< Psaltaren 118 >
1 Tacker Herranom, ty han är mild, och hans godhet varar evinnerliga.
௧யெகோவாவை துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது.
2 Nu säge Israel: Hans godhet varar evinnerliga.
௨அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வார்களாக.
3 Nu säge Aarons hus: Hans godhet varar evinnerliga.
௩அவர் கிருபை என்றுமுள்ளதென்று, ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக.
4 Nu säge de som Herran frukta: Hans godhet varar evinnerliga.
௪அவர் கிருபை என்றுமுள்ளதென்று, யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்கள் சொல்வார்களாக.
5 Uti ångest åkallade jag Herran; och Herren bönhörde mig, och tröste mig.
௫நெருக்கத்திலிருந்து யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன், யெகோவா என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்.
6 Herren är med mig, derföre fruktar jag mig intet; hvad kunna menniskor göra mig?
௬யெகோவா என்னோடு இருக்கிறார், நான் பயப்படமாட்டேன்; மனிதன் எனக்கு என்ன செய்வான்?
7 Herren är med mig, till att hjelpa mig; och jag vill lust se på mina fiendar.
௭எனக்கு உதவி செய்கிறவர்கள் நடுவில் யெகோவா என்னோடு இருக்கிறார்; என்னுடைய எதிரிகளில் சரிக்கட்டுதலைக் காண்பேன்.
8 Det är godt att förtrösta på Herran, och icke förlåta sig på menniskor.
௮மனிதனை நம்புவதைவிட, யெகோவா மேல் பற்றுதலாயிருப்பதே நலம்.
9 Det är godt att förtrösta uppå Herran, och icke förlåta sig på Förstar.
௯பிரபுக்களை நம்புவதைவிட யெகோவா மேல் பற்றுதலாயிருப்பதே நலம்.
10 Alle Hedningar belägga mig; men i Herrans Namn vill jag förgöra dem.
௧0எல்லா தேசத்தாரும் என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன்.
11 De kringhvärfva mig på alla sidor; men i Herrans Namn vill jag nederlägga dem.
௧௧என்னைச் சுற்றிலும் வளைந்து கொள்ளுகிறார்கள்; யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன்.
12 De omlägga mig såsom bi, de släcka såsom eld i törne; men i Herrans Namn vill jag förgöra dem.
௧௨தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்; யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன்.
13 Man stöter mig, att jag falla skall; men Herren hjelper mig.
௧௩நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்; யெகோவாவோ எனக்கு உதவி செய்தார்.
14 Herren är min magt, och min psalm; och är min salighet.
௧௪யெகோவா என்னுடைய பெலனும், என்னுடைய பாடலுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானார்.
15 Man sjunger med glädje om seger uti de rättfärdigas hyddom; Herrans högra hand behåller segren.
௧௫நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு; யெகோவாவின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.
16 Herrans högra hand är upphöjd; Herrans högra hand behåller segren.
௧௬யெகோவாவின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது; யெகோவாவின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.
17 Jag skall icke dö, utan lefva, och förkunna Herrans gerningar.
௧௭நான் சாகாமல், பிழைத்திருந்து, யெகோவாவுடைய செய்கைகளை விவரிப்பேன்.
18 Herren näpser mig väl; men han gifver mig icke dödenom.
௧௮யெகோவா என்னைக் கடினமாகத் தண்டித்தும், என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை.
19 Upplåter mig rättfärdighetenes portar, att jag må der ingå, och tacka Herranom.
௧௯நீதியின் வாசல்களைத் திறவுங்கள்; நான் அவைகளுக்குள் நுழைந்து யெகோவாவை துதிப்பேன்.
20 Det är Herrans port, de rättfärdige skola der ingå.
௨0யெகோவாவின் வாசல் இதுவே; நீதிமான்கள் இதற்குள் நுழைவார்கள்.
21 Jag tackar dig, att du näpste mig, och halp mig.
௨௧நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாக இருந்தபடியால், நான் உம்மைத் துதிப்பேன்.
22 Den stenen, som byggningsmännerna förkastade, är till en hörnsten vorden.
௨௨வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லானது.
23 Det är skedt af Herranom, och är ett under för vår ögon.
௨௩அது யெகோவாவாலே ஆனது, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
24 Detta är den dagen, den Herren gör; låt oss på honom fröjdas och glädjas.
௨௪இது யெகோவா உண்டாக்கின நாள்; இதிலே சந்தோஷப்பட்டு மகிழ்வோம்.
25 O! Herre, hjelp; o! Herre, låt väl gå.
௨௫யெகோவாவே, இரட்சியும்; யெகோவாவே, காரியத்தை வாய்க்கச்செய்யும்.
26 Lofvad vare den som kommer i Herrans Namn; vi välsigne eder, som af Herrans hus ären.
௨௬யெகோவாவுடைய பெயராலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; யெகோவாவுடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம்.
27 Herren är Gud, den oss upplyser; pryder högtidena med löf, allt intill hornen på altaret.
௨௭யெகோவா நம்மைப் பிரகாசிக்கச்செய்கிற தேவனாக இருக்கிறார்; பண்டிகைப் பலியைக் கொண்டுபோய் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள்.
28 Du äst min Gud, och jag tackar dig; min Gud, jag vill prisa dig.
௨௮நீர் என் தேவன், நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என் தேவன், நான் உம்மை உயர்த்துவேன்.
29 Tacker Herranom, ty han är mild, och hans godhet varar evinnerliga.
௨௯யெகோவாவை துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது.