< 1 நாளாகமம் 27 >

1 இராணுவப் பிரிவு சம்பந்தமான எல்லாப் பணிகளிலும் அரசனுக்கு உதவிய இஸ்ரயேலரின் பட்டியல் இதுவே: குடும்பத் தலைவர்கள், ஆயிரம்பேரின் தளபதிகள், நூறுபேரின் தளபதிகள், அவர்களின் அதிகாரிகள் அனைவரும் அவரவர் பிரிவின்படி வருடம் முழுவதும் மாதந்தோறும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். ஒவ்வொரு பிரிவிலும் 24,000 மனிதர்கள் இருந்தனர். அவர்கள்:
וּבְנֵי יִשְׂרָאֵל ׀ לְֽמִסְפָּרָם רָאשֵׁי הָאָבוֹת וְשָׂרֵי הָאֲלָפִים ׀ וְהַמֵּאוֹת וְשֹׁטְרֵיהֶם הַמְשָׁרְתִים אֶת־הַמֶּלֶךְ לְכֹל ׀ דְּבַר הַֽמַּחְלְקוֹת הַבָּאָה וְהַיֹּצֵאת חֹדֶשׁ בְּחֹדֶשׁ לְכֹל חׇדְשֵׁי הַשָּׁנָה הַֽמַּחֲלֹקֶת הָאַחַת עֶשְׂרִים וְאַרְבָּעָה אָֽלֶף׃
2 முதலாவது மாதத்திற்குரிய பிரிவுக்கு சப்தியேலின் மகன் யாஷோபியாம் பொறுப்பாளனாய் இருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள்.
עַל הַמַּחֲלֹקֶת הָרִֽאשׁוֹנָה לַחֹדֶשׁ הָרִאשׁוֹן יָשׇׁבְעָם בֶּן־זַבְדִּיאֵל וְעַל מַחֲלֻקְתּוֹ עֶשְׂרִים וְאַרְבָּעָה אָֽלֶף׃
3 பேரேஸின் வழித்தோன்றலான இவன், முதலாம் மாதத்துக்குரிய இராணுவ அதிகாரிகளுக்குத் தளபதியாயிருந்தான்.
מִן־בְּנֵי־פֶרֶץ הָרֹאשׁ לְכׇל־שָׂרֵי הַצְּבָאוֹת לַחֹדֶשׁ הָרִאשֽׁוֹן׃
4 இரண்டாம் மாதத்திற்குரிய பிரிவுக்கு அகோகியனான தோதாய் பொறுப்பாளனாயிருந்தான். அந்தப் பிரிவிற்கு மிக்லோத் தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள்.
וְעַל מַחֲלֹקֶת ׀ הַחֹדֶשׁ הַשֵּׁנִי דּוֹדַי הָֽאֲחוֹחִי וּמַחֲלֻקְתּוֹ וּמִקְלוֹת הַנָּגִיד וְעַל מַחֲלֻקְתּוֹ עֶשְׂרִים וְאַרְבָּעָה אָֽלֶף׃
5 மூன்றாம் மாதத்திற்குரிய பிரிவுக்கு ஆசாரியனான யோய்தாவின் மகன் பெனாயா, இராணுவ தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு இவனே முதன்மையானவனாய் இருந்தான்.
שַׂר הַצָּבָא הַשְּׁלִישִׁי לַחֹדֶשׁ הַשְּׁלִישִׁי בְּנָיָהוּ בֶן־יְהוֹיָדָע הַכֹּהֵן רֹאשׁ וְעַל מַחֲלֻקְתּוֹ עֶשְׂרִים וְאַרְבָּעָה אָֽלֶף׃
6 மாவீரர்களான முப்பது பேருக்குள்ளும் வலிமை வாய்ந்தவனாகவும், அந்த முப்பது பேருக்கும் தளபதியாகவும் இருந்த பெனாயா இவனே. இவனது மகனான அமிசபாத் அவனுடைய பிரிவிற்கு பொறுப்பாய் இருந்தான்.
