< 1 கொரிந்தியர் 9 >
1 நான் ஒரு சுதந்திரமுடைய மனிதன் அல்லவா? நான் ஒரு அப்போஸ்தலன் அல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுவை நான் காணவில்லையா? நான் கர்த்தரில் செய்த ஊழியத்தின் கிரியையாய் நீங்கள் இருக்கிறீர்கள் அல்லவோ?
அஹம்’ கிம் ஏக: ப்ரேரிதோ நாஸ்மி? கிமஹம்’ ஸ்வதந்த்ரோ நாஸ்மி? அஸ்மாகம்’ ப்ரபு⁴ ர்யீஸு²: க்²ரீஷ்ட: கிம்’ மயா நாத³ர்ஸி²? யூயமபி கிம்’ ப்ரபு⁴நா மதீ³யஸ்²ரமப²லஸ்வரூபா ந ப⁴வத²?
2 நான் மற்றவர்களுக்கு ஒருவேளை அப்போஸ்தலனாய் இல்லாதிருக்கலாம். ஆனால் நிச்சயமாக, உங்களுக்கு, நான் அப்போஸ்தலன்தான்; ஏனெனில், கர்த்தரில் என் அப்போஸ்தல ஊழியத்திற்கு நீங்களே அடையாளமாய் இருக்கிறீர்கள்.
அந்யலோகாநாம்’ க்ரு’தே யத்³யப்யஹம்’ ப்ரேரிதோ ந ப⁴வேயம்’ ததா²ச யுஷ்மத்க்ரு’தே ப்ரேரிதோ(அ)ஸ்மி யத: ப்ரபு⁴நா மம ப்ரேரிதத்வபத³ஸ்ய முத்³ராஸ்வரூபா யூயமேவாத்⁴வே|
3 என்மேல் நியாயந்தீர்க்கிறவர்களுக்கு, நான் கொடுக்கும் பதில் இதுவே.
யே லோகா மயி தோ³ஷமாரோபயந்தி தாந் ப்ரதி மம ப்ரத்யுத்தரமேதத்|
4 உணவையும் பானத்தையும் உங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் உரிமை எங்களுக்கு இல்லையோ?
போ⁴ஜநபாநயோ: கிமஸ்மாகம்’ க்ஷமதா நாஸ்தி?
5 மற்ற அப்போஸ்தலர்களும், கர்த்தருடைய சகோதரர்களும், கேபாவும் அவனவன் விசுவாசியான தன்தன் மனைவியைக் கூட்டிக் கொண்டுபோகிறதுபோல், நாங்களும் செய்வதற்கு எங்களுக்கும் உரிமை இல்லையோ?
அந்யே ப்ரேரிதா: ப்ரபோ⁴ ர்ப்⁴ராதரௌ கைபா²ஸ்²ச யத் குர்வ்வந்தி தத்³வத் காஞ்சித் த⁴ர்ம்மப⁴கி³நீம்’ வ்யூஹ்ய தயா ஸார்த்³த⁴ம்’ பர்ய்யடிதும்’ வயம்’ கிம்’ ந ஸ²க்நும: ?
6 அல்லது வாழ்க்கைச் செலவுக்காக நானும் பர்னபாவும் மட்டும்தான் வேலைசெய்ய வேண்டுமோ?
ஸாம்’ஸாரிகஸ்²ரமஸ்ய பரித்யாகா³த் கிம்’ கேவலமஹம்’ ப³ர்ணப்³பா³ஸ்²ச நிவாரிதௌ?
7 எவன் தன் செலவுக்கான பணத்தைத் தானே செலுத்தி படைவீரனாய்ப் பணிபுரிவான்? எவன் திராட்சைத் தோட்டத்தை உண்டாக்கி அதன் பழங்களைச் சாப்பிடாதிருப்பான்? எவன் மந்தையை மேய்த்து அதன் பாலைக் குடியாதிருப்பான்?
நிஜத⁴நவ்யயேந க: ஸம்’க்³ராமம்’ கரோதி? கோ வா த்³ராக்ஷாக்ஷேத்ரம்’ க்ரு’த்வா தத்ப²லாநி ந பு⁴ங்க்தே? கோ வா பஸு²வ்ரஜம்’ பாலயந் தத்பயோ ந பிவதி?
