< 1 நாளாகமம் 6 >

1 லேவியின் மகன்கள்: கெர்சோன், கோகாத், மெராரி.
လေဝိသားကားဂေရရှုံ၊ ကောဟတ်၊ မေရာရိ တည်း။
2 கோகாத்தின் மகன்கள்: அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல்.
ကောဟတ်သားကား အာမရံ၊ ဣဇဟာ၊ ဟေဗြုန်၊ ဩဇေလတည်း။
3 அம்ராமின் பிள்ளைகள் ஆரோன், மோசே, மிரியாம். ஆரோனின் மகன்கள்: நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார்.
အာမရံသားကားအာရုန်၊ မောရှေ၊ မိရိအံ တည်း။ အာရုန်သားကား နာဒပ်၊ အဘိဟု၊ ဧလာဇာ၊ ဣသမာတည်း။
4 எலெயாசார் பினெகாசின் தகப்பன்; பினெகாஸ் அபிசுவாவின் தகப்பன்,
ဧလာဇာသားကား ဖိနဟတ်၊
5 அபிசுவா புக்கியின் தகப்பன், புக்கி ஊசியின் தகப்பன்.
ဖိနဟတ်သား အဘိရွှ၊ အဘိရွှသား ဗုက္ကိ၊
6 ஊசி செரகியாவின் தகப்பன். செரகியா மெராயோத்தின் தகப்பன்,
ဗုက္ကိသားဩဇိ၊ ဩဇိသား ဇေရဟိ၊ ဇေရဟိသား မေရာယုတ်၊
7 மெராயோத் அமரியாவின் தகப்பன், அமரியா அகிதூபின் தகப்பன்,
မေရာယတ်သား အာမရိ၊ အာမရိသား အဟိတုပ်၊
8 அகிதூப் சாதோக்கின் தகப்பன், சாதோக் அகிமாஸின் தகப்பன்,
အဟိတုပ်သား ဇာဒုတ်၊ ဇာဒုတ်သားအဟိမတ်၊
9 அகிமாஸ் அசரியாவின் தகப்பன், அசரியா யோகனானின் தகப்பன்,
အဟိမတ်သား အာဇရိ၊ အာဇရိသား ယောဟန် တည်း။
10 யோகனான் அசரியாவின் தகப்பன். எருசலேமில் சாலொமோன் கட்டிய ஆலயத்தில் ஆசாரியனாக இருந்தவன் இவனே.
၁၀ယောဟန်သားကား၊ ယေရုရှလင်မြို့မှာ ရှောလ မုန်တည်သော ဗိမာန်တော်၌ ယဇ်ပုရောဟိတ်ပြုသော အာဇရိတည်း။
11 அசரியா அமரியாவின் தகப்பன், அமரியா அகிதூபின் தகப்பன்,
၁၁အာဇရိသားကား အာမရိ၊ အာမရိသား အဟိတုပ်၊
12 அகிதூப் சாதோக்கின் தகப்பன், சாதோக் சல்லூமின் தகப்பன்.
၁၂အဟိတုပ်သား ဇာဒုတ်၊ ဇာဒုတ်သား ရှလ္လုံ၊
13 சல்லூம் இல்க்கியாவின் தகப்பன்; இல்க்கியா அசரியாவின் தகப்பன்,
၁၃ရှလ္လုံသား ဟိလခိ၊ ဟိလခိသား အာဇရိ၊
14 அசரியா செராயாவின் தகப்பன், செராயா யோசதாக்கின் தகப்பன்.
၁၄အာဇရိသား စရာယ၊ စရာယသား ယောဇဒက် တည်း။
15 யெகோவா நேபுகாத்நேச்சாரைக் கொண்டு யூதாவையும், எருசலேமையும் நாடுகடத்தியபோது, யோசதாக்கும் நாடுகடத்தப்பட்டான்.