הוּא בְנָיָהוּ גִּבּוֹר הַשְּׁלֹשִׁים וְעַל־הַשְּׁלֹשִׁים וּמַחֲלֻקְתּוֹ עַמִּיזָבָד בְּנֽוֹ׃
7 நான்காம் மாதத்திற்குரிய பிரிவுக்கு தளபதியாக யோவாப்பின் சகோதரன் ஆசகேல் இருந்தான். அவனுக்குப்பின் அவனுடைய இடத்தில் அவன் மகன் செபதியா தளபதியாய் இருந்தான். அவர்களுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள்.
הָרְבִיעִי לַחֹדֶשׁ הָרְבִיעִי עֲשָׂהאֵל אֲחִי יוֹאָב וּזְבַדְיָה בְנוֹ אַחֲרָיו וְעַל מַחֲלֻקְתּוֹ עֶשְׂרִים וְאַרְבָּעָה אָֽלֶף׃
8 ஐந்தாம் மாதத்துக்குரிய பிரிவுக்கு இராணுவ தளபதியாய் இஸ்ராகியனான சம்கூத் இருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள்.
הַחֲמִישִׁי לַחֹדֶשׁ הַֽחֲמִישִׁי הַשַּׂר שַׁמְהוּת הַיִּזְרָח וְעַל מַחֲלֻקְתּוֹ עֶשְׂרִים וְאַרְבָּעָה אָֽלֶף׃
9 ஆறாவது மாதத்துக்குரிய பிரிவுக்கு தெக்கோவியனான இக்கேசின் மகன் ஈரா தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள்.
הַשִּׁשִּׁי לַחֹדֶשׁ הַשִּׁשִּׁי עִירָא בֶן־עִקֵּשׁ הַתְּקוֹעִי וְעַל מַחֲלֻקְתּוֹ עֶשְׂרִים וְאַרְבָּעָה אָֽלֶף׃
10 ஏழாவது மாதத்துக்குரிய பிரிவுக்கு எப்பிராயீமைச் சேர்ந்த பெலோனியனான ஏலேஸ் தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 பேர்கள் இருந்தார்கள்.
הַשְּׁבִיעִי לַחֹדֶשׁ הַשְּׁבִיעִי חֶלֶץ הַפְּלוֹנִי מִן־בְּנֵי אֶפְרָיִם וְעַל מַחֲלֻקְתּוֹ עֶשְׂרִים וְאַרְבָּעָה אָֽלֶף׃
11 எட்டாவது மாதத்துக்குரிய பிரிவுக்கு சேராரியரைச் சேர்ந்த ஊஷாத்தியனான சிபெக்காயி தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள்.
הַשְּׁמִינִי לַחֹדֶשׁ הַשְּׁמִינִי סִבְּכַי הַחֻשָׁתִי לַזַּרְחִי וְעַל מַחֲלֻקְתּוֹ עֶשְׂרִים וְאַרְבָּעָה אָֽלֶף׃
12 ஒன்பதாவது மாதத்துக்குரிய பிரிவுக்கு பென்யமீனியரைச் சேர்ந்த ஆனதோத்தியனான அபியேசர் தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள்.
הַתְּשִׁיעִי לַחֹדֶשׁ הַתְּשִׁיעִי אֲבִיעֶזֶר הָעַנְּתוֹתִי (לבנימיני) [לַבֵּן ׀ יְמִינִי] וְעַל מַחֲלֻקְתּוֹ עֶשְׂרִים וְאַרְבָּעָה אָֽלֶף׃
13 பத்தாவது மாதத்துக்குரிய பிரிவுக்கு சேராரியரைச் சேர்ந்த நெத்தோபாத்தியனான மகராயி தளபதியாயிருந்தான். அங்கே அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தனர்.
