< 1 பேதுரு 1 >

1 இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனான பேதுரு, இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களான பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா ஆகிய நாடுகளில் சிதறுண்டு, இந்த உலகத்தில் அந்நியராய் இருக்கிற உங்களுக்கு எழுதுகிறதாவது:
பந்த-கா³லாதியா-கப்பத³கியா-ஆஸி²யா-பி³து²நியாதே³ஸே²ஷு ப்ரவாஸிநோ யே விகீர்ணலோகா​:
2 நீங்கள் பிதாவாகிய இறைவனுடைய முன்னறிவின்படியே தெரிந்தெடுக்கப்பட்டு இருக்கிறீர்கள். நீங்கள் இயேசுகிறிஸ்துவுக்குள் கீழ்ப்படிந்திருக்கவும், அவருடைய இரத்தத்தினால் தெளிக்கப்படவும், ஆவியானவரின் பரிசுத்தமாகுதலினால் தெரிந்தெடுக்கப்பட்டு இருக்கிறீர்கள். கிருபையும் சமாதானமும் உங்களுடன் நிறைவாய் இருப்பதாக.
பிதுரீஸ்²வரஸ்ய பூர்வ்வநிர்ணயாத்³ ஆத்மந​: பாவநேந யீஸு²க்²ரீஷ்டஸ்யாஜ்ஞாக்³ரஹணாய ஸோ²ணிதப்ரோக்ஷணாய சாபி⁴ருசிதாஸ்தாந் ப்ரதி யீஸு²க்²ரீஷ்டஸ்ய ப்ரேரித​: பிதர​: பத்ரம்’ லிக²தி| யுஷ்மாந் ப்ரதி பா³ஹுல்யேந ஸா²ந்திரநுக்³ரஹஸ்²ச பூ⁴யாஸ்தாம்’|
3 நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவும் இறைவனுமாய் இருக்கிறவருக்கு, துதி உண்டாவதாக! அவர் தமது பெரிதான இரக்கத்தினாலே, இறந்தோரிலிருந்து இயேசுகிறிஸ்துவை உயிர்த்தெழச்செய்ததின் மூலமாக, நமக்கு ஒரு புதுபிறப்பைக் கொடுத்திருக்கிறார். இதனால் நமக்கு ஒரு உயிருள்ள நம்பிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.
அஸ்மாகம்’ ப்ரபோ⁴ ர்யீஸு²க்²ரீஷ்டஸ்ய தாத ஈஸ்²வரோ த⁴ந்ய​: , யத​: ஸ ஸ்வகீயப³ஹுக்ரு’பாதோ ம்ரு’தக³ணமத்⁴யாத்³ யீஸு²க்²ரீஷ்டஸ்யோத்தா²நேந ஜீவநப்ரத்யாஸா²ர்த²ம் அர்த²தோ
4 அந்த நம்பிக்கையுடன், நமக்கென உரிமைச்சொத்தும் பரலோகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அது ஒருபோதும் அழிவதுமில்லை, பழுதடைவதுமில்லை, வாடிப்போவதுமில்லை;
(அ)க்ஷயநிஷ்கலங்காம்லாநஸம்பத்திப்ராப்த்யர்த²ம் அஸ்மாந் புந ர்ஜநயாமாஸ| ஸா ஸம்பத்தி​: ஸ்வர்கே³ (அ)ஸ்மாகம்’ க்ரு’தே ஸஞ்சிதா திஷ்ட²தி,
5 நீங்களோ, அந்த இரட்சிப்பு வரும்வரைக்கும், விசுவாசத்தின் மூலமாக இறைவனுடைய வல்லமையினாலே பாதுகாக்கப்படுகிறீர்கள். அந்த இரட்சிப்பு கடைசி காலத்தில் வெளிப்படுவதற்கென ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது.
யூயஞ்சேஸ்²வரஸ்ய ஸ²க்தித​: ஸே²ஷகாலே ப்ரகாஸ்²யபரித்ராணார்த²ம்’ விஸ்²வாஸேந ரக்ஷ்யத்⁴வே|
6 இந்த இரட்சிப்பைக்குறித்து நீங்கள் பெருமகிழ்ச்சியடைகிறீர்கள். ஆனால் இப்பொழுது, சிறிது காலத்திற்கு பலவித சோதனைகளின் நிமித்தம், நீங்கள் துன்பம் அனுபவிக்க வேண்டியிருக்கும்.
