< 2 நாளாகமம் 27 >
1 யோதாம் அரசனானபோது இருபத்தைந்து வயதுடையவனாயிருந்தான், அவன் எருசலேமில் பதினாறு வருடங்கள் அரசாண்டான்; இவனுடைய தாய் சாதோக்கின் மகளான எருசாள் என்பவள்.
၁ယောသံ သည် အသက် နှစ်ဆယ် ငါး နှစ်ရှိသော်၊ နန်းထိုင် ၍ ယေရုရှလင် မြို့၌ တဆယ် ခြောက် နှစ် စိုးစံ လေ၏။ မယ်တော် ကား ၊ ဇာဒုတ် သမီး ယေရုရှာ အမည် ရှိ၏။
2 அவன் தன் தகப்பன் உசியா செய்ததுபோலவே யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்தான். ஆனால் அவனைப்போல இவன் யெகோவாவினுடைய ஆலயத்திற்குள் போகவில்லை. ஆயினும் மக்கள் அவர்களுடைய சீர்கேடான செயல்களைத் தொடர்ந்து செய்துவந்தார்கள்.
၂ထိုမင်း သည်ခမည်းတော် ဩဇိ ကျင့် သမျှ အတိုင်း ၊ ထာဝရဘုရား ရှေ့ တော်၌ တရား သောအမှုကိုပြု ၏။ သို့ရာတွင် ထာဝရ ဘုရား၏ ဗိမာန် တော်ထဲသို့ မ ဝင် ။ပြည်သူ ပြည်သားတို့သည် မ တရားသဖြင့် ပြုကြသေး ၏။
3 யோதாம் யெகோவாவின் ஆலயத்தின் மேல்வாசலைத் திரும்பக் கட்டினான். அத்துடன் ஓபேல் குன்றில் இருந்த மதிலின்மேல் இன்னும் அநேக கட்டிடங்களையும் கட்டினான்.
၃ထိုမင်းသည် ဗိမာန် တော်အထက် တံခါး ကို လုပ် ၍ ၊ ဩဖေလ မြို့ရိုး ကို အလွန် ခိုင်ခံ့ စေ၏။
4 அவன் யூதாவின் மலைகளில் பட்டணங்களையும், மரங்கள் செறிந்த பகுதிகளில் கோட்டைகளையும், கோபுரங்களையும் கட்டினான்.
၄ယုဒ တောင်ရိုး ပေါ် မှာ မြို့ များကို၎င်း ၊ တော ၌ ရဲတိုက် များနှင့် ပြအိုး များကို၎င်း တည်ထောင် လေ၏။
5 யோதாம் அமோனிய அரசருடன் யுத்தம்செய்து அவர்களை வெற்றிகொண்டான்; அந்த வருடம் அம்மோனியர் அவனுக்கு நூறு தாலந்து வெள்ளியைக் கொடுத்தார்கள். பத்தாயிரம் கலம் கோதுமையையும், பத்தாயிரம் கலம் வாற்கோதுமையையும் கொடுத்தார்கள். அம்மோனியர்கள் இரண்டாம், மூன்றாம் வருடங்களிலும் அதே அளவு பொருட்களைக் கொண்டுவந்தார்கள்.
၅အမ္မုန် ရှင် ဘုရင်ကိုလည်း စစ်တိုက် ၍ နိုင် သဖြင့် ၊ နိုင်သောနှစ် တွင် အမ္မုန် သား တို့သည် ငွေ အခွက် တထောင်၊ ဂျုံ ကောရ တသောင်း ၊ မုယော တသောင်း ကိုပေး ရကြ၏။ ဒုတိယ နှစ် နှင့် တတိယ နှစ်တွင် ထို အတူ ပေးရကြ၏။
6 யோதாம் தன் இறைவனாகிய யெகோவாவுக்கு முன்பாக, உறுதியுடன் நடந்தபடியால் அவன் வலிமையடைந்தான்.
၆ထိုသို့ ယောသံ သည် မိမိ ဘုရားသခင် ထာဝရဘုရား ရှေ့ တော်၌ မိမိ အကျင့် တို့ကို ပြင်ဆင် သောကြောင့် တန်ခိုး တိုးပွါးသတည်း။
7 யோதாமின் ஆட்சிக் காலத்தின் மற்ற நிகழ்வுகள், அவனுடைய யுத்தங்கள் உட்பட, மற்றும் அவன் செய்த செயல்கள் எல்லாம் இஸ்ரயேல், யூதா அரசர்களின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.
၇ယောသံ ပြုမူသောအမှု အရာ ကြွင်း လေသမျှ၊ စစ်တိုက် ခြင်းအကျင့် ကျင့်ခြင်းအမှုအရာ အလုံးစုံ တို့ သည်၊ ဣသရေလ ရာဇဝင် နှင့် ယုဒ ရာဇဝင်၌ ရေးထား လျက် ရှိ၏။
8 அவன் அரசனானபோது இருபத்தைந்து வயதுடையவனாயிருந்தான். அவன் எருசலேமில் பதினாறு வருடங்கள் அரசாண்டான்.
၈
9 யோதாம் தன் முற்பிதாக்களைப்போல இறந்து, தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். இவனுடைய மகன் ஆகாஸ் இவனுக்குபின் அவனுடைய இடத்தில் அரசனானான்.
၉ယောသံ သည် ဘိုးဘေး တို့နှင့် အိပ်ပျော် ၍ ၊ ဒါဝိဒ် မြို့ ၌ သင်္ဂြိုဟ် ခြင်းကိုခံ လေ၏။ သား တော်အာခတ် သည် ခမည်းတော် အရာ ၌ နန်း ထိုင်၏။