< 1 சாமுவேல் 19 >

1 தாவீதைக் கொலை செய்யுங்கள் என்று சவுல் யோனத்தானுக்கும், தன் எல்லா பணியாட்களுக்கும் சொன்னான். ஆனால் யோனத்தான் தாவீதை அதிகம் விரும்பினான்.
Sau-lơ bảo Giô-na-than và thuộc hạ mình tìm cách giết Đa-vít. Nhưng vì quý mến Đa-vít,
2 அதனால் யோனத்தான் அவனை எச்சரித்துச் சொன்னதாவது: “எனது தகப்பன் சவுல் உன்னைக் கொலைசெய்யச் சந்தர்ப்பத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். ஆகையால் நாளை காலை எச்சரிக்கையாயிருந்து, இரகசியமான ஒரு இடத்தில் ஒளிந்து மறைந்திரு.
nên Giô-na-than tiết lộ kế hoạch của cha cho bạn. Ông cảnh báo Đa-vít: “Sáng mai, anh phải ra đồng trốn vào một nơi kín đáo.
3 நான் வெளியே போய் நீ ஒளிந்திருக்கும் வயல்வெளியில் என் தகப்பனாருடன் உனக்காக பேசுவேன். அதன்பின் நான் அறிந்ததை உனக்குச் சொல்வேன்” என்றான்.
Tôi sẽ đi với cha tôi ra gần nơi anh nấp và sẽ thưa chuyện về anh. Biết thêm điều gì tôi sẽ cho anh hay.”
4 இவ்விதமாய் யோனத்தான் தன் தகப்பன் சவுலிடம் தாவீதைப் பற்றி நன்றாய்ப் பேசி அவனிடம், “அரசன் தமது ஊழியன் தாவீதுக்கு ஒரு தீமையும் செய்யாமல் இருக்கவேண்டும். அவன் உங்களுக்குத் தீமை செய்யவில்லை. அவன் செய்திருப்பது உங்களுக்கு அதிக நன்மையே கொடுத்திருக்கிறது.
Như đã định, Giô-na-than thưa chuyện với cha và bênh vực Đa-vít: “Xin vua đừng phạm tội giết Đa-vít, đầy tớ mình. Anh ấy không có tội gì cả, mà còn giúp ích cho cha rất nhiều.
5 அவன் தன் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பெலிஸ்தியனைக் கொன்றானே. இதனால் யெகோவா இஸ்ரயேலருக்குப் பெரிய வெற்றியைக் கொடுத்தார். நீங்களும் அதைக்கண்டு மகிழ்ச்சியடைந்தீர்கள். அப்படியிருக்க ஏன் தாவீதைப்போல் குற்றமற்ற ஒருவனைக் காரணமில்லாமல் கொலைசெய்து ஒரு தீமையை செய்யவேண்டும்” என்றான்.
Anh ấy đã liều mạng sống mình mà giết tên Phi-li-tin kia, và nhờ vậy Chúa Hằng Hữu đã cho Ít-ra-ên chiến thắng. Lúc ấy cha vui mừng lắm, phải không? Tại sao cha lại giết một người vô tội như Đa-vít? Thật vô lý quá!”
6 சவுல் யோனத்தான் சொன்னதைக் கேட்டு, “யெகோவா இருப்பது நிச்சயமெனில், தாவீதும் கொல்லப்படுவதில்லை என்பதும் நிச்சயம்” என்று ஆணையிட்டான்.
Sau-lơ nghe lời Giô-na-than và thề rằng: “Thật như Chúa Hằng Hữu hằng sống, Đa-vít sẽ không bị giết.”
7 அதன்பின் யோனத்தான் தாவீதை அழைத்து, தான் தனது தகப்பனுடன் பேசிய எல்லாவற்றையும் சொல்லி, அவனைச் சவுலிடம் அழைத்து வந்தான். அவன் முன்போலவே சவுலுடன் இருந்தான்.
Giô-na-than gọi Đa-vít, kể lại cho bạn cuộc đàm đạo với cha. Sau đó, Giô-na-than đem Đa-vít đến gặp Sau-lơ, và Đa-vít tiếp tục phục vụ Sau-lơ như trước.
8 மறுபடியும் யுத்தம் மூண்டது. தாவீது போய் பெலிஸ்தியருடன் சண்டையிட்டு அவன் அதிக பெலத்துடன் அவர்களைத் தாக்கினான். அவர்கள் அவனுக்கு முன் நிற்காது தப்பி ஓடினார்கள்.