၁၅ယောဇဒက်သည် နေဗုခဒ်နေဇာလက်ဖြင့် ယုဒ ပြည်သူ၊ ယေရုရှလင်မြို့သားတို့ကို ထာဝရဘုရား သိမ်းသွားစေတော်မူသောအခါ ပါသွားသတည်း။
16 லேவியின் மகன்கள்: கெர்சோம், கோகாத், மெராரி என்பவர்கள்.
၁၆လေဝိသား ဂေရရှုံ၊ ကောဟတ်၊ မေရာရိတို့တွင်၊
17 கெர்சோமின் மகன்கள்: லிப்னி, சீமேயி.
၁၇ဂေရရှုံသားကား လိဗနိနှင့် ရှိမိတည်း။
18 கோகாத்தின் மகன்கள்: அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல்.
၁၈ကောဟတ်သားကားအာမရံ၊ ဣဇဟာ၊ ဟေဗြုန်၊ ဩဇေလတည်း။
19 மெராரியின் மகன்கள்: மகேலி, மூஷி. இவர்கள் தங்கள் முற்பிதாக்களின் வழித்தோன்றலின்படி உண்டான லேவிய வம்சங்கள்.
၁၉မေရာရိသားကား မဟာလိနှင့် မုရှိတည်း ဟူသော လေဝိအဆွေအမျိုးအသီးအသီးဖြစ်သတည်း။
20 கெர்சோமின் மகன்கள்: கெர்சோமின் மகன் லிப்னி, அவனுடைய மகன் யாகாத்; அவனுடைய மகன் சிம்மா,
၂၀ဂေရရှုံသားကားလိဗနိ၊ လိဗနိသားယာဟတ်၊ ယာဟတ်သား ဇိမ္မ၊
21 அவனுடைய மகன் யோவா; அவனுடைய மகன் இத்தோ; அவனுடைய மகன் சேரா; அவனுடைய மகன் யாத்திராயி.
၂၁ဇိမ္မသားယောအာ၊ ယောအာသား ဣဒ္ဒေါ၊ ဣဒေါသားဇေရ၊ ဇေရသားယာတရဲတည်း။
22 கோகாத்தின் சந்ததிகள்: கோகாத்தின் மகன் அம்மினதாப், அவனுடைய மகன் கோராகு, அவனுடைய மகன் ஆசீர்,
၂၂ကောဟတ်သားကား ဣဇဟာတည်းဟူသော အမိနဒပ်၊ အမိနဒပ်သား ကောရ၊ ကောရသားအဿိရ၊
23 அவனுடைய மகன் எல்க்கானா, அவனுடைய மகன் எபியாசாப், அவனுடைய மகன் ஆசீர்,
၂၃အဿိရသား ဧလကာန၊ ဧလကာနသား ဧဗျာသပ်၊ ဧဗျာသပ် သားအဿိရ၊
24 அவனுடைய மகன் தாகாத், அவனுடைய மகன் ஊரியேல், அவனுடைய மகன் உசியா, அவனுடைய மகன் சாவூல் என்பவர்கள்.
၂၄အဿိရသားတာဟတ်၊ တာဟတ်သားဥရေလ၊ ဥရေလသား ဩဇိ၊ ဩဇိသားရှောလ၊
25 எல்க்கானாவின் சந்ததிகள்: அமசாயி, அகிமோத்.
၂၅ရှောလသား ဧလကာန၊ ဧလကာနသား အာမသဲ နှင့် အဟိမုတ်၊
26 அகிமோத்தின் மகன் எல்க்கானா, அவனுடைய மகன் சோபாய், அவனுடைய மகன் நாகாத்,
၂၆အာမသဲသား ဇောဖဲ၊ ဇောဖဲသား နာဟတ်၊
27 அவனுடைய மகன் எலியாப், அவனுடைய மகன் எரோகாம், அவனுடைய மகன் எல்க்கானா, அவனுடைய மகன் சாமுயேல்.
