< 2 கொரிந்தியர் 3 >
1 நாங்களே மறுபடியும் எங்களை பாராட்டிக்கொள்ளத் தொடங்குகிறோமா? அல்லது சில மனிதருக்கு நற்சான்றுக் கடிதங்கள் தேவைப்படுகிறது போல, நாங்கள் உங்களுக்கு நற்சான்றுக் கடிதங்களைக் காட்டவேண்டுமா? அல்லது உங்களிடமிருந்தும் நற்சான்றுக் கடிதங்கள் எங்களுக்குத் தேவையா?
வயம்’ கிம் ஆத்மப்ரஸ²ம்’ஸநம்’ புநராரபா⁴மஹே? யுஷ்மாந் ப்ரதி யுஷ்மத்தோ வா பரேஷாம்’ கேஷாஞ்சித்³ இவாஸ்மாகமபி கிம்’ ப்ரஸ²ம்’ஸாபத்ரேஷு ப்ரயோஜநம் ஆஸ்தே?
2 இல்லையே; நீங்களே எங்கள் இருதயங்களில் எழுதப்பட்டும், எல்லோராலும் அறிந்து, வாசிக்கப்படுகின்ற எங்கள் நற்சான்றுக் கடிதமாயிருக்கிறீர்கள்.
யூயமேவாஸ்மாகம்’ ப்ரஸ²ம்’ஸாபத்ரம்’ தச்சாஸ்மாகம் அந்த: கரணேஷு லிகி²தம்’ ஸர்வ்வமாநவைஸ்²ச ஜ்ஞேயம்’ பட²நீயஞ்ச|
3 நீங்கள் எங்கள் ஊழியத்தின் பலனாக, கிறிஸ்துவிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஒரு கடிதம் என்பதைக் காண்பிக்கிறீர்கள். அது மையினால் எழுதப்படவில்லை, ஜீவனுள்ள இறைவனின் ஆவியானவராலே எழுதப்பட்டிருக்கிறது. கற்பலகைகளில் எழுதப்படவில்லை, மனித இருதயங்களில் எழுதப்பட்டிருக்கிறது.
யதோ (அ)ஸ்மாபி⁴: ஸேவிதம்’ க்²ரீஷ்டஸ்ய பத்ரம்’ யூயபேவ, தச்ச ந மஸ்யா கிந்த்வமரஸ்யேஸ்²வரஸ்யாத்மநா லிகி²தம்’ பாஷாணபத்ரேஷு தந்நஹி கிந்து க்ரவ்யமயேஷு ஹ்ரு’த்பத்ரேஷு லிகி²தமிதி ஸுஸ்பஷ்டம்’|
4 இப்படிப்பட்ட மனவுறுதி, இறைவனுக்கு முன்பாக கிறிஸ்துவின் மூலமாய் எங்களுக்கு உண்டு.
க்²ரீஷ்டேநேஸ்²வரம்’ ப்ரத்யஸ்மாகம் ஈத்³ரு’ஸோ² த்³ரு’ட⁴விஸ்²வாஸோ வித்³யதே;
5 நாங்கள் எங்கள் இயல்பினால் எதையும் செய்யமுடியும் என்று சொல்வதற்குத் தகுதியானவர்கள் அல்ல. எங்கள் தகுதி இறைவனிடமிருந்தே வருகிறது.
வயம்’ நிஜகு³ணேந கிமபி கல்பயிதும்’ ஸமர்தா² இதி நஹி கிந்த்வீஸ்²வராத³ஸ்மாகம்’ ஸாமர்த்²யம்’ ஜாயதே|
6 அவர் எங்களை ஒரு புது உடன்படிக்கையின் ஊழியக்காரராய் இருப்பதற்கு தகுதியுள்ளவராக்கினார். அந்த உடன்படிக்கை எழுதப்பட்ட மோசேயின் சட்டத்தைச் சார்ந்ததல்ல, ஆவியையே சார்ந்தது. எழுதப்பட்ட மோசேயின் சட்டம் கொல்லுகிறது, ஆனால் ஆவியானவரோ வாழ்வைக் கொடுக்கிறார்.
