< 1 தீமோத்தேயு 5 >

1 முதியவர்களை கடுமையாகக் கண்டிக்காதே, அவரை உன் தந்தையைப்போல் மதித்து, அறிவுரை கூறு. இளைஞரை உனது சகோதரர்களைப் போலவும்,
த்வம்’ ப்ராசீநம்’ ந ப⁴ர்த்ஸய கிந்து தம்’ பிதரமிவ யூநஸ்²ச ப்⁴ராத்ரு’நிவ
2 பெண்களில் முதியவர்களைத் தாய்களைப் போலவும், இளம்பெண்களைச் சகோதரிகளைப்போலவும் எண்ணி, முழுமையான தூய்மையோடு அவர்களிடம் நடந்துகொள்.
வ்ரு’த்³தா⁴​: ஸ்த்ரியஸ்²ச மாத்ரு’நிவ யுவதீஸ்²ச பூர்ணஸு²சித்வேந ப⁴கி³நீரிவ விநயஸ்வ|
3 உண்மையாகவே தேவையுள்ள விதவைகளுக்கு ஏற்ற ஆதரவைக்கொடு.
அபரம்’ ஸத்யவித⁴வா​: ஸம்மந்யஸ்வ|
4 ஆனால் ஒரு விதவைக்குப் பிள்ளைகளோ, பேரப்பிள்ளைகளோ இருந்தால், முதலாவது அவர்கள் தங்களுடைய சொந்தக் குடும்பத்தைப் பராமரிப்பதின் மூலம், இறை பக்தியை நடைமுறைப்படுத்தக் கற்றுக்கொள்ளட்டும்; இப்படித் தங்கள் பெற்றோருக்கும், பெற்றோரின் பெற்றோருக்கும் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யட்டும். ஏனெனில், இதுவே இறைவனுக்குப் பிரியமாயிருக்கிறது.
கஸ்யாஸ்²சித்³ வித⁴வாயா யதி³ புத்ரா​: பௌத்ரா வா வித்³யந்தே தர்ஹி தே ப்ரத²மத​: ஸ்வீயபரிஜநாந் ஸேவிதும்’ பித்ரோ​: ப்ரத்யுபகர்த்துஞ்ச ஸி²க்ஷந்தாம்’ யதஸ்ததே³வேஸ்²வரஸ்ய ஸாக்ஷாத்³ உத்தமம்’ க்³ராஹ்யஞ்ச கர்ம்ம|
5 ஒரு விதவை உண்மையாகவே தேவையுடையவளாக இருந்து, கைவிடப்பட்டுத் தனிமையாக இருந்தால், அவள் தனது எதிர்பார்ப்பை இறைவனிலேயே வைத்திருக்கிறாள். அவள் இரவும் பகலும் இறைவனிடம் மன்றாடுவதிலும், உதவி கேட்பதிலும் நிலைத்திருப்பாள்.
அபரம்’ யா நாரீ ஸத்யவித⁴வா நாத²ஹீநா சாஸ்தி ஸா ஈஸ்²வரஸ்யாஸ்²ரயே திஷ்ட²ந்தீ தி³வாநிஸ²ம்’ நிவேத³நப்ரார்த²நாப்⁴யாம்’ காலம்’ யாபயதி|
6 ஆனால் ஒரு விதவை உலக இன்பத்தில் வாழ்வதை விரும்பினால், அவள் வாழ்ந்தாலும் நடைபிணமே.
கிந்து யா வித⁴வா ஸுக²போ⁴கா³ஸக்தா ஸா ஜீவத்யபி ம்ரு’தா ப⁴வதி|
7 ஒருவர் மேலும் குற்றஞ்சாட்டப்படாதபடி, இந்த அறிவுறுத்தலையும் எல்லா மக்களுக்கும் கொடு.
அதஏவ தா யத்³ அநிந்தி³தா ப⁴வேயூஸ்தத³ர்த²ம் ஏதாநி த்வயா நிதி³ஸ்²யந்தாம்’|
8 யாராவது தனது உறவினர்களுக்கு, குறிப்பாக தன் சொந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உதவிசெய்யாவிட்டால், அவன் தனது விசுவாசத்தையே மறுதலிக்கிறான். அவன் விசுவாசம் இல்லாதவனைவிடக் கேவலமானவன்.