Chiến tranh lại nổi lên. Đa-vít cầm quân kháng địch, và giết vô số người Phi-li-tin, quân địch bỏ chạy tán loạn.
9 ஒரு நாள் சவுல் தன் வீட்டில் இருந்தபோது, யெகோவாவிடமிருந்து வந்த பொல்லாத ஆவி அவன்மேல் இறங்கியது. அப்பொழுது தாவீது தன் யாழை வாசித்துக்கொண்டிருந்தான்.
Nhưng Chúa Hằng Hữu sai ác thần nhập vào Sau-lơ khi vua đang ngồi trong nhà, tay cầm giáo, còn Đa-vít đang khảy đàn.
10 அவ்வேளையில் சவுல் தன் கையிலிருந்த ஈட்டியால் தாவீதைச் சுவரோடு சேர்த்துக் குத்த முயன்றான். ஆனால் தாவீது விலகிக்கொண்டதால், ஈட்டி சுவரில் பாய்ந்தது. தாவீது அன்றிரவு தப்பி ஓடிவிட்டான்.
Sau-lơ phóng giáo, định ghim Đa-vít vào tường nhưng Đa-vít né khỏi, mũi giáo cắm trên tường. Đa-vít bỏ chạy, thoát thân trong đêm tối.
11 அதன்பின், சவுல் தாவீதின் வீட்டை நோட்டமிட்டு அவனை மறுநாள் அதிகாலையில் கொலை செய்யும்படி, அவன் வீட்டிற்கு ஆட்களை அனுப்பினான். இதை அறிந்த அவன் மனைவி மீகாள் தாவீதிடம், “இன்றிரவு உமது உயிருக்காகத் தப்பி ஓடாவிட்டால் நாளை நீர் கொல்லப்படுவீர்” என்று எச்சரித்தாள்.
Sau-lơ sai người đến canh giữ nhà Đa-vít, chờ đến sáng sẽ giết. Nhưng Mi-canh bảo chồng: “Nếu không trốn thoát đêm nay, sáng mai anh sẽ bị giết.”
12 எனவே மீகாள் தாவீதை ஜன்னல் வழியாய் இறக்கிவிட அவன் தப்பி ஓடினான்.
Bà dòng chồng xuống qua cửa sổ để Đa-vít chạy trốn.
13 பின்பு மீகாள் ஒரு விக்கிரகத்தை எடுத்து அவனுடைய கட்டிலின்மேல் வைத்து, ஒரு போர்வையால் மூடி வெள்ளாட்டு மயிரைத் தலைமாட்டில் வைத்தாள்.
Mi-canh lấy một cái tượng đặt nằm trên giường, tấn một chiếc gối bông dưới đầu tượng, rồi lấy chăn đắp lại.
14 தாவீதைப் பிடித்து வரும்படி சவுல் தன் ஆட்களை அனுப்பியபோது அவன் வியாதியாய் இருப்பதாக மீகாள் சொன்னாள்.
Khi những người của Sau-lơ vào tìm Đa-vít, Mi-canh nói với họ rằng chồng mình đang bệnh, không thể ra khỏi giường.
15 திரும்பவும் தாவீதைப் பார்ப்பதற்காக சவுல் தன் ஆட்களை அனுப்பி, “அவனைக் கொலை செய்யும்படி கட்டிலோடு என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று சொன்னான்.
Sau-lơ lại sai người đi bắt Đa-vít lần thứ hai. Ông dặn họ: “Khiêng hắn trên giường về đây cho ta giết hắn.”
16 அந்த மனிதர் அவனுடைய வீட்டுக்குள் வந்தபோது, அவனுடைய கட்டிலின்மேல் ஒரு விக்கிரகமும் அதன் தலையில் ஒரு வெள்ளாட்டு மயிர்த்தோலும் இருப்பதைக் கண்டார்கள்.
Nhưng khi họ đến để đem Đa-vít đi, họ phát hiện trên giường chỉ là một hình tượng, đầu phủ một tấm lông dê.
17 அப்பொழுது சவுல் மீகாளிடம், “என்னை ஏமாற்றி என் பகைவனை ஏன் இப்படி தப்பவைத்தாய்?” என்று கேட்டான். அதற்கு மீகாள், “தாவீது என்னிடம், என்னைத் தப்பிப் போகவிடு. இல்லாவிட்டால் நான் உன்னைக் கொன்றுவிடுவேன் என்று சொன்னான்” என்றாள்.
Sau-lơ hỏi Mi-canh: “Sao con dám lừa cha, để cho kẻ thù của cha trốn mất?” Mi-canh thưa: “Anh ấy dọa rằng nếu không để anh ấy đi thoát, anh ấy sẽ giết con.”
