< 1 பேதுரு 1 >
1 இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனான பேதுரு, இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களான பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா ஆகிய நாடுகளில் சிதறுண்டு, இந்த உலகத்தில் அந்நியராய் இருக்கிற உங்களுக்கு எழுதுகிறதாவது:
ⲁ̅ⲡⲉⲧⲣⲟⲥ ⲡⲁⲡⲟⲥⲧⲟⲗⲟⲥ ⲛⲓⲏⲥ ⲡⲉⲭⲥ ⲉϥⲥϩⲁⲓ ⲛⲛⲥⲱⲧⲡ ⲉⲧⲟⲩⲏϩ ϩⲛ ⲧⲇⲓⲁⲥⲡⲟⲣⲁ ⲙⲛ ⲧⲡⲟⲛⲧⲟⲥ ⲙⲛ ⲧⲅⲁⲗⲁⲧⲓⲁ ⲙⲛ ⲧⲕⲁⲡⲡⲁⲇⲟⲕⲓⲁ ⲙⲛ ⲧⲁⲥⲓⲁ ⲙⲛ ⲧⲃⲓⲑⲁⲛⲓⲁ
2 நீங்கள் பிதாவாகிய இறைவனுடைய முன்னறிவின்படியே தெரிந்தெடுக்கப்பட்டு இருக்கிறீர்கள். நீங்கள் இயேசுகிறிஸ்துவுக்குள் கீழ்ப்படிந்திருக்கவும், அவருடைய இரத்தத்தினால் தெளிக்கப்படவும், ஆவியானவரின் பரிசுத்தமாகுதலினால் தெரிந்தெடுக்கப்பட்டு இருக்கிறீர்கள். கிருபையும் சமாதானமும் உங்களுடன் நிறைவாய் இருப்பதாக.
ⲃ̅ⲕⲁⲧⲁ ⲡϣⲣⲡ ⲥⲟⲟⲩⲛ ⲙⲡⲛⲟⲩⲧⲉ ⲡⲉⲓⲱⲧ ϩⲙ ⲡⲧⲃⲃⲟ ⲙⲡⲉⲡⲛⲁ ⲉⲡⲥⲱⲧⲙ ⲛⲧⲡⲓⲥⲧⲓⲥ ⲙⲛ ⲡϭⲟϣϭϣ ⲙⲡⲉⲥⲛⲟϥ ⲛⲓⲏⲥ ⲡⲉⲭⲥ ⲧⲉⲭⲁⲣⲓⲥ ⲛⲏⲧⲛ ⲙⲛ ϯⲣⲏⲛⲏ ⲙⲙⲁϣⲟ
3 நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவும் இறைவனுமாய் இருக்கிறவருக்கு, துதி உண்டாவதாக! அவர் தமது பெரிதான இரக்கத்தினாலே, இறந்தோரிலிருந்து இயேசுகிறிஸ்துவை உயிர்த்தெழச்செய்ததின் மூலமாக, நமக்கு ஒரு புதுபிறப்பைக் கொடுத்திருக்கிறார். இதனால் நமக்கு ஒரு உயிருள்ள நம்பிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.