யதி³ கஸ்²சித் ஸ்வஜாதீயாந் லோகாந் விஸே²ஷத​: ஸ்வீயபரிஜநாந் ந பாலயதி தர்ஹி ஸ விஸ்²வாஸாத்³ ப்⁴ரஷ்டோ (அ)ப்யத⁴மஸ்²ச ப⁴வதி|
9 ஒரு விதவை அறுபது வயதிற்கு மேற்பட்டவளாயும், ஒரே கணவனுக்கு உண்மையுள்ள மனைவியாகவும் இருந்திருந்தால் மட்டுமே, அவளை விதவைகளின் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.
வித⁴வாவர்கே³ யஸ்யா க³ணநா ப⁴வதி தயா ஷஷ்டிவத்ஸரேப்⁴யோ ந்யூநவயஸ்கயா ந ப⁴விதவ்யம்’; அபரம்’ பூர்வ்வம் ஏகஸ்வாமிகா பூ⁴த்வா
10 அத்துடன் அவள் தனது நல்ல செயல்களினால், அதாவது தன் பிள்ளைகளை வளர்த்தெடுத்தல், உபசரிக்கும் பண்பு, பரிசுத்தவான்களின் பாதங்களைக் கழுவுதல், கஷ்டத்தில் இருக்கிறவர்களுக்கு உதவி செய்தல் போன்ற எல்லா விதமான நல்ல செயல்களிலும் தன்னை ஈடுபடுத்தியவளாக, மற்றவர்களால் நற்சாட்சி பெற்றிருக்கவேண்டும்.
ஸா யத் ஸி²ஸு²போஷணேநாதிதி²ஸேவநேந பவித்ரலோகாநாம்’ சரணப்ரக்ஷாலநேந க்லிஷ்டாநாம் உபகாரேண ஸர்வ்வவித⁴ஸத்கர்ம்மாசரணேந ச ஸத்கர்ம்மகரணாத் ஸுக்²யாதிப்ராப்தா ப⁴வேத் தத³ப்யாவஸ்²யகம்’|
11 இந்தப் பட்டியலில் இளம் விதவைகளைச் சேர்த்துக்கொள்ளாதே. ஏனெனில் அவர்களுடைய உடல் இச்சைகள், அவர்களை கிறிஸ்துவின் அர்ப்பணிப்பிலிருந்து பிரிக்கும்போது, அவர்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புவார்கள்.
கிந்து யுவதீ ர்வித⁴வா ந க்³ரு’ஹாண யத​: க்²ரீஷ்டஸ்ய வைபரீத்யேந தாஸாம்’ த³ர்பே ஜாதே தா விவாஹம் இச்ச²ந்தி|
12 இப்படி அவர்கள் முதலில் செய்த வாக்குறுதியை மீறுவதனால், அவர்கள் தங்களுக்கே நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருவார்கள்.
தஸ்மாச்ச பூர்வ்வத⁴ர்ம்மம்’ பரித்யஜ்ய த³ண்ட³நீயா ப⁴வந்தி|
13 அதுத்தவிர அவர்கள் சோம்பல்தனமுள்ளவர்களாகி, வீட்டுக்கு வீடு போகப் பழகிக்கொள்வார்கள். அவர்கள் சோம்பேறிகளாக மட்டுமல்ல, பிறர் காரியங்களில் தலையிடுகிறவர்களாகவும், தேவையற்ற காரியங்களில் தலையிடுகிறவர்களாகவும் இருந்து, வீணான காரியங்களைப் பேசித்திரிவார்கள்.