தஸ்மாத்³ யூயம்’ யத்³யப்யாநந்தே³ந ப்ரபு²ல்லா ப⁴வத² ததா²பி ஸாம்ப்ரதம்’ ப்ரயோஜநஹேதோ​: கியத்காலபர்ய்யந்தம்’ நாநாவித⁴பரீக்ஷாபி⁴​: க்லிஸ்²யத்⁴வே|
7 தங்கம் நெருப்பினால் புடமிடப்பட்டாலும், அது அழிந்தேபோகிறது. ஆனால் தங்கத்திலும் அதிக மதிப்புவாய்ந்த உங்கள் விசுவாசமோ, உண்மையானது என நிரூபிக்கப்படும்படியே, இத்துன்பங்கள் உங்களுக்கு நேரிட்டன. இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது, அந்த விசுவாசத்தின் காரணமாக, இறைவனுக்குத் துதியும், மகிமையும், கனமும் உண்டாகும்.
யதோ வஹ்நிநா யஸ்ய பரீக்ஷா ப⁴வதி தஸ்மாத் நஸ்²வரஸுவர்ணாத³பி ப³ஹுமூல்யம்’ யுஷ்மாகம்’ விஸ்²வாஸரூபம்’ யத் பரீக்ஷிதம்’ ஸ்வர்ணம்’ தேந யீஸு²க்²ரீஷ்டஸ்யாக³மநஸமயே ப்ரஸ²ம்’ஸாயா​: ஸமாத³ரஸ்ய கௌ³ரவஸ்ய ச யோக்³யதா ப்ராப்தவ்யா|
8 நீங்கள் கிறிஸ்துவைக் கண்டதில்லை, ஆனாலும் அவரில் அன்பாயிருக்கிறீர்கள். நீங்கள் அவரைக் காணாதிருந்தும், இப்பொழுது அவரில் விசுவாசமாயிருக்கிறீர்கள். சொல்ல முடியாத மகிமையான சந்தோஷத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.
யூயம்’ தம்’ க்²ரீஷ்டம் அத்³ரு’ஷ்ட்வாபி தஸ்மிந் ப்ரீயத்⁴வே ஸாம்ப்ரதம்’ தம்’ ந பஸ்²யந்தோ(அ)பி தஸ்மிந் விஸ்²வஸந்தோ (அ)நிர்வ்வசநீயேந ப்ரபா⁴வயுக்தேந சாநந்தே³ந ப்ரபு²ல்லா ப⁴வத²,
9 இவ்வாறு நீங்கள் உங்களுடைய ஆத்துமாவின் இரட்சிப்பாகிய விசுவாசத்தின் இலக்கைப் பெறுகிறீர்கள்.
ஸ்வவிஸ்²வாஸஸ்ய பரிணாமரூபம் ஆத்மநாம்’ பரித்ராணம்’ லப⁴த்⁴வே ச|
10 உங்களுக்கு வரவிருந்த கிருபையைப்பற்றிச் சொன்ன இறைவாக்கினர், இந்த இரட்சிப்பைக் குறித்தே மிக உன்னிப்பாய் ஆராய்ந்து பார்த்தார்கள்.
யுஷ்மாஸு யோ (அ)நுக்³ரஹோ வர்த்ததே தத்³விஷயே ய ஈஸ்²வரீயவாக்யம்’ கதி²தவந்தஸ்தே ப⁴விஷ்யத்³வாதி³நஸ்தஸ்ய பரித்ராணஸ்யாந்வேஷணம் அநுஸந்தா⁴நஞ்ச க்ரு’தவந்த​: |
11 தங்களில் உள்ள கிறிஸ்துவின் ஆவியானவர், கிறிஸ்துவின் பாடுகளையும், அதைத் தொடர்ந்து வரப்போகிற மகிமையையும் முன்னறிவித்தபோது, அவர் எந்தக் காலத்தை, எந்த சூழ்நிலைகளை குறிப்பிட்டுக் காண்பிக்கிறார் என்பதை அவர்கள் கண்டறிய முயன்றார்கள்.
விஸே²ஷதஸ்தேஷாமந்தர்வ்வாஸீ ய​: க்²ரீஷ்டஸ்யாத்மா க்²ரீஷ்டே வர்த்திஷ்யமாணாநி து³​: கா²நி தத³நுகா³மிப்ரபா⁴வஞ்ச பூர்வ்வம்’ ப்ராகாஸ²யத் தேந க​: கீத்³ரு’ஸோ² வா ஸமயோ நிரதி³ஸ்²யதைதஸ்யாநுஸந்தா⁴நம்’ க்ரு’தவந்த​: |
12 அவர்கள் தங்களுக்காக அல்ல, பிற்காலத்தில் வரும் உங்களுக்காகவே ஊழியம் செய்தார்கள் என்பது அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியானவரால், உங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்தவர்கள் இப்பொழுது சொன்னவற்றைப்பற்றி, அப்பொழுதே அவர்களுக்கு முன்னறிவிக்கப்பட்டது. இறைவனுடைய தூதர்களும் இந்தக் காரியங்களை உற்றுப்பார்க்க வாஞ்சையாக இருக்கிறார்கள்.