8 இதை மனித வழக்கத்தின்படி மட்டும் சொல்கிறேனோ? மோசேயின் சட்டமும் இதைச் சொல்லவில்லையா?
கிமஹம்’ கேவலாம்’ மாநுஷிகாம்’ வாசம்’ வதா³மி? வ்யவஸ்தா²யாம்’ கிமேதாத்³ரு’ஸ²ம்’ வசநம்’ ந வித்³யதே?
9 “தானியக்கதிரை போரடிக்கும் எருதின் வாயைக் கட்டவேண்டாம்” என்று மோசேயின் சட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறதே. இவைகளை மாடுகளைக்குறித்தா, இறைவன் கவலைப்படுகிறார்?
மூஸாவ்யவஸ்தா²க்³ரந்தே² லிகி²தமாஸ்தே, த்வம்’ ஸ²ஸ்யமர்த்³த³கவ்ரு’ஷஸ்யாஸ்யம்’ ந ப⁴ம்’த்ஸ்யஸீதி| ஈஸ்²வரேண ப³லீவர்த்³தா³நாமேவ சிந்தா கிம்’ க்ரியதே?
10 நிச்சயமாக இதை அவர் நமக்காகத்தான் சொல்லியிருக்கிறார். ஆம், அது நமக்காகவே எழுதப்பட்டிருக்கிறது. ஏனெனில் உழுகிறவனும், போரடிக்கிறவனும் விளைச்சலில் தங்களுக்குரிய பங்கைப் பெற்றுக்கொள்வோம் என்ற எதிர்பார்ப்பில்தானே தங்கள் வேலையைச் செய்யவேண்டும்.
கிம்’ வா ஸர்வ்வதா²ஸ்மாகம்’ க்ரு’தே தத்³வசநம்’ தேநோக்தம்’? அஸ்மாகமேவ க்ரு’தே தல்லிகி²தம்’| ய: க்ஷேத்ரம்’ கர்ஷதி தேந ப்ரத்யாஸா²யுக்தேந கர்ஷ்டவ்யம்’, யஸ்²ச ஸ²ஸ்யாநி மர்த்³த³யதி தேந லாப⁴ப்ரத்யாஸா²யுக்தேந மர்த்³தி³தவ்யம்’|
11 நாங்கள் உங்கள் மத்தியில் ஆவிக்குரிய விதையை விதைத்தோமே. அப்படியிருக்க, உங்களிடமிருந்து எங்களுக்குத் தேவையானவற்றை அறுவடை செய்வது நியாயமற்றதோ?
யுஷ்மத்க்ரு’தே(அ)ஸ்மாபி⁴: பாரத்ரிகாணி பீ³ஜாநி ரோபிதாநி, அதோ யுஷ்மாகமைஹிகப²லாநாம்’ வயம் அம்’ஸி²நோ ப⁴விஷ்யாம: கிமேதத் மஹத் கர்ம்ம?
12 உங்களிடத்திலிருந்து உதவியைப் பெற்றுக்கொள்ள மற்றவர்களுக்கு உரிமை இருக்குமாயின், எங்களுக்கு இன்னும் அதிகமான உரிமை இருக்காதோ? அப்படியிருந்தும், இந்த உரிமையை நாங்கள் உபயோகிக்கவில்லை. மாறாக நாங்கள் கிறிஸ்துவின் நற்செய்திக்குத் தடை ஏற்படாதவாறு, எல்லாவற்றையும் சகித்துக்கொள்கிறோம்.
