< Johannes 14 >
1 Och han sade till sina Lärjungar: Edart hjerta vare icke bedröfvadt: Tron I på Gud, så tror ock på mig.
௧உங்களுடைய இருதயம் கலங்காமல் இருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாக இருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாக இருங்கள்.
2 I mins Faders hus äro många boningar; om så icke vore, säger jag dock eder, att jag går bort till att bereda eder rum.
௨என் பிதாவின் வீட்டில் அநேக தங்கும் இடங்கள் இருக்கின்றன; அப்படி இல்லாமலிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு இடத்தை உங்களுக்காக ஆயத்தம் செய்யப்போகிறேன்.
3 Och om jag än går bort till att bereda eder rum, skall jag likväl komma igen, och taga eder till mig; att hvar jag är, der skolen I ock vara;
௩நான் போய் உங்களுக்காக இடத்தை ஆயத்தம்செய்தபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.
4 Och hvart jag går, veten I, och vägen veten I.
௪நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார்.
5 Thomas sade till honom: Herre, vi vete icke hvart du går; och huru kunne vi veta vägen?
௫தோமா அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான்.
6 Jesus sade till honom: Jag är vägen, sanningen och lifvet; ingen kommer till Fadren, utan genom mig.
௬அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாக இருக்கிறேன்; என்னாலே அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
7 Känden I mig, så känden I ju ock min Fader; och nu kännen I honom, och hafven sett honom.
௭என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைப் பார்த்தும் இருக்கிறீர்கள் என்றார்.
8 Philippus sade till honom: Herre, låt oss se Fadren, så hafve vi nog.
௮பிலிப்பு அவரைப் பார்த்து: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்.
9 Sade Jesus till honom: Jag är så lång tid när eder, och du känner mig icke; Philippe, den mig ser, han ser Fadren; och huru säger du: Låt oss se Fadren?
௯அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைப் பார்த்தவன் பிதாவைப் பார்த்தான்; அப்படி இருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?
10 Tror du icke, att jag är i Fadrenom, och Fadren i mig? Orden, som jag talar till eder, talar jag icke af mig sjelf; Fadren, som är i mig, han gör gerningarna.
௧0நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களோடு சொல்லுகிற வசனங்களை நானாகவே சொல்லவில்லை; எனக்குள் வாழ்கிற பிதாவானவரே இந்த செயல்களைச்செய்து வருகிறார்.
11 Tror mig, att jag är i Fadrenom, och Fadren i mig; eljest, tror mig för gerningarnas skull.
௧௧நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படி இல்லாவிட்டாலும் என்னுடைய செயல்களினாலாவது என்னை நம்புங்கள்.
12 Sannerliga, sannerliga säger jag eder: Den der tror på mig, de gerningar, som jag gör, skall ock han göra; och skall göra större än dessa; ty jag går till Fadren.
௧௨உண்மையாகவே உண்மையாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற செயல்களைத் தானும் செய்வான், இவைகளைவிடப் பெரிய செயல்களையும் செய்வான்.
13 Och allt det I bedjen i mitt Namn, det skall jag göra; på det att Fadren skall prisad varda i Sonenom.
௧௩நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படி அதைச் செய்வேன்.
14 Hvad I bedjen i mitt Namn, det skall jag göra.
௧௪என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.
15 Älsken I mig, så håller min bud.
௧௫நீங்கள் என்னிடத்தில் அன்பாக இருந்தால் என் கட்டளைகளைக் கடைபிடியுங்கள்.
16 Och jag skall bedja Fadren, och han skall gifva eder en annan Hugsvalare, att han skall blifva när eder evinnerliga; (aiōn )
௧௬நான் பிதாவை கேட்டுக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களோடு இருக்கும்படி சத்திய ஆவியானவராகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தருவார். (aiōn )
17 Sanningenes Anda, den verlden icke kan undfå; ty hon ser honom icke, och känner honom icke; men I kännen honom; ty han blifver när eder, och skall vara i eder.
௧௭உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைப் பார்க்காமலும், அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களோடு தங்கி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.
18 Jag skall icke låta eder vara faderlösa; jag skall komma till eder.
௧௮நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன், உங்களிடம் வருவேன்.
19 Än är en liten tid, och verlden ser mig icke mer. Men I skolen se mig; ty jag lefver; I skolen ock lefva.