ததஸ்தை ர்விஷயைஸ்தே யந்ந ஸ்வாந் கிந்த்வஸ்மாந் உபகுர்வ்வந்த்யேதத் தேஷாம்’ நிகடே ப்ராகாஸ்²யத| யாம்’ஸ்²ச தாந் விஷயாந் தி³வ்யதூ³தா அப்யவநதஸி²ரஸோ நிரீக்ஷிதும் அபி⁴லஷந்தி தே விஷயா​: ஸாம்ப்ரதம்’ ஸ்வர்கா³த் ப்ரேஷிதஸ்ய பவித்ரஸ்யாத்மந​: ஸஹாய்யாத்³ யுஷ்மத்ஸமீபே ஸுஸம்’வாத³ப்ரசாரயித்ரு’பி⁴​: ப்ராகாஸ்²யந்த|
13 ஆகையால் செயல்படுவதற்கு உங்களுடைய மனங்களை ஆயத்தப்படுத்துங்கள். தன்னடக்கம் உடையவர்களாய் இருங்கள். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது, உங்களுக்கு கொடுக்கப்படப்போகும் கிருபையின்மேல் உங்கள் முழு நம்பிக்கையையும் வையுங்கள்.
அதஏவ யூயம்’ மந​: கடிப³ந்த⁴நம்’ க்ரு’த்வா ப்ரபு³த்³தா⁴​: ஸந்தோ யீஸு²க்²ரீஷ்டஸ்ய ப்ரகாஸ²ஸமயே யுஷ்மாஸு வர்த்திஷ்யமாநஸ்யாநுக்³ரஹஸ்ய ஸம்பூர்ணாம்’ ப்ரத்யாஸா²ம்’ குருத|
14 நீங்கள் அறியாமையில் வாழ்ந்தபோது, உங்களிடம் காணப்பட்ட தீய ஆசைகளின்படி இனியும் நடந்துகொள்ளாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாய் இருங்கள்.
அபரம்’ பூர்வ்வீயாஜ்ஞாநதாவஸ்தா²யா​: குத்ஸிதாபி⁴லாஷாணாம்’ யோக்³யம் ஆசாரம்’ ந குர்வ்வந்தோ யுஷ்மதா³ஹ்வாநகாரீ யதா² பவித்ரோ (அ)ஸ்தி
15 உங்களை அழைத்தவர் பரிசுத்தமாய் இருக்கிறதுபோல, நீங்கள் செய்கின்ற எல்லாவற்றிலும் பரிசுத்தராயிருங்கள்.
யூயமப்யாஜ்ஞாக்³ராஹிஸந்தாநா இவ ஸர்வ்வஸ்மிந் ஆசாரே தாத்³ரு’க் பவித்ரா ப⁴வத|
16 ஏனெனில், “நான் பரிசுத்தர், நீங்களும் பரிசுத்தராய் இருங்கள்” என்று எழுதியிருக்கிறதே.
யதோ லிகி²தம் ஆஸ்தே, யூயம்’ பவித்ராஸ்திஷ்ட²த யஸ்மாத³ஹம்’ பவித்ர​: |
17 ஒவ்வொருவருடைய செயலையும் பாரபட்சமின்றி நியாயந்தீர்க்கின்ற பிதாவை நீங்கள் ஆராதிக்கிறபடியால், இங்கே நீங்கள் அந்நியர்களாக உங்களுடைய வாழ்க்கையை பயபக்தியுடன் வாழுங்கள்.
அபரஞ்ச யோ விநாபக்ஷபாதம் ஏகைகமாநுஷஸ்ய கர்ம்மாநுஸாராத்³ விசாரம்’ கரோதி ஸ யதி³ யுஷ்மாபி⁴ஸ்தாத ஆக்²யாயதே தர்ஹி ஸ்வப்ரவாஸஸ்ய காலோ யுஷ்மாபி⁴ ர்பீ⁴த்யா யாப்யதாம்’|
18 ஏனெனில் நீங்கள் அறிந்திருக்கிறபடி, உங்கள் முற்பிதாக்களினால் உங்களுக்கு கையளிக்கப்பட்ட வெறுமையான வாழ்க்கை முறையிலிருந்து வெள்ளி, தங்கம் போன்ற அழிந்துபோகும் பொருட்களினால் நீங்கள் மீட்கப்படவில்லை.