யுஷ்மாஸு யோ(அ)தி⁴காரஸ்தஸ்ய பா⁴கி³நோ யத்³யந்யே ப⁴வேயுஸ்தர்ஹ்யஸ்மாபி⁴ஸ்ததோ(அ)தி⁴கம்’ கிம்’ தஸ்ய பா⁴கி³பி⁴ ர்ந ப⁴விதவ்யம்’? அதி⁴கந்து வயம்’ தேநாதி⁴காரேண ந வ்யவஹ்ரு’தவந்த: கிந்து க்²ரீஷ்டீயஸுஸம்’வாத³ஸ்ய கோ(அ)பி வ்யாகா⁴தோ(அ)ஸ்மாபி⁴ர்யந்ந ஜாயேத தத³ர்த²ம்’ ஸர்வ்வம்’ ஸஹாமஹே|
13 ஆலயத்தில் ஊழியம் செய்கிறவர்கள் ஆலயத்திலிருந்தே தங்கள் உணவைப் பெறுகிறார்கள் என்பதையும், பலிபீடத்தில் பணிசெய்கிறவர்கள் பலியிடப்படும் காணிக்கைகளில் ஒரு பங்கைப் பெறுகிறார்கள் என்பதையும் நீங்கள் அறியாதிருக்கிறீர்களா?
அபரம்’ யே பவித்ரவஸ்தூநாம்’ பரிசர்ய்யாம்’ குர்வ்வந்தி தே பவித்ரவஸ்துதோ ப⁴க்ஷ்யாணி லப⁴ந்தே, யே ச வேத்³யா: பரிசர்ய்யாம்’ குர்வ்வந்தி தே வேதி³ஸ்த²வஸ்தூநாம் அம்’ஸி²நோ ப⁴வந்த்யேதத்³ யூயம்’ கிம்’ ந வித³?
14 அப்படியே நற்செய்தியைப் பிரசங்கிக்கிறவர்கள் நற்செய்தி ஊழியத்திலிருந்தே தங்கள் வாழ்க்கைக்குரிய தேவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று, கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார்.
தத்³வத்³ யே ஸுஸம்’வாத³ம்’ கோ⁴ஷயந்தி தை: ஸுஸம்’வாதே³ந ஜீவிதவ்யமிதி ப்ரபு⁴நாதி³ஷ்டம்’|
15 ஆனாலும் இந்த உரிமை எதையும் நான் அனுபவிக்கவில்லை. மேலும், அத்தகைய காரியங்களை நீங்கள் எனக்குச் செய்வீர்கள் என்ற எதிர்பார்ப்பிலும் நான் இதை எழுதவில்லை. இப்பொழுது எனக்கிருக்கும் இத்தகைய எனது பெருமித உணர்வை ஒருவன் அவத்தமாக்குகிறதைப் பார்க்கிலும், நான் சாவதே நலமாயிருக்கும்.
அஹமேதேஷாம்’ ஸர்வ்வேஷாம்’ கிமபி நாஸ்²ரிதவாந் மாம்’ ப்ரதி தத³நுஸாராத் ஆசரிதவ்யமித்யாஸ²யேநாபி பத்ரமித³ம்’ மயா ந லிக்²யதே யத: கேநாபி ஜநேந மம யஸ²ஸோ முதா⁴கரணாத் மம மரணம்’ வரம்’|
16 எனினும் நற்செய்தியைப் பிரசங்கிக்கும்பொழுது நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. ஏனெனில், நான் பிரசங்கிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். நற்செய்தியை நான் பிரசங்கிக்காவிட்டால், எனக்கு ஐயோ, கேடு வரும்.
ஸுஸம்’வாத³கே⁴ஷணாத் மம யஸோ² ந ஜாயதே யதஸ்தத்³கோ⁴ஷணம்’ மமாவஸ்²யகம்’ யத்³யஹம்’ ஸுஸம்’வாத³ம்’ ந கோ⁴ஷயேயம்’ தர்ஹி மாம்’ தி⁴க்|
17 நான் பிரசங்கிப்பதை ஒரு தொண்டாக செய்வேனாயின், எனக்கு அதற்கான வெகுமதி உண்டு; மனவிருப்பம் இன்றி நான் இதைச் செய்தாலும், எனக்கு ஒப்புவிக்கப்பட்ட பொறுப்பையே செய்து முடிக்கிறேன்.
