< 1 நாளாகமம் 25 >
1 மேலும் தாவீது தனது படைத் தளபதிகளுடன் ஒன்றுசேர்ந்து ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் மகன்களில் சிலரை யாழ், வீணை, கைத்தாளம் ஆகியவற்றை இசைப்பதற்கும், இறைவாக்கு உரைக்கிற பணிக்குமென வேறுபிரித்தான். இந்த பணியைச் செய்த மனிதரின் பெயர் பட்டியல் இதுவே:
And David and the heads of the host separate for service, of the sons of Asaph, and Heman, and Jeduthun, who are prophesying with harps, with psalteries, and with cymbals; and the number of the workmen is according to their service.
2 ஆசாப்பின் மகன்களில் சக்கூர், யோசேப்பு, நெதானியா, அசரேலா என்பவர்கள், ஆசாப்பின் மகன்கள் ஆசாப்பின் மேற்பார்வையின்கீழ் இருந்தனர். இவர்கள் அரசனின் மேற்பார்வையின்கீழ் இறைவாக்கு உரைத்தனர்.
Of sons of Asaph: Zaccur, and Joseph, and Nethaniah, and Asharelah; sons of Asaph [are] by the side of Asaph, who is prophesying by the side of the king.
3 எதுத்தூனின் மகன்களில் கெதலியா, செரீ, எஷாயா, சீமேய், அஷாபியா, மத்தத்தியா என்னும் ஆறுபேர் தங்கள் தகப்பன் எதுத்தூனின் மேற்பார்வையின்கீழ் இருந்தனர். இவர்கள் யாழ் மீட்டி நன்றியுடன் யெகோவாவைத் துதித்து இறைவாக்கு உரைத்தனர்.
Of Jeduthun, sons of Jeduthun: Gedaliah, and Zeri, and Jeshaiah, [and Shimei, and] Hashabiah, and Mattithiah, six, by the side of their father Jeduthun; he is prophesying with a harp, for giving of thanks and of praise for YHWH.
4 ஏமானின் மகன்கள் புக்கியா, மத்தனியா, ஊசியேல், செபுயேல், எரிமோத், அனனியா, அனானி, எலியாத்தா, கிதல்தி, ரொமந்தியேசர், யோஸ்பேக்காஷா, மலோத்தி, ஒத்தீர், மகாசியோத் ஆகியோர்.
Of Heman, sons of Heman: Bukkiah, Mattaniah, Uzziel, Shebuel, and Jerimoth, Hananiah, Hanani, Eliathah, Giddalti, and Romamti-Ezer, Joshbekashah, Mallothi, Hothir, Mahazioth;
5 இவர்கள் எல்லோரும் அரசனின் தரிசனக்காரனான ஏமானின் மகன்கள். இவர்களை இறைவன் தம்மை மகிமைப்படுத்தும்படி, தமது வாக்குத்தத்தத்தின் மூலம் அவனுக்குக் கொடுத்தார். இறைவன் ஏமானுக்கு பதினான்கு மகன்களையும், மூன்று மகள்களையும் கொடுத்தார்.
all these [are] sons of Heman, seer of the king in the things of God, to lift up a horn; and God gives fourteen sons and three daughters to Heman.
6 இவர்கள் எல்லோரும் யெகோவாவினுடைய ஆலயத்தின் இசைக்காகத் தங்கள் தந்தையின் மேற்பார்வையில் யாழ், வீணை, கைத்தாளம் போன்ற இசைக்கருவிகளை மீட்பதற்காக இறைவனுடைய ஆலயப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். ஆசாப்பும், எதுத்தூனும், ஏமானும் அரசனின் மேற்பார்வையின்கீழ் இருந்தார்கள்.
All these [are] by the side of their father in the song of the house of YHWH, with cymbals, psalteries, and harps, for the service of the house of God; by the side of the king [are] Asaph, and Jeduthun, and Heman.