யூயம்’ நிரர்த²காத் பைத்ரு’காசாராத் க்ஷயணீயை ரூப்யஸுவர்ணாதி³பி⁴ ர்முக்திம்’ ந ப்ராப்ய
19 குற்றமோ, குறைபாடோ இல்லாத ஆட்டுக்குட்டியானவராகிய, கிறிஸ்துவின் உயர்மதிப்புடைய இரத்தத்தினாலேயே மீட்கப்பட்டீர்கள்.
நிஷ்கலங்கநிர்ம்மலமேஷஸா²வகஸ்யேவ க்²ரீஷ்டஸ்ய ப³ஹுமூல்யேந ருதி⁴ரேண முக்திம்’ ப்ராப்தவந்த இதி ஜாநீத²|
20 உலகம் படைக்கப்படும் முன்பாகவே, அவர் முன்குறிக்கப்பட்டார். ஆனால் உங்களுக்காகவே இந்தக் கடைசிக் காலங்களில் வெளிப்படுத்தப்பட்டார்.
ஸ ஜக³தோ பி⁴த்திமூலஸ்தா²பநாத் பூர்வ்வம்’ நியுக்த​: கிந்து சரமதி³நேஷு யுஷ்மத³ர்த²ம்’ ப்ரகாஸி²தோ (அ)ப⁴வத்|
21 அவர் மூலமாகவே நீங்கள் இறைவனில் விசுவாசமாய் இருக்கிறீர்கள். உங்கள் விசுவாசமும், நம்பிக்கையும் இறைவனிலேயே இருக்கும்படி, இறைவனே அவரை இறந்தோரிலிருந்து உயிருடன் எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார்.
யதஸ்தேநைவ ம்ரு’தக³ணாத் தஸ்யோத்தா²பயிதரி தஸ்மை கௌ³ரவதா³தரி சேஸ்²வரே விஸ்²வஸித² தஸ்மாத்³ ஈஸ்²வரே யுஷ்மாகம்’ விஸ்²வாஸ​: ப்ரத்யாஸா² சாஸ்தே|
22 இப்பொழுது நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்ததினாலே, உங்களைச் சுத்திகரித்துக்கொண்டீர்கள். இதனால் உங்கள் சகோதரரைக்குறித்து உண்மையான அன்புள்ளவர்களாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒருவரில் ஒருவர் உண்மையான உள்ளத்துடன் ஆழ்ந்த அன்பு செலுத்துங்கள்.
யூயம் ஆத்மநா ஸத்யமதஸ்யாஜ்ஞாக்³ரஹணத்³வாரா நிஷ்கபடாய ப்⁴ராத்ரு’ப்ரேம்நே பாவிதமநஸோ பூ⁴த்வா நிர்ம்மலாந்த​: கரணை​: பரஸ்பரம்’ கா³ட⁴ம்’ ப்ரேம குருத|
23 ஏனெனில், நீங்கள் புதிதான பிறப்பைப் பெற்றிருக்கிறீர்கள். இந்த பிறப்பு அழிந்துபோகின்ற விதையினால் உண்டாகவில்லை. அழியாத விதையான இறைவனுடைய வார்த்தையினாலேயே உண்டானது. அந்த வார்த்தை உயிருள்ளதும் நிலைத்து நிற்பதுமானது. (aiōn g165)
யஸ்மாத்³ யூயம்’ க்ஷயணீயவீர்ய்யாத் நஹி கிந்த்வக்ஷயணீயவீர்ய்யாத்³ ஈஸ்²வரஸ்ய ஜீவநதா³யகேந நித்யஸ்தா²யிநா வாக்யேந புநர்ஜந்ம க்³ரு’ஹீதவந்த​: | (aiōn g165)
24 ஏனெனில், “எல்லா மனிதரும் புல்லைப் போன்றவர்கள். அவர்களின் மகிமை எல்லாம் வயல்வெளியின் பூக்களைப் போன்றன. புல் வாடுகிறது, பூக்கள் உதிருகின்றன,
ஸர்வ்வப்ராணீ த்ரு’ணைஸ்துல்யஸ்தத்தேஜஸ்த்ரு’ணபுஷ்பவத்| த்ரு’ணாநி பரிஸு²ஷ்யதி புஷ்பாணி நிபதந்தி ச|
25 ஆனால் இறைவனின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று இந்த வார்த்தை உங்களுக்கு நற்செய்தியாய் பிரசங்கிக்கப்பட்டது. (aiōn g165)
கிந்து வாக்யம்’ பரேஸ²ஸ்யாநந்தகாலம்’ விதிஷ்ட²தே| ததே³வ ச வாக்யம்’ ஸுஸம்’வாதே³ந யுஷ்மாகம் அந்திகே ப்ரகாஸி²தம்’| (aiōn g165)

< 1 பேதுரு 1 >