< 1 கொரிந்தியர் 7 >

1 நீங்கள் முன்பு எழுதின காரியங்களைக்குறித்து நான் எழுதுகிறதாவது: “ஒருவன் பாலுறவுரீதியாக ஒரு பெண்ணைத் தொடாமலிருக்கிறது நல்லது.”
អបរញ្ច យុឞ្មាភិ រ្មាំ ប្រតិ យត៑ បត្រមលេខិ តស្យោត្តរមេតត៑, យោឞិតោៜស្បឝ៌នំ មនុជស្យ វរំ;
2 ஆனால் பாலியல் முறைகேடுகள் இவ்வளவு அதிகமாக இருப்பதால், ஒவ்வொரு மனிதனும் தன் சொந்த மனைவியை உடையவனாய் இருக்கவேண்டும். ஒவ்வொரு பெண்ணும், தன் சொந்தக் கணவனை உடையவளாய் இருக்கவேண்டும்.
កិន្តុ វ្យភិចារភយាទ៑ ឯកៃកស្យ បុំសះ ស្វកីយភាយ៌្យា ភវតុ តទ្វទ៑ ឯកៃកស្យា យោឞិតោ ៜបិ ស្វកីយភត៌្តា ភវតុ។
3 கணவன் தன் மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட வேண்டும். அதுபோலவே, மனைவியும் தன் கணவனுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட வேண்டும்.
ភាយ៌្យាយៃ ភត៌្រា យទ្យទ៑ វិតរណីយំ តទ៑ វិតីយ៌្យតាំ តទ្វទ៑ ភត៌្រេៜបិ ភាយ៌្យយា វិតរណីយំ វិតីយ៌្យតាំ។
4 மனைவியின் உடல் அவளுக்கு மட்டும் சொந்தமானதல்ல, அவளுடைய கணவனுக்கும் சொந்தமானது. அதுபோலவே, கணவனின் உடல் அவனுக்கு மட்டுமே சொந்தமானதல்ல, அவனுடைய மனைவிக்கும் சொந்தமானது.
ភាយ៌្យាយាះ ស្វទេហេ ស្វត្វំ នាស្តិ ភត៌្តុរេវ, តទ្វទ៑ ភត៌្តុរបិ ស្វទេហេ ស្វត្វំ នាស្តិ ភាយ៌្យាយា ឯវ។
5 நீங்கள் ஜெபத்தில் ஈடுபடுவதற்காக, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் இருவரும் உடன்பட்டு, ஒன்றிணையாதிருக்கலாம். அதற்குப் பின்பு, மீண்டும் ஒன்றுசேர்ந்துகொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் சுயக்கட்டுப்பாடு குறைவின் காரணமாக, சாத்தான் உங்களைச் சோதனைக்கு உட்படுத்தமாட்டான்.
ឧបោឞណប្រាត៌្ហនយោះ សេវនាត៌្ហម៑ ឯកមន្ត្រណានាំ យុឞ្មាកំ កិយត្កាលំ យាវទ៑ យា ប្ឫថក្ស្ថិតិ រ្ភវតិ តទន្យោ វិច្ឆេទោ យុឞ្មន្មធ្យេ ន ភវតុ, តតះ បរម៑ ឥន្ទ្រិយាណាម៑ អធៃយ៌្យាត៑ ឝយតាន៑ យទ៑ យុឞ្មាន៑ បរីក្ឞាំ ន នយេត៑ តទត៌្ហំ បុនរេកត្រ មិលត។
6 இதை நான் ஒரு கட்டளையாக அல்ல, ஒரு ஆலோசனையாகவே சொல்கிறேன்.
ឯតទ៑ អាទេឝតោ នហិ កិន្ត្វនុជ្ញាត ឯវ មយា កថ្យតេ,
7 எல்லா மனிதரும் என்னைப்போல் இருப்பதையே நான் விரும்புகிறேன். ஆனால் ஒவ்வொரு மனிதனும் இறைவனிடமிருந்து தனக்குரிய விசேஷ வரத்தைப் பெற்றிருக்கிறான்; ஒருவனது வரம் ஒருவிதமாயும், இன்னொருவனது வரம் இன்னொரு விதமாயும் இருக்கிறது.