தேந வயம்’ நூதநநியமஸ்யார்த²தோ (அ)க்ஷரஸம்’ஸ்தா²நஸ்ய தந்நஹி கிந்த்வாத்மந ஏவ ஸேவநஸாமர்த்²யம்’ ப்ராப்தா: | அக்ஷரஸம்’ஸ்தா²நம்’ ம்ரு’த்யுஜநகம்’ கிந்த்வாத்மா ஜீவநதா³யக: |
7 கற்களின்மேல் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு, மரணத்தைக் கொண்டுவந்த பணி மகிமையுடன் வந்தது. மோசேயின் முகம் பிரகாசிக்கின்ற ஒளியாய் இருந்தபடியினால், இஸ்ரயேலர்களால் அவனுடைய முகத்தை நேராகப் பார்க்க முடியாதிருந்தது! ஆனால், அது மங்கிப்போகின்ற ஒளியாகவே இருந்தது.
அக்ஷரை ர்விலிகி²தபாஷாணரூபிணீ யா ம்ரு’த்யோ: ஸேவா ஸா யதீ³த்³ரு’க் தேஜஸ்விநீ ஜாதா யத்தஸ்யாசிரஸ்தா²யிநஸ்தேஜஸ: காரணாத் மூஸஸோ முக²ம் இஸ்ராயேலீயலோகை: ஸம்’த்³ரஷ்டும்’ நாஸ²க்யத,
8 அதுவே அப்படியிருந்தது என்றால், பரிசுத்த ஆவியானவரின் பணி எத்தனை அதிக மகிமையுள்ளதாய் இருக்கும்?
தர்ஹ்யாத்மந: ஸேவா கிம்’ ததோ(அ)பி ப³ஹுதேஜஸ்விநீ ந ப⁴வேத்?
9 மனிதருக்குத் தண்டனைத்தீர்ப்பு கொடுக்கும் பணி இத்துணை மகிமையுடையதாய் இருந்தால், அவர்களுக்கு நீதியைக் கொண்டுவரும் பணி எத்தனை மகிமையுள்ளதாய் இருக்கும்?
த³ண்ட³ஜநிகா ஸேவா யதி³ தேஜோயுக்தா ப⁴வேத் தர்ஹி புண்யஜநிகா ஸேவா ததோ(அ)தி⁴கம்’ ப³ஹுதேஜோயுக்தா ப⁴விஷ்யதி|
10 முந்திய மகிமையுடன் இப்பொழுதுள்ள மகிமையை ஒப்பிடும்போது, இப்பொழுதுள்ள மகிமைக்கு முன்பாக இணையற்றது.
உப⁴யோஸ்துலநாயாம்’ க்ரு’தாயாம் ஏகஸ்யாஸ்தேஜோ த்³விதீயாயா: ப்ரக²ரதரேண தேஜஸா ஹீநதேஜோ ப⁴வதி|
11 அன்றியும், மங்கிப்போகும் தன்மையுடையதே மகிமையுடன் வந்ததானால், நிலைத்திருப்பதின் மகிமை எவ்வளவு பெரிதானது?
யஸ்மாத்³ யத் லோபநீயம்’ தத்³ யதி³ தேஜோயுக்தம்’ ப⁴வேத் தர்ஹி யத் சிரஸ்தா²யி தத்³ ப³ஹுதரதேஜோயுக்தமேவ ப⁴விஷ்யதி|
12 ஆகவே, இத்தகைய ஒரு எதிர்பார்ப்பு நமக்கிருப்பதால், நாங்கள் மிகவும் துணிவுள்ளவர்களாய் இருக்கிறோம்.
