறது.
当我们存活于世,因为耶稣的缘故常常遭受死亡的威胁,只有这样,我们必死之躯才能体现耶稣的生。
12 இப்படியாகவே, மரணம் எங்களில் செயலாற்றுகிறது. அதனால் வாழ்வு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது.
通过这种方式,我们面临死亡,才能让你们拥有生命。
13 “நான் விசுவாசித்தேன்; ஆகையால்தான் நான் பேசினேன்” என்று வேதவசனத்தில் எழுதப்பட்டிருக்கிறபடி. அந்த விசுவாசத்தின் ஆவியினாலேயே, நாங்களும் விசுவாசிக்கிறோம். ஆதலால் பேசுகிறோம்.
我们拥有相同的信仰之灵,正如经文中所记:“我相信上帝,所以我说出来。”我们也信仰上帝,所以为他说出来。
14 ஏனெனில், கர்த்தராகிய இயேசுவை மரணத்திலிருந்து உயிருடன் எழுப்பிய இறைவன், இயேசுவுடன்கூட எங்களையும் உயிரோடு எழுப்புவார். இவ்விதம் அவர் எங்களையும் உங்களோடுகூட தமது சமுகத்தில் நிறுத்துவார். இதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.
因为知道上帝让主耶稣死而复生,也必定让我们与耶稣一同复活,将我们和你们一起呈献在他的面前。
15 இவையெல்லாம் உங்கள் நன்மைக்காகவே உண்டாகியிருக்கிறது. இதனால், மென்மேலும் அதிகதிகமான மக்களிடம் அவரின் கிருபை சென்றடையும்போது, நன்றி செலுத்துதல் நிரம்பிவழியும். அப்போது இறைவனின் மகிமை அதிகதிகமாய்ப் போற்றிப் புகழப்படும்.
这一切都是为了你们,让上帝的恩典惠及更多人,让对上帝的感恩更加强大,让荣耀归给上帝。
16 ஆதலால் நாங்கள் மனந்தளர்ந்து போவதில்லை. வெளிப்படையாக வலுவிழந்து போனாலும், நாங்கள் உள்ளாக நாளுக்குநாள் புதுப்பிக்கப்படுகிறோம்.
所以,我们不会放弃。尽管我们的肉体身躯逐渐朽坏,内在的自我却每日展露新颜。
17 ஏனெனில் கணப்பொழுது எங்களுக்கு ஏற்படும் சிறுசிறு துன்பங்கள், அவற்றிலும் மிகப்பெரிதான நித்திய மகிமையை விளைவிக்கின்றன. (aiōnios )
我们经历的苦难微不足道,只会短暂持续,只是为了让我们成就不断增强的荣耀。 (aiōnios )
18 எனவே நாங்கள் காணப்படுபவைகளிலல்ல, காணப்படாதவைகளிலேயே கண்நோக்கமாயிருக்கிறோம். ஏனெனில் காணப்படுபவை தற்காலிகமானவை, காணப்படாதவைகளோ நித்தியமானவை. (aiōnios )
对于可见的一切,我们并不担心自身。因为我们期待的是不可见的一切。我们看到的都是短暂的,看不见的才是永远。 (aiōnios )