அநந்தரம்’ தா க்³ரு’ஹாத்³ க்³ரு’ஹம்’ பர்ய்யடந்த்ய ஆலஸ்யம்’ ஸி²க்ஷந்தே கேவலமாலஸ்யம்’ நஹி கிந்த்வநர்த²காலாபம்’ பராதி⁴காரசர்ச்சாஞ்சாபி ஸி²க்ஷமாணா அநுசிதாநி வாக்யாநி பா⁴ஷந்தே|
14 எனவே இளம் விதவைகள் திருமணம் செய்து, பிள்ளைகளைப் பெற்று, தங்களுடைய குடும்பத்தை நடத்தவேண்டும் என்பதே நான் அவர்களுக்குக் கொடுக்கும் ஆலோசனை. அப்பொழுது இதன் நிமித்தம் பகைவன் அவதூறு பேசுவதற்கு இடமில்லாமல் போகும்.
அதோ மமேச்சே²யம்’ யுவத்யோ வித⁴வா விவாஹம்’ குர்வ்வதாம் அபத்யவத்யோ ப⁴வந்து க்³ரு’ஹகர்ம்ம குர்வ்வதாஞ்சேத்த²ம்’ விபக்ஷாய கிமபி நிந்தா³த்³வாரம்’ ந த³த³து|
15 ஏனெனில் சிலர் ஏற்கெனவே வழிதவறி சாத்தானின் பின்னே போய்விட்டார்கள்.
யத இத​: பூர்வ்வம் அபி காஸ்²சித் ஸ²யதாநஸ்ய பஸ்²சாத்³கா³மிந்யோ ஜாதா​: |
16 ஒரு விசுவாச பெண்ணின் குடும்பத்தில் விதவைகள் இருந்தால், அந்த விசுவாசியே அவர்களைப் பராமரிக்க வேண்டும். திருச்சபையின்மேல் இந்தப் பாரத்தைச் சுமத்தக் கூடாது. அப்பொழுதுதான், உண்மையாகவே தேவையுள்ள விதவைகளுக்கு திருச்சபை உதவிசெய்ய முடியும்.
அபரம்’ விஸ்²வாஸிந்யா விஸ்²வாஸிநோ வா கஸ்யாபி பரிவாராணாம்’ மத்⁴யே யதி³ வித⁴வா வித்³யந்தே தர்ஹி ஸ தா​: ப்ரதிபாலயது தஸ்மாத் ஸமிதௌ பா⁴ரே (அ)நாரோபிதே ஸத்யவித⁴வாநாம்’ ப்ரதிபாலநம்’ கர்த்தும்’ தயா ஸ²க்யதே|
17 திருச்சபையை நன்றாய் நடத்தும் தலைவர்கள் இரட்டிப்பான மதிப்பிற்குரியவர்களாகக் கருதப்பட வேண்டும். விசேஷமாக பிரசங்கம் பண்ணுவதிலும், போதிப்பதிலும் ஈடுபடும் தலைவர்களை பாத்திரராக எண்ணவேண்டும்.
யே ப்ராஞ்ச​: ஸமிதிம்’ ஸம்யக்³ அதி⁴திஷ்ட²ந்தி விஸே²ஷத ஈஸ்²வரவாக்யேநோபதே³ஸே²ந ச யே யத்நம்’ வித³த⁴தே தே த்³விகு³ணஸ்யாத³ரஸ்ய யோக்³யா மாந்யந்தாம்’|
18 ஏனெனில், “தானியக்கதிரை போரடிக்கும் எருதின் வாயைக் கட்டவேண்டாம்” என்றும் “வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரவானாயிருக்கிறான்” என்றும், வேதவசனம் சொல்லுகிறதே.
யஸ்மாத் ஸா²ஸ்த்ரே லிகி²தமித³மாஸ்தே, த்வம்’ ஸ²ஸ்யமர்த்³த³கவ்ரு’ஷஸ்யாஸ்யம்’ மா ப³தா⁴நேதி, அபரமபி கார்ய்யக்ரு’த்³ வேதநஸ்ய யோக்³யோ ப⁴வதீதி|
19 ஒரு சபைத்தலைவனுக்கு எதிரான குற்றச்சாட்டு, இரண்டு அல்லது மூன்று பேருடைய சாட்சியங்களுடன் கொண்டுவரப்பட்டாலன்றி, அதை ஏற்றுக்கொள்ளாதே.