இச்சு²கேந தத் குர்வ்வதா மயா ப²லம்’ லப்ஸ்யதே கிந்த்வநிச்சு²கே(அ)பி மயி தத்கர்ம்மணோ பா⁴ரோ(அ)ர்பிதோ(அ)ஸ்தி|
18 அப்படியானால், எனக்குக் கிடைக்கும் வெகுமதி என்ன? நான் எனக்குரிய உரிமைகளை பெற்றுக்கொள்ளாமலும், எவரிடமிருந்தும் எதையும் எதிர்பாராமலும், நற்செய்தியை இலவசமாக பிரசங்கிப்பதில் கிடைக்கும் மனத்திருப்தியே எனக்குரிய வெகுமதி.
ஏதேந மயா லப்⁴யம்’ ப²லம்’ கிம்’? ஸுஸம்’வாதே³ந மம யோ(அ)தி⁴கார ஆஸ்தே தம்’ யத³ப⁴த்³ரபா⁴வேந நாசரேயம்’ தத³ர்த²ம்’ ஸுஸம்’வாத³கோ⁴ஷணஸமயே தஸ்ய க்²ரீஷ்டீயஸுஸம்’வாத³ஸ்ய நிர்வ்யயீகரணமேவ மம ப²லம்’|
19 நான் சுதந்திரமான மனிதன். எந்த ஒரு மனிதனுக்கும் என்மேல் உரிமையில்லாதிருந்தும், அநேகரை கிறிஸ்துவுக்குள்ளாக ஆதாயப்படுத்திக்கொள்ள, எல்லோருக்கும் என்னை அடிமையாக்கிக்கொள்கிறேன்.
ஸர்வ்வேஷாம் அநாயத்தோ(அ)ஹம்’ யத்³ பூ⁴ரிஸோ² லோகாந் ப்ரதிபத்³யே தத³ர்த²ம்’ ஸர்வ்வேஷாம்’ தா³ஸத்வமங்கீ³க்ரு’தவாந்|
20 யூதர்களை ஆதாயப்படுத்திக்கொள்ள, நான் யூதருக்கு யூதனைப் போலானேன். மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்பட்டவர்களுக்கு, நானும் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்பட்டவனைப் போலானேன். அவ்வாறே, நான் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ள, மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படாதவனைப் போலானேன்.
யிஹூதீ³யாந் யத் ப்ரதிபத்³யே தத³ர்த²ம்’ யிஹூதீ³யாநாம்’ க்ரு’தே யிஹூதீ³யஇவாப⁴வம்’| யே ச வ்யவஸ்தா²யத்தாஸ்தாந் யத் ப்ரதிபத்³யே தத³ர்த²ம்’ வ்யவஸ்தா²நாயத்தோ யோ(அ)ஹம்’ ஸோ(அ)ஹம்’ வ்யவஸ்தா²யத்தாநாம்’ க்ரு’தே வ்யவஸ்தா²யத்தஇவாப⁴வம்’|
21 மோசேயின் சட்டம் இல்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ள, நானும் மோசேயின் சட்டம் இல்லாதவன் போலானேன். ஆனால் நான் இறைவனுடைய சட்டத்திற்கு உட்படாதவனல்ல, நான் கிறிஸ்துவின் சட்டத்துக்குக் கீழ்ப்பட்டவன்.
யே சாலப்³த⁴வ்யவஸ்தா²ஸ்தாந் யத் ப்ரதிபத்³யே தத³ர்த²ம் ஈஸ்²வரஸ்ய ஸாக்ஷாத்³ அலப்³த⁴வ்யவஸ்தோ² ந பூ⁴த்வா க்²ரீஷ்டேந லப்³த⁴வ்யவஸ்தோ² யோ(அ)ஹம்’ ஸோ(அ)ஹம் அலப்³த⁴வ்யவஸ்தா²நாம்’ க்ரு’தே(அ)லப்³த⁴வ்யவஸ்த² இவாப⁴வம்’|
22 பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ள, நான் பலவீனருக்கு பலவீனனானேன். எப்படியாவது சிலரையாவது இரட்சிப்புக்குள் வழிநடத்தும்படி, நான் எல்லோருக்கும் எல்லாமானேன்.
