< 1 நாளாகமம் 7 >
1 இசக்காரின் மகன்கள்: தோலா, பூவா, யாசுப், சிம்ரோன் ஆகிய நால்வர்.
以薩迦的兒子是陀拉、普瓦、雅述、伸崙,共四人。
2 தோலாவின் மகன்கள்: ஊசி, ரெப்பாயா, யெரியேல், யக்மாயி, இப்சாம், சாமுயேல் என்பவர்கள். இவர்கள் தங்கள் குடும்பங்களுக்குத் தலைவர்கள். தாவீதின் ஆட்சிக்காலத்தில் தோலாவின் வழித்தோன்றலில் கணக்கிடப்பட்ட இராணுவவீரர்கள் 22,600 பேராயிருந்தனர்.
陀拉的兒子是烏西、利法雅、耶勒、雅買、易伯散、示母利,都是陀拉的族長,是大能的勇士。到大衛年間,他們的人數共有二萬二千六百名。
3 ஊசியின் மகன்: இஸ்ரகியா. இஸ்ரகியாவின் மகன்கள்: மிகாயேல், ஒபதியா, யோயேல், இஷியா. இவர்கள் ஐந்துபேரும் தலைவர்களாயிருந்தனர்.
烏西的兒子是伊斯拉希;伊斯拉希的兒子是米迦勒、俄巴底亞、約珥、伊示雅,共五人,都是族長。
4 இவர்களில் குடும்ப வம்சாவழியில் போருக்கு ஆயத்தமாக இருந்த மனிதர்கள் 36,000 பேர். இவர்களுக்கு அநேகம் மனைவிகளும் பிள்ளைகளும் இருந்தார்கள்.
他們所率領的,按着宗族出戰的軍隊,共有三萬六千人,因為他們的妻和子眾多。
5 இசக்காருடைய எல்லா வம்சங்களையும் சேர்ந்த இராணுவவீரர்களான உறவினர்கள் அவர்களுடைய வம்சாவழியின்படி 87,000 பேராயிருந்தார்கள்.
他們的族弟兄在以薩迦各族中都是大能的勇士,按着家譜計算共有八萬七千人。
6 பென்யமீனின் மகன்கள்: பேலா, பெகேர், யெதியாயேல் என மூன்றுபேர் இருந்தனர்.
便雅憫的兒子是比拉、比結、耶疊,共三人。
7 பேலாவின் மகன்கள்: எஸ்போன், ஊசி, ஊசியேல், எரிமோத், இரி. இவர்கள் ஐந்துபேரும் குடும்பங்களின் தலைவர்களாயிருந்தனர். அவர்களின் வம்சாவழியின்படி இராணுவவீரர்களின் எண்ணிக்கையாக 22,034 பேர் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.
比拉的兒子是以斯本、烏西、烏薛、耶利摩、以利,共五人,都是族長,是大能的勇士。按着家譜計算,他們的子孫共有二萬二千零三十四人。
8 பெகேரின் மகன்கள்: செமிரா, யோவாஸ், எலியேசர், எலியோனாய், உம்ரி, எரேமோத், அபியா, ஆனதோத், அலமேத். இவர்கள் எல்லோரும் பெகேரின் மகன்கள்.
比結的兒子是細米拉、約阿施、以利以謝、以利約乃、暗利、耶利摩、亞比雅、亞拿突、亞拉篾。這都是比結的兒子。
9 வம்சாவழியின்படி குடும்பத்தலைவர்களும், 20,200 இராணுவ வீரர்களும் பதிவு செய்யப்பட்டிருந்தார்கள்.
他們都是族長,是大能的勇士。按着家譜計算,他們的子孫共有二萬零二百人。
10 யெதியாயேலின் மகன்: பில்கான். பில்கானின் மகன்கள்: எயூஷ், பென்யமீன், ஏகூத், கெனானா, சேத்தான், தர்ஷீஸ், அகிசாகார்.
耶疊的兒子是比勒罕;比勒罕的兒子是耶烏施、便雅憫、以忽、基拿拿、細坦、他施、亞希沙哈。
11 யெதியாயேலின் ஆண் பிள்ளைகளான இவர்கள் எல்லோரும் குடும்பங்களின் தலைவர்கள். இவர்களில் யுத்தத்திற்குச் செல்ல ஆயத்தமாயிருந்த வீரர்கள் 17,200 பேர்.
這都是耶疊的兒子,都是族長,是大能的勇士;他們的子孫能上陣打仗的,共有一萬七千二百人。
12 சுப்பீமியரும், உப்பீமியரும் ஈரின் வழித்தோன்றல்கள். ஊசிமியர் ஆகேரின் வழித்தோன்றல்கள்.