த்³வௌ த்ரீந் வா ஸாக்ஷிணோ விநா கஸ்யாசித் ப்ராசீநஸ்ய விருத்³த⁴ம் அபி⁴யோக³ஸ்த்வயா ந க்³ரு’ஹ்யதாம்’|
20 பாவம் செய்கிற சபைத்தலைவர்களை எல்லோர் முன்னிலையிலும் கடிந்துகொள். அப்பொழுது மற்றவர்களுக்கு அது ஒரு எச்சரிக்கையாயிருக்கும்.
அபரம்’ யே பாபமாசரந்தி தாந் ஸர்வ்வேஷாம்’ ஸமக்ஷம்’ ப⁴ர்த்ஸயஸ்வ தேநாபரேஷாமபி பீ⁴தி ர்ஜநிஷ்யதே|
21 இறைவனின் முன்னிலையிலும், கிறிஸ்து இயேசுவின் முன்னிலையிலும், தெரிந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்களின் முன்னிலையிலும் நான் உனக்குக் கட்டளையிடுவதாவது: பட்சபாதமாக எதையும் செய்யாமல், நடுநிலையினின்று, இந்த அறிவுறுத்தல்களைக் கைக்கொள்.
அஹம் ஈஸ்²வரஸ்ய ப்ரபோ⁴ ர்யீஸு²க்²ரீஷ்டஸ்ய மநோநீததி³வ்யதூ³தாநாஞ்ச கோ³சரே த்வாம் இத³ம் ஆஜ்ஞாபயாமி த்வம்’ கஸ்யாப்யநுரோதே⁴ந கிமபி ந குர்வ்வந விநாபக்ஷபாதம் ஏதாந விதீ⁴ந் பாலய|
22 ஊழியத்தில் அமர்த்துவதற்கு அவசரப்பட்டு ஒருவன்மேலும் கைகளை வைக்காதே. மற்றவர்களுடைய பாவங்களில் பங்குகொள்ளாதே. உன்னைத் தூய்மையுள்ளவனாய் காத்துக்கொள்.
கஸ்யாபி மூர்த்³தி⁴ ஹஸ்தாபர்ணம்’ த்வரயா மாகார்ஷீ​: | பரபாபாநாஞ்சாம்’ஸீ² மா ப⁴வ| ஸ்வம்’ ஸு²சிம்’ ரக்ஷ|
23 நீ தொடர்ந்து தண்ணீர் மட்டும் குடிப்பதைவிட்டு, உனது வயிற்றின் நலனுக்காகவும், அடிக்கடி உனக்கு வருகிற வருத்தத்திற்காகவும், திராட்சைரசத்தையும் கொஞ்சம் குடி.
அபரம்’ தவோத³ரபீடா³யா​: புந​: புந து³ர்ப்³ப³லதாயாஸ்²ச நிமித்தம்’ கேவலம்’ தோயம்’ ந பிவந் கிஞ்சிந் மத்³யம்’ பிவ|
24 சிலரின் பாவங்கள் வெளிப்படையானதாய் இருப்பதால், நியாயத்தீர்ப்பிற்கு, அவர்கள் போகுமுன்பே அவை போய் சேருகின்றன; மற்றவர்களுடைய பாவங்களோ அவர்களுக்குப் பின்னால் வந்து சேருகின்றன.
கேஷாஞ்சித் மாநவாநாம்’ பாபாநி விசாராத் பூர்வ்வம்’ கேஷாஞ்சித் பஸ்²சாத் ப்ரகாஸ²ந்தே|
25 அதுபோலவே, நல்ல செயல்களும் வெளிப்படையாய் இருக்கின்றன. அப்படி வெளிப்படாதவையும் தொடர்ந்து மறைந்திருப்பதில்லை.
ததை²வ ஸத்கர்ம்மாண்யபி ப்ரகாஸ²ந்தே தத³ந்யதா² ஸதி ப்ரச்ச²ந்நாநி ஸ்தா²தும்’ ந ஸ²க்நுவந்தி|

< 1 தீமோத்தேயு 5 >