យតោ មមាវស្ថេវ សវ៌្វមានវានាមវស្ថា ភវត្វិតិ មម វាញ្ឆា កិន្ត្វីឝ្វរាទ៑ ឯកេនៃកោ វរោៜន្យេន ចាន្យោ វរ ឥត្ថមេកៃកេន ស្វកីយវរោ លព្ធះ។
8 இப்பொழுது திருமணம் செய்யாதவர்களுக்கும், விதவைகளுக்கும் நான் சொல்கிறதாவது: என்னைப்போலவே அவர்களும் திருமணம் செய்யாமல் இருப்பது அவர்களுக்கு நல்லது.
អបរម៑ អក្ឫតវិវាហាន៑ វិធវាឝ្ច ប្រតិ មមៃតន្និវេទនំ មមេវ តេឞាមវស្ថិតិ រ្ភទ្រា;
9 ஆனால் அவர்களால் தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாதிருந்தால், அவர்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டும். ஏனெனில், பாலியல் உணர்ச்சிகளால் வேகுவதைப் பார்க்கிலும், திருமணம் செய்துகொள்வது நல்லது.
កិញ្ច យទិ តៃរិន្ទ្រិយាណិ និយន្តុំ ន ឝក្យន្តេ តហ៌ិ វិវាហះ ក្រិយតាំ យតះ កាមទហនាទ៑ វ្យូឍត្វំ ភទ្រំ។
10 திருமணம் செய்துகொண்டவர்களுக்கு, இந்தக் கட்டளையை நானல்ல, கர்த்தரே கொடுக்கிறார்: ஒரு மனைவி தன் கணவனை விட்டுப் பிரிந்துபோகக்கூடாது.
យេ ច ក្ឫតវិវាហាស្តេ មយា នហិ ប្រភុនៃវៃតទ៑ អាជ្ញាប្យន្តេ។
11 ஆனால் அப்படி அவள் பிரிந்து வாழ்ந்தால், அவள் வேறு திருமணம் செய்யாமலிருக்க வேண்டும். அல்லது தன் கணவனோடு ஒப்புரவாகவேண்டும். கணவனும் தன் மனைவியை விவாகரத்து செய்யக்கூடாது.
ភាយ៌្យា ភត៌្ត្ឫតះ ប្ឫថក៑ ន ភវតុ។ យទិ វា ប្ឫថគ្ភូតា ស្យាត៑ តហ៌ិ និវ៌ិវាហា តិឞ្ឋតុ ស្វីយបតិនា វា សន្ទធាតុ ភត៌្តាបិ ភាយ៌្យាំ ន ត្យជតុ។
12 மற்றவர்களைக்குறித்து, கர்த்தர் அல்ல, நானே சொல்கிறதாவது: எந்தவொரு சகோதரனும் அவிசுவாசியான ஒரு மனைவியை உடையவனாயிருந்து, அவள் அவனோடு வாழ விரும்புவாளாயின், அவன் அவளை விவாகரத்து செய்யக்கூடாது.
ឥតរាន៑ ជនាន៑ ប្រតិ ប្រភុ រ្ន ព្រវីតិ កិន្ត្វហំ ព្រវីមិ; កស្យចិទ៑ ភ្រាតុយ៌ោឞិទ៑ អវិឝ្វាសិនី សត្យបិ យទិ តេន សហវាសេ តុឞ្យតិ តហ៌ិ សា តេន ន ត្យជ្យតាំ។
13 அவ்வாறே எந்தவொரு பெண்ணும் அவிசுவாசியான ஒரு கணவனை உடையவளாயிருந்து, அவன் அவளோடு வாழ விரும்புவானாயின், அவள் அவனை விவாகரத்து செய்யக்கூடாது.
តទ្វត៑ កស្យាឝ្ចិទ៑ យោឞិតះ បតិរវិឝ្វាសី សន្នបិ យទិ តយា សហវាសេ តុឞ្យតិ តហ៌ិ ស តយា ន ត្យជ្យតាំ។
14 ஏனெனில், அவிசுவாசியான கணவன் தன் மனைவியின் மூலமாக இறைவனது கிருபையின் கீழ் வருகிறான். அதேபோல், அவிசுவாசியான மனைவியும் விசுவாசியான தன் கணவன் மூலமாக இறைவனது கிருபையின் கீழ் வருகிறாள். இல்லாவிட்டால் அவர்களுடைய பிள்ளைகள் அசுத்தமுள்ளவர்களாய் இருப்பார்களே. ஆனால், அப்பிள்ளைகளோ பரிசுத்தமானவர்கள்.