還有以珥的兒子書品、戶品,並亞黑的兒子戶伸。
13 நப்தலியின் மகன்கள்: யாத்சியேல், கூனி, எத்சேர், சல்லூம். இவர்கள் பில்காளின் பேரப்பிள்ளைகள்.
拿弗他利的兒子是雅薛、沽尼、耶色、沙龍。這都是辟拉的子孫。
14 மனாசேயின் சந்ததிகள்: அரமேய மறுமனையாட்டியினிடத்தில் பிறந்த அஸ்ரியேல்; அவள் கீலேயாத்தின் தகப்பனான மாகீரையும் பெற்றாள்.
瑪拿西的兒子亞斯列是他妾亞蘭人所生的,又生了基列之父瑪吉。
15 மாகீர் உப்பீமியர், சுப்பீமியரின் சகோதரியாகிய மாக்காள் என்பவளை மணந்தான். மனாசேயின் இரண்டாம் மகன் செலொப்பியாத்; அவனுக்கு மகள்கள் மட்டுமே இருந்தனர்.
瑪吉娶的妻是戶品、書品的妹子,名叫瑪迦。瑪拿西的次子名叫西羅非哈;西羅非哈但有幾個女兒。
16 மாகீரின் மனைவி மாக்காள் ஒரு மகனைப் பெற்று அவனுக்கு பேரேஸ் என்று பெயரிட்டாள். அவனுடைய சகோதரன் சேரேஸ் என்று பெயரிடப்பட்டான். அவனுடைய மகன்கள் ஊலாம், ரேகேம்.
瑪吉的妻瑪迦生了一個兒子,起名叫毗利施。毗利施的兄弟名叫示利施;示利施的兒子是烏蘭和利金。
17 ஊலாமின் மகன்: பேதான். இவர்களே மனாசேயின் மகன் மாகீரின் மகனான கீலேயாத்தின் மகன்கள்.
烏蘭的兒子是比但。這都是基列的子孫。基列是瑪吉的兒子,瑪吉是瑪拿西的兒子。
18 அவனுடைய சகோதரி அம்மொளெகேத் என்பவள் இஸ்கோத், அபியேசர், மாகலா ஆகியோரை பெற்றாள்.
基列的妹子哈摩利吉生了伊施荷、亞比以謝、瑪拉。(
19 செமிதாவின் மகன்கள்: அகியான், செகெம், லிக்கி, அனியாம்.
示米大的兒子是亞現、示劍、利克希、阿尼安。)
20 எப்பிராயீமின் சந்ததிகள்: சுத்தெலா, அவனுடைய மகன் பேரேத், அவனுடைய மகன் தாகாத், அவனுடைய மகன் எலாதா, அவனுடைய மகன் தாகாத்,
以法蓮的兒子是書提拉;書提拉的兒子是比列;比列的兒子是他哈;他哈的兒子是以拉大;以拉大的兒子是他哈;
21 அவனுடைய மகன் சாபாத், அவனுடைய மகன் சுத்தெலாக். எப்பிராயீமின் மகன்கள் எத்சேர், எலியாத் என்பவர்கள் காத் ஊரைச் சேர்ந்தவர்களின் வளர்ப்பு மிருகங்களைப் பிடிக்கச் சென்றபோது, அவர்கள் இவர்களை கொலைசெய்தார்கள்.
他哈的兒子是撒拔;撒拔的兒子是書提拉。以法蓮又生以謝、以列;這二人因為下去奪取迦特人的牲畜,被本地的迦特人殺了。
22 ஆகையால் இவர்களுடைய தகப்பன் எப்பிராயீம் அவர்களுக்காக அநேக நாட்கள் துக்கங்கொண்டாடினான். அவனுடைய உறவினர்கள் வந்து அவனை ஆறுதல்படுத்தினர்.
他們的父親以法蓮為他們悲哀了多日,他的弟兄都來安慰他。
23 பின்பு எப்பிராயீம் தனது மனைவியுடன் உறவுகொண்டதால், அவள் கருவுற்று அவனுக்கு வேறு ஒரு மகனைப் பெற்றாள். அந்தக் குடும்பத்தில் பெருந்துன்பம் ஏற்பட்டிருந்ததால் அவனுக்குப் பெரீயா என்று பெயரிட்டனர்.
以法蓮與妻同房,他妻就懷孕生了一子,以法蓮因為家裏遭禍,就給這兒子起名叫比利亞。
24 எப்பிராயீமின் மகள் ஷேராள். இவள்மேல் பெத் ஓரோனின் கீழ்ப்புறத்தையும் மேற்புறத்தையும், ஊசேன்சேராவையும் கட்டினாள்.