து³ர்ப்³ப³லாந் யத் ப்ரதிபத்³யே தத³ர்த²மஹம்’ து³ர்ப்³ப³லாநாம்’ க்ரு’தே து³ர்ப்³ப³லஇவாப⁴வம்’| இத்த²ம்’ கேநாபி ப்ரகாரேண கதிபயா லோகா யந்மயா பரித்ராணம்’ ப்ராப்நுயுஸ்தத³ர்த²ம்’ யோ யாத்³ரு’ஸ² ஆஸீத் தஸ்ய க்ரு’தே (அ)ஹம்’ தாத்³ரு’ஸ²இவாப⁴வம்’|
23 நற்செய்தியின் ஆசீர்வாதங்களில் நான் பங்கு பெறும்படியாகவே நற்செய்தியின் நிமித்தமே இவை எல்லாவற்றையும் நான் செய்கிறேன்.
இத்³ரு’ஸ² ஆசார: ஸுஸம்’வாதா³ர்த²ம்’ மயா க்ரியதே யதோ(அ)ஹம்’ தஸ்ய ப²லாநாம்’ ஸஹபா⁴கீ³ ப⁴விதுமிச்சா²மி|
24 ஓட்டப் பந்தயத்தில் எல்லோரும் ஓடுகிறார்கள். ஆனால் ஒருவனே பரிசைப் பெறுவான். இது உங்களுக்குத் தெரியாதா? பரிசைப் பெற்றுக்கொள்ளத்தக்க விதத்திலே ஓடுங்கள்.
பண்யலாபா⁴ர்த²ம்’ யே தா⁴வந்தி தா⁴வதாம்’ தேஷாம்’ ஸர்வ்வேஷாம்’ கேவல ஏக: பண்யம்’ லப⁴தே யுஷ்மாபி⁴: கிமேதந்ந ஜ்ஞாயதே? அதோ யூயம்’ யதா² பண்யம்’ லப்ஸ்யத்⁴வே ததை²வ தா⁴வத|
25 விளையாட்டுக்களில் பங்குபெறும் ஒவ்வொருவரும், கடுமையான சுயக்கட்டுப்பாடு பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் அழிந்துபோகும் ஒரு கிரீடத்தைப் பெறுவதற்காகவே அவ்வாறு செய்கிறார்கள்; ஆனால் நாமோ, அழியாத ஒரு கிரீடத்தைப் பெறுவதற்காக அப்படிச் செய்கிறோம்.
மல்லா அபி ஸர்வ்வபோ⁴கே³ பரிமிதபோ⁴கி³நோ ப⁴வந்தி தே து ம்லாநாம்’ ஸ்ரஜம்’ லிப்ஸந்தே கிந்து வயம் அம்லாநாம்’ லிப்ஸாமஹே|
26 ஆதலால், நான் குறிக்கோள் இல்லாமல் ஓடும் மனிதனைப்போல ஓடமாட்டேன்; நான் காற்றில் குத்துகிற மனிதனைப்போல, குத்துச் சண்டையிடமாட்டேன்.
தஸ்மாத்³ அஹமபி தா⁴வாமி கிந்து லக்ஷ்யமநுத்³தி³ஸ்²ய தா⁴வாமி தந்நஹி| அஹம்’ மல்லஇவ யுத்⁴யாமி ச கிந்து சா²யாமாகா⁴தயந்நிவ யுத்⁴யாமி தந்நஹி|
27 நான் என் உடலை அடக்கி, எனக்கு அடிமையாக்கிக்கொள்கிறேன். ஏனெனில் நான் மற்றவர்களுக்குப் பிரசங்கித்தபின், அதன் பரிசுக்குத் தகுதியில்லாதவனாய் விழுந்துபோகாதபடி இப்படிச் செய்கிறேன்.
இதராந் ப்ரதி ஸுஸம்’வாத³ம்’ கோ⁴ஷயித்வாஹம்’ யத் ஸ்வயமக்³ராஹ்யோ ந ப⁴வாமி தத³ர்த²ம்’ தே³ஹம் ஆஹந்மி வஸீ²குர்வ்வே ச|