យតោៜវិឝ្វាសី ភត៌្តា ភាយ៌្យយា បវិត្រីភូតះ, តទ្វទវិឝ្វាសិនី ភាយ៌្យា ភត៌្រា បវិត្រីភូតា; នោចេទ៑ យុឞ្មាកមបត្យាន្យឝុចីន្យភវិឞ្យន៑ កិន្ត្វធុនា តានិ បវិត្រាណិ សន្តិ។
15 ஆனால், அவிசுவாசி பிரிந்து போவானாயின் அவனைப் போகவிடுங்கள். விசுவாசியான ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ, இப்படியான ஒரு நிலையில் கட்டுப்பாடு உடையவர்கள் அல்ல; இறைவன் நம்மைச் சமாதானத்துடன் வாழ்வதற்காகவே அழைத்திருக்கிறார்.
អវិឝ្វាសី ជនោ យទិ វា ប្ឫថគ៑ ភវតិ តហ៌ិ ប្ឫថគ៑ ភវតុ; ឯតេន ភ្រាតា ភគិនី វា ន និពធ្យតេ តថាបិ វយមីឝ្វរេណ ឝាន្តយេ សមាហូតាះ។
16 மனைவியே, உன் கணவர் இரட்சிப்புக்குள் வருவாரோ இல்லையோ என்று உனக்கு எப்படித் தெரியும்? கணவனே, உன் மனைவி இரட்சிப்புக்குள் வருவாளோ இல்லையோ என்று உனக்கு எப்படித் தெரியும்?
ហេ នារិ តវ ភត៌្តុះ បរិត្រាណំ ត្វត្តោ ភវិឞ្យតិ ន វេតិ ត្វយា កិំ ជ្ញាយតេ? ហេ នរ តវ ជាយាយាះ បរិត្រាណំ ត្វត្តេ ភវិឞ្យតិ ន វេតិ ត្វយា កិំ ជ្ញាយតេ?
17 ஆனால் ஒவ்வொருவனும், கர்த்தர் தனது வாழ்வில் திட்டமிட்டதன்படியும், இறைவன் தன்னை அழைத்த அழைப்பின்படியும், தன் வாழ்க்கையை நடத்தவேண்டும். எல்லாத் திருச்சபைகளிலும் இந்த ஒழுங்கையே நான் ஏற்படுத்துகிறேன்.
ឯកៃកោ ជនះ បរមេឝ្វរាល្លព្ធំ យទ៑ ភជតេ យស្យាញ្ចាវស្ថាយាម៑ ឦឝ្វរេណាហ្វាយិ តទនុសារេណៃវាចរតុ តទហំ សវ៌្វសមាជស្ថាន៑ អាទិឝាមិ។
18 ஒருவன் தான் அழைக்கப்பட்டபோது விருத்தசேதனம் பெற்றிருந்தால், அவன் விருத்தசேதனமில்லாதவனாயிருக்க முயற்சிக்கக்கூடாது. ஒருவன் தான் அழைக்கப்பட்டபோது விருத்தசேதனம் செய்யாதவனாய் இருந்தால், அவன் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டாம்.
ឆិន្នត្វគ៑ ភ្ឫត្វា យ អាហូតះ ស ប្រក្ឫឞ្ដត្វក៑ ន ភវតុ, តទ្វទ៑ អឆិន្នត្វគ៑ ភូត្វា យ អាហូតះ ស ឆិន្នត្វក៑ ន ភវតុ។
19 ஒருவன் விருத்தசேதனம் பெற்றிருப்பதோ, விருத்தசேதனம் பெறாமல் இருப்பதோ முக்கியமல்ல. அவன் இறைவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுதலே முக்கியம்.
ត្វក្ឆេទះ សារោ នហិ តទ្វទត្វក្ឆេទោៜបិ សារោ នហិ កិន្ត្វីឝ្វរស្យាជ្ញានាំ បាលនមេវ។
20 இந்த காரியங்களில், ஒவ்வொருவனும் இறைவனால் அழைக்கப்பட்டபோது, தான் இருந்த நிலைமையிலேயே நிலைத்திருக்க வேண்டும்.
យោ ជនោ យស្យាមវស្ថាយាមាហ្វាយិ ស តស្យាមេវាវតិឞ្ឋតាំ។
21 நீ அழைக்கப்பட்டபொழுது அடிமையாய் இருந்தாயா? கவலைப்பட வேண்டாம்; நீ சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு உண்டானால், அதைப் பெற்றுக்கொள்.