ⲅ̅ϥⲥⲙⲁⲙⲁⲁⲧ ⲛϭⲓ ⲡⲛⲟⲩⲧⲉ ⲡⲉⲓⲱⲧ ⲙⲡⲉⲛϫⲟⲉⲓⲥ ⲓⲏⲥ ⲡⲉⲭⲥ ⲡⲁⲓ ⲛⲧⲁϥϫⲡⲟⲛ ⲕⲁⲧⲁ ⲡⲉϥⲛⲁ ⲉⲧⲛⲁϣⲱϥ ⲉϩⲟⲩⲛ ⲉⲩϩⲉⲗⲡⲓⲥ ⲉⲥⲟⲛϩ ϩⲓⲧⲙ ⲡⲧⲱⲟⲩⲛ ⲛⲓⲏⲥ ⲡⲉⲭⲥ ⲉⲃⲟⲗ ϩⲛ ⲛⲉⲧⲙⲟⲟⲩⲧ
4 அந்த நம்பிக்கையுடன், நமக்கென உரிமைச்சொத்தும் பரலோகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அது ஒருபோதும் அழிவதுமில்லை, பழுதடைவதுமில்லை, வாடிப்போவதுமில்லை;
ⲇ̅ⲉⲩⲕⲗⲏⲣⲟⲛⲟⲙⲓⲁ ⲛⲁⲧⲁⲕⲟ ⲁⲩⲱ ⲛⲁⲧⲱⲗⲙ ⲉⲙⲉⲥϩⲱϭⲃ ⲉⲩϩⲁⲣⲉϩ ⲉⲣⲟⲥ ⲛⲏⲧⲛ ϩⲛ ⲙⲡⲏⲩⲉ
5 நீங்களோ, அந்த இரட்சிப்பு வரும்வரைக்கும், விசுவாசத்தின் மூலமாக இறைவனுடைய வல்லமையினாலே பாதுகாக்கப்படுகிறீர்கள். அந்த இரட்சிப்பு கடைசி காலத்தில் வெளிப்படுவதற்கென ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது.
ⲉ̅ⲛⲁⲓ ⲉⲧⲟⲩϩⲁⲣⲉϩ ⲉⲣⲟⲟⲩ ϩⲛ ⲧϭⲟⲙ ⲙⲡⲛⲟⲩⲧⲉ ϩⲓⲧⲛ ⲧⲡⲓⲥⲧⲓⲥ ⲉⲡⲟⲩϫⲁⲓ ⲉⲧⲥⲃⲧⲱⲧ ⲉϭⲱⲗⲡ ⲉⲃⲟⲗ ϩⲙ ⲡⲉⲟⲩⲟⲉⲓϣ ⲛϩⲁⲉ
6 இந்த இரட்சிப்பைக்குறித்து நீங்கள் பெருமகிழ்ச்சியடைகிறீர்கள். ஆனால் இப்பொழுது, சிறிது காலத்திற்கு பலவித சோதனைகளின் நிமித்தம், நீங்கள் துன்பம் அனுபவிக்க வேண்டியிருக்கும்.
ⲋ̅ⲡⲁⲓ ⲉⲧⲉⲧⲛⲧⲉⲗⲏⲗ ⲛϩⲏⲧϥ ⲉⲁⲧⲉⲧⲛⲗⲩⲡⲏ ⲧⲉⲛⲟⲩ ⲛⲟⲩⲕⲟⲩⲓ ⲉϣϫⲉ ϩⲁⲡⲥ ⲡⲉ ⲉϩⲣⲁⲓ ϩⲛ ϩⲉⲛⲡⲉⲓⲣⲁⲥⲙⲟⲥ ⲉⲩϣⲟⲃⲉ
7 தங்கம் நெருப்பினால் புடமிடப்பட்டாலும், அது அழிந்தேபோகிறது. ஆனால் தங்கத்திலும் அதிக மதிப்புவாய்ந்த உங்கள் விசுவாசமோ, உண்மையானது என நிரூபிக்கப்படும்படியே, இத்துன்பங்கள் உங்களுக்கு நேரிட்டன. இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது, அந்த விசுவாசத்தின் காரணமாக, இறைவனுக்குத் துதியும், மகிமையும், கனமும் உண்டாகும்.
