< 1 நாளாகமம் 4 >
1 யூதாவின் சந்ததிகள்: பேரேஸ், எஸ்ரோன், கர்மீ, ஊர், சோபால் என்பவர்கள்.
௧யூதாவின் சந்ததிகள் பாரேஸ், எஸ்ரோன், கர்மீ, ஊர், சோபால் என்பவர்கள்.
2 சோபாலின் மகன் ராயா என்பவன் யாகாத்தின் தகப்பன்; யாகாத், அகுமாய், லாகாத் என்பவர்களின் தகப்பன். இவர்கள் சோராத்தியரின் வம்சங்கள்.
௨சோபாலின் மகன் ராயா யாகாத்தைப் பெற்றான்; யாகாத் அகுமாயியையும், லாகாதையும் பெற்றான்; சோராத்தியர்களின் வம்சங்கள் இவைகளே.
3 ஏத்தாமின் மகன்கள்: யெஸ்ரியேல், இஸ்மா, இத்பாஸ் என்பவர்கள். இவர்களுடைய சகோதரியின் பெயர் அத்செலெல்போனி.
௩ஏதாம் என்னும் மூப்பனின் சந்ததியார்கள், யெஸ்ரெயேல், இஷ்மா, இத்பாஸ் என்பவர்கள்; இவர்களுடைய சகோதரியின் பெயர் அத்செலெல்போனி;
4 பெனுயேல் கேதோரின் தகப்பன்; எசேர் உஷாவின் தகப்பன். இவர்களே பெத்லெகேமின் தலைவனான எப்ராத்தாவின் முதற்பேறானவனான ஊரின் சந்ததிகள்.
௪கேதோருக்கு மூப்பனான பெனுவெல், உஷாவுக்கு மூப்பனான எசேர் என்பவர்கள்; இவர்கள் பெத்லெகேமுக்கு மூப்பனான எப்ராத்தாவுக்கு முதலில் பிறந்த ஊரின் மகன்கள்.
5 தெக்கோவாவின் தகப்பன் அசூர் என்பவனுக்கு ஏலாள், நாராள் என்ற இரு மனைவிகள் இருந்தார்கள்.
௫தெக்கோவாவுக்கு மூப்பனான அசூருக்கு ஏலாள், நாராள் என்னும் இரண்டு மனைவிகள் இருந்தார்கள்.
6 நாராள் அவனுக்கு அகுசாம், ஏப்பேர், தெமனி, ஆகாஸ்தாரி ஆகியோரைப் பெற்றாள்; இவர்கள் நாராளின் சந்ததிகள்.
௬நாராள் அவனுக்கு அகுசாமையும், எப்பேரையும், தெமனியையும், ஆகாஸ்தாரியையும் பெற்றாள்; நாராளின் மகன்கள் இவர்களே.
7 ஏலாளின் மகன்கள்: சேரேத், சோகார், எத்னான்,
௭ஏலாளின் மகன்கள், சேரேத், எத்சோகார், எத்னான் என்பவர்கள்.
8 கோஸ் என்பவர்கள். கோஸ் என்பவன் அனூபையும், சோபேபாவையும், ஆருமின் மகன் அகர்கேலின் வம்சங்களையும் பெற்றான்.
௮கோஸ் என்பவன் அனூபையும், சோபேபாகையும், ஆருமின் மகனாகிய அகர்கேலின் வம்சங்களையும் பெற்றான்.
9 யாபேஸ் தனது சகோதரர்களைவிட மதிப்பிற்குரியவனாக இருந்தான். அவனுடைய தாய், “நான் இவனை வேதனையுடன் பெற்றேன்” என்று சொல்லி யாபேஸ் என்ற பெயரை வைத்தாள்.
௯யாபேஸ் தன்னுடைய சகோதரர்களைவிட மதிப்பிற்குரியவனாக இருந்தான். அவனுடைய தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பெயரிட்டாள்.
10 யாபேஸ் இஸ்ரயேலின் இறைவனிடம் கதறி அழுது, “நீர் என்னை ஆசீர்வதியும், எனது எல்லையையும் விரிவுபடுத்தும்! உமது கரம் என்னோடிருந்து தீமையிலிருந்து காப்பாற்றட்டும். அப்போது எனது வேதனை நீங்கும்” என வேண்டிக்கொண்டான். இறைவன் அவன் வேண்டுதலுக்குப் பதில் கொடுத்தார்.
