< 1 நாளாகமம் 24 >

1 ஆரோனின் மகன்களின் பிரிவுகள் இவையே: ஆரோனின் மகன்கள்: நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் ஆகியோர்.
וְלִבְנֵי אַהֲרֹן מַחְלְקוֹתָם בְּנֵי אַהֲרֹן נָדָב וַאֲבִיהוּא אֶלְעָזָר וְאִיתָמָֽר׃
2 நாதாப்பும், அபியூவும் தங்கள் தகப்பன் இறப்பதற்கு முன்னே இறந்துவிட்டார்கள். அவர்களுக்கு மகன்கள் இருக்கவில்லை. அதனால் எலெயாசாரும் இத்தாமாரும் ஆசாரியர்களாகப் பணிபுரிந்தனர்.
וַיָּמָת נָדָב וַאֲבִיהוּא לִפְנֵי אֲבִיהֶם וּבָנִים לֹא־הָיוּ לָהֶם וַֽיְכַהֲנוּ אֶלְעָזָר וְאִיתָמָֽר׃
3 எலெயாசாரின் வழித்தோன்றலான சாதோக்கின் உதவியுடனும், இத்தாமாரின் வழித்தோன்றலான அகிமெலேக்கின் உதவியுடனும் நியமிக்கப்பட்ட பணியைச் செய்வதற்கென, தாவீது அவர்களைப் பிரிவுகளாகப் பிரித்தான்.
וַיֶּֽחָלְקֵם דָּוִיד וְצָדוֹק מִן־בְּנֵי אֶלְעָזָר וַאֲחִימֶלֶךְ מִן־בְּנֵי אִיתָמָר לִפְקֻדָּתָם בַּעֲבֹדָתָֽם׃
4 இத்தாமாரின் வழித்தோன்றலைவிட எலெயாசாரின் வழித்தோன்றலில் தலைவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள். அதற்கேற்ப எலெயாசாரின் சந்ததியிலிருந்து பதினாறுபேர் தங்கள் குடும்பத் தலைவர்களாகவும், இத்தாமாரின் சந்ததியிலிருந்து எட்டுபேர் குடும்பத் தலைவர்களாகவும் பிரிக்கப்பட்டனர்.
וַיִּמָּצְאוּ בְֽנֵי־אֶלְעָזָר רַבִּים לְרָאשֵׁי הַגְּבָרִים מִן־בְּנֵי אִיתָמָר וַֽיַּחְלְקוּם לִבְנֵי אֶלְעָזָר רָאשִׁים לְבֵית־אָבוֹת שִׁשָּׁה עָשָׂר וְלִבְנֵי אִיתָמָר לְבֵית אֲבוֹתָם שְׁמוֹנָֽה׃
5 எலெயாசாரின் சந்ததியிலும், இத்தாமாரின் சந்ததியிலும் பரிசுத்த இடத்து அலுவலர்களும், இறைவனுக்குப் பணிசெய்யும் அலுவலர்களும் இருந்தபடியால், அவர்களைப் பாரபட்சமின்றி சீட்டுப்போட்டுப் பிரித்தார்கள்.
וַיַּחְלְקוּם בְּגוֹרָלוֹת אֵלֶּה עִם־אֵלֶּה כִּי־הָיוּ שָֽׂרֵי־קֹדֶשׁ וְשָׂרֵי הָאֱלֹהִים מִבְּנֵי אֶלְעָזָר וּבִבְנֵי אִיתָמָֽר׃
6 லேவியனும் எழுத்தாளனுமான நெதனெயேலின் மகன் செமாயா அரசன், அதிகாரிகள், ஆசாரியன் சாதோக்கு, அபியத்தாரின் மகன் அகிமெலேக்கு, ஆசாரியர்கள் மற்றும் லேவியர்கள் குடும்பத் தலைவர்கள் ஆகியோர் முன்பாக அவர்களுடைய பெயர்களைப் பதிவுசெய்தான். எலெயாசாரின் குடும்பத்திலிருந்து ஒருவனும், இத்தாமாரின் குடும்பத்திலிருந்து ஒருவனுமாக சீட்டின் மூலம் மாறிமாறி தெரிவு செய்யப்பட்டனர்.