ⲍ̅ϫⲉⲕⲁⲥ ⲉⲩϩⲉ ⲉⲧⲙⲛⲧⲥⲱⲡⲧ ⲛⲧⲉⲧⲛⲡⲓⲥⲧⲓⲥ ⲉⲥⲧⲁⲓⲏⲩ ⲉϩⲟⲩⲉ ⲉⲡⲛⲟⲩⲃ ⲉⲧⲛⲁⲧⲁⲕⲟ ⲡⲁⲓ ⲛϣⲁⲩⲇⲟⲕⲓⲙⲁⲍⲉ ⲙⲙⲟϥ ϩⲓⲧⲙ ⲡⲕⲱϩⲧ ⲉⲩⲧⲙⲁⲓⲟ ⲛⲏⲧⲛ ⲙⲛ ⲟⲩⲉⲟⲟⲩ ⲙⲛ ⲟⲩⲧⲁⲓⲟ ϩⲙ ⲡϭⲱⲗⲡ ⲉⲃⲟⲗ ⲛⲓⲏⲥ ⲡⲉⲭⲥ
8 நீங்கள் கிறிஸ்துவைக் கண்டதில்லை, ஆனாலும் அவரில் அன்பாயிருக்கிறீர்கள். நீங்கள் அவரைக் காணாதிருந்தும், இப்பொழுது அவரில் விசுவாசமாயிருக்கிறீர்கள். சொல்ல முடியாத மகிமையான சந்தோஷத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.
ⲏ̅ⲡⲁⲓ ⲙⲡⲉⲧⲛⲛⲁⲩ ⲉⲣⲟϥ ⲉⲧⲉⲧⲛⲙⲉ ⲙⲙⲟϥ ⲁⲩⲱ ⲡⲁⲓ ⲟⲛ ⲧⲉⲛⲟⲩ ⲉⲛⲧⲉⲧⲛⲛⲁⲩ ⲉⲣⲟϥ ⲁⲛ ⲧⲉⲧⲛⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲇⲉ ⲉⲣⲟϥ ⲧⲉⲧⲛⲧⲉⲗⲏⲗ ϩⲛ ⲟⲩⲣⲁϣⲉ ⲉϥϩⲏⲡ ⲁⲩⲱ ϥⲧⲁⲓⲏⲩ
9 இவ்வாறு நீங்கள் உங்களுடைய ஆத்துமாவின் இரட்சிப்பாகிய விசுவாசத்தின் இலக்கைப் பெறுகிறீர்கள்.
ⲑ̅ⲉⲧⲉⲧⲛϫⲓ ⲙⲡϫⲱⲕ ⲉⲃⲟⲗ ⲛⲧⲡⲓⲥⲧⲓⲥ ⲡⲟⲩϫⲁⲓ ⲛⲉⲧⲙⲯⲩⲭⲏ
10 உங்களுக்கு வரவிருந்த கிருபையைப்பற்றிச் சொன்ன இறைவாக்கினர், இந்த இரட்சிப்பைக் குறித்தே மிக உன்னிப்பாய் ஆராய்ந்து பார்த்தார்கள்.
ⲓ̅ⲉⲁⲩϣⲓⲛⲉ ⲁⲩⲱ ⲁⲩϩⲟⲧϩⲧ ⲉⲧⲃⲉ ⲡⲉⲓⲟⲩϫⲁⲓ ⲛϭⲓ ⲛⲛⲉⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ⲛⲁⲓ ⲛⲧⲁⲩⲡⲣⲟⲫⲏ ⲧⲉⲩⲉ ⲉⲧⲃⲉ ⲧⲉⲭⲁⲣⲓⲥ ⲉⲧϫⲓ ⲉϩⲟⲩ ⲉⲣⲱⲧⲛ
11 தங்களில் உள்ள கிறிஸ்துவின் ஆவியானவர், கிறிஸ்துவின் பாடுகளையும், அதைத் தொடர்ந்து வரப்போகிற மகிமையையும் முன்னறிவித்தபோது, அவர் எந்தக் காலத்தை, எந்த சூழ்நிலைகளை குறிப்பிட்டுக் காண்பிக்கிறார் என்பதை அவர்கள் கண்டறிய முயன்றார்கள்.
