< 1 யோவான் 2 >

1 என் அன்பான பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதபடிக்கு நான் உங்களுக்கு இதை எழுதுகிறேன். ஆனால், யாராவது பாவம்செய்தால், நமக்காக பிதாவினிடத்தில் பரிந்துபேசுகிற ஒருவர் இருக்கிறார். நீதியுள்ளவரான இயேசுகிறிஸ்துவே அவர்.
ஹே ப்ரியபா³லகா​: , யுஷ்மாபி⁴ ர்யத் பாபம்’ ந க்ரியேத தத³ர்த²ம்’ யுஷ்மாந் ப்ரத்யேதாநி மயா லிக்²யந்தே| யதி³ து கேநாபி பாபம்’ க்ரியதே தர்ஹி பிது​: ஸமீபே (அ)ஸ்மாகம்’ ஏக​: ஸஹாயோ (அ)ர்த²தோ தா⁴ர்ம்மிகோ யீஸு²​: க்²ரீஷ்டோ வித்³யதே|
2 நம்முடைய பாவங்களுக்கான நிவாரணப்பலி அவரே. நம்முடைய பாவங்களுக்கு மாத்திரமல்ல, முழு உலகத்தவருடைய பாவங்களுக்குமான நிவாரணப்பலி அவரே.
ஸ சாஸ்மாகம்’ பாபாநாம்’ ப்ராயஸ்²சித்தம்’ கேவலமஸ்மாகம்’ நஹி கிந்து லிகி²லஸம்’ஸாரஸ்ய பாபாநாம்’ ப்ராயஸ்²சித்தம்’|
3 இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால், நாம் அவரை அறிந்திருக்கிறோம் என்பதை உறுதியாய் அறிந்துகொள்கிறோம்.
வயம்’ தம்’ ஜாநீம இதி ததீ³யாஜ்ஞாபாலநேநாவக³ச்சா²ம​: |
4 “இறைவனை நான் அறிந்திருக்கிறேன்” என்று சொல்லும் ஒருவன், அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாவிட்டால் அவன் ஒரு பொய்யன்; சத்தியம் அவனுக்குள் இல்லை.
அஹம்’ தம்’ ஜாநாமீதி வதி³த்வா யஸ்தஸ்யாஜ்ஞா ந பாலயதி ஸோ (அ)ந்ரு’தவாதீ³ ஸத்யமதஞ்ச தஸ்யாந்தரே ந வித்³யதே|
5 ஆனால் யாராவது, இறைவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தால், இறைவனின் அன்பு உண்மையிலேயே அவனில் முழுநிறைவு பெறுகிறது. நாம் இறைவனில் இருக்கிறோம் என்பதை இவ்விதமாகத்தான் அறிந்துகொள்கிறோம்:
ய​: கஸ்²சித் தஸ்ய வாக்யம்’ பாலயதி தஸ்மிந் ஈஸ்²வரஸ்ய ப்ரேம ஸத்யரூபேண ஸித்⁴யதி வயம்’ தஸ்மிந் வர்த்தாமஹே தத்³ ஏதேநாவக³ச்சா²ம​: |
6 ஒருவன் தான் இறைவனில் வாழ்வதாகச் சொல்லிக்கொண்டால், அவன் இயேசுவைப் போலவே தானும் நடக்கவேண்டும்.
அஹம்’ தஸ்மிந் திஷ்டா²மீதி யோ க³த³தி தஸ்யேத³ம் உசிதம்’ யத் க்²ரீஷ்டோ யாத்³ரு’க்³ ஆசரிதவாந் ஸோ (அ)பி தாத்³ரு’க்³ ஆசரேத்|
7 அன்பான நண்பர்களே, நான் உங்களுக்கு எழுதும் செய்தி ஒரு புதிய கட்டளை அல்ல; பழைய கட்டளையைத்தான் எழுதுகிறேன். அது உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்று நீங்கள் கேட்ட செய்தியே அந்த முந்திய கட்டளை.