הָעֲשִׂירִי לַחֹדֶשׁ הָעֲשִׂירִי מַהְרַי הַנְּטוֹפָתִי לַזַּרְחִי וְעַל מַחֲלֻקְתּוֹ עֶשְׂרִים וְאַרְבָּעָה אָֽלֶף׃
14 பதினோராம் மாதத்துக்குரிய பிரிவுக்கு எப்பிராயீமியரைச் சேர்ந்த பிரத்தோனியனான பெனாயா தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள்.
עַשְׁתֵּֽי־עָשָׂר לְעַשְׁתֵּי עָשָׂר הַחֹדֶשׁ בְּנָיָה הַפִּרְעָתוֹנִי מִן־בְּנֵי אֶפְרָיִם וְעַל מַחֲלֻקְתּוֹ עֶשְׂרִים וְאַרְבָּעָה אָֽלֶף׃
15 பன்னிரண்டாம் மாதத்துக்குரிய பிரிவுக்கு ஒத்னியேல் குடும்பத்திலிருந்து நெத்தோபாத்தியனான எல்தாய் தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள்.
הַשְּׁנֵים עָשָׂר לִשְׁנֵים עָשָׂר הַחֹדֶשׁ חֶלְדַּי הַנְּטוֹפָתִי לְעׇתְנִיאֵל וְעַל מַחֲלֻקְתּוֹ עֶשְׂרִים וְאַרְבָּעָה אָֽלֶף׃
16 இஸ்ரயேல் கோத்திரங்களுக்கு மேலாக இருந்த அதிகாரிகள்: ரூபனியருக்கு சிக்ரியின் மகன் எலியேசர்; சிமியோனியருக்கு மாக்காவின் மகன் செபத்தியா;
וְעַל שִׁבְטֵי יִשְׂרָאֵל לָראוּבֵנִי נָגִיד אֱלִיעֶזֶר בֶּן־זִכְרִי לַשִּׁמְעוֹנִי שְׁפַטְיָהוּ בֶּֽן־מַעֲכָֽה׃
17 லேவியருக்கு கேமுயேலின் மகன் அஷாபியா ஆரோனுக்கும்: சாதோக்;
לְלֵוִי חֲשַׁבְיָה בֶן־קְמוּאֵל לְאַהֲרֹן צָדֽוֹק׃
18 யூதாவுக்கு தாவீதின் சகோதரருள் ஒருவனான எலிகூ; இசக்காருக்கு மிகாயேலின் மகன் ஒம்ரி;
לִיהוּדָה אֱלִיהוּ מֵאֲחֵי דָוִיד לְיִשָּׂשכָר עׇמְרִי בֶּן־מִיכָאֵֽל׃
19 செபுலோனுக்கு ஒபதியாவின் மகன் இஸ்மாயா; நப்தலிக்கு அஸ்ரியேலின் மகன் எரிமோத்;
לִזְבוּלֻן יִֽשְׁמַעְיָהוּ בֶּן־עֹבַדְיָהוּ לְנַפְתָּלִי יְרִימוֹת בֶּן־עַזְרִיאֵֽל׃
20 எப்பிராயீமியருக்கு அசசியாவின் மகன் ஓசெயா; மனாசே கோத்திரத்தின் பாதிக் கோத்திரத்தாருக்கு பெதாயாவின் மகன் யோயேல்;
לִבְנֵי אֶפְרַיִם הוֹשֵׁעַ בֶּן־עֲזַזְיָהוּ לַֽחֲצִי שֵׁבֶט מְנַשֶּׁה יוֹאֵל בֶּן־פְּדָיָֽהוּ׃
21 கீலேயாத்திலுள்ள மனாசே கோத்திரத்தின் பாதிக் கோத்திரத்தாருக்கு சகரியாவின் மகன் இத்தோ; பென்யமீனியருக்கு அப்னேரின் மகன் யாசியேல்;
לַֽחֲצִי הַֽמְנַשֶּׁה גִּלְעָדָה יִדּוֹ בֶּן־זְכַרְיָהוּ לְבִנְיָמִן יַעֲשִׂיאֵל בֶּן־אַבְנֵֽר׃
22 தாணுக்கு எரோகாமின் மகன் அசாரியேல். இஸ்ரயேல் கோத்திரங்களுக்கு இவர்களே அதிகாரிகளாயிருந்தார்கள்.