ⲓ̅ⲁ̅ⲉⲩϣⲓⲛⲉ ϫⲉ ⲉⲣⲉⲡⲉⲡⲛⲁ ⲙⲡⲉⲭⲥ ⲉⲧⲛϩⲏⲧⲟⲩ ϣⲁϫⲉ ⲉⲁϣ ⲛⲟⲩⲟⲉⲓϣ ⲉϥⲣ ⲙⲛⲧⲣⲉ ϫⲓⲛ ϣⲟⲣⲡ ⲛⲙⲙⲟⲕϩⲥ ⲉⲧⲛⲁϣⲱⲡⲉ ⲙⲡⲉⲭⲥ ⲙⲛ ⲛⲉⲟⲟⲩ ⲉⲧⲛⲁϣⲱⲡⲉ ⲙⲛⲛⲥⲱⲟⲩ
12 அவர்கள் தங்களுக்காக அல்ல, பிற்காலத்தில் வரும் உங்களுக்காகவே ஊழியம் செய்தார்கள் என்பது அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியானவரால், உங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்தவர்கள் இப்பொழுது சொன்னவற்றைப்பற்றி, அப்பொழுதே அவர்களுக்கு முன்னறிவிக்கப்பட்டது. இறைவனுடைய தூதர்களும் இந்தக் காரியங்களை உற்றுப்பார்க்க வாஞ்சையாக இருக்கிறார்கள்.
ⲓ̅ⲃ̅ⲛⲁⲓ ⲛⲧⲁϥⲟⲩⲱⲛϩ ⲛⲁⲩ ⲉⲃⲟⲗ ϫⲉ ⲛⲉⲩⲇⲓⲁⲕⲟⲛⲉⲓ ⲙⲙⲟⲟⲩ ⲛⲁⲩ ⲁⲛ ⲁⲗⲗⲁ ⲛⲏⲧⲛ ⲛⲁⲓ ⲛⲧⲁⲩⲧⲁⲙⲱⲧⲛ ⲉⲣⲟⲟⲩ ⲧⲉⲛⲟⲩ ϩⲓⲧⲛ ⲛⲉⲛⲧⲁⲩⲧⲁϣⲉⲟⲉⲓϣ ⲛⲏⲧⲛ ⲙⲡⲉⲡⲛⲁ ⲉⲧⲟⲩⲁⲁⲃ ⲛⲧⲁⲩⲧⲛⲛⲟⲟⲩϥ ⲉⲃⲟⲗ ϩⲛ ⲧⲡⲉ ⲛⲁⲓ ⲉⲧⲉⲣⲉⲛⲛⲉⲁⲅⲅⲉⲗⲟⲥ ⲉⲡⲓⲑⲩⲙⲉⲓ ⲉⲛⲁⲩ ⲉⲣⲟⲟⲩ
13 ஆகையால் செயல்படுவதற்கு உங்களுடைய மனங்களை ஆயத்தப்படுத்துங்கள். தன்னடக்கம் உடையவர்களாய் இருங்கள். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது, உங்களுக்கு கொடுக்கப்படப்போகும் கிருபையின்மேல் உங்கள் முழு நம்பிக்கையையும் வையுங்கள்.
ⲓ̅ⲅ̅ⲉⲧⲃⲉ ⲡⲁⲓ ⲁⲧⲉⲧⲛⲙⲟⲩⲣ ⲛⲛϯⲡⲉ ⲙⲡⲉⲉⲧⲛϩⲏⲧ ⲁⲩⲱ ⲉⲧⲉⲧⲛⲛⲏⲫⲉ ϩⲉⲗⲡⲓⲍⲉ ϩⲛ ⲟⲩϫⲱⲕ ⲉⲃⲟⲗ ⲉⲧⲉⲭⲁⲣⲓⲥ ⲉⲧⲟⲩⲛⲁⲉⲧⲥ ⲛⲏⲧⲛ ϩⲙ ⲡϭⲱⲗⲡ ⲉⲃⲟⲗ ⲛⲓⲏⲥ ⲡⲉⲭⲥ
14 நீங்கள் அறியாமையில் வாழ்ந்தபோது, உங்களிடம் காணப்பட்ட தீய ஆசைகளின்படி இனியும் நடந்துகொள்ளாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாய் இருங்கள்.