ஹே ப்ரியதமா​: , யுஷ்மாந் ப்ரத்யஹம்’ நூதநாமாஜ்ஞாம்’ லிகா²மீதி நஹி கிந்த்வாதி³தோ யுஷ்மாபி⁴ ர்லப்³தா⁴ம்’ புராதநாமாஜ்ஞாம்’ லிகா²மி| ஆதி³தோ யுஷ்மாபி⁴ ர்யத்³ வாக்யம்’ ஸ்²ருதம்’ ஸா புராதநாஜ்ஞா|
8 ஆனால், இது ஒரு புதிய கட்டளையாகவும் இருக்கிறது; இந்த சத்தியம் கிறிஸ்துவிலும் உங்களிலும் காணப்படுகிறது. ஏனெனில் இருள் அகன்றுபோகிறது, சத்திய ஒளி பிரகாசிக்கத் தொடங்கியிருக்கிறது.
புநரபி யுஷ்மாந் ப்ரதி நூதநாஜ்ஞா மயா லிக்²யத ஏதத³பி தஸ்மிந் யுஷ்மாஸு ச ஸத்யம்’, யதோ (அ)ந்த⁴காரோ வ்யத்யேதி ஸத்யா ஜ்யோதிஸ்²சேதா³நீம்’ ப்ரகாஸ²தே;
9 தான் இறைவனுடைய ஒளியில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் யாராவது, தன் சகோதரனை வெறுத்தால், அவன் இன்னும் இருளில்தான் இருக்கிறான்.
அஹம்’ ஜ்யோதிஷி வர்த்த இதி க³தி³த்வா ய​: ஸ்வப்⁴ராதரம்’ த்³வேஷ்டி ஸோ (அ)த்³யாபி தமிஸ்ரே வர்த்ததே|
10 தன் சகோதரனை நேசிக்கிறவனோ, இறைவனுடைய வெளிச்சத்தில் இருக்கிறான். மற்றவர்களை இடறிவிழச் செய்யத்தக்க எதுவும் அவனுக்குள் இல்லை.
ஸ்வப்⁴ராதரி ய​: ப்ரீயதே ஸ ஏவ ஜ்யோதிஷி வர்த்ததே விக்⁴நஜநகம்’ கிமபி தஸ்மிந் ந வித்³யதே|
11 ஆனால் யாராவது தன் சகோதரனை வெறுத்தால், அவன் இருளிலேயே இருக்கிறான், அவன் இருளிலேயே நடக்கிறான்; தான் எங்கு போகிறான் என்றும் அவன் அறியாதிருக்கிறான். ஏனெனில், இருள் அவனைக் குருடாக்கிவிட்டது.
கிந்து ஸ்வப்⁴ராதரம்’ யோ த்³வேஷ்டி ஸ திமிரே வர்த்ததே திமிரே சரதி ச திமிரேண ச தஸ்ய நயநே (அ)ந்தீ⁴க்ரியேதே தஸ்மாத் க்க யாமீதி ஸ ஜ்ஞாதும்’ ந ஸ²க்நோதி|
12 அன்பான பிள்ளைகளே, அவருடைய பெயரின் நிமித்தம் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு இருக்கிறபடியால், நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
ஹே ஸி²ஸ²வ​: , யூயம்’ தஸ்ய நாம்நா பாபக்ஷமாம்’ ப்ராப்தவந்தஸ்தஸ்மாத்³ அஹம்’ யுஷ்மாந் ப்ரதி லிகா²மி|
13 தந்தையரே, தொடக்கத்திலிருந்தே இருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறபடியால், நான் உங்களுக்கு எழுதுகிறேன். இளைஞரே, தீயவனை நீங்கள் மேற்கொண்டிருக்கிறபடியால், நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