၂၇နာဟတ်သား ဧလျာဘ၊ ဧလျာဘသား ယေရော ဟံ၊ ယေရောဟံသား ဧလကာန၊ ဧလကာနသား ရှမွေလတည်း။
28 சாமுயேலின் மகன்கள்: முதற்பேறானவன் யோயேல், இரண்டாம் மகன் அபியா.
၂၈ရှမွေလသားဦးကား ယောလ၊ ဒုတိယသား အဘိယတည်း။
29 மெராரியின் சந்ததிகள்: மகேலி, இவனது மகன் லிப்னி, இவனது மகன் சிமேயி, இவனது மகன் ஊசா;
၂၉မေရာရိသားကားမဟာလိ၊ မဟာလိသား လိဗနိ၊ လိဗနိသား ရှိမိ၊ ရှိမိသားဩဇ၊
30 இவனது மகன் சிமெயா, இவனது மகன் அகியா, இவனது மகன் அசாயா.
၃၀ဩဇသားရှိမာ၊ ရှိမာသား ဟဂ္ဂျာ၊ ဟဂ္ဂျာသား အသာယတည်း။
31 யெகோவாவின் ஆலயத்திற்குள் உடன்படிக்கைப்பெட்டி தங்கியிருக்க வந்தபின், இசைக்குப் பொறுப்பாகச் சிலரை தாவீது நியமித்தான்.
၃၁ထာဝရဘုရား၏ သေတ္တာတော်သည် ငြိမ်ဝပ် သောအခါ၊ အိမ်တော်၌ သီချင်းဆိုရာ အမှုတော်ကို စောင့်စေခြင်းငှါ၊ ဒါဝိဒ်မင်းခန့်ထား သောသူတို့သည်၊
32 இவர்களே சாலொமோன் எருசலேமிலுள்ள யெகோவாவினுடைய ஆலயத்தைக் கட்டிமுடிக்கும்வரை, சபைக் கூடாரமான ஆசரிப்புக்கூடாரத்தின் முன்னிலையில் சங்கீத சேவையுடன் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒழுங்குமுறையின்படி தங்கள் கடமைகளைச் செய்துவந்தனர்.
၃၂ယေရုရှလင်မြို့၌ ဗိမာန်တော်ကို ရှောလမုန် မတည်မှီ ကာလပတ်လုံး၊ ပရိသတ်စည်းဝေးရာ တဲတော် တည်ရာအရပ်၌ သီချင်းဆိုလျက် အမှုတော်ကို စောင့်ကြ ၏။ ဗိမာန်တော်ကို တည်ပြီးသောနောက်၊ မိမိတို့ အလှည့် အတိုင်း စောင့်ရသောအမှုကို စောင့်လျက်နေကြ၏။
33 தங்கள் மகன்களுடன் அங்கு பணிசெய்த மனிதர்கள் இவர்களே: கோகாத்தியரில்: இசைக் கலைஞன் ஏமான், இவன் யோயேலின் மகன், இவன் சாமுயேலின் மகன்,
၃၃ထိုအမှုတော်ကို စောင့်သောသူတို့နှင့် သားစဉ် မြေးဆက်ဟူမူကား၊ ဣသရေလ၊ လေဝိ၊ ကောဟတ်၊ ဣဇဟာ၊ ကောရ၊ ဧဗျာသပ်၊ အဿိရ၊ တာဟတ်၊ ဇေဖနိ၊ အာဇရိ၊ ယောလ၊ ဧလကာန၊ အမာသဲ၊ မာဟတ်၊ ဧလကာန၊ ဇောဖဲ၊ တောအာ၊ ဧလျာဘ၊ ယေရောဟံ၊ ဧလကာန၊ ရှမွေလ၊ ယောလတို့မှ ဆင်းသက်သော ကောဟတ်အမျိုး၊ သီချင်းသည် ဟေမန်တပါး။
34 இவன் எல்க்கானாவின் மகன், இவன் எரோகாமின் மகன், இவன் எலியேலின் மகன், இவன் தோவாக்கின் மகன்,
၃၄
35 இவன் சூப்பின் மகன், இவன் எல்க்கானாவின் மகன், இவன் மாகாத்தின் மகன், இவன் அமசாயின் மகன்,
၃၅
36 இவன் எல்க்கானாவின் மகன், இவன் யோயேலின் மகன், இவன் அசரியாவின் மகன், இவன் செப்பனியாவின் மகன்,
၃၆
37 இவன் தாகாத்தின் மகன், இவன் ஆசீரின் மகன், இவன் எபியாசாப்பின் மகன், இவன் கோராகுவின் மகன்,
၃၇
38 இவன் இத்சாரின் மகன், இவன் கோகாத்தின் மகன், இவன் லேவியின் மகன், இவன் இஸ்ரயேலின் மகன்.