௧௯இன்னும் கொஞ்சக்காலத்தில் உலகம் என்னைப் பார்க்காது, நீங்களோ என்னைப் பார்ப்பீர்கள்; நான் பிழைக்கிறபடி நீங்களும் பிழைப்பீர்கள்.
20 På den dagen skolen I förstå, att jag är i minom Fader; och I i mig, och jag i eder.
௨0நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்த நாளிலே நீங்கள் அறிவீர்கள்.
21 Den min bud hafver, och håller dem, han är den mig älskar; och den mig älskar, han skall varda älskad af minom Fader; och jag skall älska honom, och honom skall jag uppenbara mig.
௨௧என் கட்டளைகளை ஏற்றுக்கொண்டு அவைகளைக் கடைபிடிக்கிறவனே என்னிடத்தில் அன்பாக இருக்கிறான், என்னிடத்தில் அன்பாக இருக்கிறவன்மேல் என் பிதா அன்பாக இருப்பார்; நானும் அவன்மேல் அன்பாக இருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.
22 Sade till honom Judas, icke den Ischarioth: Herre, hvad är det då, att du skall uppenbara dig oss, och icke verldene?
௨௨ஸ்காரியோத்தல்லாத யூதா என்பவன் அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் உலகத்திற்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப்போகிற காரணம் என்ன என்றான்.
23 Svarade Jesus, och sade till honom: Den mig älskar, han varder hållandes min ord, och min Fader skall älska honom; och vi skole komma till honom, och blifva boende när honom.
௨௩இயேசு அவனுக்கு மறுமொழியாக: ஒருவன் என்னில் அன்பாக இருந்தால் அவன் என் வார்த்தையைக் கடைப்பிடிப்பான், அவனில் என் பிதா அன்பாக இருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனுடன் குடிகொள்ளுவோம்.
24 Men den mig icke älskar, han håller icke min ord; och det ordet I hören, är icke mitt, utan Fadrens som mig sändt hafver.
௨௪என்னில் அன்பாக இல்லாதவன் என் வார்த்தைகளைக் கடைப்பிடிக்கமாட்டான். நீங்கள் கேட்கிற வார்த்தை என்னுடையதாக இல்லாமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாக இருக்கிறது.
25 Detta hafver jag talat till eder, medan jag hafver varit när eder.
௨௫நான் உங்களோடு தங்கியிருக்கும்போது இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.
26 Men Hugsvalaren, den Helge Ande, hvilken Fadren skall sända i mitt Namn, han skall lära eder all ting, och påminna eder allt det jag eder sagt hafver.
௨௬என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியானவராகிய தேற்றரவாளன் எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைவுபடுத்துவார்.
27 Friden låter jag eder; min frid gifver jag eder; icke gifver jag eder, såsom verlden gifver. Edart hjerta vare icke bedröfvadt, ej heller rädes.
௨௭சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன், என்னுடைய சாமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபடி நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்களுடைய இருதயம் கலங்காமலும், பயப்படாமலும் இருப்பதாக.
28 I hörden, att jag sade eder: Jag går bort, och kommer åter till eder. Haden I mig kär, då gladdens I ju, att jag sade: Jag går till Fadren; ty Fadren är större än jag.
௨௮நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடம் வருவேன் என்றும் நான் உங்களுக்குச் சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாக இருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்று நான் சொன்னதைக்குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனென்றால், என் பிதா என்னைவிட பெரியவராக இருக்கிறார்.
29 Och nu sade jag eder det, förr än det sker, att I tro skolen, när det skedt är.
௨௯இது நடக்கும்போது நீங்கள் விசுவாசிக்கும்படியாக, நடப்பதற்கு முன்னமே இதை உங்களுக்குச் சொன்னேன்.
30 Härefter talar jag icke mycket med eder; ty denna verldenes Förste kommer; och i mig hafver han intet.
௩0இனி நான் உங்களோடு அதிகமாக பேசுவதில்லை. இந்த உலகத்தின் தலைவன் வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.
31 Men på det att verlden skall förstå, att jag hafver Fadren kär, och så gör som Fadren mig budit hafver; står upp, låter oss gå hädan.
௩௧நான் பிதாவில் அன்பாக இருக்கிறேன் என்றும், பிதா எனக்குக் கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், உலகம் அறியும்படிக்கு இப்படி நடக்கும். எழுந்திருங்கள், இந்த இடத்தைவிட்டுப் போவோம் வாருங்கள் என்றார்.