ஹே பிதர​: , ய ஆதி³தோ வர்த்தமாநஸ்தம்’ யூயம்’ ஜாநீத² தஸ்மாத்³ யுஷ்மாந் ப்ரதி லிகா²மி| ஹே யுவாந​: யூயம்’ பாபத்மாநம்’ ஜிதவந்தஸ்தஸ்மாத்³ யுஷ்மாந் ப்ரதி லிகா²மி| ஹே பா³லகா​: , யூயம்’ பிதரம்’ ஜாநீத² தஸ்மாத³ஹம்’ யுஷ்மாந் ப்ரதி லிகி²தவாந்|
14 அன்பான பிள்ளைகளே, நீங்கள் பிதாவை அறிந்திருக்கிறபடியால், நான் உங்களுக்கு எழுதுகிறேன். தந்தையரே, தொடக்கத்திலிருந்தே இருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறபடியால், நான் உங்களுக்கு எழுதுகிறேன். இளைஞரே, நீங்கள் பலம் உள்ளவர்களாகவும், இறைவனுடைய வார்த்தை உங்களுக்குள் குடியிருப்பதாலும், நீங்கள் தீயவனை மேற்கொண்டிருப்பதாலும், நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
ஹே பிதர​: , ஆதி³தோ யோ வர்த்தமாநஸ்தம்’ யூயம்’ ஜாநீத² தஸ்மாத்³ யுஷ்மாந் ப்ரதி லிகி²தவாந்| ஹே யுவாந​: , யூயம்’ ப³லவந்த ஆத்⁴வே, ஈஸ்²வரஸ்ய வாக்யஞ்ச யுஷ்மத³ந்தரே வர்ததே பாபாத்மா ச யுஷ்மாபி⁴​: பராஜிக்³யே தஸ்மாத்³ யுஷ்மாந் ப்ரதி லிகி²தவாந்|
15 உலகத்திலும் உலகத்திலுள்ள எவற்றிலும் அன்புகொள்ள வேண்டாம். யாராவது உலகத்தில் அன்புகொள்வானாகில், பிதாவின் அன்பு அவனில் இல்லை.
யூயம்’ ஸம்’ஸாரே ஸம்’ஸாரஸ்த²விஷயேஷு ச மா ப்ரீயத்⁴வம்’ ய​: ஸம்’ஸாரே ப்ரீயதே தஸ்யாந்தரே பிது​: ப்ரேம ந திஷ்ட²தி|
16 ஏனெனில் உலகத்திலுள்ளவைகளான சரீர ஆசைகள், கண்களின் ஆசை, வாழ்வின் பெருமை ஆகிய எல்லாம் பிதாவினிடத்திலிருந்து வருவதில்லை; இவை உலகத்திலிருந்தே வருகின்றன.
யத​: ஸம்’ஸாரே யத்³யத் ஸ்தி²தம் அர்த²த​: ஸா²ரீரிகபா⁴வஸ்யாபி⁴லாஷோ த³ர்ஸ²நேந்த்³ரியஸ்யாபி⁴லாஷோ ஜீவநஸ்ய க³ர்வ்வஸ்²ச ஸர்வ்வமேதத் பித்ரு’தோ ந ஜாயதே கிந்து ஸம்’ஸாரதே³வ|
17 உலகமும் உலகத்திற்குரிய ஆசைகளும் நிலையற்று மறைந்துபோகின்றன. ஆனால் இறைவனுடைய சித்தத்தைச் செய்கிறவனோ என்றென்றும் வாழ்கிறான். (aiōn g165)
ஸம்’ஸாரஸ்ததீ³யாபி⁴லாஷஸ்²ச வ்யத்யேதி கிந்து ய ஈஸ்²வரஸ்யேஷ்டம்’ கரோதி ஸோ (அ)நந்தகாலம்’ யாவத் திஷ்ட²தி| (aiōn g165)
18 அன்பான பிள்ளைகளே, இதுவே கடைசி மணிவேளை; கிறிஸ்து விரோதி வருவான் என நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறபடி, கிறிஸ்து விரோதிகள் பலர் இப்பொழுதே வந்திருக்கிறார்கள். இதனாலேயே, இதுவே கடைசி மணிவேளை என்று நாம் அறிந்துகொள்கிறோம்.