לְדָן עֲזַרְאֵל בֶּן־יְרֹחָם אֵלֶּה שָׂרֵי שִׁבְטֵי יִשְׂרָאֵֽל׃
23 “இஸ்ரயேலரை வானத்து நட்சத்திரங்களைப்போல பெருகப்பண்ணுவேன்” என்று யெகோவா வாக்குக் கொடுத்திருந்தபடியால் தாவீது இருபது வயதும் அதற்குக் கீழ்ப்பட்டவர்களையும் எண்ணிக் கணக்கிடாமல் விட்டுவிட்டான்.
וְלֹֽא־נָשָׂא דָוִיד מִסְפָּרָם לְמִבֶּן עֶשְׂרִים שָׁנָה וּלְמָטָּה כִּי אָמַר יְהֹוָה לְהַרְבּוֹת אֶת־יִשְׂרָאֵל כְּכוֹכְבֵי הַשָּׁמָֽיִם׃
24 செருயாவின் மகன் யோவாப் கணக்கெடுக்கத் தொடங்கினான். ஆனால் அதை முடிக்கவில்லை. இக்கணக்கெடுப்பினால் இறைவனின் கோபம் இஸ்ரயேலின்மேல் வந்தது. ஆகவே தாவீது அரசனின் வரலாற்றுப் புத்தகத்தில் எடுக்கப்பட்ட கணக்கின் விவரம் குறிக்கப்படவில்லை.
יוֹאָב בֶּן־צְרוּיָה הֵחֵל לִמְנוֹת וְלֹא כִלָּה וַיְהִי בָזֹאת קֶצֶף עַל־יִשְׂרָאֵל וְלֹא עָלָה הַמִּסְפָּר בְּמִסְפַּר דִּבְרֵֽי־הַיָּמִים לַמֶּלֶךְ דָּוִֽיד׃
25 அரச அரண்மனையின் களஞ்சியங்களுக்கு ஆதியேலின் மகன் அஸ்மாவேத் பொறுப்பாய் இருந்தான். சுற்றுப்புறங்களிலும், மாவட்டங்களிலும், பட்டணங்களிலும், கிராமங்களிலும், காவற்கோபுரங்களிலும் இருந்த களஞ்சியங்களுக்கு உசியாவின் மகன் யோனத்தான் பொறுப்பாய் இருந்தான்.
וְעַל אֹצְרוֹת הַמֶּלֶךְ עַזְמָוֶת בֶּן־עֲדִיאֵל וְעַל הָאֹצָרוֹת בַּשָּׂדֶה בֶּֽעָרִים וּבַכְּפָרִים וּבַמִּגְדָּלוֹת יְהוֹנָתָן בֶּן־עֻזִּיָּֽהוּ׃
26 நிலத்தைப் பயிரிடுகிறவர்களான வயல்வெளியின் வேலை செய்பவர்களுக்கு கேலூப்பின் மகன் எஸ்ரி பொறுப்பாய் இருந்தான்.
וְעַל עֹשֵׂי מְלֶאכֶת הַשָּׂדֶה לַעֲבֹדַת הָאֲדָמָה עֶזְרִי בֶּן־כְּלֽוּב׃
27 ராமாத்தியனான சீமேயி திராட்சைத் தோட்டங்களுக்குப் பொறுப்பாய் இருந்தான். திராட்சைத் தோட்டங்களின் விளைச்சலைத் திராட்சைத் தொட்டிகளுக்கு சேர்ப்பதற்கு சிப்மியனான சப்தி பொறுப்பாய் இருந்தான்.
וְעַל־הַכְּרָמִים שִׁמְעִי הָרָמָתִי וְעַל שֶׁבַּכְּרָמִים לְאֹצְרוֹת הַיַּיִן זַבְדִּי הַשִּׁפְמִֽי׃
28 மேற்கு மலையடிவாரத்தில் இருந்த ஒலிவ தோப்புக்கும், அத்திமரங்களுக்கும், கெதேரியனான பாகால்கானான் பொறுப்பாய் இருந்தான். ஒலிவ எண்ணெய் விநியோகிப்பதற்கு யோவாஸ் பொறுப்பாய் இருந்தான்.
וְעַל־הַזֵּיתִים וְהַשִּׁקְמִים אֲשֶׁר בַּשְּׁפֵלָה בַּעַל חָנָן הַגְּדֵרִי וְעַל־אֹצְרוֹת הַשֶּׁמֶן יוֹעָֽשׁ׃
29 சாரோனில் மேயும் மந்தைகளுக்கு சாரோனியனான சித்ராய் பொறுப்பாய் இருந்தான். பள்ளத்தாக்குகளிலுள்ள மந்தைகளுக்கு அத்லாயின் மகன் சாப்பாத் பொறுப்பாய் இருந்தான்.
וְעַל־הַבָּקָר הָרֹעִים בַּשָּׁרוֹן (שטרי) [שִׁרְטַי] הַשָּׁרוֹנִי וְעַל־הַבָּקָר בָּעֲמָקִים שָׁפָט בֶּן־עַדְלָֽי׃
30 இஸ்மயேலனான ஓபில் ஒட்டகங்களுக்குப் பொறுப்பாய் இருந்தான். கழுதைகளுக்கு மெரொனோத்தியனான எகெதியா பொறுப்பாய் இருந்தான்.
וְעַל־הַגְּמַלִּים אוֹבִיל הַיִּשְׁמְעֵלִי וְעַל־הָאֲתֹנוֹת יֶחְדְּיָהוּ הַמֵּרֹנֹתִֽי׃
31 ஆட்டு மந்தைகளுக்கு ஆகாரியனான யாசீஸ் பொறுப்பாய் இருந்தான். இவர்கள் எல்லோரும் தாவீது அரசனின் உடைமைகளுக்குப் பொறுப்பாயிருந்த அதிகாரிகளாவர்.
וְעַל־הַצֹּאן יָזִיז הַהַגְרִי כׇּל־אֵלֶּה שָׂרֵי הָרְכוּשׁ אֲשֶׁר לַמֶּלֶךְ דָּוִֽיד׃
32 தாவீதின் சிறிய தகப்பனான யோனத்தான் தாவீது ராஜாவுக்கு புத்தியுள்ள ஆலோசகராயும், நுண்ணறிவாளராயும், எழுத்தாளராயும் இருந்தான். அக்மோனியின் மகன் யெகியேல், அரசனுடைய மகன்களைப் பராமரித்தான்.
וִיהוֹנָתָן דּוֹד־דָּוִיד יוֹעֵץ אִישׁ־מֵבִין וְסוֹפֵר הוּא וִיחִיאֵל בֶּן־חַכְמוֹנִי עִם־בְּנֵי הַמֶּֽלֶךְ׃
33 அகிதோப்பேல் அரசனின் ஆலோசனைக்காரனாய் இருந்தான். அர்கியனான ஊசாய் அரசனின் சிநேகிதனாய் இருந்தான்.
וַאֲחִיתֹפֶל יוֹעֵץ לַמֶּלֶךְ וְחוּשַׁי הָאַרְכִּי רֵעַ הַמֶּֽלֶךְ׃
34 அகிதோப்பேலுக்குப் பிறகு அவனுடைய இடத்தில் பெனாயாவின் மகன் யோய்தாவும், அபியத்தாரும் அரச ஆலோசகர்களாய் இருந்தனர். யோவாப் அரச படைக்குத் தளபதியாயிருந்தான்.
וְאַחֲרֵי אֲחִיתֹפֶל יְהוֹיָדָע בֶּן־בְּנָיָהוּ וְאֶבְיָתָר וְשַׂר־צָבָא לַמֶּלֶךְ יוֹאָֽב׃

< 1 நாளாகமம் 27 >