< Psaltaren 97 >
1 HERREN är nu konung! Därför fröjde sig jorden; havsländerna glädje sig, så många som de äro.
௧யெகோவா ராஜரிகம்செய்கிறார்; பூமி பூரிப்பாகி, திரளான தீவுகள் மகிழட்டும்.
2 Moln och töcken omgiva honom, rättfärdighet och rätt äro hans trons fäste.
௨மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது; நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.
3 Eld går framför honom och förbränner hans ovänner runt omkring.
௩நெருப்பு அவருக்கு முன்சென்று, சுற்றிலும் இருக்கிற அவருடைய எதிரிகளைச் சுட்டெரிக்கிறது.
4 Hans ljungeldar lysa upp jordens krets; jorden ser det och bävar.
௪அவருடைய மின்னல்கள் பூமியைப் பிரகாசிப்பித்தது; பூமி அதைக்கண்டு அதிர்ந்தது.
5 Bergen smälta såsom vax för HERREN, för hela jordens Herre.
௫யெகோவாவின் பிரசன்னத்தினால் மலைகள் மெழுகுபோல உருகினது, சர்வ பூமியினுடைய ஆண்டவரின் பிரசன்னத்தினாலேயே உருகிப்போனது.
6 Himlarna förkunna hans rättfärdighet, och alla folk se hans ära.
௬வானங்கள் அவருடைய நீதியை வெளிப்படுத்துகிறது; எல்லா மக்களும் அவருடைய மகிமையைக் காண்கிறார்கள்.
7 Alla de skola komma på skam, som dyrka beläten, de som berömma sig av avgudar. Alla gudar skola tillbedja honom.
௭சிலைகளை வணங்கி, விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற அனைவரும் வெட்கப்பட்டுப் போவார்களாக; தெய்வங்களே, நீங்களெல்லோரும் அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
8 Sion hör det och gläder sig, och Juda döttrar fröjda sig för dina domars skull, HERRE.
௮சீயோன் கேட்டு மகிழ்ந்தது; யெகோவாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளினால் யூதாவின் மகள்கள் சந்தோஷப்பட்டார்கள்.
9 Ty du, HERRE, är den Högste över hela jorden; du är högt upphöjd över alla gudar.
௯யெகோவாவே, பூமி அனைத்திற்கும் நீர் உன்னதமான தேவன்; எல்லா தெய்வங்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர்.
10 I som älsken HERREN, haten det onda. Han bevarar sina frommas själar, ur de ogudaktigas hand räddar han dem.
௧0யெகோவாவில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்; அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கர்களின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்.
11 Ljus är utsått för den rättfärdige och glädje för de rättsinniga.
௧௧நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயமுள்ளவர்களுக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது.
12 Glädjens, I rättfärdige, i HERREN, och prisen hans heliga namn.
௧௨நீதிமான்களே, யெகோவாவுக்குள் மகிழ்ந்து, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.