ទាសះ សន៑ ត្វំ កិមាហូតោៜសិ? តន្មា ចិន្តយ, តថាច យទិ ស្វតន្ត្រោ ភវិតុំ ឝក្នុយាស្តហ៌ិ តទេវ វ្ឫណុ។
22 ஏனெனில் கர்த்தரால் அழைக்கப்பட்டபோது ஒருவன் அடிமையாயிருந்தால், அவன் கர்த்தரின் சுயாதீன மனிதனாகிறான்; அவ்வாறே அழைக்கப்படும்பொழுது, சுயாதீன மனிதனாயிருந்தவன் கிறிஸ்துவின் அடிமையாகிறான்.
យតះ ប្រភុនាហូតោ យោ ទាសះ ស ប្រភោ រ្មោចិតជនះ។ តទ្វទ៑ តេនាហូតះ ស្វតន្ត្រោ ជនោៜបិ ខ្រីឞ្ដស្យ ទាស ឯវ។
23 நீங்கள் விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறீர்கள்; ஆகவே நீங்கள் மனிதருக்கு அடிமைகளாகாதிருங்கள்.
យូយំ មូល្យេន ក្រីតា អតោ ហេតោ រ្មានវានាំ ទាសា មា ភវត។
24 சகோதரர்களே, ஒவ்வொருவனும் இறைவனுக்கு பொறுப்புள்ளவனாக, தான் இறைவனால் எந்த நிலையிலேயே அழைக்கப்பட்டானோ, அவன் அந்த நிலையிலேயே நிலைத்திருக்க வேண்டும்.
ហេ ភ្រាតរោ យស្យាមវស្ថាយាំ យស្យាហ្វានមភវត៑ តយា ស ឦឝ្វរស្យ សាក្ឞាត៑ តិឞ្ឋតុ។
25 கன்னிகைகளைக் குறித்தோ: நான் கர்த்தரிடமிருந்து கட்டளை எதையும் பெறவில்லை. ஆனால் கர்த்தருடைய இரக்கத்தினாலே, உங்கள் நம்பிக்கைக்குரியவனாகிய நான், எனது அபிப்பிராயத்தைத் தெரிவிக்கிறேன்.
អបរម៑ អក្ឫតវិវាហាន៑ ជនាន៑ ប្រតិ ប្រភោះ កោៜប្យាទេឝោ មយា ន លព្ធះ កិន្តុ ប្រភោរនុកម្បយា វិឝ្វាស្យោ ភូតោៜហំ យទ៑ ភទ្រំ មន្យេ តទ៑ វទាមិ។
26 தற்போதுள்ள இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் இருக்கிறபடியே இருப்பதுதான் நல்லது என நான் எண்ணுகிறேன்.
វត៌្តមានាត៑ ក្លេឝសមយាត៑ មនុឞ្យស្យានូឍត្វំ ភទ្រមិតិ មយា ពុធ្យតេ។
27 நீ திருமணம் செய்திருந்தால், விவாகரத்தை நாடவேண்டாம். திருமணம் செய்யாதிருந்தால், ஒரு மனைவியைப் பெற முயற்சிக்க வேண்டாம்.
ត្វំ កិំ យោឞិតិ និពទ្ធោៜសិ តហ៌ិ មោចនំ ប្រាប្តុំ មា យតស្វ។ កិំ វា យោឞិតោ មុក្តោៜសិ? តហ៌ិ ជាយាំ មា គវេឞយ។
28 நீ திருமணம் செய்தால், நீ பாவம் செய்யவில்லை; ஒரு கன்னிகை திருமணம் செய்தால், அவளும் பாவம் செய்யவில்லை. ஆனால் திருமணம் செய்கிறவர்கள் இந்த வாழ்க்கையில் அநேக பாடுகளை அனுபவிக்கவேண்டி நேரிடும். இந்தப் பாடுகளை நீங்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்றே நான் விரும்புகிறேன்.