ⲓ̅ⲇ̅ϩⲱⲥ ϣⲏⲣⲉ ⲙⲡⲥⲱⲧⲙ ⲉⲛⲧⲉⲧⲛϫⲓ ⲁⲛ ⲙⲡϩⲣⲃ ⲛⲛⲉⲧⲛⲉⲡⲉⲓⲑⲩⲙⲓⲁ ⲛϣⲟⲣⲡ ⲉⲧⲉⲧⲛϩⲉⲛ ⲛⲉⲧⲛⲙⲛⲧⲁⲧⲥⲟⲟⲩⲛ
15 உங்களை அழைத்தவர் பரிசுத்தமாய் இருக்கிறதுபோல, நீங்கள் செய்கின்ற எல்லாவற்றிலும் பரிசுத்தராயிருங்கள்.
ⲓ̅ⲉ̅ⲁⲗⲗⲁ ⲕⲁⲧⲁ ⲑⲉ ⲉⲧϥⲟⲩⲁⲁⲃ ⲛϭⲓ ⲡⲉⲧⲁϥⲧⲉϩⲙ ⲧⲏⲩⲧⲛ ⲉⲧⲉⲧⲛϣⲱⲡⲉ ϩⲱ ⲧⲏⲩⲧⲛ ⲉⲧⲉⲧⲛⲟⲩⲁⲁⲃ ϩⲣⲁⲓ ϩⲛ ⲁⲛⲁⲥⲧⲣⲟⲫⲏ ⲛⲓⲙ
16 ஏனெனில், “நான் பரிசுத்தர், நீங்களும் பரிசுத்தராய் இருங்கள்” என்று எழுதியிருக்கிறதே.
ⲓ̅ⲋ̅ϫⲉ ϥⲥⲏϩ ϫⲉ ϣⲱⲡⲉ ⲉⲧⲉⲧⲛⲟⲩⲁⲁⲃ ϫⲉ ⲁⲛⲟⲕ ϯⲟⲩⲁⲁⲃ
17 ஒவ்வொருவருடைய செயலையும் பாரபட்சமின்றி நியாயந்தீர்க்கின்ற பிதாவை நீங்கள் ஆராதிக்கிறபடியால், இங்கே நீங்கள் அந்நியர்களாக உங்களுடைய வாழ்க்கையை பயபக்தியுடன் வாழுங்கள்.
ⲓ̅ⲍ̅ⲁⲩⲱ ⲉϣϫⲉ ⲡⲉⲧⲕⲣⲓⲛⲉ ⲙⲡⲟⲩⲁ ⲡⲟⲩⲁ ⲕⲁⲧⲁ ⲛⲛⲉϥϩⲉⲃⲏⲩⲉ ⲁϫⲛϫⲓϩⲟ ⲧⲛⲙⲟⲩⲧⲉ ⲉⲣⲟϥ ϫⲉ ⲡⲉⲛⲉⲓⲱⲧ ⲉⲓⲙⲟⲟϣⲉ ϩⲛ ⲟⲩϩⲟⲧⲉ ⲙⲡⲉⲟⲩⲟⲉⲓϣ ⲉⲧⲉⲧⲛϣⲟⲟⲡ ⲙⲡⲉⲓⲙⲁ
18 ஏனெனில் நீங்கள் அறிந்திருக்கிறபடி, உங்கள் முற்பிதாக்களினால் உங்களுக்கு கையளிக்கப்பட்ட வெறுமையான வாழ்க்கை முறையிலிருந்து வெள்ளி, தங்கம் போன்ற அழிந்துபோகும் பொருட்களினால் நீங்கள் மீட்கப்படவில்லை.