௧0யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என்னுடைய எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடு இருந்து, தீங்கு என்னை துக்கப்படுத்தாதபடி அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார்.
11 சூகாவின் சகோதரன் கேலூப் என்பவன் மேகீரின் தகப்பன்; மேகீர் எஸ்தோனின் தகப்பன்.
௧௧சூகாவின் சகோதரனாகிய கேலூப் மேகீரைப் பெற்றான்; இவன் எஸ்தோனின் தகப்பன்.
12 எஸ்தோன் பெத்ராபாவுக்கும், பசேயாவுக்கும், இர்நாகாஷ் பட்டணத்தின் தலைவனாகிய தெகினாவுக்கும் தகப்பன். இவர்கள் ரேகா ஊரைச் சேர்ந்தவர்கள்.
௧௨எஸ்தோன் பெத்ராபாவையும், பசேயாகையும், இர்நாகாஷின் தகப்பனாகிய தெகினாகையும் பெற்றான்; இவர்கள் ரேகாவூர் மனிதர்கள்.
13 கேனாசின் மகன்கள்: ஒத்னியேல், செராயா. ஒத்னியேலின் மகன்கள்: ஆத்தாத், மெயோனத்தாய்.
௧௩கேனாசின் மகன்கள் ஒத்னியேல், செராயா என்பவர்கள்; ஒத்னியேலின் மகன்களில் ஒருவன் ஆத்தாத்.
14 மெயோனத்தாய் ஒப்ராவின் தகப்பன். செராயா கராஷிம் பள்ளத்தாக்கின் தலைவனான யோவாபின் தகப்பன். அங்குள்ள மக்கள் கைவினைஞராய் இருந்தபடியால் அது கராஷிம் என்று அழைக்கப்பட்டது.
௧௪மெயோனத்தாய் ஒபிராவைப் பெற்றான்; செராயா கராஷீமன் பள்ளத்தாக்குக்கு மூப்பனாகிய யோவாபைப் பெற்றான்; அவர்கள் தொழிலாளர்களாக இருந்தார்கள்.
15 எப்புன்னேயின் மகன் காலேபின் மகன்கள்: ஈரு, ஏலா, நாகாம். ஏலாவின் மகன்: கேனாஸ்.
௧௫எப்புன்னேயின் மகனாகிய காலேபின் மகன்கள் ஈரு, ஏலா, நாகாம்; ஏலாவின் மகன்களில் ஒருவன் கேனாஸ்.
16 எகலெலேலின் மகன்கள்: சீப், சீப்பா, திரியா, அசாரேயேல் என்பவர்கள்.
௧௬எகலெலேலின் மகன்கள் சீப், சீப்பா, திரியா, அசாரெயேல்.
17 எஸ்றாவின் மகன்கள்: யெத்தெர், மேரேத், ஏப்பேர், யாலோன். மேரேத்தின் மனைவிகளில் ஒருத்தி மிரியாம், சம்மாயியையும், எஸ்தெமோவாவின் தகப்பனான இஸ்பாவையும் பெற்றாள்.
௧௭எஸ்றாவின் மகன்கள் யெத்தேர், மேரேத், ஏப்பேர், யாலோன்; மேரேத்தின் மனைவி மிரியாமையும், சம்மாயியையும், எஸ்தெமோவா ஊருக்கு மூப்பனான இஸ்பாவையும் பெற்றாள்.
18 அவனுடைய யூத மனைவி, கேதோரின் தகப்பன் யாரேத்தையும், சோக்கோவின் தகப்பன் ஏபேரையும், சனோவாவின் தகப்பன் எக்குத்தியேலையும் பெற்றாள். இவர்கள் மேரேத் திருமணம் செய்திருந்த பார்வோனின் மகள் பித்தையாளின் பிள்ளைகள்.
௧௮அவன் மனைவியாகிய எகுதியாள் கேதோரின் தகப்பனாகிய யாரேதையும், சோக்கோவின் தகப்பனாகிய ஏபேரையும், சனோவாவின் தகப்பனாகிய எக்குத்தியேலையும் பெற்றாள்; மேரேத் திருமணம் செய்த பார்வோனின் மகளாகிய பித்தியாளின் மகன்கள் இவர்களே.
19 நாகாமின் சகோதரியான ஒதியாவின் மனைவியின் மகன்கள்: கர்மியனான கேயிலாவின் தகப்பனும், மாகாத்தியனான எஸ்தெமோவாவின் தகப்பனும்.
௧௯நாகாமின் சகோதரியாகிய ஒதியாவினுடைய மனைவியின் மகன்கள் கர்மியனாகிய ஆபிகேயிலாவும், மாகாத்தியனாகிய எஸ்தெமொவாவுமே.
20 ஷீமோனின் மகன்கள்: அம்னோன், ரின்னா, பென்கானான், தீலோன். இஷியின் சந்ததிகள்: சோகேது, பென்சோகேது.
௨0ஷீமோனின் மகன்கள் அம்னோன், ரின்னா, பென்கானான், தீலோன் என்பவர்கள், இஷியின் மகன்கள் சோகேதும் பென்சோகேதுமே.
21 யூதாவின் மகனான சேலாக்கின் மகன்கள்: லேகாவின் தகப்பன் ஏர், மரேஷாவின் தகப்பன் லாதா என்பவர்களும், பெத் அஸ்பெயாவிலுள்ள மென்பட்டு புடவைத் தொழிலாளிகளின் வம்சங்களும்,
௨௧யூதாவின் மகனாகிய சேலாகின் மகன்கள்: லேக்காவூர் மூப்பனான ஏரும், மரேஷாவூர் மூப்பனான லாதாகும், மெல்லிய புடவை நெய்த அஸ்பெயா வீட்டு வம்சங்களும்,
22 யோக்கீமும், கோசேபாவின் மனிதர்களும், மோவாபிலும், ஆட்சி செய்த யோவாஸ், சாராப் ஆகியோரும், யசுபிலேகேமுமே; இவை யாவும் பூர்வகாலத்தில் பதிவு செய்யப்பட்டவை.
௨௨யோக்கீமும், கோசேபாவின் மனிதர்களும், மோவாபியர்களை ஆண்ட யோவாஸ், சாராப் என்பவர்களும், யசுபிலெகேமுமே; இவைகள் ஆரம்பகாலத்தின் செய்திகள்.
23 நெத்தாயீம், கெதேராவிலும் வாழ்ந்த இவர்கள் எல்லோரும் குயவர்கள்; இவர்கள் அங்கு தங்கி அரசனுக்கு வேலை செய்துவந்தனர்.
௨௩இவர்கள் குயவர்களாக இருந்து நெத்தாயிமிலும் கெதேராவிலும் குடியிருந்தார்கள்; ராஜாவின் வேலையை விசாரிப்பதற்கு அங்கே குடியிருந்தார்கள்.
24 சிமியோனின் சந்ததிகள்: நெமுயேல், யாமின், யாரீப், சேரா, சாவூல்;
௨௪சிமியோனின் மகன்கள் நெமுவேல், யாமின், யாரீப், சேரா, சவுல் என்பவர்கள்.
25 சாவூலின் மகன் சல்லூம், இவனது மகன் மிப்சாம் இவனது மகன் மிஸ்மா என்பவர்கள்.
௨௫இவனுடைய மகன் சல்லூம்; இவனுடைய மகன் மிப்சாம்; இவனுடைய மகன் மிஸ்மா.
26 மிஸ்மாவின் சந்ததிகள்: அவனுடைய மகன் அம்முயேல், இவனது மகன் சக்கூர், இவனது மகன் சீமேயி.
௨௬மிஸ்மாவின் மகன்களில் ஒருவன் அம்முவேல்; இவனுடைய மகன் சக்கூர்; இவனுடைய மகன் சீமேயி.