ஈத்³ரு’ஸீ²ம்’ ப்ரத்யாஸா²ம்’ லப்³த்⁴வா வயம்’ மஹதீம்’ ப்ரக³ல்ப⁴தாம்’ ப்ரகாஸ²யாம: |
13 நாங்கள் மோசேயைப் போன்றவர்கள் அல்ல. மறைந்துபோகும் மகிமையை, இஸ்ரயேலர் பார்க்காதபடி மோசே தன் முகத்தின்மேல் முக்காடு போட்டுக்கொண்டான்.
இஸ்ராயேலீயலோகா யத் தஸ்ய லோபநீயஸ்ய தேஜஸ: ஸே²ஷம்’ ந விலோகயேயுஸ்தத³ர்த²ம்’ மூஸா யாத்³ரு’க்³ ஆவரணேந ஸ்வமுக²ம் ஆச்சா²த³யத் வயம்’ தாத்³ரு’க் ந குர்ம்ம: |
14 ஆனால், அவர்களின் மனது மழுங்கிப் போயிற்று. ஏனெனில், இந்நாள்வரை அவர்கள் பழைய உடன்படிக்கையை வாசிக்கும்போது, அந்த முக்காடு நீக்கப்படாமலேயே இருக்கிறது. ஏனெனில் அது கிறிஸ்துவில் மட்டுமே நீக்கப்படுகிறது.
தேஷாம்’ மநாம்’ஸி கடி²நீபூ⁴தாநி யதஸ்தேஷாம்’ பட²நஸமயே ஸ புராதநோ நியமஸ்தேநாவரணேநாத்³யாபி ப்ரச்ச²ந்நஸ்திஷ்ட²தி|
15 இன்றுவரை மோசேயின் சட்டங்கள் வாசிக்கப்படும்போது, அவர்களுடைய இருதயங்களை ஒரு முக்காடு மூடிக்கொண்டிருக்கிறது.
தச்ச ந தூ³ரீப⁴வதி யத: க்²ரீஷ்டேநைவ தத் லுப்யதே| மூஸஸ: ஸா²ஸ்த்ரஸ்ய பாட²ஸமயே(அ)த்³யாபி தேஷாம்’ மநாம்’ஸி தேநாவரணேந ப்ரச்சா²த்³யந்தே|
16 ஆனால், யாராவது கர்த்தரிடத்தில் திரும்பும்போது, அந்த முக்காடு நீக்கப்படுகிறது.
கிந்து ப்ரபு⁴ம்’ ப்ரதி மநஸி பராவ்ரு’த்தே தத்³ ஆவரணம்’ தூ³ரீகாரிஷ்யதே|
17 இப்பொழுதும், ஆவியானவரே கர்த்தர். கர்த்தருடைய ஆவியானவர் எங்கே இருக்கிறாரோ, அங்கே அவர் விடுதலை கொடுக்கிறார்.
ய: ப்ரபு⁴: ஸ ஏவ ஸ ஆத்மா யத்ர ச ப்ரபோ⁴ராத்மா தத்ரைவ முக்தி: |
18 நாம் எல்லோரும் முக்காடு இடப்படாத முகங்களுடன், கர்த்தருடைய மகிமையைப் பிரதிபலிக்கிறோம். இவ்விதமாக மகிமையான நிலையிலிருந்து, மகிமையின்மேல் மகிமையை அடைந்து, அவருடைய சாயலாக மாற்றமடைகிறோம். இது கர்த்தரிடமிருந்தே வருகிறது. அவரே ஆவியானவர்.
வயஞ்ச ஸர்வ்வே(அ)நாச்சா²தி³தேநாஸ்யேந ப்ரபோ⁴ஸ்தேஜஸ: ப்ரதிபி³ம்ப³ம்’ க்³ரு’ஹ்லந்த ஆத்மஸ்வரூபேண ப்ரபு⁴நா ரூபாந்தரீக்ரு’தா வர்த்³த⁴மாநதேஜோயுக்தாம்’ தாமேவ ப்ரதிமூர்த்திம்’ ப்ராப்நும: |