၃၈
39 ஏமானின் வலதுபக்கத்தில் நின்று அவனுடன் பணிசெய்தவனான அவன் சகோதரன் ஆசாப்: ஆசாப் பெரகியாவின் மகன், இவன் சிமெயாவின் மகன்,
၃၉လေဝိ၊ ဂေရရှုံ၊ ယာဟတ်၊ ရှိမိ၊ ဇိမ္မ၊ ဧသန်၊ အဒါယ၊ ဇေရ၊ ဧသနိ၊ မာလခိ၊ ဗာသေယ၊ မိက္ခေလ၊ ရှိမာ၊ ဗေရခိတို့မှ ဆင်းသက်သော အာသပ်၊ ဟေမန် လက်ျာဘက်မှာ နေရာရှိသော အပေါင်းအဘော် အာသပ် တပါး၊
40 இவன் மிகாயேலின் மகன், இவன் பாசெயாவின் மகன், இவன் மல்கியாவின் மகன்,
၄၀
41 இவன் எத்னியின் மகன், இவன் சேராயின் மகன், இவன் அதாயாவின் மகன்,
၄၁
42 இவன் ஏத்தானின் மகன், இவன் சிம்மாவின் மகன், இவன் சீமேயின் மகன்,
၄၂
43 இவன் யாகாத்தின் மகன், இவன் கெர்சோமின் மகன், இவன் லேவியின் மகன்.
၄၃
44 மெராரியராகிய இவர்களது சகோதரர்கள் அவர்களுடைய இடதுபக்கத்தில் நிற்பார்கள்: அவர்களில் ஏத்தான் கிஷியின் மகன், இவன் அப்தியின் மகன், இவன் மல்லூக்கின் மகன்,
၄၄လေဝိ၊ မေရာရိ၊ မုရှိ၊ မဟာလိ၊ ရှမေရ၊ ဗာနိ၊ အံဇိ၊ ဟိလခိ၊ အာမဇိ၊ ဟာရှဗိ၊ မလ္လုတ်၊ အာဖဒိ၊ ကိရှိတို့မှ ဆင်းသက်သော ဧသန်တပါးမှစ၍ လက်ဝဲဘက်မှာ နေရာရှိသော အပေါင်းအဘော်၊ မေရာရိအမျိုးသား များတည်း။
45 இவன் அசபியாவின் மகன், இவன் அமத்சியாவின் மகன், இவன் இல்க்கியாவின் மகன்,
၄၅
46 இவன் அம்சியின் மகன், இவன் பானியின் மகன், இவன் சாமேரின் மகன்,
၄၆
47 இவன் மகேலியின் மகன், இவன் மூஷியின் மகன், இவன் மெராரியின் மகன், இவன் லேவியின் மகன்.
၄၇
48 இவர்களோடிருந்த மற்ற லேவியர்கள் இறைவனது ஆலயமாகிய ஆசரிப்புக்கூடாரத்தின் மற்ற வேலைகளைக் கவனிக்க நியமிக்கப்பட்டார்கள்.