ஹே பா³லகா​: , ஸே²ஷகாலோ(அ)யம்’, அபரம்’ க்²ரீஷ்டாரிணோபஸ்தா²வ்யமிதி யுஷ்மாபி⁴ ர்யதா² ஸ்²ருதம்’ ததா² ப³ஹவ​: க்²ரீஷ்டாரய உபஸ்தி²தாஸ்தஸ்மாத³யம்’ ஸே²ஷகாலோ(அ)ஸ்தீதி வயம்’ ஜாநீம​: |
19 நம்மைவிட்டு அவர்கள் பிரிந்து போனார்கள். ஆனால் உண்மையிலேயே அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்களாய் இருந்திருந்தால், அவர்கள் நம்மோடு தொடர்ந்து இருந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் பிரிந்துபோனது, அவர்களில் எவருமே நம்மைச் சேர்ந்தவர்களல்ல என்பதைக் காட்டியது.
தே (அ)ஸ்மந்மத்⁴யாந் நிர்க³தவந்த​: கிந்த்வஸ்மதீ³யா நாஸந் யத்³யஸ்மதீ³யா அப⁴விஷ்யந் தர்ஹ்யஸ்மத்ஸங்கே³ (அ)ஸ்தா²ஸ்யந், கிந்து ஸர்வ்வே (அ)ஸ்மதீ³யா ந ஸந்த்யேதஸ்ய ப்ரகாஸ² ஆவஸ்²யக ஆஸீத்|
20 ஆனால் நீங்களோ, பரிசுத்த ஆவியானவரிடமிருந்து அபிஷேகம் பெற்றிருக்கிறீர்கள். மேலும் நீங்கள் எல்லோரும் சத்தியத்தை அறிந்திருக்கிறீர்கள்.
ய​: பவித்ரஸ்தஸ்மாத்³ யூயம் அபி⁴ஷேகம்’ ப்ராப்தவந்தஸ்தேந ஸர்வ்வாணி ஜாநீத²|
21 உங்களுக்கு சத்தியம் தெரியாது என்பதற்காக அல்ல, நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறீர்கள் என்பதாலும், சத்தியத்திலிருந்து பொய் ஒருபோதும் வருவதில்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பதாலுமே நான் இதை எழுதுகிறேன்.
யூயம்’ ஸத்யமதம்’ ந ஜாநீத² தத்காரணாத்³ அஹம்’ யுஷ்மாந் ப்ரதி லிகி²தவாந் தந்நஹி கிந்து யூயம்’ தத் ஜாநீத² ஸத்யமதாச்ச கிமப்யந்ரு’தவாக்யம்’ நோத்பத்³யதே தத்காரணாதே³வ|
22 யார் பொய்யன்? மனிதனாக வந்த இயேசுவை கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனே பொய்யன். இப்படிப்பட்டவனே கிறிஸ்து விரோதி, அவன் பிதாவையும் அவருடைய மகனையும் மறுதலிக்கிறான்.
யீஸு²ரபி⁴ஷிக்தஸ்த்ராதேதி யோ நாங்கீ³கரோதி தம்’ விநா கோ (அ)பரோ (அ)ந்ரு’தவாதீ³ ப⁴வேத்? ஸ ஏவ க்²ரீஷ்டாரி ர்ய​: பிதரம்’ புத்ரஞ்ச நாங்கீ³கரோதி|
23 மகனை மறுதலிக்கிற எவனுடனும் பிதா இருப்பதில்லை; மகனை ஏற்றுக்கொள்கிறவனோடுதான் பிதாவும் இருக்கிறார்.
ய​: கஸ்²சித் புத்ரம்’ நாங்கீ³கரோதி ஸ பிதரமபி ந தா⁴ரயதி யஸ்²ச புத்ரமங்கீ³கரோதி ஸ பிதரமபி தா⁴ரயதி|
24 எனவே, நீங்கள் தொடக்கத்திலிருந்து கேட்டறிந்தவை, உங்களில் நிலைத்திருக்கும்படி கவனமாயிருங்கள். அவை அப்படி நிலைத்திருந்தால், நீங்கள் மகனாகிய கிறிஸ்துவிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள்.