វិវាហំ កុវ៌្វតា ត្វយា កិមបិ នាបារាធ្យតេ តទ្វទ៑ វ្យូហ្យមានយា យុវត្យាបិ កិមបិ នាបរាធ្យតេ តថាច តាទ្ឫឝៅ ទ្វៅ ជនៅ ឝារីរិកំ ក្លេឝំ លប្ស្យេតេ កិន្តុ យុឞ្មាន៑ ប្រតិ មម ករុណា វិទ្យតេ។
29 ஆனால் பிரியமானவர்களே, நான் சொல்கிறதென்னவெனில், காலமோ குறுகினதாயிருக்கிறது. ஆகவே, இப்பொழுதிருந்தே மனைவிகளை உடையவர்கள் மனைவிகள் இல்லாதவர்கள்போல் வாழவேண்டும்;
ហេ ភ្រាតរោៜហមិទំ ព្រវីមិ, ឥតះ បរំ សមយោៜតីវ សំក្ឞិប្តះ,
30 துக்கமுள்ளவர்கள், துக்கமில்லாதவர்கள்போல் இருக்கவேண்டும்; சந்தோஷப்படுகிறவர்கள், சந்தோஷமில்லாதவர்கள்போல் இருக்கவேண்டும்; எதையேனும் வாங்குகிறவர்கள், அது தங்களுக்குச் சொந்தமில்லையென்பதுபோல் இருக்கவேண்டும்;
អតះ ក្ឫតទារៃរក្ឫតទារៃរិវ រុទទ្ភិឝ្ចារុទទ្ភិរិវ សានន្ទៃឝ្ច និរានន្ទៃរិវ ក្រេត្ឫភិឝ្ចាភាគិភិរិវាចរិតវ្យំ
31 உலக காரியங்களில் ஈடுபடுகிறவர்கள், அவைகளில் முழுவதும் மூழ்கிப் போகாதபடி கவனமாய் இருக்கவேண்டும். ஏனெனில், இவ்வுலகத்தின் தற்போதைய நிலை கடந்துபோகிறதே.
យេ ច សំសារេ ចរន្តិ តៃ រ្នាតិចរិតវ្យំ យត ឥហលេកស្យ កៅតុកោ វិចលតិ។
32 கவலைகளிலிருந்து நீங்கள் விலகியிருக்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன். திருமணமாகாத ஒருவன், கர்த்தருடைய காரியங்களைக்குறித்தே அக்கறை உள்ளவனாயிருக்கிறான். கர்த்தரை எவ்வாறு பிரியப்படுத்தலாம் என எண்ணுகிறான்.
កិន្តុ យូយំ យន្និឝ្ចិន្តា ភវេតេតិ មម វាញ្ឆា។ អក្ឫតវិវាហោ ជនោ យថា ប្រភុំ បរិតោឞយេត៑ តថា ប្រភុំ ចិន្តយតិ,
33 ஆனால் திருமணம் செய்தவனோ, இவ்வுலகக் காரியங்களைக்குறித்தே அக்கறை உள்ளவனாயிருக்கிறான். தன் மனைவியை எவ்வாறு பிரியப்படுத்தலாம் என எண்ணுகிறான்.
កិន្តុ ក្ឫតវិវាហោ ជនោ យថា ភាយ៌្យាំ បរិតោឞយេត៑ តថា សំសារំ ចិន្តយតិ។
34 அவனுடைய நாட்டங்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. திருமணமாகாத ஒரு பெண் அல்லது ஒரு கன்னிகை கர்த்தருடைய காரியங்களைக்குறித்தே அக்கறையாயிருக்கிறாள்: உடலிலும் ஆவியிலும் தன்னைக் கர்த்தருக்கு அர்ப்பணிப்பதே அவளுடைய நோக்கமாய் இருக்கிறது. ஆனால் திருமணம் செய்த ஒரு பெண்ணோ இவ்வுலகக் காரியங்களைக்குறித்தே அக்கறையாயிருக்கிறாள். தன் கணவனை எவ்வாறு பிரியப்படுத்துவது என எண்ணுகிறாள்.
តទ្វទ៑ ឩឍយោឞិតោ ៜនូឍា វិឝិឞ្យតេ។ យានូឍា សា យថា កាយមនសោះ បវិត្រា ភវេត៑ តថា ប្រភុំ ចិន្តយតិ យា ចោឍា សា យថា ភត៌្តារំ បរិតោឞយេត៑ តថា សំសារំ ចិន្តយតិ។
35 உங்கள் சொந்த நன்மைக்காகவே நான் இதைச் சொல்கிறேன். உங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல. நீங்களோ கர்த்தருக்கு முழுமையான அர்ப்பணிப்புடன் சரியான வழியில் வாழவேண்டும்.