၄၈သူတို့၏ညီအစ်ကိုဖြစ်သော လေဝိသားတို့သည် ဘုရားသခင် ကျိန်းဝပ်တော်မူရာ တဲတော်အမှုအမျိုးမျိုး စောင့်သောအရာ၌ ခန့်ထားခြင်းကို ခံကြ၏။
49 ஆனால் இறைவனின் ஊழியன் மோசே கட்டளையிட்டபடியே, ஆரோனும் அவனுடைய சந்ததிகளும் மட்டுமே மகா பரிசுத்த இடத்திலுள்ள தகன பலிபீடங்களில் இஸ்ரயேலின் பாவநிவிர்த்திக்காக பலியிட்டு, தூப மேடைகளில் தூபங்காட்டும் வேலையையும் செய்வதற்கென நியமிக்கப்பட்டிருந்தனர்.
၄၉အာရုန်နှင့်သူ၏ သားစဉ်မြေးဆက်မူကား၊ ယဇ်ကောင်ကို မီးရှို့ရာပလ္လင်နှင့်၊ နံ့သာပေါင်းကို မီးရှို့ရာ ပလ္လင်ပေါ်မှာပူဇော်လျက်၊ အလွန်သန့်ရှင်းရာဌာနတော် အမှုအလုံးစုံကိုစောင့်လျက်၊ ဘုရားသခင်၏ ကျွန်မောရှေ မှာထားသမျှအတိုင်း၊ ဣသရေလအမျိုး၏ အပြစ်ကို ဖြေရသော သူဖြစ်ကြ၏။
50 ஆரோனின் சந்ததிகள் இவர்களே: அவன் மகன் எலெயாசார், அவன் மகன் பினெகாஸ், அவன் மகன் அபிசுவா,
၅၀အာရုန်၏ သားမြေးမှာ၊ အာရုန်သားကား ဧလာဇာ၊ ဧလာဇာ သား ဖိနဟတ်၊ ဖိနဟတ်သား အဘိရွှ၊
51 அவன் மகன் புக்கி, அவன் மகன் ஊசி, அவன் மகன் செரகியா,
၅၁အဘိရွှသားဗုက္ကိ၊ ဗုက္ကိသား ဩဇိ၊ ဩဇိသား ဇေရဟိ၊
52 அவன் மகன் மெராயோத், அவன் மகன் அமரியா, அவன் மகன் அகிதூப்,
၅၂ဇေရဟိသားမရာယုတ်၊ မရာယုတ်သားအာမရိ၊ အာမရိသား အဟိတုပ်၊
53 அவன் மகன் சாதோக், அவன் மகன் அகிமாஸ்.
၅၃အဟိတုပ်သားဇာဒုတ်၊ ဇာဒုတ်သားအဟိမတ် တည်း။
54 அவர்களுக்கென பிரதேசமாக நியமிக்கப்பட்ட குடியிருப்புகளின் இடங்களாவன: முதல் சீட்டு கோகாத் வம்சத்தைச் சேர்ந்த ஆரோனின் சந்ததிகளுக்கு விழுந்தபடியால், அவர்களுக்கு அவ்விடங்கள் கொடுக்கப்பட்டன.
၅၄အာရုန်၏သား မြေးဖြစ်သော ကောဟတ် အဆွေအမျိုးတို့သည်၊ စာရေးတံပြုသောအားဖြင့် ရ၍ နေရသောမြို့နှင့် မြို့နယ်များဟူမူကား၊
55 அதன்படி அவர்களுக்கு யூதாவிலுள்ள எப்ரோனும், அதைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன.
၅၅ယုဒခရိုင်၌ ဟေဗြုန်မြို့နှင့် မြို့နယ်ကိုရကြ၏။
56 ஆனால் பட்டணத்தைச் சுற்றியுள்ள வயல்களும், கிராமங்களும் எப்புன்னேயின் மகன் காலேபுக்குக் கொடுக்கப்பட்டன.