וֽ͏ַיִּכְתְּבֵם שְֽׁמַֽעְיָה בֶן־נְתַנְאֵל הַסּוֹפֵר מִן־הַלֵּוִי לִפְנֵי הַמֶּלֶךְ וְהַשָּׂרִים וְצָדוֹק הַכֹּהֵן וַאֲחִימֶלֶךְ בֶּן־אֶבְיָתָר וְרָאשֵׁי הָֽאָבוֹת לַכֹּהֲנִים וְלַלְוִיִּם בֵּֽית־אָב אֶחָד אָחֻז לְאֶלְעָזָר וְאָחֻז ׀ אָחֻז לְאִיתָמָֽר׃
7 முதலாவது சீட்டு யோயாரீபுக்கும், இரண்டாவது யெதாயாவுக்கும்,
וַיֵּצֵא הַגּוֹרָל הָרִאשׁוֹן לִיהוֹיָרִיב לִֽידַעְיָה הַשֵּׁנִֽי׃
8 மூன்றாவது ஆரீமுக்கும், நான்காவது செயோரீமுக்கும் விழுந்தன.
לְחָרִם הַשְּׁלִישִׁי לִשְׂעֹרִים הָרְבִעִֽי׃
9 ஐந்தாவது சீட்டு மல்கியாவிற்கும், ஆறாவது மியாமீனுக்கும்,
לְמַלְכִּיָּה הַחֲמִישִׁי לְמִיָּמִן הַשִּׁשִּֽׁי׃
10 ஏழாவது அக்கோத்ஸிற்கும், எட்டாவது அபியாவிற்கும் விழுந்தன.
לְהַקּוֹץ הַשְּׁבִעִי לַאֲבִיָּה הַשְּׁמִינִֽי׃
11 ஒன்பதாவது சீட்டு யெசுவாவிற்கும், பத்தாவது செக்கனியாவிற்கும் விழுந்தன.
לְיֵשׁוּעַ הַתְּשִׁעִי לִשְׁכַנְיָהוּ הָעֲשִׂרִֽי׃
12 பதினோராவது எலியாசீபிற்கும், பன்னிரண்டாவது யாக்கீமினுக்கும்,
לְאֶלְיָשִׁיב עַשְׁתֵּי עָשָׂר לְיָקִים שְׁנֵים עָשָֽׂר׃
13 பதிமூன்றாவது சீட்டு உப்பாவிற்கும், பதினான்காவது எசெபெயாபிற்கும் விழுந்தன.
לְחֻפָּה שְׁלֹשָׁה עָשָׂר לְיֶֽשֶׁבְאָב אַרְבָּעָה עָשָֽׂר׃
14 பதினைந்தாவது சீட்டு பில்காவிற்கும், பதினாறாவது இம்மேருக்கும் விழுந்தன.
לְבִלְגָּה חֲמִשָּׁה עָשָׂר לְאִמֵּר שִׁשָּׁה עָשָֽׂר׃
15 பதினேழாவது சீட்டு ஏசீரினுக்கும், பதினெட்டாவது அப்சேஸிற்கும் விழுந்தன.
לְחֵזִיר שִׁבְעָה עָשָׂר לְהַפִּצֵּץ שְׁמוֹנָה עָשָֽׂר׃
16 பத்தொன்பதாவது சீட்டு பெத்தகியாவிற்கும், இருபதாவது எகெசெக்கியேலிற்கும் விழுந்தன.
לִֽפְתַחְיָה תִּשְׁעָה עָשָׂר לִֽיחֶזְקֵאל הָעֶשְׂרִֽים׃
17 இருபத்தோராவது சீட்டு யாகினிற்கும், இருபத்திரெண்டாவது காமுலிற்கும் விழுந்தன.
לְיָכִין אֶחָד וְעֶשְׂרִים לְגָמוּל שְׁנַיִם וְעֶשְׂרִֽים׃
18 இருபத்துமூன்றாவது சீட்டு தெலாயாவிற்கும், இருபத்துநான்காவது மாசியாவிற்கும் விழுந்தன.
לִדְלָיָהוּ שְׁלֹשָׁה וְעֶשְׂרִים לְמַֽעַזְיָהוּ אַרְבָּעָה וְעֶשְׂרִֽים׃
19 யெகோவாவினுடைய ஆலயத்திற்குள் அவர்கள் போய், பணிசெய்வதற்கான ஒழுங்குமுறை இதுவே: இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா அவர்கள் முற்பிதாவான ஆரோனுக்குக் கட்டளையிட்டபடியே, பணிசெய்வதற்கென நியமிக்கப்பட்டார்கள்.