7 இவர்கள் யாவரும் யெகோவாவின் பாடல்களைப் பாடுவதில் பயிற்றுவிக்கப்பட்டவர்களும், திறமைசாலிகளுமாக இருந்தார்கள். தங்கள் உறவினர்களுடன் அவர்கள் இருநூற்று எண்பத்தெட்டுபேராய் இருந்தனர்.
And their number, with their brothers taught in the song of YHWH—all who are intelligent—[is] two hundred and eighty-eight.
8 அவர்கள் சிறியவர்கள், பெரியவர்கள், ஆசிரியர், மாணவர்கள் என்ற வேறுபாடின்றி ஒவ்வொருவரும் தங்களுடைய கடமைகளுக்கென சீட்டுப்போட்டார்கள்.
And they cause lots to fall, charge next to [charge], the small as well as the great, the intelligent with the learner.
9 முதலாவது சீட்டு ஆசாபின் வம்சமான யோசேப்பிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது. இரண்டாவது சீட்டு கெதலியாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கு விழுந்தது.
And the first lot goes out for Asaph to Joseph; the second, Gedaliah—him, and his brothers and his sons—twelve;
10 மூன்றாவது சீட்டு சக்கூருக்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
the third, Zaccur, his sons and his brothers—twelve;
11 நான்காவது சீட்டு இஸ்ரிக்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
the fourth to Izri, his sons and his brothers—twelve;
12 ஐந்தாவது சீட்டு நெதானியாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
the fifth, Nethaniah, his sons and his brothers—twelve;
13 ஆறாவது சீட்டு புக்கியாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
the sixth, Bukkiah, his sons and his brothers—twelve;
14 ஏழாவது சீட்டு எசரேலாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
the seventh, Jesharelah, his sons and his brothers—twelve;
15 எட்டாவது சீட்டு எஷாயாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
the eighth, Jeshaiah, his sons and his brothers—twelve;
16 ஒன்பதாவது சீட்டு மத்தனியாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
the ninth, Mattaniah, his sons and his brothers—twelve;
17 பத்தாவது சீட்டு சீமேயிவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
the tenth, Shimei, his sons and his brothers—twelve:
18 பதினோராவது சீட்டு அசாரியேலுக்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
eleventh, Azareel, his sons and his brothers—twelve;
19 பன்னிரெண்டாவது சீட்டு அஷாபியாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
the twelfth to Hashabiah, his sons and his brothers—twelve;
20 பதிமூன்றாவது சீட்டு சுபயேலிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
for the thirteenth, Shubael, his sons and his brothers—twelve;
21 பதினான்காவது சீட்டு மத்தத்தியாவிற்கும் அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
for the fourteenth, Mattithiah, his sons and his brothers—twelve;
22 பதினைந்தாவது சீட்டு எரிமோத்திற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
for the fifteenth to Jeremoth, his sons and his brothers—twelve;
23 பதினாறாவது சீட்டு அனனியாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
the sixteenth to Hananiah, his sons and his brothers—twelve;
24 பதினேழாவது சீட்டு யோஸ்பேக்காஷாவிற்கும் அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
the seventeenth to Joshbekashah, his sons and his brothers—twelve;
25 பதினெட்டாவது சீட்டு அனானிக்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
the eighteenth to Hanani, his sons and his brothers—twelve;
26 பத்தொன்பதாவது சீட்டு மலோத்திற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
the nineteenth to Mallothi, his sons and his brothers—twelve;
27 இருபதாவது சீட்டு எலியாத்தாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
the twentieth to Eliathah, his sons and his brothers—twelve;
28 இருபத்தோராவது சீட்டு ஒத்தீருக்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
the twenty-first to Hothir, his sons and his brothers—twelve;
29 இருபத்திரெண்டாவது சீட்டு கிதல்திற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
the twenty-second to Giddalti, his sons and his brothers—twelve;
30 இருபத்துமூன்றாவது சீட்டு மகாசியோத்திற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
the twenty-third to Mahazioth, his sons and his brothers—twelve;
31 இருபத்துநான்காவது சீட்டு ரொமந்தியேசருக்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
the twenty-fourth to Romamti-Ezer, his sons and his brothers—twelve.