၅၆သို့ရာတွင် မြို့နှင့်ဆိုင်သောလယ်များ၊ ရွာများတို့ကို ယေဖုန္နသား ကာလက်သည်ရ၏။
57 ஆரோனின் சந்ததிகளுக்கு எப்ரோன் என்ற அடைக்கலப் பட்டணங்களில் லிப்னா, யாத்தீர், எஸ்தெமோவா,
၅၇ပြေး၍မှီခိုရာဟေဗြုန်မြို့မှတပါး၊ ယုဒခရိုင်ထဲက လိဗနမြို့နှင့် မြို့နယ်၊ ယတ္တိရမြို့နှင့်မြို့နယ်၊ ဧရှတမောမြို့ နှင့်မြို့နယ်၊
58 ஈலேன், தெபீர்,
၅၈ဟောလုန်မြို့နှင့် မြို့နယ်၊ ဒေဗိရမြို့နှင့် မြို့နယ်၊
59 ஆஷான், யூத்சா, பெத்ஷிமேஷ் ஆகிய பட்டணங்களோடு அவற்றைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன.
၅၉အဣနမြို့နှင့် မြို့နယ်၊ ယုတ္တမြို့နှင့်မြို့နယ်၊ ဗက် ရှေမက်မြို့နှင့် မြို့နယ်တို့ကို၎င်း၊
60 பென்யமீன் கோத்திரத்திற்கு கிபியோன், கேபா, அலெமேத், ஆனதோத் ஆகிய பட்டணங்களும், அவற்றைச் சேர்ந்த மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன. எல்லாமாக பதின்மூன்று பட்டணங்கள் கோகாத்திய வம்சங்களுக்குள் பகிர்ந்து கொடுக்கப்பட்டன.
၆၀ဗင်္ယာမိန်ခရိုင်ထဲက ဂိဗောင်မြို့နှင့်မြို့နယ်၊ ဂေဗမြို့နှင့်မြို့နယ်၊ အာလမက်မြို့နှင့် မြို့နယ်၊ အာနသုတ်မြို့နှင့် မြို့နယ်တို့ကို၎င်း၊ အာရုန်၏သားမြေးတို့သည် အဆွေ အမျိုးအလိုက်ရ၍၊ မြို့ပေါင်းကား တဆယ်သုံးမြို့တည်း။
61 மீதமிருந்த மற்ற கோகாத்தியருக்கு மனாசேயின் பாதிக் கோத்திரத்தின் பத்துப் பட்டணங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட்டன.
၆၁ကြွင်းသော ကောဟတ်သားအဆွေအမျိုးတို့ သည် စာရေးတံအားဖြင့်၊ မနာရှေခရိုင်ဝက်ထဲက မြို့ဆယ်မြို့တို့ကို ရကြ၏။
62 கெர்சோமின் சந்ததிகளுக்கு அவர்களின் ஒவ்வொரு வம்சங்களுக்கேற்ப இசக்கார், ஆசேர், நப்தலி, பாசானில் இருக்கிற மனாசேயின் மற்ற பாதிக் கோத்திரங்களிலுமிருந்து பதின்மூன்று பட்டணங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட்டன.
၆၂ဂေရရှုံသား အဆွေအမျိုးတို့သည် ဣသခါခရိုင်၊ အာရှာခရိုင်၊ နဿလိခရိုင်၊ ဗာရှန်ပြည်မနာရှေခရိုင်ထဲ က မြို့တဆယ်သုံးမြို့တို့ကို ရကြ၏။
63 மெராரியின் சந்ததிகளுக்கு அவர்களின் ஒவ்வொரு வம்சங்களுக்கும் ஏற்ப ரூபன், காத், செபுலோன் கோத்திரங்களிலுமிருந்து பன்னிரண்டு பட்டணங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட்டன.