27 சீமேயிக்கு பதினாறு மகன்களும் ஆறு மகள்களும் இருந்தனர். ஆனால் இவனது சகோதரர்களுக்கு அநேகம் பிள்ளைகள் இருக்கவில்லை; அதனால் யூதா மக்களைப்போல் இவர்களது முழு வம்சமும் பெருகியிருக்கவில்லை.
௨௭சீமேயிக்குப் பதினாறு மகன்களும் ஆறு மகள்களும் இருந்தார்கள்; அவனுடைய சகோதரர்களுக்கு அதிக பிள்ளைகள் இல்லை; அவர்கள் வம்சங்களெல்லாம் யூதாவின் மக்களைப்போலப் பெருகினதுமில்லை.
28 அவர்கள் பெயெர்செபா, மொலாதா, ஆத்சார்சூவால்,
௨௮அவர்கள் பெயெர்செபாவிலும், மொலாதாவிலும், ஆசார்சூவாவிலும்,
29 பில்கா, ஏத்சேம், தோலாத்,
௨௯பில்லாவிலும், ஏத்சேமிலும், தோலாதிலும்,
30 பெத்துயேல், ஓர்மா, சிக்லாகு,
௩0பெத்துவேலிலும், ஓர்மாவிலும், சிக்லாகிலும்,
31 பெத்மார்காபோத், ஆத்சார்சூசிம், பெத்பிரி, சாராயிம் ஆகிய இடங்களில் வாழ்ந்துவந்தனர். தாவீது அரசனாகும்வரை இந்தப் பட்டணங்களெல்லாம் அவர்களுக்குரியதாகவே இருந்தன.
௩௧பெத்மார்காபோத்திலும், ஆத்சார்சூசிமிலும், பெத்பிரியிலும், சாராயிமிலும் குடியிருந்தார்கள்; தாவீது ராஜாவாகும்வரை இவைகள் அவர்களுடைய பட்டணங்களாக இருந்தது.
32 அவற்றுடன் ஏத்தாம், ஆயின், ரிம்மோன், தோகேன், ஆஷான் ஆகிய ஐந்து பட்டணங்களைச் சுற்றியிருந்த கிராமங்களும் ஆகும்.
௩௨அவர்களுடைய ஐந்து பட்டணங்கள் ஏத்தாம், ஆயின், ரிம்மோன், தோகேன், ஆசான் என்பவைகள்.
33 இந்தப் பட்டணங்களைச் சுற்றியிருந்த கிராமங்கள் பாகால்வரை பரந்திருந்தது. இந்த இடங்களே அவர்களுடைய குடியிருப்புகள். இவர்கள் தங்கள் வம்சாவழி அட்டவணையும் வைத்திருந்தார்கள்:
௩௩அந்தப் பட்டணங்களைச் சுற்றிலும், பாகால்வரையுள்ள அவர்களுடைய எல்லா குடியிருப்புக்களும், அவர்கள் தங்குமிடங்களும், அவர்களுடைய வம்ச அட்டவணையும் இவைகளே.
34 மெசோபாபு, யம்லேக், அமத்சியாவின் மகன் யோஷா,
௩௪மெசோபாபும், யம்லேகும், அமத்சியாவின் மகன் யோஷாவும்,
35 யோயேல், ஆசியேலின் மகனான செராயாவுக்குப் பிறந்த யோசிபியாவின் மகன் யெகூ,
௩௫யோவேலும், ஆசியேலின் மகன் செராயாவுக்குப் பிறந்த யோசிபியாவின் மகன் ஏகூவும்,
36 அத்துடன் எலியோனாய், யாக்கோபா, யெசொகாயா, அசாயா, ஆதியேல், யெசிமியேல், பெனாயா,
௩௬எலியோனாயும், யாக்கோபாவும், யெசொகாயாவும், அசாயாவும், ஆதியேலும், யெசிமியேலும், பெனாயாவும்,
37 செமாயாவின் மகன் சிம்ரி, அவனுடைய மகன் யெதாயா, அவனுடைய மகன் அல்லோன், அவனுடைய மகன் சிப்பி, சிப்பியின் மகனான சீசா ஆகியோருமே.