אֵלֶּה פְקֻדָּתָם לַעֲבֹדָתָם לָבוֹא לְבֵית־יְהוָה כְּמִשְׁפָּטָם בְּיַד אַהֲרֹן אֲבִיהֶם כַּאֲשֶׁר צִוָּהוּ יְהוָה אֱלֹהֵי יִשְׂרָאֵֽל׃
20 லேவியின் வழித்தோன்றலில் மிகுதியாயிருந்தோர் யாரெனில்: அம்ராமின் மகன்களில் சூபயேல், சூபயேலின் மகன்களில் எகேதியா,
וְלִבְנֵי לֵוִי הַנּוֹתָרִים לִבְנֵי עַמְרָם שֽׁוּבָאֵל לִבְנֵי שׁוּבָאֵל יֶחְדְּיָֽהוּ׃
21 ரெகேபியாவின் மகன்களில் மூத்தவனான இஷியா,
לִרְחַבְיָהוּ לִבְנֵי רְחַבְיָהוּ הָרֹאשׁ יִשִּׁיָּֽה׃
22 இத்சாரியரில் செலெமோத்து, செலெமோத்தின் மகன்களில் யாகாத்,
לַיִּצְהָרִי שְׁלֹמוֹת לִבְנֵי שְׁלֹמוֹת יָֽחַת׃
23 எப்ரோனின் மகன்களில் மூத்தவன் யெரியா, இரண்டாவது அமரியா, மூன்றாவது யாகாசியேல், நான்காவது எக்காமியாம்,
וּבְנָי יְרִיָּהוּ אֲמַרְיָהוּ הַשֵּׁנִי יַחֲזִיאֵל הַשְּׁלִישִׁי יְקַמְעָם הָרְבִיעִֽי׃
24 ஊசியேலின் மகன்களில் மீகா, மீகாவின் மகன்களில் சாமீர்,
בְּנֵי עֻזִּיאֵל מִיכָה לִבְנֵי מִיכָה שמור שָׁמִֽיר׃
25 மீகாவின் சகோதரன் இஷியா, இஷியாவின் மகன்களில் சகரியா,
אֲחִי מִיכָה יִשִּׁיָּה לִבְנֵי יִשִּׁיָּה זְכַרְיָֽהוּ׃
26 மெராரியின் மகன்களில் மகேலி, மூஷி என்பவர்கள் ஆவர். யாசியாவின் மகன் பேனோவா,
בְּנֵי מְרָרִי מַחְלִי וּמוּשִׁי בְּנֵי יַעֲזִיָּהֽוּ בְנֽוֹ׃
27 மெராரியின் மகன்களில் யாசியாவின் மகன்களிலிருந்து பேனோ, சோகாம், சக்கூர், இப்ரி என்பவர்கள்.
בְּנֵי מְרָרִי לְיַֽעֲזִיָּהֽוּ בְנוֹ וְשֹׁהַם וְזַכּוּר וְעִבְרִֽי׃
28 மகேலியின் மகன்களில் எலெயாசார், இவனுக்கு மகன்கள் இருக்கவில்லை.
לְמַחְלִי אֶלְעָזָר וְלֹא־הָיָה לוֹ בָּנִֽים׃
29 கீஸின் மகன்களில் யெராமியேல்,
לְקִישׁ בְּנֵי־קִישׁ יְרַחְמְאֵֽל׃
30 மூஷியின் மகன்களில் மகேலி, ஏதேர், எரிமோத் என்பவர்கள் ஆவர். இவர்களும் தங்களுடைய குடும்பங்களின்படியே லேவியர்கள் ஆவர்.
וּבְנֵי מוּשִׁי מַחְלִי וְעֵדֶר וִירִימוֹת אֵלֶּה בְּנֵי הַלְוִיִּם לְבֵית אֲבֹתֵיהֶֽם׃
31 இவர்களும் ஆரோனின் சந்ததிகளான தங்கள் சகோதரர் செய்ததுபோல, அரசன் தாவீது முன்பும், சாதோக்குக்கும், அகிமெலேக்குக்கும், ஆசாரியர்களின் குடும்பத் தலைவர்களுக்கும், லேவியருக்கும் முன்பாகத் தங்கள் பணிகளுக்காக சீட்டுப்போட்டார்கள். மூத்த சகோதரனின் குடும்பங்களும், இளைய சகோதரனின் குடும்பங்களும் ஒரேவிதமாக நடத்தப்பட்டன.
וַיַּפִּילוּ גַם־הֵם גּוֹרָלוֹת לְעֻמַּת ׀ אֲחֵיהֶם בְּנֵֽי־אַהֲרֹן לִפְנֵי דָוִיד הַמֶּלֶךְ וְצָדוֹק וַאֲחִימֶלֶךְ וְרָאשֵׁי הָֽאָבוֹת לַכֹּהֲנִים וְלַלְוִיִּם אָבוֹת הָרֹאשׁ לְעֻמַּת אָחִיו הַקָּטָֽן׃

< 1 நாளாகமம் 24 >