၆၃မေရာရိသားအဆွေအမျိုးတို့သည် ရုဗင်ခရိုင်၊ ဂဒ်ခရိုင်၊ ဇာဗုလုန်ခရိုင်ထဲက မြို့တဆယ်နှစ်မြို့တို့ကို ရကြ၏။
64 இவ்வாறு இஸ்ரயேலர் இந்தப் பட்டணங்களையும், அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் லேவியர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தார்கள்.
၆၄ဤမည်သော မြို့တို့ကို မြို့နယ်နှင့်တကွ၊ ဣသ ရေလအမျိုးသားတို့သည် လေဝိသားတို့အား ပေးကြ၏။
65 யூதா, சிமியோன், பென்யமீன் ஆகிய கோத்திரங்களிலிருந்தும் முன்குறிப்பிடப்பட்ட பட்டணங்களையும் கொடுத்தார்கள்.
၆၅အထက်ဆိုခဲ့ပြီးသော မြို့တို့ကို စာရေးတံပြု၍၊ ယုဒအမျိုးသားခရိုင်၊ ရှိမောင်အမျိုးသားခရိုင်၊ ဗင်္ယာမိန် အမျိုးသားခရိုင်ထဲကပေးကြ၏။
66 சில கோகாத்திய வம்சங்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்திலிருந்து பட்டணங்கள் அவர்கள் பிரதேசமாகக் கொடுக்கப்பட்டன.
၆၆ကြွင်းသော ကောဟတ်သား အဆွေအမျိုးတို့ သည် ဧဖရိမ်ခရိုင်ထဲကရသည်အတိုင်း၊
67 எப்பிராயீமின் மலைநாட்டில் அடைக்கலப் பட்டணமான சீகேமும், அத்துடன் கேசேர்,
၆၇ပြေး၍ခိုနေရာ ဧဖရိမ်တောင်ပေါ်မှာ ရှေခင်မြို့ ကို မြို့နယ်နှင့်တကွ ပေးကြ၏။
68 யோக்மேயாம், பெத் ஓரோன்,
၆၈ထိုမှတပါး၊ ဂေဇာမြို့နှင့်မြို့နယ်၊ ယောကမံမြို့ နှင့်မြို့နယ်၊ ဗက်ဟောရုန်မြို့နှင့်မြို့နယ်တို့ကို၎င်း၊
69 ஆயலோன், காத்ரிம்மோன் ஆகியவை அவற்றோடு அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன.
၆၉ဒန်ခရိုင်ထဲကဧလတေကမြို့နှင့်မြို့နယ်၊ ဂိဗ္ဗသုန် မြို့နှင့်မြို့နယ်၊ အာဇလုန်မြို့နှင့်မြို့နယ်၊ ဂါသရိမ္မုန်မြို့နှင့် မြို့နယ်တို့ကို၎င်း၊
70 எஞ்சியிருந்த கோகாத்தியரின் வம்சங்களுக்கு மனாசேயின் பாதிக் கோத்திரத்திலிருந்து, ஆனேரும், பீலியாமும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் இஸ்ரயேலரால் கொடுக்கப்பட்டன.
၇၀မနာရှေခရိုင်ဝက်ထဲက အနေရမြို့နှင့်မြို့နယ်၊ ဗိလံမြို့နှင့်မြို့နယ်တို့ကို၎င်း၊ ကြွင်းသောကောဟတ်သား အဆွေအမျိုးတို့အား ပေးကြ၏။
71 கெர்சோமியர் பெற்ற நிலங்களாவன: மனாசேயின் பாதிக் கோத்திரத்திலிருந்து பாசானிலிருக்கிற கோலானையும், அஸ்தரோத்தையும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டனர்.