ⲓ̅ⲏ̅ⲉⲧⲉⲧⲛⲥⲟⲟⲩⲛ ϫⲉ ⲛⲧⲁⲩⲥⲉⲧ ⲧⲏⲩⲧⲛ ⲁⲛ ϩⲛ ⲟⲩⲛⲟⲩⲃ ⲏ ⲟⲩϩⲁⲧ ⲉϣⲁϥⲧⲁⲕⲟ ⲉⲃⲟⲗ ϩⲛ ⲛⲉⲧⲛϩⲉⲃⲏⲩⲉ ⲉⲧϣⲟⲩⲉⲓⲧ ⲉⲧⲁⲛⲉⲧⲛⲉⲓⲟⲧⲉ ⲧⲁⲁⲩ ⲉⲧⲛ ⲧⲏⲩⲧⲛ
19 குற்றமோ, குறைபாடோ இல்லாத ஆட்டுக்குட்டியானவராகிய, கிறிஸ்துவின் உயர்மதிப்புடைய இரத்தத்தினாலேயே மீட்கப்பட்டீர்கள்.
ⲓ̅ⲑ̅ⲁⲗⲗⲁ ϩⲙ ⲡⲉⲥⲛⲟϥ ⲉⲧⲁⲉⲓⲏⲩ ⲛⲧⲉ ⲡⲉϩⲉⲓⲏⲃ ⲉⲧⲟⲩⲁⲁⲃ ⲁⲩⲱ ⲛⲁⲧⲱⲗⲙ ⲡⲉⲭⲥ
20 உலகம் படைக்கப்படும் முன்பாகவே, அவர் முன்குறிக்கப்பட்டார். ஆனால் உங்களுக்காகவே இந்தக் கடைசிக் காலங்களில் வெளிப்படுத்தப்பட்டார்.
ⲕ̅ⲉⲁⲩϣⲣⲡ ⲥⲟⲩⲱⲛϥ ⲙⲛ ϩⲁⲑⲏ ⲛⲧⲕⲁⲧⲁⲃⲟⲗⲏ ⲙⲡⲕⲟⲥⲙⲟⲥ ⲉⲁϥⲟⲩⲱⲛϩ ⲇⲉ ⲉⲃⲟⲗ ⲉⲧⲃⲉ ⲧⲏⲩⲧⲛ ϩⲛ ⲑⲁⲏ ⲛⲛⲉⲓⲟⲩⲟⲉⲓϣ
21 அவர் மூலமாகவே நீங்கள் இறைவனில் விசுவாசமாய் இருக்கிறீர்கள். உங்கள் விசுவாசமும், நம்பிக்கையும் இறைவனிலேயே இருக்கும்படி, இறைவனே அவரை இறந்தோரிலிருந்து உயிருடன் எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார்.
ⲕ̅ⲁ̅ⲛⲁⲓ ⲉⲧⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲉⲡⲛⲟⲩⲧⲉ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲟⲟⲧϥ ⲙⲡⲉϥϣⲏⲣⲉ ⲡⲁⲓ ⲛⲧⲁϥⲧⲟⲩⲛⲟⲥϥ ⲉⲃⲟⲗ ϩⲛ ⲛⲉⲧⲙⲟⲟⲩⲧ ⲁⲩⲱ ⲁϥϯ ⲛⲁϥ ⲛⲟⲩⲉⲟⲟⲩ ϩⲱⲥⲧⲉ ⲧⲉⲧⲛⲡⲓⲥⲧⲓⲥ ⲙⲛ ⲧⲉⲧⲛϩⲉⲗⲡⲓⲥ ⲛⲥϣⲱⲡⲉ ⲉϩⲟⲩⲛ ⲉⲡⲛⲟⲩⲧⲉ
22 இப்பொழுது நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்ததினாலே, உங்களைச் சுத்திகரித்துக்கொண்டீர்கள். இதனால் உங்கள் சகோதரரைக்குறித்து உண்மையான அன்புள்ளவர்களாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒருவரில் ஒருவர் உண்மையான உள்ளத்துடன் ஆழ்ந்த அன்பு செலுத்துங்கள்.