他的女兒名叫舍伊拉,就是建築上伯‧和崙、下伯‧和崙與烏羨‧舍伊拉的。
25 பெரீயாவின் மகன் ரேப்பாக், அவனுடைய மகன் ரேசேப், அவனுடைய மகன் தேலாக், அவனுடைய மகன் தாகான்,
比利亞的兒子是利法和利悉。利悉的兒子是他拉;他拉的兒子是他罕;
26 அவனுடைய மகன் லாதான், அவனுடைய மகன் அம்மியூத், அவனுடைய மகன் எலிஷாமா.
他罕的兒子是拉但;拉但的兒子是亞米忽;亞米忽的兒子是以利沙瑪;
27 அவனுடைய மகன் நூன், அவனுடைய மகன் யோசுவா.
以利沙瑪的兒子是嫩;嫩的兒子是約書亞。
28 பெத்தேலையும் அதைச் சுற்றியிருந்த கிராமங்களும் அவர்களுடைய நிலங்களும், குடியிருப்புகளும் உள்ளடக்கியிருந்தன. கிழக்கே நாரானும், மேற்கே கேசேரும் அதன் கிராமங்களும், ஆயாவும் அதன் கிராமங்களும் வழிநெடுகிலுமுள்ள சீகேமும் அதன் கிராமங்களுமாக இருந்தன. அவை அவர்களுடைய நிலமும் குடியிருப்புமாயிருந்தன.
以法蓮人的地業和住處是伯特利與其村莊;東邊拿蘭,西邊基色與其村莊;示劍與其村莊,直到迦薩與其村莊;
29 அதோடு மனாசேயின் எல்லையிலிருந்து பெத்ஷான் முழுவதும் தானாகு, மெகிதோ, தோர் ஆகிய இடங்களும், அவற்றுடன் அவற்றின் கிராமங்களும் அவர்களின் குடியிருப்பாயிருந்தன. இஸ்ரயேலின் மகன் யோசேப்பின் சந்ததிகள் இந்தப் பட்டணங்களில் வாழ்ந்துவந்தார்கள்.
還有靠近瑪拿西人的境界,伯‧善與其村莊;他納與其村莊;米吉多與其村莊;多珥與其村莊。以色列兒子約瑟的子孫住在這些地方。
30 ஆசேரின் மகன்கள்: இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா. இவர்களின் சகோதரி செராக்கு.
亞設的兒子是音拿、亦施瓦、亦施韋、比利亞,還有他們的妹子西拉。
31 பெரீயாவின் மகன்கள்: ஏபேர், மல்கியேல்; இவன் பிர்ஸாவித்தின் தகப்பன்.
比利亞的兒子是希別、瑪結;瑪結是比撒威的父親。
32 ஏபேர் என்பவன் யப்லேத், சோமேர், ஒத்தாம் மற்றும் இவர்களுடைய சகோதரி சூகாளுடைய தகப்பன்.
希別生雅弗勒、朔默、何坦,和他們的妹子書雅。
33 யப்லேத்தின் மகன்கள்: பாசாக், பிம்கால், அஸ்வாத். இவர்களே யப்லேத்தின் மகன்கள்.
雅弗勒的兒子是巴薩、賓哈、亞施法。這都是雅弗勒的兒子。
34 சோமேரின் மகன்கள்: அகி, ரோகா, எகூபா, ஆராம்.
朔默的兒子是亞希、羅迦、耶戶巴、亞蘭。
35 அவனுடைய சகோதரன் ஏலேமின் மகன்கள்: சோபாக், இம்னா, சேலேஸ், ஆமல்.
朔默兄弟希連的兒子是瑣法、音那、示利斯、亞抹。
36 சோபாக்கின் மகன்கள்: சூவாக், அர்னெப்பர், சூகால், பேரி, இம்ரா,
瑣法的兒子是書亞、哈尼弗、書阿勒、比利、音拉、
37 பேசேர், ஓத், சம்மா, சில்சா, இத்ரான், பேரா.
比悉、河得、珊瑪、施沙、益蘭、比拉。
38 யெத்தேரின் மகன்கள்: எப்புனே, பிஸ்பா, ஆரா.
益帖的兒子是耶孚尼、毗斯巴、亞拉。
39 உல்லாவின் மகன்கள்: ஆராக், அன்னியேல், ரித்சியா.
烏拉的兒子是亞拉、漢尼業、利寫。
40 ஆசேரின் வழித்தோன்றலாகிய இவர்கள் எல்லோரும் குடும்பங்களின் தலைவர்களும், சிறந்த மனிதர்களும், தைரியமிக்க இராணுவ வீரர்களும், புகழ்பெற்ற தலைவர்களுமாயிருந்தனர். போருக்கு ஆயத்தமாக இருந்தவர்கள் அவர்களுடைய வம்சங்களின்படி கணக்கிடப்பட்டபோது 26,000 பேராயிருந்தனர்.
這都是亞設的子孫,都是族長,是精壯大能的勇士,也是首領中的頭目,按着家譜計算,他們的子孫能出戰的共有二萬六千人。