18 இவ்விதமாய்த் தாவீது தப்பி ஓடி ராமாவிலிருந்த சாமுயேலிடம் போய் சவுல் தனக்குச் செய்தவற்றையெல்லாம் சொன்னான். அதன்பின் அவனும் சாமுயேலும் நாயோத்திற்குப் போய் அங்கே தங்கியிருந்தார்கள்.
Vậy, Đa-vít trốn thoát và chạy đến Ra-ma tìm Sa-mu-ên, kể cho ông nghe mọi việc Sau-lơ làm. Rồi hai người tới tạm trú tại Na-giốt.
19 அப்பொழுது தாவீது ராமாவிலுள்ள நாயோதிலே தங்கியிருக்கிறான் என்பதைச் சவுல் கேள்விப்பட்டான்.
Khi được tin Đa-vít đang ở Na-giốt thuộc Ra-ma,
20 எனவே சவுல் தாவீதைப் பிடித்துக் கொண்டுவரும்படி தன் மனிதரை அனுப்பினான். அவர்கள் அங்கே இறைவாக்கு உரைப்போர் கூட்டத்தையும், அவர்களுக்குத் தலைவனாக சாமுயேல் நிற்பதையும் கண்டார்கள். அப்போது சவுலின் ஆட்கள் மேலும் யெகோவாவின் ஆவியானவர் இறங்கினார். அவர்களும் இறைவாக்கு உரைத்தார்கள்.
Sau-lơ sai người đi bắt Đa-vít. Những người này đến nơi, thấy Sa-mu-ên và một đoàn tiên tri đang nói tiên tri. Thần của Đức Chúa Trời giáng trên họ, họ cũng nói tiên tri.
21 இதைப்பற்றிச் சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது வேறு மனிதரை அனுப்பினான். அவர்களும் அவ்வாறே இறைவாக்கு உரைத்தார்கள். மூன்றாம் முறையும் சவுல் மனிதரை அனுப்பினான். அவர்களும் இறைவாக்கு உரைத்தார்கள்.
Tin này được báo lên Sau-lơ. Vua sai một toán người khác đến, những người này cũng nói tiên tri. Sau-lơ lại sai một toán thứ ba đến, họ cũng nói tiên tri nốt.
22 இறுதியாகச் சவுல் தானே ராமாவிற்குப் போவதற்கு புறப்பட்டான். அவன் சேக்குவிலுள்ள பெரிய துரவுக்கு வந்தபோது, அங்கு நின்றவர்களிடம், “சாமுயேலும், தாவீதும் எங்கே?” என்று கேட்டான். அதற்கு அங்கு நின்றவர்கள், “ராமாவிலுள்ள நாயோதிலே அவர்கள் இருக்கிறார்கள்” என்றார்கள்.
Lần này Sau-lơ đích thân đi Ra-ma. Đến một cái giếng lớn tại Sê-cư, vua hỏi: “Sa-mu-ên và Đa-vít ở đâu?” Một người đáp: “Họ ở Na-giốt thuộc Ra-ma.”
23 அப்பொழுது சவுல் ராமாவிலுள்ள நாயோதுக்குப் போகும் வழியில் இறைவனின் ஆவியானவர் அவன் மேலும் இறங்கினார். அவன் நாயோதுக்குப் போய்ச் சேரும்வரைக்கும் இறைவாக்கு உரைத்துக்கொண்டே போனான்.
Vua đi đến Na-giốt, thuộc Ra-ma; Thần của Đức Chúa Trời cũng giáng trên Sau-lơ, vua vừa đi vừa nói tiên tri cho đến khi tới Na-giốt!
24 சவுல் தன் மேலுடையைக் கழற்றிவிட்டு சாமுயேலுக்கு முன்பாக மற்றவர்களைப்போல் இறைவாக்கு உரைத்தான். அன்று பகலும் இரவும் அவ்வாறே விழுந்து கிடந்தான். இதனாலேயே, “சவுலும் இறைவாக்கு உரைப்போரில் ஒருவனோ?” என்று மக்கள் கேட்கும் வழக்கம் உண்டாயிற்று.
Hôm ấy Sau-lơ cởi áo và nằm trần dưới đất như vậy trọn ngày đêm. Sau-lơ nói tiên tri trước mặt Sa-mu-ên cũng như những người khác. Vì thế trong dân gian có câu: “Sau-lơ cũng là một tiên tri sao?”

< 1 சாமுவேல் 19 >