ⲕ̅ⲃ̅ⲉⲁⲧⲉⲧⲛⲧⲃⲃⲟ ⲛⲛⲉⲧⲛⲯⲩⲭⲏ ⲉϩⲣⲁⲓ ϩⲙ ⲡⲥⲱⲧⲙ ⲛⲧⲙⲉ ⲉⲩⲙⲛⲧⲙⲁⲓⲥⲟⲛ ⲙⲛ ϩⲩⲡⲟⲕⲣⲓⲛⲉ ⲛϩⲏⲧⲥ ⲉⲧⲉⲧⲛⲙⲉⲣⲉ ⲛⲉⲧⲛⲛⲉⲣⲏⲩ ϩⲛ ⲟⲩϩⲏⲧ ⲉϥⲟⲩⲁⲁⲃ
23 ஏனெனில், நீங்கள் புதிதான பிறப்பைப் பெற்றிருக்கிறீர்கள். இந்த பிறப்பு அழிந்துபோகின்ற விதையினால் உண்டாகவில்லை. அழியாத விதையான இறைவனுடைய வார்த்தையினாலேயே உண்டானது. அந்த வார்த்தை உயிருள்ளதும் நிலைத்து நிற்பதுமானது. (aiōn )
ⲕ̅ⲅ̅ⲉⲁⲩϫⲡⲉ ⲧⲏⲩⲧⲛ ⲁⲛ ϩⲛ ⲟⲩϫⲡⲟ ⲛϣⲁϥⲧⲁⲕⲟ ⲁⲗⲗⲁ ⲉⲃⲟⲗ ϩⲛ ⲟⲩⲁⲧⲧⲁⲕⲟ ϩⲓⲧⲙ ⲡϣⲁϫⲉ ⲙⲡⲛⲟⲩⲧⲉ ⲉⲧⲟⲛϩ ⲁⲩⲱ ⲉⲧϣⲟⲟⲡ (aiōn )
24 ஏனெனில், “எல்லா மனிதரும் புல்லைப் போன்றவர்கள். அவர்களின் மகிமை எல்லாம் வயல்வெளியின் பூக்களைப் போன்றன. புல் வாடுகிறது, பூக்கள் உதிருகின்றன,
ⲕ̅ⲇ̅ϫⲉ ⲥⲁⲣⲝ ⲛⲓⲙ ⲉⲩⲟ ⲛⲑⲉ ⲛⲟⲩⲭⲟⲣⲧⲟⲥ ⲁⲩⲱ ⲉⲟⲟⲩ ⲛⲓⲙ ⲛⲧⲁⲩ ⲛⲑⲉ ⲙⲡⲉϩⲣⲏⲣⲉ ⲙⲡⲉⲭⲟⲣⲧⲟⲥ ⲉⲁϥϣⲟⲟⲩⲉ ⲛϭⲓ ⲡⲉⲭⲟⲣⲧⲟⲥ ⲁⲩⲱ ⲡⲉϥϩⲣⲏⲣⲉ ⲁϥⲥⲣⲟϥⲣϥ
25 ஆனால் இறைவனின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று இந்த வார்த்தை உங்களுக்கு நற்செய்தியாய் பிரசங்கிக்கப்பட்டது. (aiōn )
ⲕ̅ⲉ̅ⲡϣⲁϫⲉ ⲇⲉ ⲙⲡϫⲟⲉⲓⲥ ϣⲟⲟⲡ ⲛϣⲁⲉⲛⲉϩ ⲡⲁⲓ ⲇⲉ ⲡⲉ ⲡϣⲁϫⲉ ⲛⲧⲁⲩⲧⲁϣⲉ ⲟⲉⲓϣ ⲙⲙⲟϥ ⲛⲏⲧⲛ (aiōn )