ஆதி³தோ யுஷ்மாபி⁴ ர்யத் ஸ்²ருதம்’ தத்³ யுஷ்மாஸு திஷ்ட²து, ஆதி³த​: ஸ்²ருதம்’ வாக்யம்’ யதி³ யுஷ்மாஸு திஷ்ட²தி, தர்ஹி யூயமபி புத்ரே பிதரி ச ஸ்தா²ஸ்யத²|
25 அவர் நமக்குத் தருவதாக வாக்குக்கொடுத்திருக்கிற நித்தியவாழ்வு இதுவே. (aiōnios g166)
ஸ ச ப்ரதிஜ்ஞயாஸ்மப்⁴யம்’ யத் ப்ரதிஜ்ஞாதவாந் தத்³ அநந்தஜீவநம்’| (aiōnios g166)
26 உங்களை வழிவிலகப்பண்ண முயற்சிக்கிறவர்களின் சூழ்ச்சியை எண்ணியே உங்களுக்கு இவற்றை நான் எழுதுகிறேன்.
யே ஜநா யுஷ்மாந் ப்⁴ராமயந்தி தாநத்⁴யஹம் இத³ம்’ லிகி²தவாந்|
27 உங்களைப் பொறுத்தவரையில், கிறிஸ்துவிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொண்ட பரிசுத்த ஆவியானவருடைய அபிஷேகம் உங்களில் இன்னும் நிலைத்திருக்கிறது. அதனால், வேறு யாரும் உங்களுக்குக் போதிக்கவேண்டிய அவசியம் இல்லை; பரிசுத்த ஆவியானவரே உங்களுக்கு எல்லாவற்றையும் போதிப்பார். அவருடைய போதனை சத்தியமாயிருக்கிறது; அது போலியானது அல்ல. ஆகவே, ஆவியானவர் போதித்தபடி, கிறிஸ்துவில் நிலைத்திருங்கள்.
அபரம்’ யூயம்’ தஸ்மாத்³ யம் அபி⁴ஷேகம்’ ப்ராப்தவந்த​: ஸ யுஷ்மாஸு திஷ்ட²தி தத​: கோ(அ)பி யத்³ யுஷ்மாந் ஸி²க்ஷயேத் தத்³ அநாவஸ்²யகம்’, ஸ சாபி⁴ஷேகோ யுஷ்மாந் ஸர்வ்வாணி ஸி²க்ஷயதி ஸத்யஸ்²ச ப⁴வதி ந சாதத்²ய​: , அத​: ஸ யுஷ்மாந் யத்³வத்³ அஸி²க்ஷயத் தத்³வத் தத்ர ஸ்தா²ஸ்யத²|
28 இப்பொழுதும் அன்பான பிள்ளைகளே, நீங்கள் தொடர்ந்து கிறிஸ்துவில் வாழுங்கள். அப்படியானால், அவர் மீண்டும் வரும்போது, நாம் அவருக்கு முன்பாக மனவுறுதி உடையவர்களாயும் வெட்கப்படாதவர்களாயும் இருப்போம்.
அதஏவ ஹே ப்ரியபா³லகா யூயம்’ தத்ர திஷ்ட²த, ததா² ஸதி ஸ யதா³ ப்ரகாஸி²ஷ்யதே ததா³ வயம்’ ப்ரதிபா⁴ந்விதா ப⁴விஷ்யாம​: , தஸ்யாக³மநஸமயே ச தஸ்ய ஸாக்ஷாந்ந த்ரபிஷ்யாமஹே|
29 இறைவன் நீதியுள்ளவர் என்பதை நீங்கள் அறிந்திருந்தால், நீதியாய் நடக்கிற ஒவ்வொருவனும் அவரால் பிறந்த அவருடைய பிள்ளையாய் இருக்கிறான் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
ஸ தா⁴ர்ம்மிகோ (அ)ஸ்தீதி யதி³ யூயம்’ ஜாநீத² தர்ஹி ய​: கஸ்²சித்³ த⁴ர்ம்மாசாரம்’ கரோதி ஸ தஸ்மாத் ஜாத இத்யபி ஜாநீத|

< 1 யோவான் 2 >