၇၁ဂေရရှုံသားတို့အားလည်း၊ မနာရှေခရိုင်ဝက်ထဲ က ဗာရှန်ပြည် ဂေါလန်မြို့နှင့် မြို့နယ်၊ အာရှတရုတ် မြို့နှင့် မြို့နယ်တို့ကို၎င်း၊
72 இசக்கார் கோத்திரத்திலிருந்தும் கெதெஷ், தாபேராத்,
၇၂ဣသခါခရိုင်ထဲက ကေဒေရှမြို့နှင့်မြို့နယ်၊ ဒါဗရတ် မြို့နှင့်မြို့နယ်၊
73 ராமோத், ஆனேம் பட்டணங்களையும், அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டனர்.
၇၃ရာမုတ်မြို့နှင့်မြို့နယ်၊ အာနင်မြို့နှင့်မြို့နယ် တို့ကို၎င်း၊
74 ஆசேர் கோத்திரத்திலிருந்தும் மாஷால், அப்தோன்,
၇၄အာရှာခရိုင်ထဲက မိရှလမြို့နှင့် မြို့နယ်၊ အာဗ ဒုန်မြို့နှင့် မြို့နယ်၊
75 ஊக்கோக், ரேகோப் பட்டணங்களையும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டார்கள்.
၇၅ဟုကုတ်မြို့နှင့်မြို့နယ်၊ ရဟောဘမြို့နှင့် မြို့နယ် တို့ကို၎င်း၊
76 நப்தலி கோத்திரத்திலிருந்தும் கலிலேயாவிலிருக்கிற கேதேசையும், அம்மோன், கீரியாத்தாயீம் பட்டணங்களையும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டனர்.
၇၆နဿလိခရိုင်ထဲက ဂါလိလဲပြည်ကေဒေရှမြို့နှင့် မြို့နယ်၊ ဟမ္မုန်မြို့နှင့်မြို့နယ်၊ ကိရယသိမ်မြို့နှင့်မြို့နယ် တို့ကို၎င်း ပေးကြ၏။
77 லேவியர்களில் எஞ்சியிருந்த மெராரியின் மற்றவர்கள் செபுலோன் கோத்திரத்திலிருந்து யொக்னெயாம், காட்டா, ரிம்மோனோ, தாபோர் ஆகிய பட்டணங்களையும், அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டார்கள்.
၇၇ကြွင်းသောမေရာရိသားတို့အားလည်း၊ ဇာဗုလုန် ခရိုင်ထဲက ရိမ္မုန်မြို့နှင့်မြို့နယ်၊ တာဗော်မြို့နှင့်မြို့နယ် တို့ကို၎င်း၊
78 யோர்தானின் அக்கரையிலே எரிகோவின் கிழக்கேயிருக்கிற ரூபனின் கோத்திரத்திலிருந்தும் பாலைவனத்திலிருக்கிற பேசேரையும், யாத்சா,
၇၈ယေရိခေါမြို့အရှေ့၊ ယော်ဒန်မြစ်တဘက်၊ ရုဗင် ခရိုင်ထဲက တော၌ဗေဇာမြို့နှင့်မြို့နယ်၊ ယာဇမြို့နှင့် မြို့နယ်၊
79 கெதெமோத், மேபாகாத் ஆகிய பட்டணங்களோடு அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டார்கள்.
၇၉ကေဒမုတ်မြို့နှင့်မြို့နယ်၊ မေဖတ်မြို့နှင့် မြို့နယ် တို့ကို၎င်း၊
80 காத் கோத்திரத்திலிருந்து, கீலேயாத்திலுள்ள ராமோத், மக்னாயீம்,
၈၀ဂဒ်ခရိုင်ထဲက ဂိလဒ်ပြည်၌ ရာမုတ်မြို့နှင့် မြို့နယ်၊ မဟာနိမ်မြို့နှင့်မြို့နယ်၊
81 எஸ்போன், யாசேர் ஆகிய பட்டணங்களோடு அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டார்கள்.
၈၁ဟေရှဘုန်မြို့နှင့်မြို့နယ်၊ ယာဇာမြို့နှင့် မြို့နယ်တို့ကို၎င်း ပေးကြ၏။

< 1 நாளாகமம் 6 >