௩௭செமாயா பெற்ற சிம்ரியின் மகன் யெதாயாவுக்குப் பிறந்த அல்லோனின் மகனாகிய சீப்பியின் மகன் சீசாவும் என்று,
38 இப்பெயர்களையுடையவர்கள் வம்சங்களில் தலைவர்களாயிருந்தார்கள். இவர்களின் குடும்பங்கள் அதிகமதிகமாய்ப் பெருகின.
௩௮பெயர் வரிசையில் எழுதியிருக்கிற இவர்கள் தங்களுடைய வம்சங்களில் பிரபுக்களாக இருந்தார்கள்; இவர்களுடைய பிதாக்களின் வீட்டார்கள் ஏராளமாகப் பரவியிருந்தார்கள்.
39 அவர்கள் தங்கள் மந்தைகளுக்கு மேய்ச்சலைத் தேடி கேதோரின் எல்லையான பள்ளத்தாக்கின் கிழக்குப் பகுதிக்குச் சென்றனர்.
௩௯தங்களுடைய ஆடுகளுக்கு மேய்ச்சலைத் தேடும்படி தேதோரின் எல்லையாகிய மலைப்பகுதியின் கிழக்குப்புறம்வரை போய்,
40 அங்கே அவர்கள் மிகச் செழிப்பான மேய்ச்சலுக்குரிய இடத்தைக் கண்டனர். அந்த நிலம் விசாலமானதும், சமாதானமும் அமைதியுமுடையதுமாக இருந்தது. அங்கே காமியர் சிலர் முற்காலத்தில் வாழ்ந்திருந்தனர்.
௪0நல்ல செழிப்பான மேய்ச்சலும், அமைதியும், சுகமுமுள்ள விசாலமான தேசத்தைக் கண்டுபிடித்தார்கள்; ஆரம்பத்திலே காமின் சந்ததியார்கள் அங்கே குடியிருந்தார்கள்.
41 மேற்கூறப்பட்ட பெயர்களையுடைய இவர்கள், யூதாவில் எசேக்கியா அரசன் ஆட்சி செய்த காலத்தில் அங்கு வந்தார்கள். அவர்கள் அங்கு குடியிருந்த காமியர்களை அவர்களுடைய இடங்களில் தாக்கி, மெயூனியரையும் இன்றுவரை இருப்பதுபோல் முழுவதும் அழித்துவிட்டார்கள். பின்பு அவர்கள் அங்கே தங்கள் மந்தைகளுக்கு மேய்ச்சலுக்கு உகந்த வளமான இடம் இருந்ததினால் குடியேறினர்.
௪௧பெயர் வரிசையில் எழுதியிருக்கிற இவர்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களிலே அங்கே போய், அங்கே கண்டுபிடித்தவர்களின் கூடாரங்களையும் மறைவிடங்களையும் அழித்து, இந்த நாளிலே இருக்கிறதுபோல, அவர்களை முற்றிலும் அழித்து, அங்கே தங்களுடைய ஆடுகளுக்கு மேய்ச்சல் இருந்தபடியால், அவர்கள் அந்த இடத்திலே குடியேறினார்கள்.
42 பின்பு சிமியோனியரில் ஐந்நூறு பேரும், இஷியின் மகன்களான பெலத்தியா, நெயெரியா, ரெப்பாயா, ஊசியேல் ஆகியோரின் தலைமையின்கீழ் போய் சேயீர் மலைநாட்டைத் தாக்கினார்கள்.
௪௨சிமியோனின் கோத்திரத்தார்களாகிய இவர்களில் ஐந்நூறு மனிதர்களும், அவர்களுடைய தலைவர்களாகிய இஷியின் மகன்களான பெலத்தியாவும், நெகரியாவும், ரெப்பாயாவும், ஊசியேலும், சேயீர் மலைத்தேசத்திற்குப் போய்,
43 அங்கே தப்பி ஓடிப்போய் மறைந்திருந்த அமலேக்கியரை அவர்கள் கொன்று, அவர்கள் இந்நாள்வரைக்கும் அங்கேயே வாழ்கிறார்கள்.
௪௩அமலேக்கியர்களில் தப்பி மீதியாக இருந்தவர்களைத் தோற்கடித்து, இந்த நாள்வரை இருக்கிறபடி அங்கே குடியேறினார்கள்.