អហំ យទ៑ យុឞ្មាន៑ ម្ឫគពន្ធិន្យា បរិក្ឞិបេយំ តទត៌្ហំ នហិ កិន្តុ យូយំ យទនិន្ទិតា ភូត្វា ប្រភោះ សេវនេៜពាធម៑ អាសក្តា ភវេត តទត៌្ហមេតានិ សវ៌្វាណិ យុឞ្មាកំ ហិតាយ មយា កថ្យន្តេ។
36 யாராவது தனக்கென நியமிக்கப்பட்ட கன்னிகையுடன் தான் தவறாக நடக்கக்கூடும் என்று பயந்தாலும், அவளுக்கு வயது போய்க்கொண்டிருக்கிறது என்பதனாலும், தான் விரும்புகிறபடி அவன் அவளைத் திருமணம் செய்துகொள்ளலாம். அது பாவமில்லை. அவர்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.
កស្យចិត៑ កន្យាយាំ យៅវនប្រាប្តាយាំ យទិ ស តស្យា អនូឍត្វំ និន្ទនីយំ វិវាហឝ្ច សាធយិតវ្យ ឥតិ មន្យតេ តហ៌ិ យថាភិលាឞំ ករោតុ, ឯតេន កិមបិ នាបរាត្ស្យតិ វិវាហះ ក្រិយតាំ។
37 ஆனால், யாராவது இந்த விஷயத்தில் தன் மனதில் திருமணம் அவசியமில்லை என்ற உறுதியான தீர்மானத்தோடு, தன் ஆசைகளைக் கட்டுப்படுத்துகிறவனாக இருந்து, கன்னிகையை இப்போதைக்குத் திருமணம் செய்வதில்லை எனத் தீர்மானித்தால், அவனும் சரியானதையே செய்கிறான்.
កិន្តុ ទុះខេនាក្លិឞ្ដះ កឝ្ចិត៑ បិតា យទិ ស្ថិរមនោគតះ ស្វមនោៜភិលាឞសាធនេ សមត៌្ហឝ្ច ស្យាត៑ មម កន្យា មយា រក្ឞិតវ្យេតិ មនសិ និឝ្ចិនោតិ ច តហ៌ិ ស ភទ្រំ កម៌្ម ករោតិ។
38 ஆகவே கன்னிகையைத் திருமணம் செய்கிறவன் சரியானதையே செய்கிறான். ஆனால் அவளைத் திருமணம் செய்யாதவன் அதையும்விட அதிக நலமானதைச் செய்கிறான்.
អតោ យោ វិវាហំ ករោតិ ស ភទ្រំ កម៌្ម ករោតិ យឝ្ច វិវាហំ ន ករោតិ ស ភទ្រតរំ កម៌្ម ករោតិ។
39 தன் கணவன் உயிரோடிருக்கும் காலம்வரைக்கும், ஒரு பெண் தன் கணவனுக்குக் கட்டுப்பட்டவளாகவே இருக்கிறாள். ஆனால் அவளுடைய கணவன் இறந்துபோனால், தான் விரும்பும் யாரையாவது திருமணம் செய்வதற்கு அவளுக்குச் சுதந்திரம் உண்டு. ஆனால் அவள் திருமணம் செய்துகொள்பவன் கர்த்தருக்குச் சொந்தமானவனாக இருக்கவேண்டும்.
យាវត្កាលំ បតិ រ្ជីវតិ តាវទ៑ ភាយ៌្យា វ្យវស្ថយា និពទ្ធា តិឞ្ឋតិ កិន្តុ បត្យៅ មហានិទ្រាំ គតេ សា មុក្តីភូយ យមភិលឞតិ តេន សហ តស្យា វិវាហោ ភវិតុំ ឝក្នោតិ, កិន្ត្វេតត៑ កេវលំ ប្រភុភក្តានាំ មធ្យេ។
40 ஆனால் எனது அபிப்பிராயத்தின்படி, அவள் அப்படியே திருமணம் செய்யாதவளாய் இருந்தால், மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பாள். நானும் இறைவனுடைய ஆவியானவரைப் பெற்றிருக்கிறேன் என்ற எண்ணத்திலேயே இந்த யோசனையைக் கொடுக்கிறேன்.
តថាច សា យទិ និឞ្បតិកា តិឞ្ឋតិ តហ៌ិ តស្យាះ ក្ឞេមំ ភវិឞ្យតីតិ មម ភាវះ។ អបរម៑ ឦឝ្វរស្យាត្មា មមាប្យន្ត រ្វិទ្យត ឥតិ មយា ពុធ្យតេ។

< 1 கொரிந்தியர் 7 >